Tuesday, June 2, 2026

தமிழ் மொழி விதிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிங்கள இடதுசாரிகளின் கறைபடிந்த வரலாறு

No photo description available.

ராதா மனோகர் : இலங்கையில் எப்போதும் இடது சாரிகள் எனப்படுவோர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடுமையான சிங்கள இனவாதிகளாகவே செயல்பட்டுள்ளனர் 
இவர்களுக்கு அவ்வப்போது முட்டு கொடுக்கும் வேலையை தமிழ் இடது சாரிகளும் செய்துள்ளனர் 
இவர்கள் என்னதான் குத்தி முறித்து திரிபு வாதங்களில் ஈடுபட்டாலும் வரலாறு இவர்களை அம்பலமாகி கொண்டே வருகிறது 
பச்சை இனவாதிகளான  பண்டராநாயகக்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் அவர்களோடு சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கும் எதிராக விஷம் கக்கியதுதான் இலங்கை இடதுசாரிகளின் வரலாறு 
அதிலும் இவர்களில் பலர் லண்டனில் படித்த அசல் மேட்டுக்குடி கனவான்கள் 
இலங்கையின் முதல் இடதுசாரி அரசியல் கட்சியின் நிறுவனரான டாக்டர் என் எம் பெரேராவின் தமிழ் இன வெறுப்பு அரசியல் வரலாறு பற்றிய பதிவு இது 


பண்டாரநாயக்க இலங்கையின் உத்தியோக மொழி சிங்களம் மட்டுமே என்ற சட்டத்தை கொண்டுவந்து ஒரே நாளில் இலங்கையின் அத்தனை நல்ல விடயங்களுக்கும் சவக்குழி தோண்டினார்கள்.
இந்த இழிவு அரசியலை  கொஞ்சமாவது நிவர்த்தி செய்வதற்காக 1965 இல் பதவிக்கு வந்த  பிரதமர் கௌரவ டட்லி சேனநாயக தமிழ் மொழி விசேட விதிகள் சட்டத்தை கொண்டுவந்தார் 
இவரின் ஐக்கிய தேசிய கட்சியானது தமிழரசு கட்சி தமிழ் காங்கிரஸ் கட்சி தொண்டைமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட மற்றும் பல  கட்சிகளோடு சேர்ந்த   ஒரு கூட்டணி அரசாகவே பதவிக்கு வந்தது.

May be an image of text that says "DR. N.M .PERERA imgflip.com com"
1965 இல் இருந்து 1970 வரை இவரின் ஆட்சி நல்ல முறையில் நடந்தது   இவரின் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் விவசாயம்  செழித்து ஓங்கியது முத்தையன் கட்டு விசுவமடு போன்ற பல விவசாய குடியேற்ற திட்டங்களும்  இவரின் ஆட்சியிலேயே செழித்தது 
விவசாய பணியாளர்களை அரசு பணியாளர்களாக நியமித்து இளைஞர்களை விவசாயத்தின் பால் திருப்பி விட்டது  லாண்ட் ஆர்மி உண்மையிலேயே ஒரு புரட்சிகரமான நடவடிக்கைதான்.
ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் மொழி விசேஷ விதிகளுக்கு எதிராக சிங்கள இனவாதிகளும் சிங்கள இடதுசாரிகளும் கைகோர்த்து பெரிய கலவரங்களை அரங்கேற்றினார்கள் 
இந்த கும்பல்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டது  
அதில் ஒரு புத்த பிக்கு உயிரிழந்தார்  
இவரை ஒரு தியாகி என்ற ரேஞ்சில்  சமசமாஜிகளும் கம்யூனிஸ்டு கட்சிகளும் சிறிலங்காக சுதந்திர கட்சியின் பாரம்பரிய  இனவாதிகளோடு சேர்ந்து கூக்குரல் இட்டனர் 
இலங்கை கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளரும் பழம் பெரும் இடது சாரி தலைவருமான திரு பீட்டர் கெனமன் இந்த பிக்குவின் தியாகத்தை புகழ்ந்து பேசி மார்க்சியத்துக்கே ஒரு புதிய வரலாறு படைத்தார் 
 

 No photo description available.

அதாவது இலங்கையின் முற்போக்கு மக்களின் உரிமைக்காக இந்த பிக்கு செய்த தியாகம் பெரிதாம்!
இவர்களின் இந்த இனவாத நெருப்பு நன்றாகவே பற்றி கொண்டது 
அதன் காரணமாக 1970 இல் நடந்த தேர்தலில் இந்த இனவாத இடதுசாரி கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையாயோடு  பதவிக்கு வந்தது.
பிரதமர் டட்லி சேனநாயக்க தனது சொந்த தொகுதியிலேயே தோற்கடிக்க பட்டார் 
இன்று போல் அன்றும் நாட்டுக்கு நன்மை செய்தவர்கள் தோற்கடிக்க பட்டனர் 
இனிப்பையும் இனவாதத்தையும் கலந்து கொடுத்தவர்கள் வெற்றி பெற்றனர் 
இவர்கள் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே இலங்கையில் முதன் முதல்ல பட்டினி சாவு என்ற செய்தியை அறிமுக படுத்தினார்கள்      :

May be an image of ‎text that says "‎ஜாத் தமிழ் 58-L பற்றப் நூராவும் அமுல்நிடத்த பார்க்கமண்டில் أ டாக! r கொழும்பு, தின் இந்நாட்டின 호유.7 லாப் பருதிகளிலும் Oura பொசமோழியான மா சிங்களத் தமுமுல் பத்துவதற்கு சட்டல்திகள் கொண்டுவகு பதுதான் தேசிய आाक லாவ கடமை பாகழிருக்கவேன் DI 0قا சமசமாஜன் கட்சித் தல்லவர் டாக்டர் TGI. எம். Ουθ DIT பாராளுமல்றந்ில்தேர் நேற் DU பேசம்போது கூறியர். இந்நாட்டில் தனிச்சங்களம் பகுதிகளிலும் தப்பட முன்னர்பேசிய பேசிய ஜெயவர்த்தன் சம்பந்தமாகே Ουσσαα இர்ப்பு LIR அசம்பா‎"‎
11 ஜனவரி 1966 ஈழநாடு 
நாடு முழுவதும் சிங்களத்தை அமுல் செய்யவேண்டும் 
இந்நாட்டில் உள்ள எல்லா பகுதிகளிலும் உத்தியோக மொழியான சிங்களத்தை அமுல் நடத்துவதற்கு சட்டவிதிகளை கொண்டுவருவதுதான் தேசிய அரசாங்கத்தின் முதலாவது கடமையாக இருக்க வேண்டும் என்று சமசமாஜ கட்சி தலைவர் டாக்டர் என் எம் பெரேரா பாராளுமன்றத்தில் பேசும்போது கூறினார்.
இந்நாட்டில் தனிச்சிங்கள எல்லா பகுதிகளிலும் அமுல் நடத்த படவில்லை என்று முன்னர் பேசிய ஜெ ஆர் ஜெயவர்தன கூறியது சம்பந்தமாக டாக்டர் என் எம் பெரேரா  மேற்கண்டவாறுகூறினர்.
இச்சட்ட விதிகளின் பின்னணியை ஆராயும் படி கேட்டு கொள்கிறேன் ஜனதின பத்திரிகையில் வெளிவந்த ஐக்கிய தேசிய கட்சி - செல்வநாயகத்தின் இந்த ஒப்பந்தத்தை பிரதமர் இன்னும் மறுக்கவில்லை.

May be an image of text
செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தனிப்பட்ட முறையில்  ஐக்கிய தேசிய கட்சி தலைவர் என்ற முறையில் செய்து கொண்டது .
அந்த ஒப்பந்தத்தை பிரதமர் என்ற முறையில் அமுல் செய்ய கூடாது
காலஞ்சென்ற பிரதமர் பண்டாரநாயக்கவுக்கு தமிழரசு கட்சி தலைவர் செல்வநாயகம்  கடிதம் ஒன்றை டாக்டர் என் எம் பெரேரா படித்து காட்டினார் 
அக்கடிதத்தில் தமிழரசு கட்சியின் முக்கிய நோக்கம் வடக்கு கிழக்கை சிறந்த சமஷ்டி  ஆட்சியை நிறுவுவது என்றும் இதன் மூலம் நாட்டை இரண்டாக பிரிப்பதென்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சியினர் தமிழ் மொழி உபயோக மசோதா விதிகளுக்கு சம்மதித்த காரணம்  தமிழ் நாட்டை ஏற்படுத்துவதற்கு இவ்விதிகள் முதல் படியாக இருக்கும் என்பதுதான் .
பிரதமரை இது பற்றி குறை சொல்ல விரும்பவில்லை ஏனெனில் தமிழரசு கட்சியின் முழு நோக்கத்தை பற்றி அவருக்கு தெரியாது  

May be an image of text that says "1めごた込た தமிழ் தமிழ்மொழி ழி மசே இனி தேநிறை றைவேறி ஆதரித்து 96 பேரும் இரு 6ΓΑ எதிர்த்து 53பேரும்வார் ஏு53பேரும்வாக்கவித்களர் ரக்கவித்கனர் சபாநாயகர் வா வெளியே த்கரவு செனட் சபையிலும் (18--7) LIT பார்கிமேன்டில் சுமுகமாக நிறைவேற்றப்பட்டது பெந்திரிேன்டு wrib. Йου6B5 கொழும்பு செவ். யக்கா தய பட்டளர் பிரதமர் தமிர்பொாழி (விசேெ) BiL விதிகள் மகோகா ഇனைப் காம் உட்வி"
On January 8, 1966, police in Ceylon (now Sri Lanka) shot and killed a Buddhist monk during protests against the Dudley Senanayake government’s Tamil Language Special Provisions Bill.The shooting occurred during an anti-Tamil demonstration opposing the government's language concessions. Left-wing parties, such as the Lanka Sama Samaja Party (LSSP), participated in the rallies. During the demonstrations, police opened fire, killing the bhikkhu. The fatal shooting became a highly contentious issue in Ceylon's parliament, with the opposition moving a vote of no-confidence against the government over the police action

AI   தமிழ் மொழி விசேட விதிகள் சட்டம் (Tamil Language (Special Provisions) Act) என்பது இலங்கையில் தமிழ் மொழியின் பயன்பாட்டை உறுதி செய்வதற்காக 1958 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமாகும்.
அதுவரை சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து எழுந்த தமிழ் மக்களின் எதிர்ப்புகளை அடுத்து, தமிழ் மொழிக்கும் உரிய இடத்தை வழங்கும் நோக்கில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
முக்கிய விதிகள் மற்றும் ஏற்பாடுகள்:கல்வி உரிமை: தமிழ் மொழி மூலமான கல்வியை இடைநிலைப் மற்றும் உயர்கல்வி வரை பெறுவதற்கும், கல்வி நிறுவனங்களில் அதை ஒரு ஊடகமாகப் பயன்படுத்துவதற்கும் வழிவகை செய்யப்பட்டது.
பொதுச் சேவை: அரசாங்கப் பணிகளுக்கு (Public Service) ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுகளைத் தமிழ் மொழியிலும் எழுதலாம்.
நிர்வாகப் பயன்பாடு: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிருவாக நோக்கங்களுக்காகவும், 
ஆவணப் பணிகளுக்காகவும் தமிழ் மொழியைப் பயன்படுத்தலாம்.தொடர்பாடல்: பொதுமக்கள் அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் கடிதப் பரிமாற்றங்களில் தமிழைப் பயன்படுத்தலாம்.
இச்சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட உரிமைகள் பின்னர் 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் IV ஆவது அத்தியாயத்தில் இணைக்கப்பட்டு, தமிழ் மொழிக்கும் தேசிய அந்தஸ்து உறுதிப்படுத்தப்பட்டது

No comments:

Post a Comment