Friday, December 31, 2021

கலைஞர் மீது புலிகளுக்கு ஏனிந்த கடும் கோபம்?

ராதா மனோகர்  புலிகளுக்கு கலைஞர் மீதும் ரணில் விக்கிரமசிங்க மீதும் இருக்கும் அசாத்திய கோபம் ஒரு சாதாரண விடயம் அல்ல.
புலிகளின் கூட்டு அறிவியில் என்பது ஒரு விசித்திரமான வளர்ச்சியை கொண்டிருந்தது.
சாதாரண மனிதர்கள் சிந்திப்பது போல அவர்களின் கூட்டு மனோ நிலை ஒருபோதும் இருக்கவில்லை.
அதற்கு பல காரணிகளை நாம் ஆய்வு செய்யவேண்டி இருக்கிறது.
மதங்களின் அதீத கட்டுப்பாட்டு கோட்பாடுகள் அதில் தாக்கம் செலுத்தி இருக்க கூடும் .
அப்படியாயின் இலங்கை நிலப்பரப்பில் தோன்றிய எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத ஒரு வித்தியாசமான சிந்தனை போக்கு புலிகளிடம் மட்டுமே எப்படி உருவானது?
இதை ஆய்வு செய்யப்புகின் தவிர்க்கவே முடியாதவாறு புலிகள் இயக்கம் காலூன்றிய   நிலப்பிரதேசம் பற்றி செய்திகள் கொஞ்சம் கவனத்திற்கு உரியதாகும்.
அந்த இயக்கம் காலூன்றியது வடஇலங்கையில் வல்வெட்டி துறையாகும்.
வரலாற்று ரீதியாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடைபெற்று வந்த வணிக  கடல் போக்குவரத்தில் ஒரு முக்கிய இடமாக வல்வெட்டி துறை விளங்கிற்று.

புலிகள் கலைஞரை மீறி பாஜகவை நம்பியது ஏன்? போர்நிறுத்ததை ஏன் மீறினார்கள்

 தணிகை குமரன்  : கலைஞரின் உண்ணாவிரத்திற்கு பிறகு சீஸ்ஃபயர்அறிவிப்பு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் சென்னைக்கு வந்து இலங்கைஅரசு அனுப்பிய ஃபேக்ஸ் செய்தியைக் காட்டுகிறார்.
காலை 7 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதத்தை 2 மணியளவில் முடிக்கிறார் கலைஞர்.
ஆனால் அடுத்த மூன்று நாட்களில் மீண்டும் போர் துவங்கியது எப்படி..?
கலைஞரின் உண்ணாவிரதத்திற்கு அடுத்த தினத்திற்கு அடுத்த தினம் புலிகளின் அரசியல் ஆலோசகராய் அப்போது இருந்த திரு.நடேசன் "நாங்கள் செய்வது பின் வாங்கும் தந்திரோபாயம்! 

கருணாநிதி எங்கள் வெற்றியை மழுங்கச் செய்கிறார் என்று அறிக்கை வெளியிட்டார். "இன்னும் ஒரு சில தினங்களில் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்துவிடும், பிஜேபி நிச்சயம் வெல்லும். அதுவரை தாக்குப் பிடியுங்கள்" என்று தமிழக அரசியல்வாதிகள் குடுத்த யோசனையைக் கேட்டே புலிகள் போரை நீடித்ததாக நார்வே குடுத்த அறிக்கை இப்போதும் இணையத்தில் இருக்கிறது!

அதிமுக என்கின்ற எம் எல் எம் ( MLM ) கம்பனி! ... ஆதாரங்களோடு ஒரு அலசல்

ராதா மனோகர் : திமுகவில் இருந்துதான் அ தி மு க என்ற கட்சி உருவானாலும் இரு கட்சிகளும் உண்மையில் நேரெதிர் திசையில் உள்ளவை.. 
அதிமுக என்ற அமைப்பு உண்மையில் ஒரு அரசியல் கட்சிக்கு உரிய எந்த இலக்கணத்தையும் கொண்டிருக்கவில்லை .
ஆனால்  அதில்  எம்ஜியார் உட்பட பல பிரமுகர்கள் .இருந்தமையால் அதுவும்  இன்னொரு திமுக போன்ற ஒரு திராவிட கட்சியே என்ற தோற்றத்தை கொடுத்தது.
அதிமுகவின் தோற்றம் என்பது எம்ஜியார் என்ற நடிகரின் ரசிகர்களின் சங்கம் என்ற அளவிலேயே பெரிதும் இருந்தது..
எப்போது எம்ஜியார் தனது  ரசிகர் மன்றங்களை ஒரு வலுவான நிறுவனமாக கட்டமைக்க தொடங்கினாரோ அன்றே எம்ஜியாரின் அமைப்பு  தொடங்க பட்டுவிட்டது .

Thursday, December 30, 2021

இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் ... மறைக்கப்பட்ட வரலாறு

இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் மலையக மக்களையும் வடகிழக்கு மக்களையும் இணைத்து ... மறைக்கப்பட்ட வரலாறு
முன்னாள் எதிர்கட்சி தலைவர் திரு அமிர்தலிங்கம். தமிழரசுக்கட்சி தலைவர்  எஸ். எம். இராசமாணிக்கம் எம்பி , மட்டகளப்பு எம்பி சாம் தம்பிமுத்து . முன்னாள் அமைச்சர் எஸ்.திருச்செல்வம் . தமிழரசு கட்சியின் செனேட்டர் மு.மாணிக்கம் .தமிழ் காங்கிரஸ் எம்பி சிவசிதம்பரம் போன்றோர்  அன்று இதிமுக இளஞ்செழியன் போன்றோரோடு ஒரு புரிந்துணர்வில் செயல்பட்டிருந்தார்கள்
வளன்பிச்சைவளன் : பதிவு - 166  :  : ஈழத்தில் மலையமக்களும் யாழ்பாண
தமிழ் மக்களும் இணைந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்ந்த இ. தி.மு.க மலையகத்தமிழர்களிடையே பரப்புரை மேற்கொண்டு அங்கு இ. தி.மு.க வின் கிளைகள் வேகமாக உருவாக்கியது. ஈழத்தமிழ் மக்களின் உரிமை போருக்கு இவர்களது ஒற்றுமை அவசியம் என மலையகமக்களின் குடியுரிமை காக போராடவும் தமிழ் மக்கள் சம உரிமை பெறவும் போராட தீர்மானித்து 1961 ல் அறிவிக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டத்தில் மலையக தமிழ் மக்களை பங்கு பெறச் செய்து புதிய வரலாற்றை உருவாக்கியது இ. தி.மு.க.

Wednesday, December 29, 2021

ஈழத்தமிழர்களிடமும் பெரியாரின் தாக்கம் உண்டு .. ஜாதிபெயர்கள் கிடையாது

ராதா மனோகர் :   பெயர்களில் உள்ள ஜாதி  குறியீடுகளை தமிழகத்தில் மட்டுமல்லாது  கடல் கடந்தது    ஈழத்தமிழர்களின் பெயர்களிலும் இருந்த ஜாதி  பெயர்களை அறவே ஒழித்து விட்டது என்பது வியப்புக்கு உரிய செய்திதான்!

அங்குள்ள எந்த அரசியல் கட்சியும் பெயர்களில் இருந்த ஜாதி குறியீடுகளை ஒழிக்க வேண்டும் என்றுஎந்த   காலத்திலும் பேசியதாக   தெரியவில்ல.
ஆனால் அந்த மக்கள் தங்கள்  ஜாதி குறியீடுகளை பாவிப்பதில்லை.
பெரியாரின் கருத்துக்கள் அங்கு தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.   
தமிழக திரைப்படங்கள் பாடல்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் மூலம் தமிழகத்தை பற்றிய அறிவு இலங்கை தமிழர்களுக்கு ஓரளவு இருந்திருக்கிறது.
ஆனால் தமிழக மக்களுக்கு இலங்கை தமிழர் பற்றி யுத்ததிற்கு முன்பு வரை பெரிதாக தெரிந்திருக்கவில்லை.
சிங்களவர்கள் தமிழர்களை தாக்குகிறார்கள் என்றது தமிழகம் துடித்து எழுந்தது வரலாற்று உண்மை.
இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லோரும் எம்மவரே என்று கொதித்து எழுந்த  தமிழகத்துக்கு யாழ் மையவாதிகள் பற்றி தெரிந்திருக்கவில்லை. 
 தமிழ் தேசியவாதிகளான புலிகளுக்கு திராவிட பகுத்தறிவு சுயமரியாதை போன்ற சொற்களே வேப்பங்காயாக கசந்ததில் வியப்பில்லை .
 கம்யுனிசம் என்றால் பிறவி எதிரிதான் .அதைவிட மோசமான எதிரியாக திராவிட கோட்பாட்டை வெறுத்தார்கள் . அதற்கு முக்கயமான ஒரு காரணமாக சாதி மறுப்பு என்று மட்டும் கூறிவிடமுடியாது ,
பார்ப்பனீயத்தின் அசல் வாரிசுகளாக யாழ்மையவாதிகள் இருக்கிறார்கள்.

தா. பாண்டியன் : நானே புலிகளை சரணடைகிறோம் என்று கூறாமல் ஆயுதங்கள் மௌனமாகின்றன என்று கூறுங்கள் என்றேன்

வீரகேசரி  :  நான்காம் ஈழப்போர் காலத்தில் உங்களுக்கும் புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டதாக தகவல்கள் உள்ளனவே?

தா. பாண்டியன் : நான்காம் ஈழ போராட்ட காலங்களில்  எனக்கும் புலிகளுக்கும் இடையில் தொடர்பாடல்கள் இருந்தது  உண்மைதான்.
புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் என்னுடன் தொடர்ச்சியான தொடர்புகளை கொண்டிருந்தார்.
சில அறிக்கைகளை வரைகின்றபோது அவர் என்னுடன் கலந்துரையாடுவார் . அது தொடர்பான ஆதாரங்களும்  என்னிடம் உண்டு.
இவ்வாறான நேரத்தில்தான நடேசன் என்னிடத்தில் தங்களை சரணடையுமாறு கோருகிறார்கள் . என்ன செய்வது என்பது குறித்து என்னிடத்தில் ஆலோசனை நடத்தினார் .
உங்களின் நெருகடியாயான நிலைமைகளை அறியாது  நான் தீர்க்கமாக பதிலளிக்க முடியாது என்றேன்.

இலங்கையில் பெரியாரையும் திராவிட கருத்தியலையும் இருட்டடிப்பு செய்த (தமிழகம்) பார்ப்பன பத்திரிகையாளர்கள்

ஹரன் அய்யர்
மகேஸ்வர சர்மா
ஸ்ரீ நிவாச அய்யங்கார்

ராதா மனோகர் : 
ஸ்ரீ நிவாச அய்யங்கார்
ஹரன் அய்யர்
மகேஸ்வர சர்மா
பெரியாரையும் திராவிட கருத்தியலையும் ஈழத்தில் இருட்டடிப்பு செய்தவரகள் மூன்று பார்ப்பனர்கள் .
1960- 70 களில் ஈழத்து முக்கிய 3 தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களாக இவர்கள் இருந்தார்கள்
வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ நிவாசன் அய்யங்கார் (இந்து பத்திரிகையின் கஸ்தூரி ரங்கன் குடும்ப சம்பந்தி),
மகேஸ்வர சர்மா,- இவர் தமிழரசு கட்சியின் சுதந்திரன் பத்திரிகை ஆசிரியராக இருந்தார் ..மபொசியை ஈழத்துக்கு கூட்டி வந்து அறிமுக படுத்தியவர்.
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர்காக இருந்தவர் கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் அய்யர் .இவர் திருவையாறு வைதீக பார்ப்பனராகும்
மூன்று இலங்கை பத்திரிகையாளர்கள் ..
இவரகள் எக்காரணம் கொண்டும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் பெரியார் பற்றியோ திராவிட கருத்தியல் பற்றியோ அறிந்துவிட கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல் பட்டுள்ளனர்,
குறிப்பாக மதங்கள் சார்ந்த தமிழ் தேசியத்தை இவர்கள் திட்டமிட்டு கட்டி எழுப்பினார்கள்

ஸ்ரீ சபாரத்தினம் கொலை .. பத்மநாபா கொலை ... புலிகளின் அடுத்த குறி .... கலைஞர் மீதா?

ராதா மனோகர் :  ஸ்ரீ சபாரத்தினம் அவர்கள் கொஞ்சம் வசதியான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராகும்.. அவரது ஆரம்ப அரசியல் ஈடுபாடு அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியின் இளைஞர் ஆதரவு தளத்தில் இருந்ததான் ஆரம்பமாகிற்று .
அரசியல் கட்சிகளின் ஜனநாயக பாதை இனி ஏற்புடையது அல்ல என்ற பொதுக்கருத்து எல்லோர் மனதிலும் அப்போது உருவாகி இருந்தது.
ஈழ விடுதலையை நோக்கமாக கொண்டு பல சிறு சிறு அமைப்புக்கள் இயக்கங்கள் ஆங்கும் இங்குமாக தோன்றிகொண்டு இருதது.
அவற்றில் பலம் வாய்ந்த இயக்கங்களாக டெலோவும் ஈரோசும் பிளாட்டும் புலிகளும் உருவானார்கள்.
பின்பு ஈரோசில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்த பத்மநாப டக்ளஸ் தேவனாந்தா ஆகியோர் ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தை தொடங்கினர்கள்.