Thursday, December 19, 2024

வடகிழக்கு மாகாண சபையை முடக்கியத்தில் பிரபாவுக்கே முன்னோடி வரதராஜ பெருமாள்

May be an image of 1 person
Dayan Jayathilak
May be an image of 1 person
Varatha Raja Perumal

ராதா மனோகர் : இலங்கை தமிழர்களின் போராட்ட வரலாற்றில் திரு டயான் ஜெயதிலகா என்ற ஒரு மனிதரின் வகிபாகம் பற்றி பொதுவெளியில் ஒருபோதும் பேசப்பட்டதில்லை என்றெண்ணுகிறேன்
இவர் காலம்சென்ற பிரபல பத்திரிக்கை ஆசிரியர் திரு மேர்வின் டி சில்வாவின் மகனாவார்.
இளமை காலத்தில் இ பி ஆர் எல் எப் ஈரோஸ் போன்ற இயக்கங்களோடும் சில சிங்கள இடதுசாரி இயக்கங்களோடும் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
வழமை போல இவர் சார்ந்த சிங்கள இடதுசாரி அமைப்புக்கள் பிற்காலத்தில் இந்திய எதிர்ப்பு தமிழ் எதிர்ப்பு போன்ற பாரம்பரிய பரிணாம வளர்ச்சியை எட்டி இருந்தன.
இவரும் இந்த பாரம்பரியத்திற்கு கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே அதே பரிணாம வளர்ச்சியை பெற்றிருந்தார்.

May be an image of 1 person
Umakanthan
May be an image of 1 person
Daniel Ortega


கொழும்பு செயின்ட் ஜோசெப் காலேஜ் . அக்குக்வினாஸ் கல்வி நிறுவனம், மற்றும்   பேராதனை பல்கலை கழகம் என்று இவரது கல்வி தொடர்ந்தது.
மறைந்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மோசே டயனின் மீது இவரது இடதுசாரி தந்தைக்கு ஏற்பட்ட அதீத அபிமானம் காரணமாகவே இவருக்கு டயான் என்ற பெயர் சூட்டப்பட்டது என்பது ஒரு வகை நகைமுரண்தான்.
இவரின் ரகசிய இயக்க ஈடுபாடுகள் காரணமாக இவர் ் இலங்கை அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளியாக இந்தியாவில் இ பி ஆர் எல் எபின் ஆதரவில் தங்கி இருந்தார்


அதன் முக்கிய வெளிநாட்டு விவகார  தலைவராக அப்போது இருந்த காலஞ்சென்ற திரு உமாகாந்தனோடு நெருங்கிய நட்புடன் இருந்தார் என்று எண்ணுகிறேன்.
அப்போது போராளி குழுக்களின் கனவு நாயகனாக பிரமிப்பூட்டி கொண்டிருந்தது   நிகராகுவாவும் அதன் அதிபர் டானியல் ஓர்டேகாவும்தான்
இவர்கள் நிகராகுவாவில் வைத்து அதிபர் டானியல் ஓர்டெக்காவை சந்தித்ததாகவும் பெரிய அளவில் பேசப்பட்டது.
அப்போது உலக புரட்சியாளர்களின் நவீன லெனினாக நிகரகுவா அதிபர் வளர்ந்து கொண்டிருந்தார்
அளவற்ற நம்பிக்கையுடன் அவர் அறிவித்த பொது தேர்தலில் சற்றும் எதிர்பார்க்காத மாதிரி புதிய இடதுசாரி கதாநாயகன்  டானியல் ஓர்டேகா தோற்கடிப்பட்டது வரலாறு
After a presidency marred by conflict and economic collapse, Ortega was defeated in the 1990 Nicaraguan general election by Violeta Chamorro.
திரு உமாகாந்தனும் சரி டயான்  ஜயதிலக்க போன்றவர்களும்  சரி  பிரிவினையை விட ஒரு ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகார  அரசு என்ற இடதுசாரி வசந்த மாளிகை கனவில் இருந்தவர்களாகும்.
அதில் தவறில்லை . அவர்களின் அன்றைய அரசியல் புரிதல் அல்லது கொள்கை அப்படியாக இருந்தது!
இந்தியாவில் இருந்து கொண்டு இவர்கள்m
 ஒரு இடதுசாரி கனவு பரிசோதனை கூடமாக தமிழ் சிங்கள மோதல்களை  மடை மாற்றி கொண்டிருந்தது உண்மைதான்.
அதன் பெறுபேறுகள் புலிகளுக்கு பெரும் சாதகமாக இருந்தது என்பது வரலாறு.
இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் இவர்களை இந்திய அரசு முழுக்க முழுக்க பயன்படுத்தியது.
வடகிழக்கு மாகாண சபையின் முதல் தேர்தலில் அப்போது இலங்கையை அசுர பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த ஐக்கிய தேசிய கட்சி (UNP)   இ பி ஆர் எல் எப் (EPRLF) இயக்கத்தோடு கூட்டணியாக தேர்தலை சந்திக்க பெரும் ஆவலோடு இருந்தது
அவர்களை கடைசி நேரத்தில் காலைவாரி விட்டது இ பி ஆர் எல் எப் இயக்கம்
ஜேயார் ஜெயவர்த்தனா பிரேமதாச போன்ற தலைவர்களோடு அப்போது மிக நெருங்கிய தொடர்பில் இருந்த திரு வரதராஜ பெருமாள்,
 அவர்களை (UNP) இறுதி நிமிடங்கள் வரை நம்பவைத்தார்.
இறுதி நேரத்தில் அவர்களின் கூட்டணியை உதறி தள்ளிவிட்டு தேர்தலை சந்தித்தார்
நுனி நாக்கில் சோசலிசம் பேசிய டயானுக்கும் பெருமாளுக்கும் அன்றைய இலங்கை ஆட்சியாளர்களை விட தாம் பெரிய பலசாலிகள் என்ற எண்ணமும் ஏற்பட்டு இருக்கலாம்
அல்லது இந்த மாகாண சபை அரசு ஒழுங்காக நடந்தால்  
நாம் இலங்கையில் அரசியல் செய்வதற்கு வாய்புக்கள்  போய்விடும் என்று  இந்திய உளவுத்துறை கருதி இருக்கலாம்
யார் கொடுத்த நைலோன் கயிற்றையோ  இவர்கள் விழுங்கியது இலங்கையின் சோகம் என்றுதான் கூறவேண்டும்.
பின்பு நடந்த தேர்தலில் இவர்கள் வெற்றி பெற்று வடகிழக்கு மாகாண சபை அரசை அமைத்தார்கள்
முதலமைச்சராக திரு வரதராஜ பெருமாள் பதவி ஏற்றார்
இவரின்  அமைச்சரவையில்  திரு டயான் ஜயதிலக்கா திட்டமிடல் மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பதவியேற்றார்.
(Hon .Dayan Jayatilleka was Minister of Planning and Youth Affairs for the North Eastern Province)

மறுபுறத்தில் தென்னிலங்கையில்,
ஜேயார் ஜெயவர்த்தனா தமிழர்களுக்கு ஈழத்தை பிரித்து கொடுத்துவிட்டார் என்று  ஏராளமான இடதுசாரி மற்றும் இனவாத இயக்கங்கள் பெருமளவு பிரச்சாரத்தையும் வன்முறைகளையும்  கட்டவிழ்த்து விட்டார்கள்

ஜேவிபியில்  இருந்து பிரிந்ததாக கூறப்படும் குமார் குணரெத்தினத்தின் தேசப்பிரேமி வியாபாரிய போன்ற ஏதோவொரு பெயரில் அறியப்பட்ட இயக்கம் இந்திய ராணுவத்திற்கு எதிராக சில தாக்குதல்களையும் செய்தது.
அதில் அந்த இடதுசாரி போராளி  கைது செய்யப்பட்டார்.
தெற்கில் வகை தொகை இல்லாமல் இரத்த ஆறு ஓடியது
பின்பு பிரேமதாச பதவிக்கு வந்து சாட்சிக்காரன் காலை விட சண்டைக்காரன் காலே மேல் என்ற முடிவுக்கு வந்தார்  
மாகாண சபையை விட்டு வரதராஜ பெருமாள் இந்தியாவுக்கு தப்பி ஓடினார்
அப்படியே திரு டயான் ஜயதிலக்க பிரேமதாசாவின் நண்பரானார் அல்லது அல்லக்கையானார்.
திரு டயான் ஜயதிலக்க போர்க்காலத்தில் ஐநாவில்  இலங்கை தூதராக கடமை ஆற்றினார்
பின்பு போர் முடிந்ததும் பிரான்சில் இலங்கை தூதரக பணியாற்றினார்
இவரின் இந்திய தொடர்பில் சந்தேகம் கொண்ட திரு மகிந்த ராஜபக்சா அவர்கள் இவரை திடீரென்று அந்த பதவியில் இருந்து நீக்கினார்
 இடதுசாரிகளின்  அசல்  இனவாத உருமாற்ற அவதார மகிமையை வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திரு டயான் ஜயதிலக்க வெளிப்படுத்த கொஞ்சம் கூட தயங்கவில்லை.
அன்று திரு வரதராஜ பெருமாள் ஜேயார் ஜெயவர்த்தனாவின் கூட்டணி அழைப்பை ஏற்று கொண்டிருந்தால் வட கிழக்கு மாகாண அரசு ஐக்கிய தேசிய கட்சியால் காப்பாற்ற பட்டிருக்கும்
தென்னிலங்கையில்  இடதுசாரிகளின் / இனவாதிகளின் பிரசாரம் எடு பட்டிருக்காது
நாம் ஈழம் பிரித்து கொடுக்கவில்லை,
  வடகிழக்கு மாகாண அரசில் நாமும் ஒரு அங்கம்தான் என்று ஜேயார் ஜெயவர்த்தனா பிரேமதாசா அரசு சிங்கள மக்களை அமைதி படுத்தி இருக்கும்
திரு ராஜிவ் காந்தி உருவாக்கி தந்த வடக்கு கிழக்கு மாகாண அரசை தவிடு பொடி ஆக்கியத்தில் பிரகாரனுக்கு ஒரு முன் மாதிரியாகவே திரு வரதராஜ பெருமாளின்  வரலாறு உள்ளது!  
தோழர் பத்மநாபாவை புலிகள் கொல்ல போவது இந்திய உளவுத்துறைக்கு தெரிந்து அந்த செய்தியை கலைஞருக்கு தெரியப்படுத்திய உளவுத்துறை அவர்களை காப்பாற்ற பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை
வெறும் மாநில முதல்வராக இருந்த கலைஞர்  என்ன செய்திருக்க முடியும்?
இ பி ஆர் எல் இபின் தோழமை இயக்கமான ஈரோசின் ( ஈழம் புரட்சிகர அமைப்பு)  பாலகுமாரை கொழும்பில் இருந்து அவசரமாக அழைத்து இந்த செய்தியை கூறி  பத்மநாபாவை வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டு பின்பு வருமாறு கூறினார்
அந்த செய்தியை பத்மநாபாவுக்கு பாலகுமார் கூறிய அடுத்த நாளே அவர்களை புலிகள் கொலை செய்தார்கள்
மறுபுறத்தில் திரு வரதராஜ பெருமாளை காப்பாற்றுவதில் எக்கச்சக்கமான கரிசனையை இந்திய அரசு அல்லது உளவுத்துறை கொண்டிருந்தது என்பதை கவனத்தில் கொண்டால் பல விடயங்கள் துலாம்பரமாக் தெளிவாகும்.
இவர்களைதான் தோழர்  பத்மநாபா நம்பியிருந்தார்.
பத்மநாபாவுக்கு கலைஞரின் செய்தியை கூறிய பாலகுமார் புலிகளுக்கும் அதை பரிமாறி இருக்கலாம்!
பாலகுமார் பின்பு புலிகள் இயக்கத்தின் பிரமுகராக வலம் வந்தார் என்பது வரலாறு!
இவர்களின் வரலாறு இப்படி இருக்கிறது.
May be an image of 1 person

No comments:

Post a Comment