இந்திய
அமைச்சர்களுக்கும் இலங்கை அரசுக்கும் நடந்த பேச்சு வார்த்தைகளின்
இறுதியில் வடக்கு கிழக்கு மாகாணம் பற்றிய புதிய திட்டம் உருவானது. கிழக்கு
மாகாணத்தில் இருந்து அம்பாறை தேர்தல் மாவட்டத்தை பிரித்து எஞ்சிய பகுதியை
கிழக்கு மாகாணமாக்கி , அதற்கு ஒரு மாகாணசபையையும் . வடக்கு மாகாணத்துக்கு
ஒரு மாகாணசபையையும் அமைத்து இரு மாகாணசபைகளையும் சில விடயங்களில் ஒன்று
பட்டு செயல்பட கூடியவாறு ஒரு அமைப்பை ஏற்படுதுவதென்றும் .
ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் இவை இணைவதற்கு அனுமதிப்பது என்றும் இலங்கை அரசு ஏற்று கொண்டது.
ஆனால்
இந்திய அமைச்சர்கள் டெல்லி திரும்பிய இரண்டு நாட்களுக்குள் இடையில்
முஸ்லிம் பிரதிநிதிகள் இதை எதிர்ப்பதாக இலங்கை தூதுவர் மூலம் டெல்லி
அரசுக்கு அறிவிக்க பட்டது.
ஏற்று கொண்ட திட்டத்தில் இருந்து இலங்கை பின்வாங்க தொடங்கியது.
இலங்கை அரசின் நிலையை தெளிவு படுத்த தூதுவர் மட்டத்தில் முயற்சிகள மேற்கொள்ள பட்டன்.
ஆனால் இந்திய அரசுக்கு ஓர் உறுதியான பதில் கிடைக்கவில்லை.
இதனால் இத்திட்டம் உத்தியோக பூர்வமாக தமிழ் இயக்கங்களுக்கு அறிவிக்க படவோ அவர்களின் கருத்துக்கள கோரப்படவோ இல்லை. .
கிழக்கு மாகாணத்தில் பயங்கர
இராணுவ நடவடிக்கை.
மார்கழி மாத பிற்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் கொக்
கட்டிச் சோலைப் பகுதியில் இலங்கை இராணுவம் விமானங்
களிலிருந்து குண்டு வீசித்தாக்கியும், ஹெலிக் கெப்டர்களி
லிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தும், கனரகபீரங்கி
களால் தாக்கியும் ஆயிரக்கணக்கான படைவீரர்களோடு மிகப்
பெரிய தாக்குதலை ஆரம்பித்தது. படுவான்கரை முழுவதுமே
இப்பயங்கரத் தாக்குதல் நடைபெற்றது.இருநூறுக்கு மேற் பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இக்கொலையை நிறுத்துமாறு நாம் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தந்தி கொடுத்தோம். இந்தியத் தூதுவர் திரு. டிக்சித் ஜனாதி பதி ஜயவர்த்தனாவைச் சந்தித்து இந்தியாவின் ஆட்சேபத்தை தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் மீது பொருளா தாரத் தடையும் இராணுவத் தாக்குதலும்: 1987 ஜனவரி முதல், தாம் யாழ் மாவட்டத்தில் சிவில் நிர்வாகத்தை மேற்கொள்ளப் போவதாகத் தமிழ் ஈழ விடு தலைப் புலிகள் விடுத்த ஓர் பத்திரிகைச் செய்தியை ஒரு சந் தர்ப்பமாகப் பயன்படுத்தி, நீண்ட காலமாகத் தாம் திட்ட மிட்டிருந்த பொருளாதாரத் தடையை யாழ்ப்பாணம் மீது இலங்கை அரசு விதித்தது.
பெட்ரோல் மண்ணெண்ணெய் முதலிய எரிபொருள்கள் யாழ்ப் பாணத்திற்குச் செல்வதை முதலில் தடை செய்தனர். இதனால் உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் நடமாட்டம் குறையத் தொடங்கிப் பொருட்களின் விலைகள் வேகமாக ஏறத் தொடங்கின. மருந்துப் பொருட்கள், பல தொழிற்சாலை களுக்குத் தேவையான அலுமினியம் போன்ற பொருட்கள், யாழ்ப் பாணத்திற்குச் செல்வதைத் தடுத்தனர்.
பட்டினி யாலும், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டாலும் ஏழைமக்கள் துன்பப்படும் செய்தி வெளியுலகத்திற்கு எட்டா மல், தொலைபேசித் தொடர்புகளைத் துண்டித்தனர். அதே நேரத்தில் கடல், தரை, ஆகாயம் ஆகிய மும்முனைகளிலிருந் தும் பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தினர்.
இந்தியப் பிரதமருக்கு எத்தனையோ தந்திச் செய்திகள் கடிதங்கள் அனுப்பினோம். நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை.
இலங்கையின் சுதந்திர தினமான பிப்ரவரி 4ந் திகதி யன்று தமிழ் மக்களின் அவலநிலையை இந்திய மக்களுக்கு எடுத்துக் காட்டும் பொருட்டு ஓர் கூட்டத்தை டாக்டர் சனார்த் தனம் ஏற்பாடு செய்தார். அக்கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் உரையாற்றினர். இந்தியாவையே நாம் நம்பியிருக்கும் நிலையையும் அப்படியான தமிழ் மக்கள் அழிக்கப்படுவது இந்திய ராஜதந்திரத்திற்கே தோல்வி என்றும் சற்றுக் கடுமையாகவே பேசினோம். எமது பேச்சுக்கள் இந் தியப் பத்திரிகைகளில் விரிவாகப் பிரசுரமாயின. டெல்லிக் கும் எமது குரல் எட்டியது.
அமைச்சர்கள் சிதம்பரம், நட்வர் சிங் ஆகியோருடன் தொலைபேசியிலும் தொடர்பு கொண் டோம். இந்தியா அசையத் தொடங்கியது.
பிப்ரவரி 9ந் திகதி பிரதமர் திரு. ராஜீவ் காந்தி மிகக் கடுமையான ஓர் செய் தியை ஜனாதிபதி ஜயவர்த்தனாவுக்கு அனுப்பினார். அதில் மூன்று கோரிக்கைகளை விடுத்தார்:
1. தமிழ் பகுதிகள் மீதான இராணுவ நடவடிக்கை நிறுத்தப் பட வேண்டும்.
2. யாழ்ப்பாணம் மீதான பொருளாதார, தொலைத் தொடர்புத் தடை நீக்கப்படவேண்டும்.
3. டிசெம்பர் 19ந் திகதி ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்டத்தைப் பேச்சு வார்த்தைக்கான தொடக்க நிலையாக இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இச்செய்திக்கு இலங்கை அரசிடமிருந்து திருப்திகரமான பதில் வரவில்லை. மக்கள் பட்டிணியால் வாடத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டில், இலங்கையில் நடை பெற்றுக் கொண்டிருந்த கொடுமை பற்றிப் போதிய விழிப்பு இல்லாதிருந்த நிலையைப் போக்கும் பொருட்டு, பெப்ரவரி 25ந் திகதி மெரினா கடற்கரையில் நூற்றுக் கணக்கான தமிழ் அகதிகள் கலந்து கொண்ட உண்ணாவிரதத்தை நடத்தினோம்.
முதன் முறையாகப் போராளி இயக்கங்களும் இதில் கலந்து கொண்டன. தமிழ் நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் உண்ணாவிரத இறுதியில் மத்திய அரசு உடன் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி) உரையாற்றினர்.
மார்ச் மாதம் 6ந் திகதி பாரதப் பிரத
மருக்கும் நாம் ஒரு விரிவான கடிதம் எழுதினோம். அதில்
நாம் இந்திய அரசுக்கு மூன்று வேண்டுசொள்கள் விடுத்தோம்.
1. மனிதாபிமான அடிப்படையில் துன்பப்படும் தமிழ் மக்களுக்கு உணவும்,
எரிபொருளும் வழங்குவதற்கு இந்திய அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும்.
2
. தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை சர்வதேச அரங்கில் கிளப்பி
இலங்கை அரசு தமிழ் மக்களின்பால் தனது தேசிய சர்வதேசிய கடமைகளை
நிறைவேற்றும் நிர்பந்தங்களை ஏற்படுத்தவேண்டும் .
3
. வடக்கு கிழக்கு மாகாண மக்களின் உடற்பாதுகாப்புக்கும் உயிர்
வாழ்வுக்கும் வழி செய்யக்கூடிய நடவடிக்கையில் மனிதாபிமான அடிப்படையில்
இந்தியா இறங்க வேண்டும்.
மார்ச் 6ந் திகதி இந்திய மாநிலங்கள் அவையில் ஓர்
கோரிக்கைக்கு பதிலளிக்கையில் பிரதமர் ராஜீவ் காந்தி
முதன் முறையாக இலங்கையின் இனப் பிரச்சனையைத்
தீர்ப்பதற்கு இந்தியா அளித்து வந்த நல்லெண்ணச் சேவை
முடிவுக்கு வந்து விட்டதாகவும் வேறு நட வடிக்கைகள் பற்றி
ஆலோசிப்பதாகவும் கூறினார்.
இந்திய பிரதமரின்
உறுதியான பதிலும், ஜெனிவாவில் 'நடைபெற்றுக்
கொண்டிருந்த மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசின்
மனித உரிமை மீறல் பற்றி வந்த தீர்மானமும் இலங்கை
மந்திரி சபையைப் பொருளா தாரத் தடையை நீக்குவதாகக்
காட்டிக் கொள்ள செய்தன. மார்ச் 11ந் திகதி இலங்கை
மந்திரி சபை எரிபொருள் தடையை நீக்கி அனுமதிப்
பத்திரங்களின் பேரில் எரிபொருள் வழங்குவதாக அறிவித்தது.
ஆனால் நடைமுறையில் எதுவும் செய்யப்பட வில்லை.
வழக்கமான ஏமாற்று நடவடிக்கைதான். இந்தியாவை நாம்
ஆறாம் திகதிக் கடிதத்தில் கேட்டுக் கொண்டபடி தமிழ்
மக்கள் மீதான பொருளாதார தடையை நீக்குவதற்கு
நேரடியான நடவடிக்கை எடுத்து தமிழ் மக்களுக்கு உணவு
பொருள்களை வழங்கமாறு ஏப்ரல் 1ந் திகதி நாம் மீண்டும்
திரு. ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதி னோம்.
மே மாதம்
18, 19 20 ந் திகதிகளில் நானும் திரு. சிவ சிதம்பரம், திரு.
சம்பந்தன் ஆகியோரும் டெல்லி சென்றோம். அமைச்சர்கள்
உத்தியோகஸ்தர்கள் எல்லோருடனும் மூன்று நாட்களாக
பேசினோம். நாம் வற்புறுத்தியது எல்லாம் ஒன்றே
ஒன்றுதான். இந்தியா செயலற்று இருக்கும் நிலையை உடைத்து,
யாரும் குற்றம் கூறமுடியாத மனிதாபிமான நடவடிக்கை
யாகக் காங்கேசன் துறைமுகத்தில் உணவுக் கப்பலை கடற்படை
பாதுகாப்போடு அனுப்பி வையுங்கள் என்பதே எமது
கோரிக்கை. அது இந்திய அரசின் கருத்தில் இடம் பெறத் துவங்கியது.
இதனிடையே இலங்கை ராணுவத்தின் மிகக்கொடூரமான தாக்குதல் வடமராட்சிப் பகுதி மக்கள் மீது கட்ட
விழ்த்து விடப்பட்டது.
முந்தைய தாக்குதல்களின் கொடுமைகளைஎல்லாம் விஞ்சியதாக நூற்றுக் கணக்கான மக்களை பலிகொண்டு, ஆயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்கி,
அப்பகுதி வீடுகள் எல்லாம் தரைமட்டமாக
நொறுக்கப்பட்டன. மீண்டும் இந்திய அரசுக்கு தந்திகள்
கொடுத்தோம். தமிழக அரசோடு தொடர்பு கொண்டு மத்திய
அரசை உடன் செயல்படுமாறு வற்புறுத்தக் கோரினோம்.
முதலமைச்சரும், உணவு அமைச்சரும் டெல்லிக்குச் சென்று
வற்புறத்தினர். மத்திய அரசு அசைந்தது. பரீட்சார்த்தமாக
உணவு படகுகளை அனுப்பியது. செஞ்சிலுவை
சங்கத்தினரோடு உணவு ஏற்றிச் சென்ற படகுகளை திருப்பி
விட்டு வெற்றி கொண்டாடியது இலங்க அரசு.
ஜூன் 4ந்
திகதி இந்திய விமானங்கள், போர் விமானங்களின்
பாதுகாப்போடு, யாழ்ப்பாணத்தின் மேல் பறந்து உணவு
பொட்டலங்களை துன்பப்பட்ட தமிழ் மக்களின் பசிதீர்க்க
போட்டனர்.
சரித்திரம் திரும்பியது.
இந்தியாவை ஊதாசீனம் செய்து
தான் வாழ முடியாது என்ற பாடத்தை இலங்கை படித்தது.
ஆரம்பத்தில் கொதித்தது. பின் அடங்கியது. கப்பல்கள்
உணவு கொண்டு வந்து, இந்திய செஞ் சிலுவைச் சங்க
உத்தியோகஸ்த்தரும் உணவை, விநியோகிக்க அனுமதி
வழங்கப்பட்டது.
அப்போது அரசியல் தீர்வுக்கும் வழி
பிறக்கும் என்பது உறுதியாகி யது. ஏற்கனவே நாலு
வருடங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் மூலம்
படிப்படியாக வளர்ந்து வந்த திட்டத்தில் பெரிய தடையாக
இருந்தது. தமிழர் மொழிவாரி மாநிலத்தை அங்கீகரிக்க
இலங்கை அரசு மறுத்து நின்றமையே. இந்தியா உறுதியாகக்
கூறிய பின் அதை ஏற்றுக் கொண்டனர்.
1956 ம் ஆண்டு
தொடக் கம் தமிழ் மொழியும், ஆட்சி மொழியாக வேண்டும்
என்று நாம் போராடி வந்தோம். அதுவும் ஏற்றுக்
கொள்ளப்பட்டது இதிலிருந்து உருவாகிப் பிறந்ததுதான்
ஜூலை 29 ந் திகதி கையெழுத்தான இலங்கை - இந்திய
ஒப்பந்தம்.
ஒப்பந்தம் பற்றி எமது கடிதம்:
ஒப்பந்தம் ஓரளவு உருவாகி வந்த நேரத்தில் வெளி
நாட்டுச் செயலாளர் திரு கே.பி.எஸ். மேனனும், இலங்கை
யில் உள்ள இந்திய தூதுவர் திரு ஜே.என். டிக்சித்தும்
சென்னை வந்து எம்மோடும் ஏனைய தமிழ் இயக்கங்களோடும்
உரையாடினர் .
பின்பு பிரதமர் கொழும்பு செல்வதற்கு முன்
நாமெல்லாம் டெல்லி அழைக்கப் பட்டோம். 27ந் திகதி
உத்தியோகஸ்தர்களோடு பேசினோம். 28 திகதி பிரதமர்
ராஜீவ் காந்தியோடு உரையாடினோம்.) எமக்குக்
கொடுக்கப்பட்ட ஒப்பந்த வரைவில் நாம் கண்ட
குறைபாடுகளை கூசாது எடுத்துச் சொன்னோம். ஒரு கடிதம்
தயாரித்து அதன் அடிப்படையில் பிரதமரோடு விரிவாக
பேசினோம். இக்கடிதத்தில் நாம் குறிப்பிட்ட விடயங்களை
கீழே தருகிறோம்..... ( தொடரும்)
No comments:
Post a Comment