Tuesday, March 15, 2022

சுன்னாகம் திராவிட வித்தியாசாலை - 27 November 1927 ! திராவிடன் மாத இதழ் 1927 பெப்ரவரி 11ஆம் தேதி


 இராதா மனோகர்
: சுன்னாகம் திராவிட வித்தியாசாலை
27 November 1927 Chunnakam Jaffna  சுன்னாகம் திராவிட வித்தியாசாலை"   யாழ்ப்பாணம் வட்டுக்கோடடையை சேர்ந்த திரு மு.சி .ராசரத்தினம் 1905 இல்  கல்கத்தா பல்கலை கழகத்தில் எம் ஏ பட்டம் பெற்று யாழ்ப்பாணம் திரும்பி 1906  ஆண்டு வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியில் ஆசியராக பணியில் இணைந்தார்.  பின்பு வட்டுக்கோட்டை இந்து கல்லூரியிலும் பருத்தித்துறை ஹார்ட்லி  கல்லூரியிலும் ஆசிரியராக பணியாற்றினார்.
அதே காலக்கட்டத்தில் சட்டம் பயின்று  1911 ஆண்டு வழக்கறிஞராகவும் பணியாற்ற தொடங்கினார்.
1923  ஆம் ஆண்டு சைவ வித்தியா விருத்தி சங்கம் ஏற்படவும் காரணமாக இருந்தார் .  சம்பந்தர் வித்தியாலயம் திருநாவுக்கரசர் வித்தியாலயம் என்பன சைவ வித்தியா  விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் உருவானவையாகும்.
சைவ வித்தியா விருத்தி பாடசாலைகளில் சைவ சூழ்நிலைகளில் மாணவர்கள் கல்வி கற்க முடியும் என்று கூறப்பட்ட போதிலும் .
அவை தாழ்த்தப்பட்டமாணவர்களை அனுமதிக்கவில்லை.
அவர்கள்  தொடர்ந்தும் மிஷனரி பாடசாலைகளுக்கே செல்ல முடிந்தது. அத்துடன்  தீண்டாமையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து விடுதலை பெற மதம் மாறி  செல்லும் நிலைமையும் இருந்தது.

Sunday, March 13, 2022

இலங்கை திராவிட இயக்கமும் இலங்கை தமிழ் தேசியமும்

ராதா மனோகர் : இலங்கை மண்ணில் 1932 ஆம் ஆண்டு தந்தை
பெரியார் ஊன்றிய திராவிட விதை!இந்த ஆண்டுதான் கொழும்பில் இலங்கை சுயமரியாதை இயக்கம் உருவானது தந்தை பெரியார் மாஸ்க்கோ பயணத்தை முடித்து கொண்டு தமிழ்நாடு திரும்பும் வழியில் 17 ஆக்டொபர் 1932 இல் இலங்கை வந்து பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்
தந்தை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் பெருமளவில் இலங்கை சுயமரியாதை இயக்க செயல்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ளலாயினர்
குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வரும் குடியரசு விடுதலை நாத்தீகம் போன்ற பல திராவிட இதழ்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை கொண்டிருந்தன.

கடுமையான பணிச்சுமைகளில் இருந்த தோழர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் சிறு சிறு இடங்களில் கூடி பெரியாரின் கருத்துக்களை கலந்துரையாடல்கள் மூலம் பரிமாறிக்கொள்வது அன்றாட நிகழ்வானது
பல பகுத்தறிவு பிரசார நடவடிக்கைகளும் போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தன.