Sunday, September 25, 2022

திரு . எஸ்.சி.சி அந்தோனிப்பிள்ளை ( யாழ்ப்பாணம்) சென்னை சூளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - வட சென்னை மக்களவை உறுப்பினர்

ஈழநாடு - யாழ்ப்பாணம் . 22 02 -1962

 ராதா  மனோகர் எஸ்.சி.சி அந்தோனிப்பிள்ளை ( யாழ்ப்பாணம்) சென்னை  சூளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - 1952–1957.
வட சென்னை  மக்களவை உறுப்பினர் 1957–1962
இவரின் முழுப்பெயர் செபஸ்தியான் சிரில் கான்ஸ்டன்டைன் அந்தோனிப்பிள்ளை (Sebastian Cyril Constantine Anthony Pillai, ஏப்ரல் 27, 1914 – ஆகஸ்ட் 16, 2000)
இலங்கை இடது சாரித்தலைவராகவும் பின்பு இந்திய இடதுசாரி தலைவராகவும் இருந்த ஒரு சுவாரசியமான அரசியல் வரலாறை கொண்டிருப்பவர்
யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் யாழ் சென்ட் பற்றிக்ஸ் கல்லூரியில் கற்றார்.பின்பு  இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து வரலாற்றில் பட்டம் பெற்றார். பின்னர் இலண்டன் கிங்ஸ்  கல்லூரியில்  படித்தார். 

இவரை பற்றி ஒரு முக்கிய கோணத்தில் ஆய்வு செய்யவேண்டிய தேவை இருக்கிறது .
மறைந்த இலங்கை ஜனாதிபதி திரு ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் இவரை பற்றியும் அந்த காலத்து இலங்கை இடது சாரிகள் பற்றியும் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்
இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பிற்கு இந்த இடது சாரி அரசியல்வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது..
அந்த விடயத்தை நோக்குவதற்கு ஒரு முன்னோடியாக திரு எஸ் சி சி அந்தோனிப்பிள்ளையின் வரலாறு ஒரு உசா  துணையாக இருக்கும் என்று கருதுகிறேன்  

இந்திய, இலங்கை, பர்மிய போல்செவிக்-மார்க்சியக் கட்சி 1948 இல்  இந்திய சோசலிசக் கட்சியுடன் இணைந்ததை அடுத்து அந்தோனிப்பிள்ளையும் அக்கட்சியில் சேர்ந்து .[
1948 முதல் 59 வரை சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தார்.

1952 முதல் 1957 வரைசென்னை சூளை மேடு சட்டமன்ற உறுப்பினராக MLA  இருந்தார்.
1956 இல் லோகியா சோசலிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார்.
இக்கட்சியின் சார்பாக சுயேச்சை வேட்பாளராக 1957 இல்  வட சென்னை மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Thursday, September 22, 2022

Hemp ஹெம்ப் வளரும் நாடுகளை வாழவைக்க போகும் பயிர்

ராதா மனோகர் : ஹெம்ப் செடியை பற்றி இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி டயானா கமகே MP பேசுகிறார்
ஆனால் பலருக்கும் இது பற்றிய புரிதல் இல்லாமல் இதை கஞ்சா செடி என்று கூறி மலின படுத்துகிறார்கள்  
எனவே இது பற்றிய சில உண்மைகளை இங்கே தெளிவு படுத்த முயல்கிறேன்
ஹெம்ப் செடியின் வகைகளில் ஒன்றுதான் கஞ்சா செடி . ஆனால் இரண்டும் ஒன்றல்ல
பெட்ரோலிய உற்பத்திக்கு ஒரு சரியான மாற்றாக விளங்குவது ஹெம்ப் செடியின் மூலம் பெறப்படும் பயோ டீசல்தான் . இது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை
இதனால்தான் பெட்ரோலிய கம்பனிகள் நீண்ட காலமாக ஹெம்ப் கஞ்சாவின் தன்மை கொண்டது என்ற பிரசாரத்தை தங்களின் போலி ஆராய்ச்சியாளர்கள் மூலம் பரப்புரை செய்து பல தசாப்தங்களாக தடுத்து வைத்திருந்தார்கள் . தற்போது அந்த தடை மேற்கு நாடுகளில் இல்லை .

Tuesday, September 20, 2022

சிங்கள தீவினுக்கோர் பாலமைப்போம் ..1912 ஆம் ஆண்டு வெளியான விஜயபானு


 சிங்கள தீவினுக்கோர் பாலமைப்போம் என்று பாரதி பாடியது அவரின் தீர்க்க தரிசனம் என்று அவ்வப்போது ஒரு கதை அளக்கப்படுகிறது உண்மையில் அது அப்போது பத்திரிகைகளில் வந்த செய்தியாகும் . தீர்க்க தரிசனம் அல்ல!
  அதன் விபரங்களை கொஞ்சம் பாப்போம்
பாரதியார் காலமானது 1921 ஆண்டாகும்.
1912 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியான விஜயபானு என்ற தமிழ் பத்திரிகையில் இது பற்றிய ஒரு செய்தி இருக்கிறது   அப்பத்திரிகையில் இந்திய இலங்கை செய்திகள் பல இருக்கிறது
அதில் ஒரு செயதியின் தலையங்கமே
இலங்கை இந்திய புகையிரத பாதை என்பதாகும்
அதன் முழு செய்தி இதுவாகும்
இலங்கை இந்திய புகையிரத பாதை
இப்பாதை வேலையை இலங்கை அரசாட்சியார் தீவிரமாய் முடித்து வருகின்றர்.
தலைமன்னாரிற்கும் மன்னாரிற்கும் இடையிற்றான்  தாமதமிருக்கிறது.

Friday, September 16, 2022

ஈழகேசரி - 21 - 6 - 1936 : மனித உயிருக்கு மதிப்பில்லாத நாடு கொலைக்களமாக மாறிவரும் யாழ்ப்பாணம்


 ஈழகேசரி - 21 - 6 -  1936  :   மனித உயிருக்கு மதிப்பில்லாத நாடு கொலைக்களமாக மாறிவரும் யாழ்ப்பாணம்
எதற்கும் கத்தியை உருவும் எமகிங்கரர்
படித்த பதர்கள் இயற்றும் படுகொலைகள்
புத்திசாதுர்யம் நிறைந்த பொய் சாட்சிகள்
கைலஞ்சம் வாங்கும் கிராம அதிகாரிகள்
அரசாங்கம் கவனிக்க வேண்டிய அதி முக்கிய அம்சங்கள்
பயங்கரமான படுகொலைகளும் பலிகளும் இலங்கையில் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் தினே தினே அதிகரித்த வண்ணமாக இருக்கிறது

Sunday, September 11, 2022

மகாத்மா காந்தி யாழ்ப்பாணம் சுன்னாகம் திராவிட வித்தியாசாலைக்கு 27 - 11 - 1927 இல் அஸ்திவாரக்கல் நாட்டினார்.

யாழ்ப்பாணதில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த திராவிடன் பத்திரிகையின் 27 - 11 - 1927 ஆம் தேதி இதழில் இந்த செய்தி பதிவாகி இருக்கிறது .


 இலங்கைக்கு மகாத்மா வந்து திரும்பிவிட்டார்
மகாத்மா காந்தியவர்கள் தமது மனைவியார் பரிவார சகிதமாக இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணம் நாலு நாள் தங்கி இந்தியா திரும்பி விட்டனர்.


இதுமாதிரி இலங்கைக்கு இதுவரையும் வந்து  போன  .மற்றெவருக்காயினும் மகாத்மாவுக்கு காட்டப்படும் மரியாதையும் அன்பும் உபசாரமும் காட்டப்பட்டதே இல்லையெனலாம் .
மாகாத்மாவிற்கு இலங்கையில் வேண்டிய வசதிகள் யாவும் செய்து சந்தோஷமாக்கும்படி இந்திய பிரதி காவலர் இலங்கை தேசாதிபதியை கேட்டுக்கொண்டபடி தேசாதிபதியவர்கள் தனது மாளிகைக்கு அழைத்து விருந்திட்டு உபசரித்தார்.
மகாத்மா இலங்கைக்கு சென்றவிடமெல்லாம் மக்கள் அவரை தரிசித்தற் பொருட்டும் அவரின் பிரசங்கத்தை காதினாற் கேட்டற்கும் பதினாயிர கணக்கானோர் கூடி காந்திக்கு மனமுவந்து 60000 ரூபா வரையிற் கொடுத்திருக்கின்றனர்

Friday, September 9, 2022

சிங்கள மக்களின் மரபணு கூறுகள் தென்னிந்திய தமிழர்களின் (69.86% +/- 0.61) வீதம் பொருந்தியுள்ளது.

 pubmed.ncbi.nlm.nih.gov  இலங்கை மக்களின் மரபணு தொடர்புகள் -
இலங்கை மக்கள்தொகையின் தொன்மவியல் மற்றும் வரலாற்று ஓவியங்கள் அது பன்முகத்தன்மை வாய்ந்தது,
 மற்றும் பல்வேறு இனக்குழுக்களைக் கொண்டது என்பதைக் குறிக்கிறது.
543 இல் தீவின் வடமேற்கு கடற்கரைக்கு வந்த இளவரசர் விஜயாவின் புராணக்கதையுடன் சிங்களவர்களின் தோற்றத்தை இலங்கையின் பண்டைய நாளேடுகள் தொடர்புபடுத்துகின்றன.
வடகிழக்கு அல்லது வடமேற்கு இந்தியாவிலிருந்து. மேலும், கடல்வழிப் பாதைகளில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதால்,
இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் (குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிலிருந்து) மக்களின் தொடர்ச்சியான வருகையைப் பெற்றுள்ளது.
இலங்கையின் தொன்மவியல், வரலாற்று மற்றும் மொழியியல் பதிவுகளை கருத்தில் கொண்டு, இலங்கையின் தென், வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியா, மத்திய கிழக்கின் மக்கள்தொகையுடன், இலங்கையின் சனத்தொகைக் குழுக்களிடையே மரபணு வேறுபாடு மற்றும் மரபணுக் கலவையின் அளவை ஆய்வு செய்ய முயற்சிக்கிறேன். pubmed.ncbi.nlm.nih.gov

Tuesday, September 6, 2022

இலங்கை சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்.

 


ராதா மனோகர்
: இலங்கையில் உள்ள சிங்களவர்கள்  பெரும்பான்மையோர் தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்.
சைவ வைணவர்களின் கொடுமைக்கு அஞ்சி இலங்கைக்கு குடிபெயர்ந்த திராவிடர்கள் தங்கள் பௌத்த மதத்தை காப்பதற்காக சிங்கள மொழியை பயன்படுத்தினா
ர்கள்   காலப்போக்கில் அது அவர்களின் தாய் மொழியானது
இது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாக இருந்தாலும் பலரும் பொதுவெளியில் ஒப்புக்கொள்வதில்லை
தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக தமிழ் அரசர்களும் அவர்களை போலவே கடும் போக்கை கொண்டிருந்த  தமிழ் தேசியர்களின் வரலாற்று பின்னணியில் இருந்து இதை நோக்கவேண்டும் என்று கருதுகிறேன். 
எப்போதும் பிற சமூகங்களை இழிவாக கருதும் ஒரு இனவாத போக்கு தமிழர்கள் மத்தியில் பரவியதும் ஒரு காரணமாக  இருக்கலாம்
:" நானூறு ஆண்டுகளுக்கு முன்பு எனது முன்னோர்கள் இந்தியாவில் இருந்த வந்த தமிழர்கள்தான் . நான் இப்போது சிங்களவன் . இதில் என்ன தவறு இருக்கிறது?"

இப்படி கூறியவர் ஒரு சாதாரண மனிதரல்ல . இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக நீண்ட காலம் உச்சத்தில் கோலோச்சிய ஒரு பெரும் அரசியல் தலைவராகும்.
இலங்கையின் நீர்ப்பாசன திட்டங்களின் தந்தை என்று கூறக்கூடிய அளவு நீர்ப்பாசன மின்சக்தி அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இன்னும் பல்வேறு பொறுப்புக்களை அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் தனது திறமையை நிரூபித்த தலைவர் கௌரவ சி பி டி சில்வா அவர்களே இந்த கூற்றை கூறியிருக்கிறார்
இலங்கை தமிழ் அரசியலில் மிகபெரும் ஆளுமையாக அறியப்பட்ட திரு வி நவரத்தினம் அவர்களிடம் தான் இந்த கூற்றை திரு சி பி டி சில்வா கூறியிருக்கிறார் .  வி நவரத்தினம் கூறுகையில்,  சி.பி. டி சில்வா - ஒருமுறை எங்களில் சில - தமிழ் எம்.பி.க்களிடம், 'என்னைப் பாருங்கள். நானூறு ஆண்டுகளுக்கு முன்பு என் முன்னோர்கள் இந்தியாவில் இருந்து வந்த தமிழர்கள். நான் இப்போது சிங்களவன். அதில் என்ன தவறு இருக்கிறது. ?'" தமிழ் தேசத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பக்கம் 130.

Friday, September 2, 2022

நல்லூர் கோயில் வழக்கு! தீர்ப்பு - முழுவிபரம் . part 5 - last part

நல்லூர் கோயிற் பரிபாலனைத்தை பற்றிய தீர்ப்பு - முழுவிபரம்
 யாழ்ப்பாணம் பெரிய நீதிஸ்தலத்தில் நல்லூர் கந்தசாமி கோயிற் பரிபாலன முறையை பற்றி 2 ஆம் பிரிவு வியாச்சியத்திற்கு மேற்படி நீதிபதியவர்கள் பின்வருமாறு தீர்ப்பு செய்தனர்.
இத்தீர்ப்பில் கோயிலதிகாரியினுடைய கடமைகள் வரையறுக்கப் பட்டிருத்தலோடு மேற்படி அதிகாரிக்கு துணை செய்வதற்கு கல்வி அறிவும் ஒழுக்கமுற்ற இன்னுமொருவர் (கமிஷனர்) நியமிக்கப்படல் வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது
1 குறித்த கோயிலதிகாரி இரு லேககர்களை ஏற்படுதல் வேண்டும். அவர்களுடைய மாச வேதனம் 35 ரூபா தொடக்கம் 50 ரூபா வரை கொடுக்கப்படும் ..  


இந்த லேககர்களில் ஒருவர் கோயிலதிகாரியாலும்  மற்றவர் கமிஷனராலும் நியமிக்க படல் வேண்டும் .ஆனால் இரு லேககர்களும் கோயிலதிகாரி   கமிஷனர் ஆகிய இருவருக்குடைய கட்டுப்பாட்டுகள் அமைந்து நடத்தல் வேண்டும்.