ராதா மனோகர் : இலங்கை மலையக மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று சிலர் கூவ தொடக்கி உள்ளார்கள்!
இதன் மூலம் இவர்கள் என்னதான் கூறவருகிறார்கள்?
எஸ்ஜேவி செல்வநாயகத்தின் வெறுப்பு அரசியலின் மற்றுமொரு பக்கவிளைவுதான் இது!
இலங்கையின் 80 வீத பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களின் வெறுப்பை அறுவடை செய்து வயிறு வளர்க்கும் கும்பலின் கடைந்தெடுத்த கயமை அரசியல் இது!
மலையக சுயநிர்ணய உரிமை என்ற முணு முணுப்புக்கள் அண்மை காலங்களாக கொஞ்சம் உரத்த முழக்கமாக உருமாறுவது தெரிகிறது
துரோகிஸ்தானியர்களின் பணம் இதன் பின்னணியில் இருக்கிறது என்ற சந்தேகம் உள்ளது!
இலங்கை இன மோதல்களில் ஏழைகளை பலிகொடுத்து திருடர்கள் கோடீஸ்வரர்கள் ஆனதைத்தான் கண்கூடாக பாரிக்கிறோமே!
அந்த பாசிச கூட்டத்திற்கு ஒரு கேள்வி!
மலையக சுயநிர்ணய உரிமை என்றால் என்ன?
மலையக மக்கள் மலையகத்தில் தனிநாடு கேட்கிறார்களா?
அல்லது வேறு எதாவது நாடு ஒன்றோடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று கேட்கிறார்களா?
முன்பு இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களை பதிவு பிரஜைகள் என்றுதான் ஆவணங்களில் குறிப்பிடுவார்கள்!
இதன் காரணமாக கல்வியில் வேலை வாய்ப்பில் அன்றாட வாழ்வியலில் இந்திய வம்சாவளி மக்கள் ஒரு இரண்டாம் தர குடிமக்களாக .அந்நியர்களாக நடத்த பட்டார்கள்
இந்த வேறுபாடு இலங்கையின் பூர்வ குடி மக்களிடம் இருந்து தங்களை வேறு படுத்தி காண்பிக்கிறது என்று பல மலையக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்!
இந்த பாரபட்சமான குடியுரிமை சொல்லால் எமக்கு எல்லாவிதமான வாய்ப்புக்களுக்கும் தவிர்க்க படுகிறது
என்று சௌமிய மூர்த்தி தொண்டமான் போன்றோர் ஜேயார் ஜெயவர்த்தன அரசிடம் போராடி
அந்த சொல்லை நீக்கினார்கள்
வரலாறு இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் மலையக மக்களை பாழும் கிணற்றில் தள்ளிவிடும் செயலை சிலர் செய்ய தொடங்கி உள்ளார்கள்
இவர்களின் கோரிக்கை சுயநிர்ணய உரிமை என்றால் முதலில் இருந்து பதிவு பிரஜைகள் என்று தொடங்கலாம்
இலங்கையர் எல்லோரும் இலங்கையர்தான்
இல்லை நாங்க வேறு நீங்க வேறு என்றால்
சிங்கள மக்களின் வெறுப்பினை மேலும் சம்பாதிக்க சுயநல அரசியல் வாதிகள் முயல்கிறார்கள் என்றுதான் பொருள்.
No comments:
Post a Comment