Wednesday, July 26, 2023

இலங்கை இந்திய காங்கிரசின் தலைவராக இருந்த பம்பாய் சிந்தி தலைவர் திரு அப்துல் அஸீஸ்


 இலங்கை இந்திய வம்சாவளி / மலையக மக்களின் வாக்குரிமை பறிபோன விடயத்தில் ஏராளமான வரலாற்று பக்கங்களாய் காணவில்லை .. அதில் இது ஒரு முக்கிய பக்கம்
இந்த பக்கத்தின் பெயர் இலங்கை   இந்திய காங்கிரசின் தலைவராக இருந்த பம்பாய் சிந்தி தலைவர் திரு அப்துல் அஸீஸ் என்பதாகும்
இலங்கைக்கு சுதந்திரம் வழங்க முதல் இலங்கையின் பல்லின மக்களின் கருத்துக்களை அறிந்து உரிய பணிகளை மேற்கொள்ள பிரித்தானிய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட திரு சோல்பரி பிரபுவோடு திரு அப்துல் அஸீஸ் அவர்கள் மேற்கொண்ட கருத்து பரிமாற்றம் ஒரு முக்கிய செய்தியாகும்

கௌரவ சோல்பரி பிரபு அவர்கள் இலங்கையின் பல தரப்புடனும் பேச்சுவார்த்தை தொடர்ந்தார்
மலையக இந்திய வம்சாவளி மக்கள் சார்பாக இலங்கை இந்திய காங்கிரஸ் தூதுக்குழு சோல்பரி பிரபுவை சந்தித்தது
அக்குழுவுக்கு  திரு அப்துல் அஸீஸ் அவர்கள் தலைமை தாங்கி சாட்சியமளித்தார்.
இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கும் இடையே நிலவும் முறுகல் நிலவி வரும் சூழ்நிலையில் பிரித்தானிய இலங்கையை விட்டு வெளியேறுவது பற்றி ,
 இலங்கை இந்திய காங்கிரசின் நிலைப்பாடு என்னெவென்று திரு அஸீஸை பார்த்து திரு சோல்பரி பிரபு அவர்கள் கேட்டார்.
அதற்கு பதிலளித்த திரு அஸீஸ் ஓ;இலங்கையின் சிறுபான்மை இனங்களான  இந்திய வம்சாவளி / மலையக மக்களை பாதுகாப்பது என்று கூறிக்கொண்டு பிரித்தானியா இங்கு தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒரேயடியாக கூறினார்.

Saturday, July 22, 2023

கையில் கத்திரிகோலும் சீப்புமாக ஒரு நாவிதர் கோலத்தில் திரு ஸ்டாலின்

ராதா மனோகர் : 2019 மே மாதம் வெளியான  விகடனில் இந்த படம்

வந்திருக்கிறது . திரு ஸ்டாலின் அவர்களின் கையில் கத்திரிகோலும் சீப்புமாக அவரை ஒரு நாவிதர் கோலத்தில்  பார்க்க அவாளின் ஆனந்தவிகடன் ஆசைப்பட்டிருக்கிறது .
திமுகவுக்கு இது ஒரு வரலாற்று பெருமை என்பது அவர்களுக்கு புரியாது.
திமுகவின்  வரலாற்றில் நாவிதர்களுக்கு ஒரு இடம் இருக்கிறது.
முடிதிருத்தும் சலூன்கள் அந்த காலத்தில்  படிப்பகங்களாகவும் பயன்பட்டன.  
அந்த சலூன்கள் அரசியல் கருத்துருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தன.  
காசு கொடுத்து பத்திரிக்கை வாங்குவது என்பது மிகப்பெரிய ஒரு விடயமாக இருந்த அந்த காலங்களில் சலூன்களில் வாங்கப்படும் பத்திரிகைகள் பலருக்கும் படிப்பகங்களாக ..
 குறிப்பாக பத்திரிகைகள் வாங்க காசில்லாதவர்களுக்கு அது ஒரு பெரும் வாய்ப்பு.
மேட்டுக்குடியின் வாழ்க்கையில் இருந்த வாசிப்பு பழக்கம் சாதாரண மக்களுக்கும் சென்றடைவதற்கு சமுக நூல் நிலையங்களுக்கு இணையான அல்லது அதற்கு மேலான ஒரு இடத்தை முடி திருத்தும் சலூன்களும் வகித்தன.  
அவைதான் திராவிட முன்னேற்ற கழகத்தின் கருத்துருவாக்க மேடைகளாக  பெரிதும் இருந்தன.

Wednesday, July 19, 2023

இலங்கையில் சுயமரியாதை திருமணம் 20 - 10 - 1952 சுதந்திரன் பத்திரிகை

No photo description available.
No photo description available.

ராதா மனோகர்  : இலங்கையில் சுயமரியாதை திருமணம் பற்றிய சில செய்திகள்  
திருந்திய திருமணம் என்ற தலைப்பில் 2- 11 - 1952 இல் சுதந்திரன் பத்திரிகையில்  வந்திருக்கிறது
சுயமரியாதை திருமணம்
திருந்திய திருமணம் நடராசா - சற்குணம்
கடந்த 20 - 10 - 1952 . கல்முனை மாணிக்கம் ரைஸ் மில் மானேஜரான திரு பொ . நடராஜா (என் பி என் அரசன் ) அவர்களுக்கும் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் கனகரத்தினத்தின் மகளும் சித்த வைத்தியர் பரமானந்தத்தின் சகோதரியுமான செல்வி சற்குணம் அவர்களுக்கும் பருத்திதுறை வீதியில் உள்ள 257 ஆம் இலக்க இல்லத்தில் திருந்திய முறையில் பதிவு திருமணம் நடைபெற்றது .
இந்த சீர்திருத்த திருமணத்தில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் வாழ்த்து செய்திகள் அனுப்பியவர்களுக்கும் மணமக்கள் இதன் மூலம் நன்றி தெரிவிக்கின்றனர்
 16 =- 7- 1962  இலங்கை - (சுயமரியாதை திருமணம்)
 சீர் திருத்த திருமணம்
அகில இலங்கை பகுத்தறிவு இயக்க உறுப்பினரான,
வெள்ளவத்தையை சேர்ந்த திரு ம. கணபதிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி சே .இராசாத்திக்கும்  
பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில்  சீர்திருத்த முறையிலே திருமணம் நடைபெற்றது
அகில இலங்கை பகுத்தறிவு இயக்க பொதுச்செயலாளர் திரு ஆ வேலாயுதம் அவர்கள் திருமணத்தை நடத்தினார்.

பண்டா செல்வா புரிந்துணர்வு அரசியலும் பரஸ்பர இனவாத அரசியல் முன்னெடுப்பும்

சுதந்திர இலங்கையின் முதல் அமைச்சரவையில் ( Solomon West Ridgeway Dias Bandaranaike) சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா

திரு பண்டாரநாயகா அவர்கள் தனது 27 வயதில் இலங்கை தேசிய காங்கிரஸ் இல் இணைந்து 1926 ஆம் ஆண்டு கொழும்பு நகரசபைக்கு அங்கத்தவராக தெரிவானார்.

1936 ஆம் ஆண்டு சிங்கள மகாஜன சபா என்ற சிங்கள தேசிய இயக்கத்தை நிறுவினார். இந்த அமைப்பின் மூலம் 1931 - 1947 தேர்தல்களில் வியாங்கொடை தொகுதியில் வெற்றி பெற்று  உள்ளூராட்சி அமைச்சராகவும் பணியாற்றினார் 

பின்பு 1947 ஆம் ஆண்டு தனது சிங்கள மகாஜன சபையை டி எஸ் சேனநாயக்க தலைமையில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியில் இணைத்தார்.

சுதந்திர இலங்கையின் முதலாவது தேர்தலில் 1947 இல் அத்தனகல தொகுதியில் வெற்றிபெற்று டி எஸ் சேனநாயக்காவின் அரசில் சபை தலைவராகவும் உள்ளூராய்ச்சி மற்றும் சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினார்.

Saturday, July 15, 2023

ஈழநாடு ஆசிரியர் ஹரிஹர சர்மா அவர்கள் உடுப்பிட்டி சிவா அவர்களை எப்போதும் விளம்பர வெளிச்சத்தில் வைத்திருந்தார்

Murugesu Sivasithamparam the 'Lion of Udupiddy': Twenty-first Death  Anniversary Tribute – dbsjeyaraj.com

ராதா மனோகர் : அமரர் உடுப்பிட்டி சிவா அவர்கள் எல்லோரின் நன்மதிப்பையும் பெற்ற தலைவர்
அறுபதுகளில் பிராணதார்தி ஹரிஹர சர்மாவை ஆசிரியராக கொண்டு வெளியான ஈழநாடு தினசரி இதழ் உடுப்பிட்டி எம்பி திரு மு. சிவசிதம்பரம் அவர்களுக்கு கொடுத்த விளம்பரம் சொல்லி மாளாது.
அன்றைய ஈழநாடு முழுக்க முழுக்க தமிழரசு கட்சியின் வெறுப்பு தமிழ் தேசியத்தின் ஊதுகுழலாகவே வந்தது.

ஆனாலும் எஸ் ஜெ வி செல்லநாயகத்திற்கோ அமிர்தலிங்கத்திற்கோ கொடுத்த முக்கியத்துவத்தை விட பல மடங்கு .. ஆமாம் பல மடங்கு திரு மு.சிவசிதம்பரத்திற்கே தவறாமல் கொடுத்து வந்தது.
உடுப்பிட்டி சிங்கம் என்ற பட்டம்கூட ஹரிஹர சர்மாவின் உபயம்தான்!
 
அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்தபோது ஒரு சந்தேகம் தோன்றியது
திரு மு சிவசிதம்பரம் அவர்கள் கோயில் மணியக்காரராகவும் அசல் உயர்குடி சைவராகவும் இருந்தமை ஹரிஹர சர்மாவின் தனிப்பட்ட காதலுக்கு காரணமாக இருந்திருக்கும் என்றுதான் தோன்றியது.
அது போகட்டும்

Friday, July 14, 2023

திமுக தமிழ்நாட்டுக்கு வெளியே இலங்கையில் இ.தி.மு.க இருந்தது. Gowra Rajasekaran

 ராதா மனோகர் : இலங்கையில் 1960 ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திரு அந்தோணி முத்து தலைமையில் இயங்கிய இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் ஆணையாளரால் பதிவு பெற்ற கட்சியாகும்
இதற்கு முன்பு தோழர் இளஞ்செழியன் தலைமையிலான இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் அவசர காலச்சட்டத்தின் அடிப்படையிலேயே தடை செய்யப்பட்டது . அந்த சட்டம் காலாவதியான பின்பு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதான தடையும் காலாவதியானது
இந்த இடைப்பட்ட காலத்தில் பல இலங்கை திராவிட முன்னேற்ற கழக தோழர்கள் இடது சாரி கட்சிகளிலும் அமைப்புக்களில் இணைந்து விட்டிருந்தார்கள்.
தோழர் இளஞ்செழியன் போன்றோர் பிற்காலத்தில் ஜேவிபியில் ஈடுபாடு கொண்டிருந்தார்
மேலும் பலரை இலங்கை தமிழரசு கட்சி ஈர்த்துக்கொண்டது
குறிப்பாக தோழர் மணவைத்தம்பி இலங்கை தமிழரசு கட்சியோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார்
இந்த இரு இ தி மு காவிற்கும் இடையில் உரசல் உண்டாக்கி திராவிட முன்னேற்ற கழக தோழர்களை உட்கட்சி சண்டையிலேயே காலத்தை கழிப்பதற்கு கோவை மேகேஸ்வர சர்மாவை ஆசிரியராக கொண்ட தமிழரசு கட்சியின் சுதந்திரன் மிக கேவலமான பிரசாரங்களை மேற்கொண்டிருந்தது.

Wednesday, July 12, 2023

திரு அமிர்தலிங்கம்.. 34 ஆண்டு நினைவேந்தல்! (ஜூலை 13, 1989 கொழும்பில்)

May be an image of 1 person and smiling

திரு அமிர்தலிங்கம் அவர்களின் 34  ஆண்டு நினைவேந்தல்! (ஜூலை 13, 1989 கொழும்பில்)
இலங்கை திராவிடர் கழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்ட குழுவின் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய திரு அமிர்தலிங்கம்,
பின்பு திரு எஸ் ஜெ வி செல்லநாயகத்தின் தமிழரசு கட்சியில் தன்னை இணைத்து கொண்டு நீண்ட அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.
திரு அமிர்தலிங்கம் அவர்கள் சுயமரியாதை சமூகநீதியை பேசிய திராவிட இயக்கத்தில் இருந்து தடம் மாறி,  எந்த அரசியல் சித்தாந்தமும் இல்லாத,
 தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்தது ஒரு பெரிய வரலாற்று தவறாகவே முடிந்தது!
இவரின் அரசியலை புலிகள் முடித்து வைத்தாலும் உண்மையில் இந்த முடிவை தீர்மானித்த முக்கிய காரணியாக திரு எஸ் ஜெ வி செல்வநாயகத்தை தான் நாம் குறிப்பிடவேண்டும்.
திரு அமிர்தலிங்கம் மட்டுமல்ல பிரபாகரனும்கூட எஸ் ஜெ வி செல்வநாயகத்தின் தவறான வெறுப்பு அரசியலின் பகடைக்காய்கள்தான்!
திரு அமிர்தலிங்கம் அவர்களின் திராவிட அரசியல் ஈடுபாட்டின் ஒரு சாட்சியாக இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் தடை செய்யப்பட்டபோது அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை திகழ்கிறது

Monday, July 10, 2023

இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமைக்கு வேட்டு வைத்த இடதுசாரிகள்

இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிபோன வரலாற்றில் மீண்டும் மீண்டும் பச்சை பொய்களையே வரலாறாக கட்டமைக்கிறார்கள்! 

உண்மை வெளிவந்தால் பலரின் அரசியலும் சித்தர்களும் நிரந்தரமாக ஆட்டம் கண்டுவிடும் என்ற ஒற்றை நோக்கத்தில்தான் இந்த இருட்டடிப்பு தொடர்கிறது.

1930 களிலேயே இலங்கையில் இனமுரண்ட்பாடுகள் தோற்றம் பெற்றன.

ஆனால் தற்போது எல்லோரும் கூறுவது போல அந்த முரண்பாடுகள் தமிழ் சிங்களம் என்ற ரீதியில் இருக்கவில்லை.

தென்னிலங்கையில் தோட்ட காணிகளை கைப்பற்றிய காலத்துவவாதிகள் அவற்றில் பணியாற்றுவதற்கு தென்னிந்தியாவில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்த போதே இந்த முரண்பாடுகள் முளைவிட்ட தொடங்கியது.