Saturday, November 20, 2021

கலைஞரும் இலங்கையின் வடக்கு கிழக்கும் மாகாண சபை அரசும்


The return of the exile - Frontline

டெலோ இயக்க தலைவர் சிறி சபாரத்தினம்- குட்டிமணியும், தங்கதுரையும் சிறையில்  கொடுராமக கொலை செய்யப்பட டெலோவின் தலைவரானார் | Thinappuyalnews

ராதா மனோகர்  : அமரர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவான இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகள் பிரேமதாச கூட்டணியிடம்  இருந்து  காப்பாற்ற முடியாமல் போன வரலாறு பற்றி இன்னும் போதிய புரிதல் பொதுவெளிக்கு இல்லை.
அதன் முதலமைச்சர் திரு வரதராஜர் பெருமாள் தரப்பினருக்கு இதனால் கலைஞர் மீது ஒரு ஏமாற்றம் இருப்பதாக பரவலாக ஒரு வாதம் வைக்கப்படுகிறது
கலைஞர் அந்த மாகாண அரசை காப்பாற்ற தவறி விட்டார் என்று இன்றும் கூட வாதங்கள் வைக்கப்படுகிறது
அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்யவேண்டிய கடமை இருக்கிறது.
அதை ஆய்வு செய்ய பலரும் தயங்குவதற்கு சில காரணங்களும் உண்டு
குறிப்பாக வை கோபாலசாமி அவர்கள் அன்றைய காலக்கட்டங்களில் முழுக்க முழுக்க ஒரு புலித்தலைவராகவே செயல்பட்டிருந்தார்
இந்த வைகோவின் புலி அவதாரத்தை பற்றி இன்று பலரும் பேசுவதை தவிர்க்கிறார்கள்
ஏனெனில் அவர் தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறார் .
எனவே இவரின் பழைய புலி அவதார உண்மைகளை பேசினால் அவர் மனம் புண்படக்கூடும் . அவரோ தற்போது தனது கடந்த கால தவறுகளை ஓரளவு உணர்ந்துவிட்டார் என்றும் கருத படுகிறது
ஏனெனில் புலிகளின் தொடர்புகளை முள்ளிவாய்க்கால் சம்பவங்களின்போது அறவே கைவிட்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது
திரு வைகோ. திரு நெடுமாறன் . ஆசிரியர் வீரமணி . அண்ணன் குளத்தூர் மணி போன்றவர்களின் மனம் புண்படும் என்பதற்காக வரலாறு முழுவதும் திமுக வீண் பழி சுமக்கவேண்டுமா?
 கலைஞர் மீது சேறு வாரி வீசுவதையே தங்கள் வரலாறாக கொண்டவர்களுக்கு இனியும் வாய்ப்பு அழிப்பது வரலாற்றுக்கு செய்யும் துரோகம் ஆகாதா?