Saturday, July 11, 2026

இலங்கையில் ஒரு மார்சிஸ்ட் ஆட்சியை உருவாக்க முடியும் என்று இடதுசாரிகள் நம்பியது ஏன்?

May be an image of text that says "INDIANS MORE EIndian population 60,000in vear. Vilal Statisties gistrar-General, General, and published June 27th ( 1029) ylon on December 31st.1946. shipping population) 606,000 on December 31st. 1945. xceeded the N number of Kotte: Mr. emigrants 56.790. OCCASION FOR A TAMASHA" Maturata: Kotagala: and E (open"

ராதா மனோகர் சுதந்திர இலங்கையில் ஒரு மார்சிஸ்ட் ஆட்சியை உருவாக்க முடியும் என்று இடதுசாரிகள் நம்பியது ஏன்?
சிங்கள பெரும்பான்மை மக்கள் எப்போதும் பௌத்த சாசன அடிப்படையிலான ஒரு ஜனநாயகத்தைதான் தங்கள் அரசியல் கோட்பாடாக கொண்டுள்ளார்கள் 
பௌத்த மதம் சாதாரண மக்களின் சிந்தனையை கட்டுப்படுத்துவதில் எப்போதும் வெற்றி கண்டே வந்திருக்கிறது.
இலங்கையின் அரசியல் நிலை இப்படி இருக்கையில் சுதந்திர இலங்கையின் முதல் தேர்தலில் ஆட்சியை எட்டி பிடித்திருக்க கூடிய அளவு இடதுசாரிகளால்   எப்படி முன்னேற முடிந்தது என்ற கேள்வி இருக்கிறதல்லவா?
அது ஒன்றும் பெரிய மந்திரம் மாயம் கிடையாது 
இந்திய வம்சாவளி மக்களை இந்திய தொழிற்சங்கங்களும் இந்திய இடதுசாரி இயக்கங்களும் ஆழமாக இடதுசாரி வாக்காளராக மாற்றி இருந்தார்கள் 
தமிழகத்தில் இருந்து வந்த நடேசய்யர் முதலாக தொடர்ந்து வந்த அத்தனை பேர்வழிகளும் இடதுசாரி பிரசாரகர்களாகவே வந்தார்கள் ...பிரசாரம் செய்தார்கள்   ... வென்றார்கள். 


ப ஜீவா கூட இலங்கையில் சில காலம் இருந்து  பிரசாரம் செய்திருந்தார் 
கல்கத்தாவில் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் இலங்கை கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டாக்டர் எஸ் ஏ விக்கிரமசிங்கா அவர்கள் கலந்து கொண்டிருந்தார்  
அங்கு அவர் ப ஜீவனந்தத்தை  சந்தித்தார்  அவரை அங்கு பிரிட்டிஷ் அரசு கைது செய்யக்கூடும் என்று கருதிய விக்கிரமசிங்கா அவரை இலங்கைக்கு கூட்டிக்கொண்டு வந்தார் 
இலங்கையில் பல மாதங்கள் இருந்து பிரசாரம் செய்தார் 
இவர் பின்பு வடக்கு வல்வெட்டி துறை மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் 

May be an image of text that says "Menace to Lanka ylonese Party with Indian Interests Jayawardene) that Silva and Colvin S. bose SOCUAR for participat- strike labourers of textile mils 3고 event interest. Poerly cocterY party aDeraonung Indian comparison Ceylon, the pensita anstber nterfece master province nbaergnd Le the วันา surüee, rader the spista frems Madraa al mack loner Thanks for advice ,/."
இப்படியாக இந்திய வம்சாவளி மக்களின் வாக்குப்பலத்தால் இலங்கையின் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று  இடதுசாரிகள் உறுதியாக நம்பினார்கள் 
இலங்கை நாட்டின் பெரும்பான்மை இனத்திடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை பறிப்பதற்கு  இந்திய வம்சாவளி மக்களை ஒரு பகடை காய்களாக இடது சாரிகள் பயன்படுத்தினார்கள் 
அதன் காரணமாகவே  தமிழகத்தில் இருந்து எப்பாடு பட்டாவது ஏராளமானோரை இலங்கைக்கு வரவழைப்பதில் முழு மூச்சாக  ஈடுபட்டார்கள் 
அதாவது  தேர்தல் காலத்தில் வாக்காளர்களை பேருந்துகளில் அழைத்து வருவதை போல இடதுசாரிகள்  
இலங்கையில் மார்க்சிஸ்ட் அரசு அமைப்பதற்காக கப்பலில் வாக்காளர்களை கொண்டு வந்தார்கள் . 
அதுவும் ஆண்டுக்கு சராசரியாக  60 ஆயிரம் இந்திய வம்சாவளி மக்கள்,
இப்படித்தான் அன்று சிங்கள தலைவர்கள் இவர்களின் இடதுசாரி வாக்காளர்களை பற்றி குறிப்பிட்டார்கள் 
இவர்களால் அழைத்து வரப்பட்டவர்களின் குடியுரிமை கேள்வி குறியானதும் அதை ஒரு போர் முழக்கமாக மாற்றினார்கள் 
அதன் உண்மை தன்மையை மறைத்து வெறும் வெறுப்பு அரசியலுக்கு அந்த மக்களின் குடியுரிமையினை பயன்படுத்தினார்கள் 
முதலில் அறிமுக படுத்த பட்ட சட்டம் 10 ஆண்டுகள் இருப்பை கேட்டது 

May be an image of text that says "HON. HON.S.C.C.A HON.S.C.CANTHONIPPI S.C.C ANTHONIPPILLAI EX.MLA FOR CHULAI EX. MP FOR VADACHENNAI ingflip.com com"
இவர்கள்தான் ஒவ்வொரு ஆண்டும் கொண்டு வந்து சேர்ந்தார்களே?
எப்படி சம்மதிப்பார்கள்?
ஒவ்வொரு ஆண்டும் அவசரம் அவசரமாக கொண்டு வந்த சேர்த்த இவர்களின் வாக்காளர்களுக்கு இது தடையாகும் அல்லவா எனவே எதிர்த்தார்கள் 
அதாவது நாம் ஏன் குடியுரிமைக்கு மனு போடவேண்டும். குடியுரிமை என்பது எமது பிறப்புரிமை என்பது போல வாதங்களை முன்வைத்தார்கள் 
ஏழாண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் மூலம் புதிய குடிவரவாளர்கள் குடியுரிமைக்கு தகுதி அற்றவர்களாகி விடுவார்கள் 
இவர்களின் இந்த புறக்கணிப்பு நடவடிக்கைக்கு எஸ் ஜெ வி செல்வநாயகம் தலைமை தாங்கினார் 
மலையக மக்களிடையே சிங்கள இடது சாரி தலைவர்களை விட செல்வநாயகத்தின் செல்வாக்கு அபரிமிதமாக கூடியது 
எந்த காலத்திலும் இடது சாரி கொள்கைகள் பால் பெரும் பற்றோ அல்லது ஈடுபாடோ கொண்டிராத எஸ் ஜெ வி செல்வநாயகம் ஏன் இடது சாரிகளோடு கைகோர்த்தார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
அது ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் கிடையாது 
 

 May be an image of text that says "DR COLVIN R.D.SILVA R.D. im lip.com"

திரு ஜி ஜி பொன்னம்பலத்தின் அரசியலை எப்படி எப்படி எல்லாம் ஒழித்து கட்டலாம் என்பதை தவிர வேறெதைப்பற்றியும்  ஒருபோதும் சிந்தித்திராத செல்வநாயகத்திற்கு இடதுசாரிகளின் அரசியல் ஒரு பெரும் மேடையை அமைத்து கொடுத்தது 
அந்த மேடையில் நின்று கொண்டு பொன்னம்பலம் துரோகி என்ற அரசியல் சித்தாந்தத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்  
அதை மேடையை பயன்படுத்தி குடியுரிமை பெறுவதற்கு தகுதி வாய்ந்த இந்திய வம்சாவளி மக்களையும் அதற்கு உரியவிதத்தில் மனு  செய்யவிடாமல் தடுத்து அவர்களின் வாழ்வில் மண் அள்ளிப்போட்டார் 
எஸ் ஜெ வி செல்வநாயகம் ஈழத்தமிழர்களின் வாழ்வை நாசமாக்கும் முன்பே இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வை நாசமாக்கிய  சாதனைக்கு உரியவர் 
அடுத்து இலங்கை அரசு கொண்டுவந்த இந்திய பாகிஸ்தானிய குடியுரிமை சட்டத்தின் படி அதற்கு மனு செய்யவேண்டாம் என்று என் அதை புறக்கணித்தார்கள்?
அதில் வெறும் ஏழு வருட இருப்புத்தானே கேட்கப்பட்டது 
அதில் என்ன தவறு இருக்கிறது?
அந்த புறக்கணிப்புத்தானே பின்பு மிகப்பெரும் சாபக்கேடாக வந்து விழுந்தது.

No photo description available.
இதை பற்றி சுருக்கமாகவே இங்கு எழுதி உள்ளேன் 
இந்த கட்டுரையின் நோக்கம் எப்படி இந்திய வம்சாவளி மக்கள் இடது சாரிகளின் குறுக்கு வழி அரசியலில் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டார் என்பதை பற்றியது மட்டுமே.    
இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பிற்கு இந்த இடது சாரி அரசியல்வாதிகளுக்கும் உள்ள  தொடர்பு பற்றி அறிவதக்ரு  ஒரு முன்னோடியாக திரு எஸ் சி சி அந்தோனிப்பிள்ளையின் (யாழ்ப்பாணம்)  வரலாறு ஒரு உசா  துணையாக இருக்கும் என்று கருதுகிறேன்  
இவர் இந்திய, இலங்கை, பர்மிய போல்செவிக்-மார்க்சியக் கட்சி 1948 இல்  இந்திய சோசலிசக் கட்சியுடன் இணைந்ததை அடுத்து அந்தோனிப்பிள்ளையும் அக்கட்சியில் சேர்ந்து .[
1948 முதல் 59 வரை சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தார்.
1952 முதல் 1957 வரைசென்னை சூளை மேடு சட்டமன்ற உறுப்பினராக MLA  இருந்தார்.
1956 இல் லோகியா சோசலிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார்.
இக்கட்சியின் சார்பாக சுயேச்சை வேட்பாளராக 1957 இல்  வட சென்னை மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்
 1961 இல் ஈ வே கி சம்பத்தின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சியில் சேர்ந்தார்.
 1964 இல் ஈ வே கி சம்பத்தின் தமிழ்த் தேசியக் கட்சி இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்ததை அடுத்து அந்தோனிப்பிள்ளையும் காங்கிரசில் சேர்ந்தார்.
இலங்கை இடது சாரி தலைவர்களில் ஒருவரான லெஸ்லி குணவர்தனவின் சகோதரி கரோலின் குணவர்தனவை (சிங்கள பெண்)  திருமணம் செய்தார்
 

May be an image of text that says "500 भारत INDIA 2010 पी. जीवानन्दम P. JEEVANANDHAM" 

இவருக்கு மகேந்திரன், ரஞ்சித், நளின் ரஞ்சன், சுரேஷ்குமார் நான்கு பிள்ளைகள் உள்ளனர்
எஸ் சி  சி அந்தோனிப்பிள்ளை லண்டனில்  இருந்து இலங்கை திரும்பி   என் எம் பெரேரா  பிலிப் குணவர்தன லெஸ்லி குணவர்தன போன்ற தலைவர்களோடு சேர்ந்து லங்கா சம சமாஜ கட்சியில் இயங்கினார் 
திரு தினேஷ் குணவர்தன அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில்தான் இவரது இறுதி சடங்குகள் இவர்களின் பாரம்பரிய பொரளகோடாவில் நடந்தது 
கட்டுரை நீள்வதை கருதி பல விடயங்களை தவிர்த்திருக்கிறேன் 
2 ஆம் தேதி மேமாதம் 1947 ஆம் ஆண்டு யு என் பி பத்திரிக்கை கொழும்பு 
டாக்டர் கொல்வின் ஆர் டி சில்வாவும் திரு எஸ் சி அந்தோனிப்பிள்ளையும் தமிழ்நாட்டில் கைது செயப்பட்டுள்ளார்கள் 
தென்னிந்தியாவின் மிக பெரிய டெக்ஸ்டைல் மில்லின் தொழிற்சங்க வேலை நிறுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்த கைது  நடந்தது 
இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல 
இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் இந்த வேலை நிறுத்தத்தை நடத்தியது மதராஸ் லேபர் பார்ட்டி 
இது இந்திய போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அமைப்பு 
 

 May be an image of text

இந்த இந்திய போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் இலங்கையை சேர்ந்த கொல்வின் ஆர் டி சில்வா லெஸ்லி குணவர்தனா மற்றும் எஸ் சி சி அந்தோனிப்பிள்ளையாகும் . நாம் கவனிக்க வேண்டிய விடயம் இதுதான்.
ஒரு இந்திய தொழிலாளர் கட்சி என்பது இந்திய தொழிலாளர்களின் நலன்களை கவனிப்பதில் நமக்கு ஆட்சேபனை யில்லை 
ஆனால் இவர்கள் இலங்கையர்கள் அல்லவா?
இவர்களின் போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சி இலங்கையிலும் இயங்குகிறது 
ஒரு இந்திய கட்சியாக இருந்து கொண்டு இலங்கை மக்களின் வாழ்வை இவர்கள் எப்படி பார்ப்பார்கள்  என்ற கேள்வி எழுகிறது.
உலக தொழிலார்களே ஒன்றுபடுங்கள் என்ற கோரிக்கையில் எவ்வளவு குளறுபடிகள்  இருக்கின்றன?
ஒவ்வொரு நாட்டு தொழிலாளர்களின் பிரச்சனையும் தனித்துவமானவை 
சம்பளம் என்று பார்த்தாலும் கூட இலங்கை தொழிலாளர்களிலும் பார்க்க இந்திய தொழிலாளர்களின் சம்பளம் மிகவும் குறைவு 
இதன் அடிப்படையில்தான் இவர்கள் இந்திய தொழிலாளர்களே இலங்கைக்கு வாருங்கள் என்று அழைப்பதையும் நோக்க வேண்டும் .
இவர்களின் கோரிக்கைக்காக இலங்கை தொழிலாளர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்து கொண்டு தியாகம் செய்யவேண்டுமா?
டாக்டர் கொல்வின் ஆர் டி சில்வா மிக தெளிவாக கூறியிருக்கிறார் 
நானும் எனது கட்சியும் இந்திய தொழிலாளர்களை இரு கரம் நீட்டி வரவேற்கிறோம் 
உங்களுக்கு இலங்கையில் நல்ல சம்பளமும் முழு குடியுரிமையும் வழங்குவோம் 
இது டாக்டர் கொல்வின் ஆர் டி சில்வா அளித்த உறுதிமொழி. 
Place in balance the 400 000 000 of india and the 6,500 000 in ceylon and you will realise what the fate fo the ceylonges will be it the badly paid ill nourished and povery stricken worker of india , negleted for centuries , is allowed  to compete with our own kith and kin here.
60000 indians more in one year
4 th july 1947 unp
The indian population of ceylon has increased by nearly 60000 in one year According to the preliminary report on the vital statatistics issued by Mr G.L.D.Davidson, acting registrar general , and published in the government gazette of june 27 th ( page 1029) the total estimated population of ceylon on december 31 st 1946 , (excluding the military and shipping populations) was 6 784 000, as against a populations of 6, 606 000 on december 31 st 1945 
the number of immigrants exceeded the number of emigrants by 56 790 .
Dr Colvin R. D Sylva in his intherview to madras HINDU 25 th november 1945 and published in this paper on 16 may 1947 
The BLP of Ceylon  stands for complete freedom of entry into Ceylon of indian workers and for their right to exercise the franchise in Ceylon.
we are opposed to any restriction that takes away or limits the rights of indian workers 
we do not regard the indian workers as alians.
In fact the trotskyits of india and ceylon have bulit up one united party of indians and ceylonese workers 
viz the boshvik leninist party and its ceylon unit the samajist party .
our party will always be in the forfront of the struggle for the rights of the indian workers .
such is the nature of the tragedy that faces those who follow and support the caucuses of the BLPI and LSSP.

No comments:

Post a Comment