Friday, July 29, 2022

தமிழ் பிரதேசங்களுக்கு ஒரு வானொலி நிலையம் - யாழ்ப்பாண எம்பி திரு அல்பிரட் துரையப்பா!


 ஈழநாடு 7 - 6- 1961 யாழ்ப்பாணம்
தமிழ் பிரதேசங்களுக்கு ஒரு வானொலி நிலையம் - யாழ்ப்பாண எம்பி ( திரு அல்பிரட் துரையப்பா) நடவடிக்கை
தமிழ் பேசும் பிரதேசங்களில் ஒரு கவின் கலைக்கல்லுரியும் ஆயுர்வேத வைத்திய நிலையமும் வானொலி நிலையமும் நிறுவப்பட இருக்கிறது.
இவைகள் இந்த ஆண்டு அல்லது அடுத்த நிதியாண்டுக்குள் நிறுவப்படலாம்.
இதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன் என்று யாழ்ப்பாண எம்பி திரு அல்பிரட் துரையப்பா பத்திரிகைக்கு விட்டுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்
திரு அல்பிரட் துரையப்பா அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மொழி உரிமைக்காக போராடிவரும் அதே வேளையில் எமது தேவைகளையும் எமக்கு கிடைக்க கூடிய உதவிகளையும் உரிமையோடு பெற்று கொள்வது அவசியமாகும்
கிடைக்கக்கூடிய உதவிகளை கைவிடாது நமது நாட்டின் தேவையை பூர்த்தி செய்வது அத்தியாவசியமாகும்
அவர் தமது தொகுதிக்கு இவ்வாண்டில் செய்து முடிக்கவிருக்கும் வேலைகளை பற்றியும் குறிப்பிட்டுள்ளார் அவையாவன:



கொழும்புத்துறை துறைமுக வேலைகள் பெரியளவில் விரைவில் பூர்த்தியாக்கப்படும்.
கூட்டுறவு மொத்த விற்பனை இலாகாவினால்  ஒரு சில்லறை விற்பனை கடை யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட உள்ளது,
யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கென ஒரு பிரசவ ஆஸ்பத்திரி அமைத்தல்.
இவ் வேலைக்கு   உரிய நிலம் வழங்கப்பட்டதும் தொடங்கப்படும்.
குருநகர் பாஷையூர் ஆகிய இடங்களுக்கான ஒரு மீன் விற்பனவு  சந்தை திறக்கப்படவிருக்கிறது
இத்துடன் யாழ்ப்பாணத்தில் இரண்டு உப தபாற்கந்தோர்களும் திறக்கப்பட இருக்கிறது.

ஏழைகளுக்கான ஒரு வீடமைப்பு திட்டம் விரைவில் ஆரம்பிக்க படவிருக்கிறது.
 இவ்வேளையில் பெரும்பாலும் இவ்வருட இறுதிக்குள் அல்லது அடுத்த நிதி வருடத்திற்குள் பூர்த்தியாகி விடுமென அவ்வறிக்கையில் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment