Tuesday, June 23, 2026

தமிழ் பல்கலை கழக இயக்கம் வளர்ந்த வரலாறு!

May be an image of text that says "வளாநத இயக்கம் 1956й சிங்கனச் நப்பட்ட இலங்கையின் மக்களுடைய த்தை சிதைத்து தன் அவர்களா வரலாறுப அன்று ஆட்சிக்கு முனத்து யிலே இந்தநாடடடி தமிழ் பேசும் தரம் பாட்டை, ரத்தைப், பே ဆော်ခါ ணத்துவம் பெற்று பங்கலக்கழுகமு்ுவ பல்கல்க்கும்காதுதி் வேன் முமென்று கன் ዐየቅይቲ ைப்பின் ழுக்கு உன் உபதாயை நி? இதவரை"
May be an image of map and text

ராதா மனோகர்  தமிழ் பல்கலை கழக இயக்கம் வளர்ந்த வரலாறு!
1956 ஆம் ஆண்டில் தனிச்சிங்கள சட்டம் நிறைவேற்றப்படட சூழ்நிலையில் இலங்கையில் தமிழ் பேசும் மக்களுடைய கலை கலாச்சாரத்தை பாரம்பரியத்தை சிதைத்து அவர்களுடைய தனித்தன்மையை அழித்து அவர்களை வேரோடு ஒழித்துகட்ட இந்த நாட்டிலே அன்று ஆட்ச்சிக்கு வந்தவர்கள் முனைந்து நின்ற வேளையிலே இந்த நாட்டிலே உள்ள தமிழ் பேசும் மக்கள் தமக்கு ஒரு அரசியல் இயக்கம் மாத்திரம் போதாது  தமிழு பண்பாட்டை கலையை கலாச்சாரத்தை பேணிக்காக்க பூரணத்துவம் பெற்ற ஒரு பல்கலை கழகமும் அவசியம் வேண்டுமென்று எண்ணினார்கள் 
இயக்கம் தொடங்கியது 
இப்படி எண்ணியவர் ஒரு பல்கலை கழக இயக்கத்தையும் ஆரம்பித்தார்கள் 

வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர்  திரு அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் மேலும் பேசும்பொழுது ,
இது எங்கள் கட்சியால்  ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கம் அல்ல.
பல்கலை கழக பேராசிரியர்களாக இருந்த பேராசியர் சின்னத்தம்பி பேராசியர் எலியேசர்  பேராசிரியர் மயில்வாகனம் அவர்கள் .
இன்று மலேசிய பல்கலை கழகத்தில் பேராசியாராகஇருக்கின்ற வணக்கத்திற்குரிய தனிநாயகம்  அடிகளார்  போன்றவர்கள்.


இந்த நாட்டின் உயர்தர நீதி அரசர்களாக விளங்கிய ஸ்ரீஸ்கந்தராசா  சின்னத்தம்பி போன்றவர்கள் மேலும்  அரசாங்க சேவையில் பல்வேறு அங்கங்களிலும் உயர்தர பதவிகளில் இருந்த  தமிழ் மக்கள்,
இந்த நாட்டிலுள்ள முஸ்லீம் பிரமுகர்கள் எல்லோரும் சேர்ந்து தாமாகவே நிதி திரட்டி மாதாமாதம்  நூற்றுக்கணக்கான ரூபாக்களை   தமிழ் பல்கலை கழக இயக்கத்திற்கு கொடுத்து இந்த தமிழ் பல்கலை  இயக்கத்தை ஆரம்பித்தார்கள் 

1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தமிழ் பல்கழக இயக்கம் நாட்டின் பல்வேறு பாகங்களிலும்   உள்ள தமிழ் மக்களை ஒன்று படுத்தும் நோக்கத்தோடு இந்த உத்தேச தமிழ் பல்கலை கழகத்தை எங்கே எப்படி அமைக்கலாம் என்று தீர யோசித்து ஒரு முடிவுக்கு வந்தது  

அது கட்சி சார்பற்ற அரசியல் தொடர்பற்ற காளிமான்களுடைய தமிழ் மக்களின்  வருங்காலக் கல்வியில் அக்கறை கொண்டவர்களுடைய  இயக்கமாகவே நடைபெற்று  வந்தது.
அவர்களது அழைப்பின் பேரில் நாமும் கலந்து கொண்டோம் .
மத்திய இடம் 
தமிழ் பேசும் மக்கள் பாரம்பரியமாக  வாழும் பூமியாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இடையே  மத்தியான இடத்தில இந்த பல்கலை கழகம் நிறுவப்பட வேண்டும் என்று முடிவு செய்தது 
இந்த முடிவின் படிதான் திருமலையில் நிலத்தை வாங்கினார்கள் 
தமிழ் மக்கள் விரும்பி கொடுத்த பணத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான நிலத்தை அங்கே வாங்கினார்கள்  
அங்கெ முதன் முதலில் வெறும் ஏட்டு கல்வி உதவாதென்று விவசாய துறையிலே பட்டம் பெறச்செய்து  எமது மக்களுடைய  வருங்காலத்தை கைத்தொழில் விவசாய துறைகளில் கூடுதலா  திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் விவசாய கலோரியை திருகோணமலையில் கட்டி இன்றும் ஒரு சில  மாணவர்களோடு  வருகிறது 
1959 ஆம் ஆண்டு இந்த  தமிழ் பல்கலை கழகத்திற்கு திருகோணமலையில்   பெருந்திருவிழாவாக  அத்திவாரக்கல்ல நாட்டப்பட்டது .     

No comments:

Post a Comment