ராதா மனோகர் : இலங்கை பொலநறுவை என்ற இடத்தில்,
ஒரு நீண்ட கற்பாறை மீது சிங்கள மொழியில் பல செய்திகளை செதுக்கி வைத்திருக்கிறார்கள்
சிங்கள மொழியை கற்க விரும்பும் எவருக்கும் சரியான வழி காட்டியாக இந்த கல் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று இந்த காணொளியில் சிங்கள மொழியில் கூறப்படுகிறது
இது மன்னர் நிசங்க மல்லாவின் (1187-1196) புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றாகும், இதில் நிசங்க மன்னரின் ஆட்சி பற்றிய விபரங்களும்
அவர் இலங்கையின் அரசராக இருப்பதற்கான தகுதியை விவரிக்கிறது.
26'10 "அடி (8.2 மீட்டர்) நீளமும், 4'7" அடி (1.4 மீட்டர்) நீளமும் கொண்ட இந்த பாரிய கற்பாறை
மஹியங்கனா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது.
இப்பாறையில் 3 நெடுவரிசைகளில் எழுதப்பட்டுள்ளது
மொத்தமாக 7200 வரிகளில் 4300 க்கும் மேற்பட்ட சொற்களை கொண்டுள்ளது.
இதன் எழுத்துக்களின் மீது உலோக துகள்கள் படிமங்களாக இருப்பது கண்டு பிடிக்க பட்டுள்ளது
சிங்கள மொழியானது இலங்கை முழுவதும் வட்டார பேதங்கள் இன்றி பேசப்படுவதற்கும் எழுதப்படுவதற்கும் ஆதாரமாக இந்த கல் புத்தகம் இருக்கிறது என்று கருதப்படுகிறது
தெற்கு ஆசியாவில் வேறெங்கும் காணப்படாத சிங்கள மொழியானது இலங்கையில் மட்டும் உறுதியாக நிலை பெற்றது ஒரு இங்கே முக்கியமாக கருத்தப்படவேண்டிய உண்மையாகும்
அதற்கு இந்த கல் புத்தகம் ஒரு ஆதாரமாக இருந்திருக்கிறது
சிங்கள மொழியின் ஆக்கமும் இந்த கல் புத்தகமும் ஒன்றோடொன்று தொடர்பு உடையதாக இருக்க கூடும் என்றெண்ணுகிறேன்
இந்திய பெரு நிலப்பரப்பில் இருந்து சமண பௌத்தர்கள் மீது மிக கொடுமையான தாக்குதல்கள் ஒரு இனசுத்திகரிப்புக்கு ஈடாக நடத்தப்பட்டது
8000 சமண பௌத்தர்களை கழுவேற்றி கொன்றதை இன்றும் கூட பார்ப்பனீயம் கொண்டாடி மகிழ்கிறது என்றால் எவ்வளவு கொடூரம் அன்று அரங்கேற்ற பட்டிருக்கும் என்று ஊகிக்கலாம்
தென்னிந்தியாவில் இருந்து துரத்தப்பட்ட பௌத்தர்கள் இலங்கைக்கு வருகை தந்த போது வெறும் கையேடு வந்திருக்க மாட்டார்கள்
தங்களோடு பௌத்த அறிவு கருவூலங்களையும் கூடவே கொண்டு வந்திருப்பார்கள்
தம்மை கழுவேற்றிய பார்ப்பனீய கொடுமையில் இருந்து தங்களது பௌத்த அறிவையும் அனுபவங்களையும் மட்டுமல்ல ஏடுகளையும் கூட கொண்டு வந்திருக்க கூடிய சாத்தியம்.
நிறையவே உண்டு
அந்த பௌத்த கருத்துக்களையும் வரலாற்றையும் காப்பதற்கு அவர்கள் தங்களுக்கு ஒரு பாதுகாப்பான மொழியின் தேவை இருப்பதை உணர்ந்திருப்பார்கள்
பார்பனியதோடு போராடி தப்பி பிழைத்து புது தேசம் வந்தவர்கள் எந்த இந்திய மொழியும் தங்களது ரகசியங்களை பாதுகாக்க கூடியது அல்ல என்று கருதி இருக்கலாம்.
சிங்கள மொழியானது எந்த இந்தியருக்கும் தெரியாது.
பௌத்தர்கள் வரும்போது ஏற்கனவே சிங்கள மொழி இலங்கையில் இருந்தது என்று கருதுவதற்கு வாய்ப்புக்கள் அரிதிலும் அரிதே
அப்படி இருந்திருப்பின் நிச்சயம் அம்மொழி இந்திய பெரு நிலப்பரப்பின் எதாவது சில இடங்களிலாவது எந்த காலத்திலாவது பேசப்பட்டு இருந்திருக்கவேண்டும்
அல்லது குறைந்த பட்சம் எதாவது ஒரு அடையாளமாவது இருந்திருக்க வேண்டும்
அப்படி எந்த தடயமும் இல்லையே?
இலங்கையில் மட்டுமே சிங்கள மொழி இருக்கிறது என்ற ஒற்றை அம்சம்தான்
பௌத்தத்தின் பாதுகாப்புக்கு உகந்ததாக இருந்திருக்க வாய்ப்புள்ளது
முழு இந்தியாவையும் பார்ப்பனீயம் தனது கட்டுப்பாட்டுக்குள் ஓரளவு கொண்டுவந்த அந்த காலக்கட்டத்தில் பௌத்தம் மதமானது ஒரு போர் சூழலில் தன்னை காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அன்று இருந்தது என்றெண்ணுகிறேன்
இந்த வரலாறு பின்னணியில் இருந்து சிங்கள மொழி தோன்றுவதற்கு முன்பு இவர்கள் எந்த மொழி பேசுபவர்களாக இருந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
இந்த கோணத்தில் ஆய்வு செய்யும் போது மேலும் மேலும் பல புதிய கேள்விகள் எழுகின்றன .
குறிப்பாக சிங்கள மொழியானது பார்பனீயத்திடம் இருந்த பௌத்தத்தை பாதுகாத்த ஒரு மொழியாக இருக்கிறது
No comments:
Post a Comment