Saturday, June 27, 2026

ஈ பி ஆர் எல் எப் இயக்கமும் அமெரிக்க தம்பதி கடத்தலும் EPRLF and Mr and Mrs Allen kidnaped

May be an image of one or more people and people smiling

 ராதா மனோகர் : ஈ பி ஆர் எல் எப் இயக்கம் 1984 மேமாதம் ஸ்டான்லி மெரி ஆலன் தம்பதிகளை கடத்தியது ஒரு பாரதூரமான விடயம்! 
இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை பற்றிய எந்த புரிதலும் அற்று வெறும் விளம்பர ஸ்டன்டாகதான் இந்த அமெரிக்க தம்பதிகளை கடத்தி இருந்தார்கள் என்றெண்ணுகிறேன் 
விளம்பரம் என்னவோ கிடைத்தது ஆனால் அது ஒரு விடுதலைக்கானதாக இருக்கவில்லை ,
மாறாக ஒரு ஆட்டோ சங்கர் அல்லது சந்தனக்கடத்தல் வீரப்பன் போன்றவர்களுக்கு கிடைத்த விளம்பரத்திற்கு ஒப்பானதாகத்தான் இருந்தது 
அவரை கடத்தும்போது அவர்களின் வீட்டில் இருந்த ஐம்பதினாயிரம் ரூபாய்களையும்  பல டாகுயுமெண்டுகளையும் லெட்டர் பேட் பேப்பர்களையும் எடுத்து சென்றதாக பத்திரிக்கை செய்திகள் கூறின.
தம்பதிகளை விடுவிப்பதற்கு ஐம்பது  மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க கட்டிகளும் தமிழக சிறைகளில் உள்ள 20 தோழர்களின் விடுதலையும் கோரி இருந்தனர் 
இதற்காக 72 மணித்தியாலங்கள் கெடுவும் விதித்தனர் 
இலங்கையில் குடிநீர் திட்ட பணிகளுக்கு Akron-based Ruhlin company. He was project manager of a $4m fresh-water distribution system பொறுப்பேற்று வந்திருந்தார்கள் 
அப்போது முதலமைச்சர்   எம்ஜியார் 

Tuesday, June 23, 2026

தமிழ் பல்கலை கழக இயக்கம் வளர்ந்த வரலாறு!

May be an image of text that says "வளாநத இயக்கம் 1956й சிங்கனச் நப்பட்ட இலங்கையின் மக்களுடைய த்தை சிதைத்து தன் அவர்களா வரலாறுப அன்று ஆட்சிக்கு முனத்து யிலே இந்தநாடடடி தமிழ் பேசும் தரம் பாட்டை, ரத்தைப், பே ဆော်ခါ ணத்துவம் பெற்று பங்கலக்கழுகமு்ுவ பல்கல்க்கும்காதுதி் வேன் முமென்று கன் ዐየቅይቲ ைப்பின் ழுக்கு உன் உபதாயை நி? இதவரை"
May be an image of map and text

ராதா மனோகர்  தமிழ் பல்கலை கழக இயக்கம் வளர்ந்த வரலாறு!
1956 ஆம் ஆண்டில் தனிச்சிங்கள சட்டம் நிறைவேற்றப்படட சூழ்நிலையில் இலங்கையில் தமிழ் பேசும் மக்களுடைய கலை கலாச்சாரத்தை பாரம்பரியத்தை சிதைத்து அவர்களுடைய தனித்தன்மையை அழித்து அவர்களை வேரோடு ஒழித்துகட்ட இந்த நாட்டிலே அன்று ஆட்ச்சிக்கு வந்தவர்கள் முனைந்து நின்ற வேளையிலே இந்த நாட்டிலே உள்ள தமிழ் பேசும் மக்கள் தமக்கு ஒரு அரசியல் இயக்கம் மாத்திரம் போதாது  தமிழு பண்பாட்டை கலையை கலாச்சாரத்தை பேணிக்காக்க பூரணத்துவம் பெற்ற ஒரு பல்கலை கழகமும் அவசியம் வேண்டுமென்று எண்ணினார்கள் 
இயக்கம் தொடங்கியது 
இப்படி எண்ணியவர் ஒரு பல்கலை கழக இயக்கத்தையும் ஆரம்பித்தார்கள் 

வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர்  திரு அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் மேலும் பேசும்பொழுது ,
இது எங்கள் கட்சியால்  ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கம் அல்ல.
பல்கலை கழக பேராசிரியர்களாக இருந்த பேராசியர் சின்னத்தம்பி பேராசியர் எலியேசர்  பேராசிரியர் மயில்வாகனம் அவர்கள் .
இன்று மலேசிய பல்கலை கழகத்தில் பேராசியாராகஇருக்கின்ற வணக்கத்திற்குரிய தனிநாயகம்  அடிகளார்  போன்றவர்கள்.

Monday, June 22, 2026

கச்ச தீவு - அணு ஆயுதம் - வெட்ஜ் பாங் - ஸ்ரீமா இந்திரா ஒப்பந்தம் ·

ராதா மனோகர் : தெற்காசியாவை அணு ஆயுத மற்றும் அணு சோதனைகள் அற்ற பகுதியாக அறிவிக்க இலங்கை மேற்கொண்ட முயற்சியும், 
கச்ச தீவு ஒப்பந்தமும்!
20  நாள் இடைவெளியில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகள் கூறுவதென்ன? 
கச்சத்தீவு  ஒப்பந்தம் பற்றிய புரிந்துணர்வுக்கு  சில விடயங்களை ஆழமாக ஆய்ந்து பார்ப்பது அவசியம்.
குறிப்பாக தெற்கு ஆசியாவில் இலங்கையின் வகிபாகம் பற்றிய வரலாறு பற்றிய ஆய்வும் முக்கியமான தொன்றாகும்!
இலங்கை ஒரு சிறிய நாடக இருந்தாலும் அது பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது.
அதன் பழைய வரலாறும் சரி அண்மைக்கால வரலாறும் சரி நுட்பமாக கவனிக்க தக்கது
குறிப்பாக  தெற்காசிய பிராந்தியத்தின் முக்கியமான ஒரு தளமாக காலனித்துவ காலங்களிலும் சரி இன்றும் சரி இலங்கை விளங்குகிறது.
இந்த கோணத்தில் சில விடயங்களை பாப்போம்!   
இந்துமாக்கடல் பகுதியை  அணு ஆயுதங்கள் அற்ற ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை சுதந்திரம் அடைந்த காலங்களில் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளது.
 May 1954 இல் தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடந்தது

Thursday, June 4, 2026

சுன்னாகம் திராவிடர் சங்க அங்கத்தவர்கள் பட்டியல் இது 11 ஆம் தேதி பெப்ருவரி மாதம் 1927 ஆம் ஆண்டு

 ராதா மனோகர் ; : திராவிடன் பத்திரிகை 
 11 ஆம் தேதி பெப்ருவரி மாதம் வெள்ளிக்கிழமை 
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர் சங்கத்தினால் இந்த திராவிடன் பத்திரிகை வெளியிடப்பட்டது 
இந்த அமைப்பின் சார்பாகத்தான் திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம் ஆரம்பிக்கப்பட்டது 
அச்சங்கந்தின்  சார்பாக திராவிட வித்தியா சாலை என்ற பள்ளிக்கூடமும் நடத்தப்பட்டது 
அச்சங்கத்தின் அங்கத்தவர்கள் பற்றிய விபரமான பட்டியல் இது 
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம்
சங்கத்தின் தலைவர் அப்புக்காத்து ஸ்ரீமான் mr சு.ராசரத்தினம் அவர்கள் 
சங்கத்தின் உபதலைவர் 
ஸ்ரீ டி எஸ் நாகலிங்கம் அவர்கள் ஸ்ரீ கே முருகப்பா , ஸ்ரீ எம் .மண்டலம் அவர்கள் 
சங்கத்தின் காரியதரிசிகள் 
ஸ்ரீ பி கிருஷ்ணசாமி முதலியார் அவர்கள்,  ஸ்ரீ வி எஸ் பூதப்பிள்ளை அவர்கள் 
சங்கத்தின் பொக்கிஷதாரர்கள் ஸ்ரீ வி எம் கந்தையா அவர்கள் 
ஸ்ரீ கே மூத்தார் அவர்கள் 

Tuesday, June 2, 2026

தமிழ் மொழி விதிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிங்கள இடதுசாரிகளின் கறைபடிந்த வரலாறு

No photo description available.

ராதா மனோகர் : இலங்கையில் எப்போதும் இடது சாரிகள் எனப்படுவோர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடுமையான சிங்கள இனவாதிகளாகவே செயல்பட்டுள்ளனர் 
இவர்களுக்கு அவ்வப்போது முட்டு கொடுக்கும் வேலையை தமிழ் இடது சாரிகளும் செய்துள்ளனர் 
இவர்கள் என்னதான் குத்தி முறித்து திரிபு வாதங்களில் ஈடுபட்டாலும் வரலாறு இவர்களை அம்பலமாகி கொண்டே வருகிறது 
பச்சை இனவாதிகளான  பண்டராநாயகக்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் அவர்களோடு சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கும் எதிராக விஷம் கக்கியதுதான் இலங்கை இடதுசாரிகளின் வரலாறு 
அதிலும் இவர்களில் பலர் லண்டனில் படித்த அசல் மேட்டுக்குடி கனவான்கள் 
இலங்கையின் முதல் இடதுசாரி அரசியல் கட்சியின் நிறுவனரான டாக்டர் என் எம் பெரேராவின் தமிழ் இன வெறுப்பு அரசியல் வரலாறு பற்றிய பதிவு இது 

Monday, June 1, 2026

திமுகவை கைப்பற்ற வைகோவுக்கு உதவிய புலிகள்! பழி தீர்த்துக்கொண்ட வைகோ

 ராதா மனோகர் : வைகோ ஒரு அயோக்கியர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை 
ஆனால் அவரின் புத்திசாலித்தனத்தை என்னால் மெச்சாமல் இருக்கவும் முடியவில்லை 
இவர் ஒரு அசல் ஆர் எஸ் எஸ் காரர் 
திராவிட இயக்கத்திற்குள் ஊடுருவிய சனாதனவாதி 
தனது சுயரூபத்தை மறைத்து புலிகளோடு உறவு கொண்டாடி அவர்களை மிக சரியாக இனம் கண்டு பயன்படுத்தினார் 
அது ஓரளவு பயனளித்தது   ஆனாலும் அதன் முழு பயனை இவர் அடையவில்லை 
அந்த சோகம் வாழ்நாள் முழுவதும் இவருக்கு உண்டு ..பாவம் 
புலிகளை பயன்படுத்தி திமுகவை கைப்பற்றும் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது என்றுதான் கூறவேண்டும் 
அந்த முயற்சிக்கு புலிகளின் பூரண ஒத்துழைப்பை இவர் பெற்றுக்கொண்டமை இவரின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று எண்ணுகிறேன் 
புலிகள் இவரின் திறமையை இவரின் செல்வாக்கை இவரின் விசுவாசத்தை எல்லாம் பூரணமாக நம்பினார்கள் 
உலகில் எவருக்குமே உண்மையாகவோ விசுவாசமாகவோ இருந்து  பழக்கப்படாத புலிகள் இவரிடம் உண்மையிலேயே விசுவாசமாகவே நடந்து கொண்டார்கள் 
தங்கள் கஜானாவையும் விளம்பர வெளிச்சத்தையும்  தாராளமாக வழங்கினார்கள்