![]() |
![]() |
ராதா மனோகர் : யாழ்ப்பாணத்தில் பல்கலை கழகம் அமைய கூடாது என்று எஸ் ஜெ வி செல்வநாயகம் தன் வாழ்நாள் முழுவதும் அயராது போராடினர். அவரின் கைங்கரியத்தால் அவர் ஆக்டிவாக இருக்கும் வரையில் அது அமையவில்லை.
1970 தேர்தலில் ஸ்ரீ மாவோ அம்மையார் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததும்தான் இவரின் கொட்டம் அடங்கியது.
செல்வநாயகத்தின் கடிதங்களுக்கு பதில் கூட ஸ்ரீ மாவோ அம்மையார் போடுவதில்லை
அந்தளவு செல்வநாயகத்தின் கபட அரசியலை அவர் புரிந்து கொண்டிருந்தார்
ஏற்கனவே திரு அல்பிரட் துரையப்பாவுக்கு உறுதி அளித்த படி
1974 இல் யாழ்ப்பாண பல்கலை கழக வளாகத்தை நிறுவினார்
அப்போது கூட இது வெறும் வளாகம்தானே இதிலென்ன இருக்கிறது என்று இதை மலின படுத்தும் முயற்சியில் தமிழரசு கட்சியினர் விஷ பிரசாரம் செய்தவண்ணம் இருந்தனர்
அவர்களுக்கு திரு அல்பிரட் துரையப்பா அவர்கள் கொடுத்த பதிலடிதான் இந்த பேட்டி
ஈழநாடு 26 - 6 - 1974 யாழ்ப்பாணம்
திரு அல்பிரட் துரையப்பா :
முதலில் வளாகமாவது வரட்டும் ஒத்துழைக்காவிடினும் இடையூறு வேண்டாம்
யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா கருத்து
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவிருக்கும் பல்கலை கழக வளாகம் பூரணத்துவமான பல்கலை கழகம் அல்ல என்பது உண்மையே.
ஆனால் இந்த அளவிலாவது முதலில் கிடைக்கும் வளாகத்தை கொண்டு பின்னர் அதை விஸ்தரித்து பூரணத்துவம் உடையதாக்குவோம்.
இவ்வாறு யாழ் நகர மேயரும் வடபகுதி சுதந்திர கட்சி அமைப்பாளருமான திரு அல்பிரட் தங்கராஜா துரைப்பா தெரிவித்தார்
வடபகுதியில் ஒரு பல்கலை கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. எத்தனையோ கமிஷன்கள் கூட வடபகுதிக்கு ஒரு பல்கலை கழகம் தேவைதான் என்று சிபாரிசு செய்திருக்கின்றன
ஆனாலும் ஆட்சி பீடத்திற்கு வந்த அரசாங்கங்கள் பல்கலை கழகம் அமைப்பதற்கு முன்வரவில்லை .
பல்கலை கழகம்தான் அமைக்காவிட்டாலும் முதற்படியாக பல்கலை கழக கல்லூரிகளையாவது இங்கு அமைக்கலாம் என்று கூட சிலர் யோசனை கூறியிருந்தனர்
இப்போது திருமதி ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க தலைமையில் உள்ள ஐக்கிய முன்னணி அரசு பல்கலைக்கழக வளாகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் உடனடியாக அமைக்க முன்வந்திருப்பதை நன்றியுடன் வரவேற்க வேண்டும்
எடுத்த எடுப்பிலேயே சகல வசதிகளையும் கொண்ட பூரண பல்கலை கழகத்தை அமைத்து விட முடியும் என்று எதிர்பார்க்க முடியாது.
அது சாத்தியமுமல்ல. நாட்டின் இன்றைய பொருளாதார நிலையிலும் இந்த வளாகத்தை அமைக்க முன்வந்ததை பாராட்ட வேண்டும்/
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி பீடத்தில் இருந்த போது தமிழரசு கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் அந்த அரசுக்கு ஆதரவழித்தும் கூட ஒரு பல்கலை கழகத்தையோ அல்லது ஒரு வளாகத்தை தானும் இங்கு அமைக்க முடியாது போய்விட்டது என்பதை மக்கள் மறந்து விட்டார்கள்.
எனவே இந்த பல்கலை கழகம் இப்போது அமைக்க படவிருக்கும் சமயத்தில் அதற்கு உதவியும் ஊக்கமும் அளிக்க வேண்டும்.
அப்படி செய்யாதவர்கள் அதற்கு இடையூறாக இல்லாமல் இருந்தாலே போதும்.
முதலில் வளாகம் அமையட்டும் பின்னர் அதை விஸ்தரித்து நமது தேவைகளை நிறைவேற்றி கொள்ள முயற்சி செய்வோம் .
வளாகம் ஒரு கண்துடைப்பு என்று வடக்கிலும் கிழக்கிலும் பூரணத்துவமான பல்கலை கழகங்களே வேண்டும் என்று மன்னாரில் நடந்த தமிழர் கூட்டணியில் நிறைவேறிய தீர்மானம் குறித்தே திரு அல்பிரட் துரையப்பா இவ்வாறு தெரிவித்தார்



No comments:
Post a Comment