Saturday, November 12, 2022

வெளிநாட்டு திராவிடர் நலனுக்கான குழு!

 ராதா மனோகர்

  : வெளிநாட்டு திராவிடர் நலனுக்கான குழு! பேரறிஞர் அண்ணாவிடம் இலங்கை தி மு க.. (வரலாறு)
 1951 ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழக மாநாட்டுக்கு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மூவரை அனுப்புவது என்று கழக தோழர்கள் முடிவு செய்தனர்
அம்மாநாட்டு  நிதியை சேர்க்கும் பணியை தோழர் இளஞ்செழியன் ஏற்று கொண்டார்.
இந்த நிதியை சேர்க்கும் முகமாக  கண்ணீர் என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்கள்
மலையக தோட்டங்களில் வாழ்வை தொலைத்து கொண்டிருக்கும் மலையக மக்களின் கண்ணீர் கதையையே ஒரு நாடகமாக தயாரித்திருந்தார்கள்
இந்நாடகத்தை தோழர் வி செம்பனூர்  தோழர் கே கே இராமசாமி ஆகியோர் எழுதி இயக்கி இருந்தனர்
இந்நாடகம் கொழும்பு பொரளை பௌத்த இளைஞர் மண்டபத்தில் மேடையேற்றப்பட்டது
இதன் பிரதான பாத்திரமான தமிழ்மாறன் என்ற பாத்திரத்தை தோழர் இளஞ்செழியன் ஏற்று திறம்பட நடித்திருந்தார்
இந்த நாடகத்தின் மூலம் வசூலான தொகையை தமிழக திராவிட முன்னேற்ற கழக மாநாட்டிற்கு செல்லும் தோழர்களான  அ.நாச்சியப்பன் , திருப்பூர் கந்தசாமி,  எஸ் கே மாயகிருஷ்ணன் ஆகியோரிடம் கொடுக்கப்பட்டது
இவர்களோடு தோழர் எஸ் மணவைத்தம்பி . இரா அதிமணி ஆகியோர் கொழும்பு மாவட்ட இ தி மு க சார்பில் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர்     இம்மாநாட்டில் இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்   பேரறிஞர் அண்ணாவிடம் ஒரு முக்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டது

Tuesday, November 8, 2022

மூதூர் தமிழரசு வேட்பாளருக்கு இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் ஆதரவு - சுதந்திரன் - 10 - 6 - 1962


மூதூர் அபேட்சகருக்கு இ தி மு க ஆதரவு . சுதந்திரன் - 10 - 6 - 1962
ஒன்று சேர்ந்து பாடுபட தொண்டைமானுக்கு வற்புறுத்து
வடகிழக்கு மாகாண தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து திரு .தொண்டமான் ஒத்துழைத்து , தமிழ் பேசும் இனத்தின் விடுதலைக்காக பாடுபடவேண்டும். இல்லையேல் பாராளுமன்ற பதவியில் இருந்து விலகி விடவேண்டும் இ தி மு க பொதுக்குழு வற்புறுத்தி உள்ளது.
நாவலப்பிட்டியில் நடந்து பொதுக்கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூதூர் உபதேர்தலில் தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜனாப் முகம்மதலியை ஆதரிப்பதெனவும் இக்குழு தீர்மானித்துள்ளது.
தி மு க தொழிற்சங்கம் !
பொதுச்செயலாளர் திரு . இளஞ்செழியன் பேசுகையில் , மலையகத்தில் வாழும் 10 லட்சம் தமிழ் பேசும் தொழிலாளர்களின் நல உரிமைகளை பாதுக்காக்க இ தி மு க அமைக்கும் தொழிற்சங்கமே வழிவகுக்கும் என்று கூறினார்.