![]() |
ராதா மனோகர் : ஈ பி ஆர் எல் எப் இயக்கம் 1984 மேமாதம் ஸ்டான்லி மெரி ஆலன் தம்பதிகளை கடத்தியது ஒரு பாரதூரமான விடயம்!
இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை பற்றிய எந்த புரிதலும் அற்று வெறும் விளம்பர ஸ்டன்டாகதான் இந்த அமெரிக்க தம்பதிகளை கடத்தி இருந்தார்கள் என்றெண்ணுகிறேன்
விளம்பரம் என்னவோ கிடைத்தது ஆனால் அது ஒரு விடுதலைக்கானதாக இருக்கவில்லை ,
மாறாக ஒரு ஆட்டோ சங்கர் அல்லது சந்தனக்கடத்தல் வீரப்பன் போன்றவர்களுக்கு கிடைத்த விளம்பரத்திற்கு ஒப்பானதாகத்தான் இருந்தது
அவரை கடத்தும்போது அவர்களின் வீட்டில் இருந்த ஐம்பதினாயிரம் ரூபாய்களையும் பல டாகுயுமெண்டுகளையும் லெட்டர் பேட் பேப்பர்களையும் எடுத்து சென்றதாக பத்திரிக்கை செய்திகள் கூறின.
தம்பதிகளை விடுவிப்பதற்கு ஐம்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க கட்டிகளும் தமிழக சிறைகளில் உள்ள 20 தோழர்களின் விடுதலையும் கோரி இருந்தனர்
இதற்காக 72 மணித்தியாலங்கள் கெடுவும் விதித்தனர்
இலங்கையில் குடிநீர் திட்ட பணிகளுக்கு Akron-based Ruhlin company. He was project manager of a $4m fresh-water distribution system பொறுப்பேற்று வந்திருந்தார்கள்
அப்போது முதலமைச்சர் எம்ஜியார்
பதறிப்போய் உளவு பிரிவு ஐ ஜி மோகன்தாஸிடம் இந்த விடயத்தை ஒப்படைத்தார்
அவர் ஈ பி ஆர் எல் எப் தலைவர்களை எல்லாம் அள்ளிக்கொண்டு போய் உரியமுறையில் கையாண்டு ஆலன் தம்பதிகளை விடுவித்தார்
இந்த சம்பவத்தின் பின்பு எந்த காலத்திலும் ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தை எம்ஜியார் மதிக்கவே இல்லை
இந்திய அரசும் உலக நாடுகளும் இவர்களை புரிந்து கொண்டன,
தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த ஈ பி ஆர் எல் எப் இயக்கம் அவர்களை குஷிப்படுத்தவே இந்த ஸ்டன்டை செய்திருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்
இதன் காரணமாகவே இவர்கள் விடுதலை போராளிகள் என்ற அந்தஸ்தை இழந்தார்கள்.
பொது மக்களை பணயகைதிகளாக வைத்திருந்து பேரம் பேசிய இயக்கத்திற்கு உலக அரங்கில் என்ன மரியாதை கிடைக்கும் என்பது இவர்களுக்கு தெரியாமல் போனது வியப்புக்கு உரியதுதான்.
அமெரிக்க தம்பதியை இவர்கள் கடத்தியது மேமாதம்,1984
ஜூன் மாதம்1984 ஜனாதிபதி ஜேயார் ஜெயவர்த்தனா அமெரிக்க செல்வதற்கு ஏற்கனவே தீர்மானிக்க பட்டிருந்தது
அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகன் ஜேயார் ஜெயவர்தனாவுக்கு வெள்ளை மாளிகையில் கொடுத்த அதீத மரியாதையும் அமெரிக்க காங்கிரசில் அவர் பேசுவதற்கு அளிக்கப்பட்ட வாய்ப்பும் கூட ஈ பி ஆர் எல் எப் இன் உபயமாக இருக்க கூடும்
இதன் மூலம் ஈழ தமிழர்களின் போராட்டம் ஒரு பயங்கரவாத போராட்டம் என்று உலகிற்கு முதலில் காட்டி கொடுத்த இயக்கம் ஈ பி ஆர் எல் எப்தான்!
தோழர் கேதீஸ்வரன் தோழர் பத்மநாபா தோழர் டக்ளஸ் தேவானந்தா தோழர் யோகாசங்கரி தோழர் உமாகாந்தன் போன்ற அறிவும் ஆற்றலும் நிறைந்த ஈ பி ஆர் எல் எப் தோழர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது துரதிஷ்ட்ட நிகழ்வு என்றுதான் கூறவேண்டும். .
இது பற்றி தமிழ்நாடு போலீஸ் ஐ ஜி மோகன்தாஸ் அவர்கள் எழுதிய குறிப்பின் மூலம் பலவிடயங்களை அறிந்து கொள்ளலாம் K Mohandas, former Director General of Police (Intelligence) Tamil Nadu.
“One night I was sleeping in my house. I got a call from the US Consul General from Madras at 11 PM. He told me frantically that Mr. and Mrs. Allen, who are working as water resources experts in Jaffna had been kidnapped by militants. He wanted my assistance to rescue them. I told him how could I help him for the incident that had happened in Jaffna. He pressed that the President of the United States of America was interested. The Consul General said that a large amount of gold and six or so militants in Sri Lankan custody must be released. This must be done within 48 hours or else Mr. and Mrs. Allens would be shot dead. Then something struck me and I asked the Consul General to find out the names of the militants whom they were asking for release. Then as soon as I placed the phone down, I got a call from G. Parthasarthy from Delhi repeating the same request. I rang up MGR and took his permission to take up this matter. I immediately proceeded to office calling all my principal officers to come to the office. As soon as I reached the office, I got a call from the US Consul General revealing the names of the militants whose release the kidnappers had wanted. My officers immediately said that they were from the EPRLF. So the hunt began to find out whether there are any important EPRLF fellows in Madras. After about 24 hours, we got 3 or 4 of them sleeping in a house. There were also two women who were released. The catch was very important. Among the people we caught were one Mr. Padmanabha who was later massacred by LTTE. Then, two, Varadharaja Perumal, the subsequent Chief Minister installed by the IPKF in East Sri Lanka, and three, General Douglas, self styled, who was the chief of militant wing of the EPRLF. I asked my officers to take the three to a five star hotel. It was at about 2.00 A.M. with a lot of security, the officers started questioning. But upto 6.00 A.M. they did not budge. So I went there with two commandos with loaded revolver. I made the three fellows stand. I placed my revolver on the table and made the commandos aim with their AK-47 at them. There was silence for two minutes. I looked at them straight and said: `It is your people who have made ransom demand on Mr. Allens. I will not allow you to open your mouth. Whatever happens to Allens will happen to you three right in this room.’ After five minutes, General Douglas said that he would speak to his people in Jaffna to release Allens. I said ‘Mind you, nothing in return; no gold; no release of their comrades.’ General Douglas contacted Jaffna and got the release of Mr. and Mrs. Allens and, within four hours, Mr. and Mrs. Allens were released at the residence of Bishop of Jaffna with their eyes blindfolded. There were kidnappings and counter kidnappings within the Sri Lankan militant groups in Tamil Nadu.” See less

No comments:
Post a Comment