Sunday, July 3, 2022

இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமை பறிப்பின் பின்னணியில் இந்திய அரசும் அரசும் இருந்திருக்கிறதா?


 ராதா மனோகர்
  : இலங்கை தமிழர் அரசியலில் மீண்டும் மீண்டும் ஒரு பெரிய பொய்யை கூறிக்கொண்டே இருக்கிறார்கள்
திரு செல்வநாயகமும் திரு நாகநாதனும் கதை வசனம் எழுதி  அரங்கேற்றிய இந்த நாடகம் இன்றுவரை தொடர்கிறது
திரு சுப்பையா பிள்ளை நடேச பிள்ளை என்றவரில் இருந்து பல விடயங்களை நோக்க வேண்டி உள்ளது
எல்லோரும் வசதியாக இவரை மறந்து விட்டுத்தான் அரசியல் வரலாறு பற்றி பேசுகிறார்கள் அல்லது கதை அளக்கிறார்கள்.
இவர் காங்கேசன் துறை எம்பியாக சுதந்திரத்திற்கு முன்பு இரு தடைவைகள் இருந்தார்
சுதந்திரத்திற்கு பின்பு 1952 இல்  காங்கேசன் துறை தொகுதியில் இருந்து செல்வநாயகத்தையே தோற்கடித்து   எம்பியானார் . அதன் பின்பு ஐக்கிய தேசிய கட்சி அரசில்  அமைச்சரானார்
இவர் ஐக்கிய தேசிய கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் . ஐக்கிய தேசிய கட்சியின் அத்தனை நிகழ்ச்சி நிரலிலும் பங்கு பற்றியவர்.
இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர் அங்கு நகராட்சி கவுன்சிலராகவும் இருந்தவர்  இவர் சேர் பொன்னம்பலம் ராமநாதனின் மருமகனாகும்
மேலும் இவர் இலங்கை அமைச்சராக இந்தியாவுக்கு சென்று  யாழ்ப்பாண புகையிலை வர்த்தக தடையை நீக்குமாறு கேட்டுக்கொண்டு அதை சாதித்தவர்  
இதுவரை காலமும் இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை நீக்கம் பற்றி இவரது பங்கு பற்றி எவரும் ஏன் குறிப்பிடுவதில்லை?


சுதந்திர இலங்கையின் முதல் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை பெறவில்லை
பெரும்பான்மையான இடதுசாரிகளும் பல சுயேட்சைகளும்தான் தெரிவு செய்யப்பட்டர்கள்
இலங்கை ஒரு கம்யூனிஸ்டு நாடாக வரக்கூடிய அத்தனை வாய்ப்புக்களும் அன்று இருந்தது
இந்தியர்களின் வாக்குகள் பெருமளவில் இடதுசாரிகளுக்கே சென்றது
இதுதான் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்புக்கு காரணமாக இருந்தது
இந்த சூழிநிலையில் நிச்சயம் ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும் மட்டுமல்ல இந்தியா அரசும் கூட இந்த வாக்குரிமை பறிப்பின் பின்னணியில் இருக்க வாய்ப்புள்ளது
உலகின் முதல் ஜனநாயக வழியில் உருவான கம்யூனிஸ்டு அரசு என்று கருதப்பட்ட கேரளா நம்பூதிரி பாட் அரசை அமெரிக்க அரசின் அனுசரணையோடுதான் இந்திய அரசு கலைத்தது என்ற வரலாறும் இந்த இடத்தில் நோக்கவேண்டும்
வெறும் ஒரு கம்யூனிஸ்டு மாநில அரசையே அன்று சகிக்க முடியாத ஆபத்தாக கருதிய இந்திய அரசு,
தனது அருகிலேயே ஒரு கம்யூனிஸ்டு நாடு  உருவாக அனுமதித்து இருக்குமா?
இந்த கேள்வியை சுயசிந்தனை உள்ள எவரும் நிச்சயம் கருத்தில் கொண்டே ஆகவேண்டும்   

அன்று பெரும்பான்மையான இந்திய வம்சாவளி வாக்காளர்கள் தமிழ் வாக்காளர்களாகவோ  அல்லது இந்திய வாக்காளர்களாகவோ இலங்கை வாக்காளர்களாகவோ கருதப்பட்டார்கள் என்பதை விட அவர்கள் கம்யூனிஸ்டு வாக்காளர்கள் என்ற ஒரு தோற்றம் இருந்தது 

இன்றய கம்யூனிஸ்டு வாக்காளர்கள் என்பது வெறும் தேர்தல் அரசியல் வாக்குவங்கி மட்டுமே  .இந்த வாக்குகள் ஒருபோதும் ஒரு கம்யூனிஸ்டு தேசத்தை உருவாக்காது என்பது எல்லோரும் அறிந்ததே.

ஆனால் அன்றைய நிலைமை அப்படி அல்ல .

உலகம் முழுவதும் கம்யூனிஸ்டு அபாயம் என்பது மேற்கு நாடுகளை மட்டுமல்லால் இந்தியாவை கூட அச்சுறுத்திய பிரச்சனையாகும் 

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டே இந்த கம்யூனிச வாக்குகள் என்பதை நோக்கவேண்டும்.
இந்திய வம்சாவளி மக்களை தங்களின் அரசியல் வசதிக்கு பயன்படுத்திய இடதுசாரிகள் பிற்காலத்தில்  அதே இந்தியா வம்சாவளி மக்களை இந்திய ஆதிக்க வாதிகள் என்றதுதான் வரலாறு 


இலங்கை இடதுசாரிகளின் தவறுக்கு திரு ஜி ஜி பொன்னம்பலம் பழி சுமந்தார்
அடுத்த விடயம் சைவ அரசியல் ..
அதுவரை சைவ அரசியல்தான் இலங்கை தமிழர்களிடையே இருந்தது  
சிறுபான்மையினரான கிறிஸ்தவ அரசியல் அதிகாரப்போட்டியே  எஸ் ஜெ வி செல்வநாயகம் ஜான் ஜெபரத்னம் நாகநாதன் போன்றவர்களின் தமிழரசு அரசியல்!

அன்று அரசியல் செய்வதற்கு இவர்கள் தூக்கிய தமிழ் தேசிய கோஷத்திற்கு வலு சேர்க்க 

திரு ஜி ஜி பொன்னம்பலம் என்ற கதை வசனத்தை ஆரம்பித்தார்கள்  

இன்று வரை இந்த நாடக கம்பனி நடக்கிறது 

No comments:

Post a Comment