Tuesday, June 21, 2022

1928 இல் திராவிடன் பத்திரிகையில் வந்த இந்த விளம்பரம் .. யாழ்ப்பாணம்

 ராதா மனோகர் :  1928 இல் திராவிடன் பத்திரிகையில் வந்த இந்த
விளம்பரம் ஒரு நையாண்டி வகையை சார்ந்தது போல் தோன்றுகிறது ..
மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் பல பெரியவர்கள் எப்படிப்பட்ட மனோநிலையில் இருக்கிறார்கள் என்பதை இந்த விளம்பரம் மூலம் காட்டுவதாக தெரிகிறது ..பிரபுக்களுக்கு ஐந்து ரூபாய் பரிசு அறிவிக்கிறார்கள்
 "விளம்பரம்"
தமிழர் ஐக்கியம்
இலங்கையில் வாழும் சிங்களர் தமிழரின் ஐக்கிய விஷயமாக பாக்களியாற்றி பரிசு பெற்ற ஸ்ரீ வே தா தியாகராஜ பிள்ளை போன்றவர்கள் பெரியவர்களுக்கும் பிரபுக்களுக்கும் அறியத்தரும் விளம்பரமாவது .
தமிழ் மக்கள் தம்முள் ஒருவரை தாழ்த்தியும் ஒடுக்கியும் மிருகங்களில் கேவலமாக நடத்துவதை நிராகரித்தும் தமிழ் மக்களாகிய தம்முள் வித்தியாசம் இன்றி ஐக்கியம் வேண்டுமென்பதாக பாக்கள் அல்லது வியாச மூலமாகவேனும் எழுதி ஆவணி 30 ந் திகதிக்குள் அனுப்பும் வியாசங்களை ஏற்று தகுதி எனக்கண்டு 5 ரூபாய் பரிசு கொடுக்கப்படும் எனத்  தெரிவிக்கிறோம்.
இங்கனம் திராவிடன் ஆபீஸ்
சுன்னாகம் 

Monday, June 20, 2022

ஹிம்லர் ..ஹிட்லரின் நம்பர் 2 ஆரிய வெள்ளை தூய்மை இனவாத கொலைகாரன்

ராதா மனோகர்  ஹென்றிச் ஹிம்லர் ..  மிகவும் அமைதியானவன் . அசாத்திய திறமைசாலி . ஹிட்லர் அரங்கேற்றிய  இன அழிப்புக்களின் முக்கிய சூத்திரதாரியே இவன்தான்
ஹிட்லர் மீது எல்லையற்ற ஈடுபாடும்   எந்த குரூரத்திற்கும் அஞ்சாத ஒரு வித பக்தி உணர்வும் கொண்டவன்.
தனது அதிகார போட்டியில் தனக்கு எதிரானவர்களை ஒழித்து கட்டி மிக வேகமாக ஹிட்லருக்கு அடுத்த இடத்திற்கு   வந்து சேர்ந்தான்
ஆனால் நாசிகளின் எல்லைகடந்த அதிகாரம் முடிவுக்கு வந்தபோது  ஹிட்லருக்கு மிக மோசமான ஒரு நம்பிக்கை துரோகத்தையும் பின்பு செய்தான்
1900 ஆம் ஆண்டு அக்டொபர்  மாதம் 7 ஆம் தேதி ஒரு பள்ளிக்கூட உதவி தலைமை ஆசிரியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தான்
படிக்கும் காலத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும் கவனமாக படித்து கெட்டிக்கார மாணவன் என்ற பெயரை எடுத்திருந்தால்
கிறிஸ்தவ தேவாலய நிகழ்வுகளில் பக்தியோடு பங்கெடுத்து கொண்டான் .
நான் எப்பொழுதும் கடவுளுக்கு விசுவாசமாகவே இருப்பேன் கடவுளை விரும்புகிறேன் என்று தனது டயரியில் எழுதியிருந்தான்
ஆனால் பிற்காலத்தில் தேவாலய பாதிரிகளையே ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றான்  
தனது குடும்பதில் இருந்த அரச குடும்ப தொடர்புகளால் இவன் அதிகாரவர்கத்திற்கு நெருங்கி இருந்தான்
படைகளில்  சேர்ந்து நாட்டுக்காக சேவையாற்ற விரும்பினான்
தனது 17 வயதில் கடற்படையில் ஒரு அதிகாரியாக  சேர்வதற்கு முயன்றான்
ஆனால் கண்பார்வை குறைவு காரணமாக அந்த முயற்சி கைகூடவில்லை
பின்பு ராணுவ பயிற்சி கூடத்தில்  சேர்ந்தான் . பயிற்சி காலம் முடிவடையும் காலத்தில் முதலாவது உலக யுத்தம் முடிவடைந்திருந்தது

Monday, June 6, 2022

திமுக ஒரு சாதாரண அரசியல் கட்சியல்ல .. இந்திய ஒன்றியத்தின் நன்னம்பிக்கை முனை

 ராதா மனோகர் : இந்தியா முழுமைக்கும் அரசியல் போக்கை
தீர்மானிக்கும் திராவிட முன்னேற்ற கழகம் (TREND SETTER)
திராவிட முன்னேற்ற கழகம், ஏனைய அரசியல் கட்சிகளை போல வெறும் ஒரு அரசியல் கட்சி கிடையாது.
அது ஒரு வெறும் மாநில கட்சி போல் தோன்றினாலும்,
அதையும் தாண்டிய ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே அது உருவாகி உள்ளது..
சுயமரியாதை, சமுக நீதி, பகுத்தறிவு, மாநில சுயாட்சி என்ற நான்கு
தூண்களும் கொண்டு நிமிர்ந்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம்!   
இந்த  நான்கு அடிப்படை கோட்பாடுகளும் ஆரிய பார்ப்பனீய காலனி தத்துவத்துக்குநேர் எதிரான கோட்பாடுகளாகும்  .
அதன் ஒவ்வொரு படிநிலையிலும் அந்த கருத்தியலில் மிகவும் உறுதியாக முன்னேறி கொண்டே வந்திருக்கிறது.  
இதன் அடிப்படை கொள்கைகள் சராசரி மக்களின் புரிந்துணர்வை தாண்டிய வீச்சு கொண்டதாகும்.   
இந்த உண்மையை இன்றைய தலைமுறையினர் பெரிதாக அறிந்திருக்கவில்லை.  
இதை புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருக்கலாம்.
திறந்த மனதோடு அணுகினால் மட்டுமே இந்த கருத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளமுடியும்.

Sunday, June 5, 2022

திரு சௌமியமூர்த்தி தொண்டைமானும் திரு ஜி ஜி பொன்னம்பலமும்

 ராதா மனோகர் : குட்டாப்பிடி என்ற தோட்ட கிராமத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு பற்றிய செய்தி இது
அங்குள்ள தோட்டத்தில் நடந்த கலவரத்தில் தோட்டத்தை சேர்ந்த ஒருவர் கொலைசெய்யப்பட்டார்
அந்த கொலையில் சந்தேகத்தின் அடிப்படையில் எட்டு மலையக தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
எட்டு தொழிலாளர்களும் கூட்டம் கூடி திடடமிட்டு இந்த கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது  
தொழிலாளர்கள் பதறிப்போய்விட்டார்கள்
எட்டு பேர்களும் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கத்தின்  தலைவரிடம் போய் உதவி கேட்டு மன்றாடினார் குடும்பத்தினர்

அந்த தொழிற்சங்க தலைவர் ஒரு சிங்கள வழக்கறிஞரை அணுகி இது பற்றி பேசினார் . அவர் இந்த வழக்கை கையிலெடுப்பதற்கு   5000 ரூபாய் கேட்டார் . இந்த தொகைக்கு தொழிலாளரக்ள் எங்கு போவார்கள்?
அந்த தொழிற்சங்க தலைவரும் கையை விரித்து விட்டார்

பின்பு இந்த இவர்கள் கொழும்புக்கு போய் திரு தொண்டைமானை சந்தித்து நிலமையை எடுத்து சொன்னார்கள்
கவனமாக கேட்ட தொண்டைமானுக்கு இந்த எட்டு பேர்களும் குற்றவாளிகள் அல்ல என்று தோன்றியது
இவர்கள் நமது தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் அல்லவே என்ற எண்ணம் கொஞ்சம் கூட திரு தொண்டைமானுக்கு இருக்கவில்லை.
கவலைப்படாதீர்கள் நான் முடிந்ததை செய்கிறேன் என்று வாக்குறுதி அள்ளித்தர தொண்டமான்

Saturday, June 4, 2022

மலையக மக்களின் குடியுரிமையும் கம்யூனிசமும்

 ராதா மனோகர்
:   1948 ஆம் ஆண்டு இலங்கை அரசு இந்திய வம்சாவளியினரின் குடியுரிமையை  பறித்த வரலாறு.தொடர்பாக சில தகவல்கள் ...
இந்த விடயத்தின்  பின்னணி பற்றிய   பல விடயங்கள் மர்மமாகவே இருக்கிறது
ஏராளமான பத்திரிக்கை  செய்திகளும்  நூல்களும் பொதுவெளிக்கு வந்தாலும் சில உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது
அரசியல் வாதிகளின் அ
ரசியல் வியாபாரமானது பல  உண்மைகளை  வெகு நேர்த்தியாக திட்டமிட்டு மறைத்தே வந்துள்ளது.
இந்திய வம்சாவளி தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே அப்போது இருந்திருக்கிறது
எமக்கு ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி கொண்டிருந்த மக்களிடையே இடதுசாரி கருத்துக்கள் ஓரளவு வரவேற்ப்பை பெற்றதில் ஆச்சரியம் இல்லை.


அந்த காலக்கட்டங்களில் கம்யூனிச அச்சுறுத்தல் என்ற பதம் உலக  நாடுகளில் வெகு பலமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தையாகும்
இந்த பின்னணியை பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் மலையக தொழிலாளர்களின் வாக்குரிமை பறிப்பு பற்றி பேசவே முடியாது

1948 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்திற்கு மலையகத்தில் இருந்து ஏழு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்
அது மட்டும் அல்லாது பல சிங்கள இடதுசாரிகளும் கூட மலையக மக்களின் வாக்கு பழத்தில் வெற்றி பெற்றிருந்தனர்  
இதன் காரணமாக அந்த தேர்தலில்   இடதுசாரி கட்சிகள் தென்னிலங்கையில் மிக அழுத்தமாக வேரூன்றின     .  அத்தேர்தலில் வலதுசாரி கட்சியான யு என் பி UNP  42 seats தொகுதிகளில் வெற்றி பெற்றது
மீதி தொகுதிகளில் வெற்றி பெற்ற  LSSP 10,  the CIC 7, the BLP 5, the CP 2, the Labor Party 1, ( 21 independents).போன்றவை இடது சாரி கட்சிகளாகும் ,சுயேட்சையாக வெற்றி பெற்ற பல உறுப்பினர்களும் இடது சாரி மற்றும் தொழிலாளர் வர்க்க சார்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்களாகும்