Wednesday, July 27, 2022

யாழ்ப்பாண மேயர் திரு அல்பிரட் துரையப்பாவின் 47 ஆவது நினைவு அஞ்சலி கட்டுரை

 


யாழ்ப்பாண மேயர் திரு அல்பிரட் துரையப்பாவின் 47 ஆவது நினைவு அஞ்சலியாக இந்த கட்டுரை
திரு அல்பிரட் துரையப்பாவின் யாழ் மேயர் பதவி கால சாதனைகளை மக்கள் அறிந்திருக்கும் அளவுக்கு அவர் யாழ்ப்பாண தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றிய வரலாறு பொதுவெளிக்கு மறைக்க படுகிறது   அவை இனி ஒவ்வொன்றாக வெளிவரும்  அந்த வகையில் வெளிவரும் முதல் செய்தி இதுவென்று எண்ணுகிறேன் .

ஈழநாடு 18 - 3- 1961 யாழ்ப்பாணம்
வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு   முதல் வெற்றி!
சத்தியாகிரக எம்பிக்களுக்கு 3 மாத ரஜா (அதாவது விடுமுறைங்கோ  ஹரிஹர சர்மாவின் தமிழ் இதுதானுங்கோ)
சத்தியாகிரகம் செய்யும் தமிழரசு கட்சி எம்பிக்களுக்கு பார்லிமெண்டு சபை இவ்வாரம் மூன்று மாத ராஜா அளித்திருக்கிறது
அவர்களுக்கு இந்த ராஜாவை கொடுக்கவேண்டும் என்று யாழ்ப்பாண தொகுதி பிரதிநிதி திரு அல்பிறெட் துரையப்பா (சுயேட்சை)  ஒரு பிரேரணையை கொணர்ந்தார்.
அரசியல் கட்சி வேற்றுமை என்ன இருப்பினும் தமிழுரிமை போராட்ட விஷயமாக தமிழரிடையே வேற்றுமை எதுவும் இல்லை என்பதை இது காட்டுவதாகும்
இப்பிரேரணையை பிலிப் குணவர்தனவும் ( இன்றைய பிரதமர் தினேஷ் குணவர்தனாவின் தந்தை) அவரது தம்பி ராபர்ட் குணவர்தனாவும் எதிர்த்தனர்
என்ன காரணத்திற்காக விடுமுறை வேண்டும் என்று பிலிப் குணவர்தனா கேட்டார்.
எந்த விதிப்படி காரணம் சொல்லவேண்டும் என்று மடக்கி கேட்டார் அல்பிறெட் துரையப்பா
நாட்டை பிளவு படுத்துவதற்காக சத்தியாகிரகம் செய்ப்பவருக்கு விடுமுறை அளிக்க படாதென்றார் பிலிப் குணவர்தனா
நீங்களும் நானும் சிறைப்பட்டிருக்கும் போதே எங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டதே என்கிறார்  என் எம் பெரேரா
இவருக்கும் வாய்ப்பேச்சு தடித்து சண்டை மூழும் சூழ்நிலையில் ஒரு யு என் பி எம்பி இருவரையும் சமாதானப்படுத்தி இருக்கையில் அமர்த்தினார்
அரசாங்க எம்பிக்கள் வாக்களிக்கவில்லை துரையப்பாவின் தீர்மானத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்பிக்கள் வாக்களித்தனர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் திருவாரூர் ஹரிஹர சர்மா விடுமுறை என்ற இடத்தில் எல்லாம் ரஜா என்ற சொல்லே பயன் படுத்தி உள்ளார்
வாசகர்களின் புரிதலுக்க்க விடுமுறை என்ற சொல்லை நான் பயன்படுத்தி உள்ளேன்

 

 .


 

No comments:

Post a Comment