ராதா மனோகர் : இலங்கையில் தமிழ்மொழியை தமிழர்களின் வரலாற்றை காப்பதாக உரத்து முழங்குவோர்கள் திரு அல்பிரட் தங்கராஜா துரையப்பாவின் பெயரை கேட்டாலே நடுங்குகிறார்கள்
இந்த தமிழ் தேசியர்களின் ஆவணகாப்பகங்களில் மட்டுமல்ல இணையத்தளங்களில் கூட திரு அல்பிரட் துரையப்பாவின் பெயரை வலிந்து காணாமல் போக செய்துள்ளார்கள்!
இலங்கை தமிழ் ஆளுமைகள் என்ற வரிசையில் வெறும் கிராமசபை அங்கத்தவர்கள் மற்றும் சோப்பு சீப்பு கண்ணாடி விற்பவர்கள் பெயர்கள் மற்றும் சுருக்கமான வரலாறுகள்கூட இடம் பெற்றுள்ளது
ஆனால் இன்றைய யாழ்ப்பாணத்தை கட்டி எழுப்பியதில் பெரும் பங்காற்றிய திரு அல்பிரட் துரையப்பாவின் பெயர் மட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்படுகிறது.
ஏன் தெரியுமா இந்த இருட்டடிப்பு?
இவர்களின் தமிழ் தேசியம் என்று குறிப்பிடப்படும் முதலில்லா வியாபாரத்தின் தாங்கு தூணே துரோகி என்ற சொல்தானே!
துரையப்பாவை துரோகி என்று கட்டமைத்துத்தானே இவர்களின் அரசியல் வசூல் வேட்டை நடக்கிறது!
நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு!
No comments:
Post a Comment