Tuesday, March 28, 2023

1930 ஆகஸ்ட் யாழ்ப்பாணம் ஜனதர்ம போதினி : ஒடுக்கப்படும் தமிழரே .. தீண்டா சாதிகளென்று

ராதா மனோகர்  :  1930 ஆகஸ்ட்  யாழ்ப்பாணம் ஜனதர்ம போதினி
ஒடுக்கப்படும் தமிழரே   .. தீண்டா சாதிகளென்று புறக்கணிக்கப்படுவோரே
கீழ் சாதிகளென்றும் தாழ்த்தப்பட்டவரென்றும் ஒதுக்கப்பட்டவர்களே
அன்பான சகோதர சகோதரிகளே   விழியுங்கள்!  எழுந்திருங்கள்!!
உங்கள் காரியத்தை நீங்களே கைகூடப்பண்ணுங்கள்!
ஆவணி மாதம் 1 ஆம் திகதி தொடங்கி புரட்டாதி மாதம்  11 ஆம் திகதி மட்டும் உங்கள் பெயர்களை பதிவு செய்து புதிய சட்டசபைக்கு அங்கத்தவர்களை தெரிவு செய்யும் உரிமையை பாவியுங்கள்
முந்திய காலத்தில் படித்தவர்களும் பணக்காரருக்கும் மாத்திரம் கவுன்சிலுக்கு (சட்டசபைக்கு) தெரியும் உரித்துடையவர்களாக இருந்தார்கள்.

Saturday, March 25, 2023

தமிழரசு கட்சியும் திராவிட இயக்கத்தின் கடவுள் மறுப்பு கொள்கையும்

No photo description available.

ராதா மனோகர் :   1952 இல் தந்தை செல்வாவும் அவரின் சம்பந்தி நாகநாதனும் முறையே காங்கேசன்துறை யாழ்ப்பாணம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் இந்த இருவரும் வெறுப்பு அரசியலை விதைத்து இருக்க மாட்டார்கள்
அந்த தோல்வி இருவரையும் ஒரு தவறான அரசியலை முன்னெடுக்க வைத்து விட்டது  அந்த தோல்வியில் இருந்து மீள்வதற்கு தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு போராட்ட பரப்புரைகளை இரவல் வாங்கினார்கள்
அதை அப்படியே சிங்கள எதிர்ப்பாக கூர் தீட்டினார்கள்
திராவிட கோட்பாட்டாளரான திரு எஸ் டி சிவநாயகத்தையும் அவரது நண்பர் செல்லையா ராசதுரையையும் கொழும்பில் திராவிட கழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்ட குழு செயலாளராக இருந்த அமிர்தலிங்கத்தையும் முன்னிறுத்தி தமிழ் தேசிய அரசியல் கடையை விரித்தார்கள்
தமிழினத்தின் மொத்த அரசியலையும் நாசமாக்கிய துரோகி என்ற சொல்லை செல்வநாயகம் நாகநாதன் முதல் முதலில் பயன்படுத்தியது திரு ஜி ஜி பொன்னம்பலத்திற்கு எதிராகத்தான்
இதில் இருந்துதான் தமிழினத்தின் சாபக்கேடான துரோக அரசியல் ஆரம்பித்தது!

ஆரம்பித்து வைத்தவர்கள் செல்வா நாகா குழுவினர்!
இவை எல்லாம் பல இடங்களில் ஏற்கனவே எழுதப்பட்டதுதான்
தமிழரசு கட்சி தங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தையே
முழுக்க முழுக்க நம்பியிருந்தார்கள் என்பதை சுதந்திரன் பத்திரிகையின் பல செய்திகளை முன்பு தந்திருக்கிறேன்
சுதந்திரன் பத்திரிகையில்  கடவுள் மறுப்பு பிரசாரத்தை கூட தமிழரசு கட்சியினர் ஒரு மட்டுப்படுத்த பட்ட அளவில் பயன்படுத்தி இருந்தார்கள்.

Sunday, March 12, 2023

யாழ்ப்பாணம் - ராஜேந்திர பிரசாத் வீதி் சுதந்திரன் 1959 :

ராதா மனோகர்  : இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் இலங்கை விஜயம்
இந்திய வம்சாவளி தமிழன் கழுத்தில் கத்தி
அதே வேளையில் ராஜேந்திர பிரசாத்துக்கு அமோக வரவேற்பு
இருநாட்டின் நல்லுறவு பற்றி இனிப்பான பேச்சு வேற . வேடிக்கை இல்லை?
இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஆறுநாள் விஜயத்தை முடித்து கொண்டு கடந்த 22 ஆம் திகதி தாய்நாடு திரும்பிவிட்டார்
நாமும் இந்த சந்தர்ப்பத்தில் நடந்தவற்றை எல்லாம் திரும்பி பார்ப்பது  நலம் அல்லவா?
ஜனாதிபதிக்கு இலங்கையில் அளிக்கப்பட்ட மகோன்னதமான  வரவேற்பு பிரமாதம் . இலங்கை அரசும் மக்களும் அவருக்கு அளித்த வரவேற்பில் பார்க்க யாழ்ப்பாணத்தில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு அளித்த வரவேற்பு சொல்லும் தரமன்று
இது பற்றி அன்றய சுதந்திரன் பத்திரிகையில் இருந்த கட்டுரையின் சில பகுதிகள் பின்வருமாறு

திராவிட நேசன் ஜூலை 6 - 1928 சுன்னாகம் யாழ்ப்பாணம்

No photo description available.

 ராதா மனோகர் :  திராவிட நேசன்  ஜூலை 6 - 1928 சுன்னாகம் யாழ்ப்பாணம்
மலாய் நாட்டிலுள்ள யாழ்ப்பாணத்தவர்களால் தமிழரின் நலத்தை நாடி திராவிட நேசன் என்ற பெயருடன் ஒரு தமிழ்  வாரப் பத்திரிகையை சமீபத்தில் நடத்த போகிறார்கள்
பங்கு ஒன்றுக்கு ஒரு வெள்ளி ஒன்று வீதம் அறுபதினாயிரம் பங்குகள் கொண்ட 60000 வெள்ளி மூலதனம் உள்ள ஒரு லிமிடெட் கம்பனி மூலமாகவே இப்பத்திரிகை நடைபெறும்.
பத்து பங்குகளுக்கு குறையாமல் பங்குகள் எடுத்து கொள்ளவேண்டும்.
பிராமணரையொழிந்த மற்றையோருக்கே பங்குகள் கிடைக்கும்.
பல கனவான்கள் இதை ஆதரிக்க முன்வந்துள்ளார்கள்.
இதை பற்றி அறிய விரும்போவோர் கோலாலம்பூர் அம்பாள் வீதி 80
திரு ஆர் வி சுப்பையாபிள்ளை அவர்களுக்கு எழுதி பெற்று கொள்ளாலாம்.

1928 ஜனவரி 28 சுன்னாகம் யாழ்ப்பாணம்- ஸ்ரீ பூ .சின்னத்தம்பி - "பார்பனரின் படுமோசமும் பாரத மக்களின் பரிதாபமும்"

No photo description available.
இது ஒரு வரலாற்று ஆவணம் என்ற கருத்தில் மட்டுமே பதிவிட்டுள்ளேன்  
பார்ப்பனர் மீதான ஒரு வெறுப்பாக இதை கருதவேண்டாம் என்று அன்போடு வேண்டிக்கொள்கிறேன்
திராவிடன்  1928 ஜனவரி 28 சுன்னாகம் யாழ்ப்பாணம்
மதிப்புரை :    ஸ்ரீ பூ .சின்னத்தம்பி அவர்களால் இயற்றப்பெற்ற  பார்பனரின் படுமோசமும் பாரத மக்களின் பரிதாபமும் என்னும் சிறிய நூல் வரப்பெற்றோம்

இது மக்கள் யாவருக்கும் இன்றியமையாது வேண்டப்படும் ஒரு முறையை அனுசரித்தே எழுதப்பட்டிருக்கிறது .
பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை எடுத்து காட்டியிருக்கிறது.
தேவையானோர் ஆக்கியோனுக்கு எழுதி பெற்று கொள்ளலாம்.
விலாசம் : பூ சின்னத்தம்பி, வீமன்காமம் யாழ்ப்பாணம்
மொடேர்ன் சப்பிளை கம்பனி . செந்துல்  எப் எம் எஸ்

Wednesday, March 8, 2023

ஆரிய திராவிட பாஷாவிருத்தி சங்கம் - 1921 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்

 ராதா மனோகர் : ஆரிய திராவிட பாஷாவிருத்தி சங்கம்


1921 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் கூடிய கல்விமான்கள் உட்பட பெருமளவு மக்கள் கூடிய மன்றத்தில் தமிழையும் சமஸ்கிருதத்தையும் வளர்க்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரிய திராவிட பாஷா அபிவிரித்தி சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது
ஆங்கில அரசின் கல்வி பொறுப்பதிகாரியான திரு எவனாஸ் பிரபு தலைமை வகித்தார்
இந்த சங்கம் அதுவரையில் தமிழ் மொழிக்கு சேவையாற்றி கொண்டிருந்த பலரின் ஆவணங்களையும் ஒழுங்கு படுத்தி பணியாற்றியது
இச்சங்கத்தின் சேவையையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்த இலங்கை பல்கலை கழகம் அதன் செனெட் சபைக்கு இச்சங்கத்தின் இரு அங்கத்தவர்களை நியமித்தது

சுமார் அரை நூற்றாண்டுகள் இச்சங்கம் தமிழுக்கு அளப்பரிய பணியை ஆற்றியது.
தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அடிப்படை பண்டிதர் . பால பண்டிதர்  மற்றும் பண்டிதர் பரீட்சைகளை நடத்தியது.
பல நூல்களையும் பத்திரிகைகளையும் வெளியிட்டது
மற்றும் சங்கத்தினால் நடத்தப்பட்ட வகுப்புக்களை பரீட்சைகள் மூலம் அரும்பணியாற்றியது
தமிழில் பல மட்டங்களில் நடத்தப்பட்ட தமிழ் பண்டிதர்கள் பரீட்சைகளினால் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்
சமஸ்கிருதத்தில் சுமார் முப்பது மாணாக்கர்கள் பயன்பெற்றனர்
ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி சங்கத்தின் மூலம் சமஸ்கிருதம் பெரிதாக வளரவில்லை
மாறாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும்பணியாற்றியது
இலங்கையில் தமிழ் ஆசிரியர்கள் பெருமளவு புகழ் பெற்று தமிழ் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ளனர்