Friday, August 28, 2026

4 ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாடு - தமிழரசு கட்சியின் நரவேட்டை

May be an image of text that says "Speech by Mr. A. A.Amirthalingam during Dr. Era Janarthanan 's telicittion C4EИy Chennaiin 1987 டாக்டர் இரா. ஜனார்த்தனன் அவர்களின் பாராட்டு விழா கூட்டத்தில் தலைவர் திரு ત. அமிர்தலிங்கம் அவர்களின் பேச்சு 1987இல்."

 ராதா மனோகர் : 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது  உலக தமிழாராய்ச்சி மாநாடு!
இதை உண்மையில் ஒரு அகில உலக தில்லாலங்கடி மாநாடு என்று கூறலாம்.
அந்தளவுக்கு அதில்  பொய்யும் புரட்டும் கரை புரண்டு ஓடிய மாநாடு இது!.
இந்த தமிழாராய்ச்சி மாநாடு தமிழரசு கட்சியின் அரசியல் மாநாடகத்தான் நடக்கும் என்று ஸ்ரீமாவோ அம்மையாரும் உதவி பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடியும் அன்று அழுத்தமாக நம்பினார்கள் 
இம்மாநாடு அரசியல் மாநாடாக இருக்காது என்ற தமிழராய்ச்சி பிரமுகர்களின் உறுதி மொழிகளை  பிரதமர் ஸ்ரீமாவோவும் அமைச்சர் லக்ஷ்மான் ஜெயக்கொடியும் துளியும் நம்பவில்லை.
இலங்கை தமிழாராய்ச்சி மன்றத்தில் ஏராளமான தமிழரசு கட்சி பிரமுகர்கள் ஊடுருவி இருந்தார்கள் 

Monday, August 24, 2026

தமிழாராய்ச்சி மன்றத்தை தமிழரசு கட்சியின் கிளை நிறுவனமாக மாற்றிய கதை!

May be a doodle of monument
May be an image of one or more people, people smiling and text that says "PUNITHAM THERUCHELVAM gflip.com gflip com"

 ராதா மனோகர் :உலக தமிழாராய்ச்சி மன்றத்தை இலங்கை தமிழரசு கட்சியின் கிளை நிறுவனமாக மாற்றிய கதை!
இதற்காக அமைச்சர் திருச்செல்வத்தின் மனைவி திருமதி.புனிதம் திருச்செல்வம் தந்திரமாக  வண தனிநாயகம் அடிகளின் இடத்தை கைப்பற்றினர் 
 தமிழரசு கட்சியினர் நான்காவது உலக  தமிழாராய்ச்சி மாநாட்டை தமிழரசு கட்சி மாநாடாகவே உருமாற்றினார்கள்.
முழு தமிழரசு கட்சியும் அதன் தொண்டர் குண்டர் படைகளும் புனிதம் திருச்செல்வத்தின் ஏவல் பேய்களாக செயலாற்றினார்கள். ( இந்த தொண்டர் குண்டர்  கூட்டத்தில் சிவகுமாரும் ஒருவர்) 
திருமதி புனிதம் திருச்செல்வமும்  + திரு முருகேசு திருச்செல்வமும்  
திரு நீலன் திருச்செல்வத்தின் கொலையும்!
இலங்கை தமிழர்களின் போராட்டம் என்பது இன அடக்கு முறையின் வெளிப்பாடு என்று பொதுப்புத்தியில் கருதப்படுகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல 

Thursday, August 13, 2026

புலிகளின் முதல் தலைவர் மூத்த தலைவர் செட்டி பாகம் 2

 ஈழப் போராட்டத்தின் முதல் கதாநாயகன் செட்டி வல்வெட்டித்துறையில் முதல் நினைவுத்தூபி செட்டிக்குத் தனபாலசிங்கத்துக்குத் தான் வைக்க வேண்டும்
பிரபா ஏன் செட்டியை படுகொலை செய்கின்றார் ? அவருடைய சகோதரர் செல்லக்கிளியை ஏன் பிரபாகரன் படுகொலை செய்தார் !
பிரபாகரன் குடும்பத்தால் களித்து விடப்பட்டவர் ! சைக்கிள் திருட்டு போன்ற சில்லறைத் திருட்டுக்களில் செட்டியின் வழியில் சென்றவர் !
செட்டியின் எதிர்மறையான அம்சங்களை கற்றுக்கொண்ட பிரபாகரன் செட்டியின் நல்ல அம்சங்களைக் கற்றுக்கொள்ளவில்லை - சமையலைத் தவிர !
தமிழரசுக் கட்சியின் எதிரியான குமாரகுலசிங்கத்தை செட்டி படுகொலை செய்தார் ! அல்பிரட் துரையப்பாவின்  கொலைக்கு முன்னோடியாக நடந்த கொலை !

புலிகளின் முதல் தலைவர் மூத்த தலைவர் செட்டி பாகம் 1

 செட்டி தனபாலசிங்கம் ஒரு ரோபின்ஹூட். உள்ளவர்களிடம் கொள்ளையடித்து பொதுச் சேவை செய்தவர் !
தமிழ்நாட்டில் முதல் முதல் தளம் அமைத்தவர் செட்டி தனபாலசிங்கம் !
செட்டி அந்த நேரம், அந்த ஊரில் பலருக்கும் ஒரு வில்லத்தனம் கொண்ட கதாநாயகன் !
1970 இல் சுயாட்சிக் கழகமே தனித் தமிழ் நாடு என்ற கோஸத்தை முன் வைத்தனர் !
இலங்கை அரசின் சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறியவர்கள், உடைத்தவர்கள் கிரிமினல் குற்றவாளிகளே !
செட்டி, குட்டிமணி போன்ற கிரிமினல் குற்றங்களைச் செய்தவர்கள் பொலிஸாரால் அறியப்பட்டவர்கள் ! சின்னப்பொடி பிரபாகரனும்  அவர்களாகின்றார் !

Tuesday, August 4, 2026

திரு அல்பிரட் துரையப்பா : முதலில் வளாகமாவது வரட்டும் ஒத்துழைக்காவிடினும் இடையூறு வேண்டாம்

May be an illustration of text
May be an image of one or more people, people performing martial arts and text

 ராதா மனோகர் : யாழ்ப்பாணத்தில் பல்கலை கழகம் அமைய கூடாது என்று எஸ் ஜெ வி செல்வநாயகம் தன் வாழ்நாள் முழுவதும் அயராது போராடினர். அவரின் கைங்கரியத்தால் அவர் ஆக்டிவாக இருக்கும் வரையில் அது அமையவில்லை.
1970 தேர்தலில் ஸ்ரீ மாவோ அம்மையார் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததும்தான் இவரின் கொட்டம் அடங்கியது.
செல்வநாயகத்தின் கடிதங்களுக்கு பதில் கூட ஸ்ரீ மாவோ அம்மையார் போடுவதில்லை 
அந்தளவு செல்வநாயகத்தின் கபட அரசியலை அவர் புரிந்து கொண்டிருந்தார் 
ஏற்கனவே திரு அல்பிரட் துரையப்பாவுக்கு உறுதி அளித்த படி 
1974 இல் யாழ்ப்பாண பல்கலை கழக வளாகத்தை நிறுவினார் 
அப்போது கூட இது வெறும் வளாகம்தானே இதிலென்ன இருக்கிறது என்று இதை மலின படுத்தும் முயற்சியில் தமிழரசு கட்சியினர் விஷ பிரசாரம் செய்தவண்ணம் இருந்தனர் 
அவர்களுக்கு  திரு அல்பிரட் துரையப்பா அவர்கள் கொடுத்த பதிலடிதான் இந்த பேட்டி
ஈழநாடு 26 - 6 - 1974 யாழ்ப்பாணம் 
திரு அல்பிரட் துரையப்பா :   
முதலில் வளாகமாவது வரட்டும் ஒத்துழைக்காவிடினும் இடையூறு வேண்டாம்