Thursday, July 30, 2026

செட்டி தனபாலசிங்கம் புலிகள் இயக்கத்தின் நிறுவனர் பிரபாகரனின் குருநாதர்


 ராதா மனோகர்
: இவர்தான் செல்லையா தனபாலசிங்கம் இவரது இயக்க பெயர் மாதவன் 
இவரது செல்லப்பெயர் செட்டி 
இலங்கை போராட்ட வரலாற்றை எழுதும் எவரும் தப்பி தவறியும் மறந்து விட கூடாத பெயர்தான் செட்டி தனபாலசிங்கம்!
அத்தனை ஈழவிடுதலை இயக்கங்களுக்கும் சரி இலங்கை அரசுக்கு எதிரான கொரில்லா போர் முறைக்கும் சரி வழிகாட்டி இவர்தான் முன்னோடியும் இவர்தான்.
இலங்கை தமிழர்களின் அரசியல் ஆயுத போராட்டமாக உருமாறிய போது அதன் முதல் அடியை எடுத்து வைத்தவர் திரு செட்டி தனபாலசிங்கம் அவர்கள்தான் 
மிக இளமையில் தவறான வழியில் சென்று சிறு சிறு குற்றங்களுக்காக பிடிபட்டு சிறுவர் நன்னடத்தை பள்ளிக்கூடங்களில் இளமை காலத்தை கழித்தார் 
அதன் காரணமாகவோ என்னவோ ஊரில் ஒரு வித்தியாசமான இளைஞனாக வலம் வந்தார்.

Friday, July 24, 2026

யாழ்ப்பாணம் என்பது வெறும் ஒரு ஊரின் பெயர் என்று மட்டுமா? Loaded with pride and prejudice?


 ராதா மனோகர்
: யாழ்ப்பாணம் என்பது வெறும் ஒரு ஊரின் பெயர் என்று மட்டும் நீங்கள் கருதினால் அதனுள்ளே மறைந்திருக்கும் பல விடயங்கள் உங்களுக்கு தெரியாமலேயே போய்விடும் 
சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக செல்வா செழிப்போடு விளங்கியது யாழ்ப்பாணம் 
தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு வியாபார சந்தையாக யாழ்ப்பாணம் இருந்ததுதான் அந்த பொருளாதார செழிப்புக்கு உரிய முக்கிய காரணம் 
அடுத்ததாக போர்துக்கீச ஒல்லாந்து பிரித்தானியர்களின் கிழக்கிந்திய கம்பனிகளின் ஒரு முக்கிய வர்த்தக கேந்திரமாகவும் யாழ்ப்பாணம் இருந்தது 
மாலைதீவில் இருந்து ஏற்றுமதியாக வேண்டிய சிப்பி குறிப்பாக (கடல்) சோகி போன்ற பொருட்களை  யாழ்ப்பாணம் கொண்டுவந்து சந்தை படுத்துவார்கள் . அங்கிருந்து ஐரோப்பியர்கள் அவற்றை வாங்கி உலகம் முழுவதும் குறிப்பாக கடல் சோகிக்கு ஜப்பானில் பெரும் சந்தை இருந்தது 

Thursday, July 23, 2026

வெண்ணை திரண்டு வரும்போது பானையை உடைக்கும் டக்ளஸ் தேவானந்தா


 ராதா மனோகர்
: வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கான ரெசிடெண்ட் கார்ட்!
இலங்கைக்கு வந்து போகவும் நிரந்தரமாக தங்கவும் தொழில்களை அல்லது வியாபாரங்களை செய்யவதற்கும் உரிய வதிவிட அட்டை! 
இது வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக பலரும் கோரிக்கைகள் விடுத்து கொண்டே வந்துள்ளார்கள் 
எனக்கு தெரிந்த சிலர் இதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள் 
இவர்களின் இந்த முயற்சிக்கு அரசு தரப்பிலும் இதர அரசியல் கட்சிகளிடையேயும் இருந்து   சாதகமான பதில் கிடைத்துள்ளது. 
விரைவில் இது அமுலுக்கு வரும் என்றும்  தெரிகிறது!
நிலைமை இப்படி இருக்க வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று திரு டக்ளஸ் தேவானந்தா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்!
இது வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைக்கும் செயலாகும்.  
இவரின் இந்த வாக்குரிமை கோரிக்கையானது வெளிநாட்டு இலங்கையர்களுக்கான ரெசிடெண்ட் கார்ட் வழங்கலை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. .

Tuesday, July 21, 2026

நாதஸ்வர இசையின் மென்மையை மழுங்கடித்து ஒப்பாரியாக மாற்றிய சைவ வைணவ மதவாதிகள்

 ராதா மனோகர் : பல கர்நாடக சங்கீத விற்பன்னர்கள் உள்ளூர ஹிந்துஸ்தானி இசையை அதிகமாக விரும்புவார்கள் 
ஒரு ரகசிய ரசனை போல ஹிந்துஸ்தானி ராகங்களையும்  கஸல் போன்ற ஹிந்துஸ்தானி இசை வடிவங்களையும் உள்ளூர ரசிப்பார்கள் 
ஆனாலும் பாடல் உருப்படிகள் கர்நாடாக இசையில்தான் அதிகமாக உள்ள காரணத்தால்   கர்நாடக இசைக்கலைஞர்களாக தொடர்கிறார்கள் 
தமிழ் நாதஸ்வர வித்வான்களிடம் அழகியலோடு வளர்ந்த  இசையை சைவ வைணவ  வழிபாட்டு கோஷ்டி கைப்பற்றி அந்த இசையையே ஒரு கர்நாடக வழிபாட்டு மந்திரமாக  மடைமாற்றி விட்டார்கள்.
இதன் காரணமாக  நாதஸ்வர  இசையில் இருந்த காதல் காமம் அன்பு போன்ற மென்மையான ரசனை பெரிதும் குறைந்து விட்டது 
நாதஸ்வர இசையை கர்நாடக இசை என்று மடைமாற்றும் போதே அதன் இனிமை மறைந்து அது ஒரு வழிபாட்டு பக்தி அல்லது ஒப்பாரிக்கு நிகரான இசையாக மாறிவிட்டது 

Thursday, July 16, 2026

OCI card holders இந்திய குடியுரிமையோடு இலங்கை குடிமக்களாக இருந்து இந்திய சேவையை செய்வார்கள்

Overseas Citizenship of India - Wikipedia

 ராதா மனோகர் :  இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு இந்திய அரசு தேடி தேடி வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை வழங்குகிறது!
பூரண இலங்கை குடியுரிமை உள்ள இந்திய வம்சாவளி மக்களை மீண்டும் ஒரு அரை இந்தியர்களாக மாற்ற முயல்கிறது. 
ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்களை இந்த திட்டத்தில் உள்வாங்க முடியும்
ஒரு வேளை அகண்ட பாரத கனவு திட்டமோ?
ஏற்கனவே இலங்கை அமைச்சரவையியே இந்திய குடியுரிமையாளர்கள் உள்ளனர் 
இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள்? 
அடிக்கடி அஜித் தோவாலை ( முன்னாள் ரா அதிகாரி+ இந்நாள் பாதுகாப்பு ஆலோசகர்) பகிரங்கமாகவே சந்திக்கிறார்கள் 
ஆனால் தமிழகத்தில் உள்ள முகாம் வாழ் மக்களை ( 90 வீதம் இந்திய வம்சாவளி) இன்னும் அகதிகளாகவே இந்திய அரசு வைத்திருக்கிறது 

இதே போன்றொதொரு திட்டத்தை  வெளிநாட்டு வாழ் இலங்கை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் போது இந்த இந்திய குடியுரிமையாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்
அதாவது இலங்கை நாடாளுமன்றத்திலும் இலங்கை அமைச்சரவையிலும் கூட இந்த இந்திய குடியுரிமையாளர்கள் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்து கொண்டு இந்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்கள்  போலும்!  

Saturday, July 11, 2026

இலங்கையில் ஒரு மார்சிஸ்ட் ஆட்சியை உருவாக்க முடியும் என்று இடதுசாரிகள் நம்பியது ஏன்?

May be an image of text that says "INDIANS MORE EIndian population 60,000in vear. Vilal Statisties gistrar-General, General, and published June 27th ( 1029) ylon on December 31st.1946. shipping population) 606,000 on December 31st. 1945. xceeded the N number of Kotte: Mr. emigrants 56.790. OCCASION FOR A TAMASHA" Maturata: Kotagala: and E (open"

ராதா மனோகர் சுதந்திர இலங்கையில் ஒரு மார்சிஸ்ட் ஆட்சியை உருவாக்க முடியும் என்று இடதுசாரிகள் நம்பியது ஏன்?
சிங்கள பெரும்பான்மை மக்கள் எப்போதும் பௌத்த சாசன அடிப்படையிலான ஒரு ஜனநாயகத்தைதான் தங்கள் அரசியல் கோட்பாடாக கொண்டுள்ளார்கள் 
பௌத்த மதம் சாதாரண மக்களின் சிந்தனையை கட்டுப்படுத்துவதில் எப்போதும் வெற்றி கண்டே வந்திருக்கிறது.
இலங்கையின் அரசியல் நிலை இப்படி இருக்கையில் சுதந்திர இலங்கையின் முதல் தேர்தலில் ஆட்சியை எட்டி பிடித்திருக்க கூடிய அளவு இடதுசாரிகளால்   எப்படி முன்னேற முடிந்தது என்ற கேள்வி இருக்கிறதல்லவா?
அது ஒன்றும் பெரிய மந்திரம் மாயம் கிடையாது 
இந்திய வம்சாவளி மக்களை இந்திய தொழிற்சங்கங்களும் இந்திய இடதுசாரி இயக்கங்களும் ஆழமாக இடதுசாரி வாக்காளராக மாற்றி இருந்தார்கள் 
தமிழகத்தில் இருந்து வந்த நடேசய்யர் முதலாக தொடர்ந்து வந்த அத்தனை பேர்வழிகளும் இடதுசாரி பிரசாரகர்களாகவே வந்தார்கள் ...பிரசாரம் செய்தார்கள்   ... வென்றார்கள்.