Saturday, April 15, 2023

இலங்கை திராவிட இயக்கமும் இலங்கை தமிழ் தேசியமும்

ராதா மனோகர்   :  1957 ஆம் ஆண்டு அகில இலங்கை பகுத்தறிவு கழகத்தின் சார்பில் தமிழகத்தில் இருந்து வருகை தந்த    திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஒருவர் இந்த படத்தில் இரண்டாவதாக நிற்கிறார். இவரை பற்றி கூறுங்கள் பார்க்கலாம்
இலங்கை முழுவதும் இவர் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளார்
யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு பகுத்தறிவு சொற்பொழிவு கூட்டத்தின் பின்பு இந்த படம்  எடுக்கப்பட்டது .
இக்கூட்டம் பற்றிய செய்திகளும் இவரின் விரிவான பேட்டியும் விரைவில் வரும் ...
படத்தில் முதலாவதாக நிற்பவர் இலங்கை பகுத்தறிவு கழக செயலாளர் திரு த. வேலழகன் . இரண்டாவதாக நிற்பவர் திமுக பிரமுகர் மூன்றாவதாக நிற்பவர் பகுத்தறிவு கழக தலைவர் திரு என் பி ராஜதுரை . நான்காவதாக நிற்பவர் பொருளாளர் திரு சி கண்ணன் அவர்கள்

March 13, 2022
இலங்கை திராவிட இயக்கமும் இலங்கை தமிழ் தேசியமும்
இலங்கை மண்ணில் 1932  ஆம் ஆண்டு தந்தை பெரியார் ஊன்றிய திராவிட விதை!
இந்த ஆண்டுதான் கொழும்பில் இலங்கை சுயமரியாதை இயக்கம் உருவானது

Thursday, April 13, 2023

மறைந்த புதுக்கோட்டை எம் எல் ஏ திரு.பெரியண்ணன் .. இலங்கையில் ஆரம்பித்த திராவிட பயணம்.

May be an image of 1 person and eyeglasses
ராதா மனோகர் : மறைந்த புதுக்கோட்டை எம் எல் ஏ திரு.பெரியண்ணன் .. இலங்கையில் ஆரம்பித்த திராவிட பயணம்.
1953 ஆம் ஆண்டு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் அழைப்பை ஏற்று  தமிழ்நாட்டில் இருந்து சிந்தனை சிற்பி சி பி சிற்றரசு ,மற்றும் கிளர்ச்சி பத்திரிகையின் ஆசிரியரான இரா. சு.தங்கப்பழம் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்தனர்
இலங்கையில் 30 இற்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கு பற்றி சொற் பொழிவாற்றினார்கள்  
(19 ஏப்பிரல் 1953 ) கொழும்பு மாவட்ட தி மு கழகத்தின் சார்பில் கொழும்பு நகரசபை மண்டபத்தில் தோழர் ஆர் ஆர் கே டெய்லர் தலைமையில் சிந்தனை சிற்பி சிற்றரசுவுக்கும் இரா சு தங்கப்பழம் அவர்களுக்கும் பெரும் வரவேற்பு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
கூட்டம் ஆரம்பிக்க முன்பு ஆயிரக்கணக்கான கழக தொண்டர்கள் கறுப்பு சிவப்பு கொடிகளை உயர்த்தி பிடித்தவண்னம் ஊர்வலமாக சென்றனர்

Tuesday, April 11, 2023

UNP இந்திய பிரச்சனையை தீர்த்தது வெள்ளி ஜனவரி 9 - 1948 UNP solves Indian problem


ராதா மனோகர் 
:    .டி எஸ் . சேனநாயக்கா பண்டிட் ஜவகர்லால் நேரு பேச்சு வார்த்தை வெற்றி!

 ஐக்கிய தேசிய கட்சி UNP இந்திய பிரச்சனையை தீர்த்தது வெள்ளி ஜனவரி 9 - 1948 UNP கட்சி செய்தித்தாள்
இந்திய பிரச்சனையை  ஐக்கிய தேசிய கட்சி  தீர்க்கும்..
நீதி நிலைநாட்டப்படும் மற்றும் தேசிய நலன்கள் பாதுகாக்கப்படும்.
இலங்கையில் இருக்கும்  இந்தியப் பிரச்சனையை ஒரே தடவையிலேயே தீர்த்து வைப்பதாக இலங்கை மக்களுக்கு இந்த உறுதிமொழியை  பிரதமர்  டி எஸ் சேனநாயக்க அவர்கள் நாட்டு மக்களுக்கு வழங்கினார்..
பிரதமர் கௌரவ டி எஸ் சேனநாயக்க அவர்கள் டில்லியில் நடத்திய பேச்சு வார்த்தையின் பயனாக  இந்த விடயத்தில் வெற்றிகரமான தீர்மானம் எட்டப்பட்டது.
பண்டிட் ஜவகர்லால் நேருவுடன் திரு டி எஸ் சேனநாயக்க நடத்திய பேச்சு வார்த்தை இலங்கைக்கு மிகவும் திருப்திகாரமான முறையில் நடைபெற்றது

Sunday, April 2, 2023

திராவிட பிரகாசிகை ஆம் ஆண்டு - யாழ்ப்பாணம் திரு சபாபதி நாவலர்!

ராதா மனோகர்
:  திராவிட பிரகாசிகை . தமிழ் இலக்கண நூல்.1899 ஆண்டு!
தமிழ் மொழியின் முக்கியமான இந்நூலின் பெயர் திராவிட பிரகாசிகை
இந்நூலை எழுதியவர்  யாழ்ப்பாணம் கோப்பாயை சேர்ந்த திரு சபாபதி நாவலர் அவர்களாகும். .
தற்போது பலரும் இலங்கையில் திராவிடம் என்ற சொல்லே இல்லை  
அது என்னவென்று கூட பலருக்கும் தெரியாது என்றெல்லாம் கூறுகிறார்கள்.
வரலாறு தெரியாத ஒரு சமூகத்தை கட்டமைத்ததுதான் இவர்களின் சாதனை
இன்றும் கூட தமிழை காவல் காத்து கொண்டிருப்பது திராவிடம் என்ற அடையாளம்தான்
இது வெறும் நிலம் சார்ந்த விடயம் மட்டுமல்ல
ஆரிய ஜாதீயம் நுழைவதற்கு முன்பிருந்த நிலத்தின் அடையாள பெயர் திராவிடம்

Saturday, April 1, 2023

யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கம் சுன்னாகம் திராவிடன் -9 ஏப்ரல் 1927

ராதா மனோகர்    : திராவிடன் -9 ஏப்ரல் 1927 சுன்னாகம்



யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கம் சுன்னாகம்
கீழ்கண்டிருக்கும் கனவான்கள் தாங்கள் இச்சங்கத்தின் போஷகர்களாக இருப்பதற்கு சம்மதப்பட்டு இருக்கிறார்கள்.
1. ஸ்ரீ மான் சேர் அம்பலவாணர் கனகசபை அவர்கள்
2. கௌரவ ஸ்ரீமான் துரைசாமி அவர்கள்.
3. கௌரவ ஸ்ரீ மான் எஸ் ராஜரத்தினம் அவர்கள்
4. கௌரவ ஸ்ரீ மான் தா மு. சபாரத்தினம் அவர்கள்
இப்பொழுது நாங்கள் சங்கம் தொடங்கி ஏறக்குறைய 3 மாதங்கள் ஆகிறது.

பள்ளிக்கூடம் கட்டுவதற்கான அலுவல்கள் நடந்து வருகிறது.. சங்கத்திற்கு புதிய அங்கத்தினர்கள் தொகையாக சேர்க்கிறார்கள்.
சென்ற மாதத்தில் மயிகம்பட்டி, மயிலணி என்னும் இடங்களில் கிளைச்சங்கங்கள் ஏற்படுத்த பட்டன.
அங்கத்தினர்கள் தயவு செய்து தங்கள் மாதாந்த கட்டணங்களை கொடுத்து ரசீது பெற்றுகொள்ளவும்.
சித்திரை மாதம் பள்ளிக்கூடத்திற்கு அத்திவாரம் போடுவதற்கு தீர்மானிக்க பட்டிருக்கிறது.