Friday, August 28, 2026

4 ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாடு - தமிழரசு கட்சியின் நரவேட்டை

May be an image of text that says "Speech by Mr. A. A.Amirthalingam during Dr. Era Janarthanan 's telicittion C4EИy Chennaiin 1987 டாக்டர் இரா. ஜனார்த்தனன் அவர்களின் பாராட்டு விழா கூட்டத்தில் தலைவர் திரு ત. அமிர்தலிங்கம் அவர்களின் பேச்சு 1987இல்."

 ராதா மனோகர் : 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது  உலக தமிழாராய்ச்சி மாநாடு!
இதை உண்மையில் ஒரு அகில உலக தில்லாலங்கடி மாநாடு என்று கூறலாம்.
அந்தளவுக்கு அதில்  பொய்யும் புரட்டும் கரை புரண்டு ஓடிய மாநாடு இது!.
இந்த தமிழாராய்ச்சி மாநாடு தமிழரசு கட்சியின் அரசியல் மாநாடகத்தான் நடக்கும் என்று ஸ்ரீமாவோ அம்மையாரும் உதவி பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடியும் அன்று அழுத்தமாக நம்பினார்கள் 
இம்மாநாடு அரசியல் மாநாடாக இருக்காது என்ற தமிழராய்ச்சி பிரமுகர்களின் உறுதி மொழிகளை  பிரதமர் ஸ்ரீமாவோவும் அமைச்சர் லக்ஷ்மான் ஜெயக்கொடியும் துளியும் நம்பவில்லை.
இலங்கை தமிழாராய்ச்சி மன்றத்தில் ஏராளமான தமிழரசு கட்சி பிரமுகர்கள் ஊடுருவி இருந்தார்கள் 


இந்த விபரம் எல்லாம் அம்மையாருக்கு நன்றாக தெரியும் 
 இவர்களின் வாக்கு நாணயம் பற்றிய புரிதல் ஸ்ரீமாவோ அம்மையாருக்கு இருந்தது.
ஸ்ரீமாவோ அம்மையாரின் நெருங்கிய நண்பரான திரு கோபாலபிள்ளை மகாதேவாவை தமிழரசு கட்சி கூட்டம் வற்புறுத்தியது 


இலங்கை தமிழாராய்ச்சி மன்றத்தில் ஈடு பாடு கொண்ட திரு கோபாலபிள்ளை மகாதேவா அவர்கள் இவர்களின் வாக்குறுதியை நம்பி ஸ்ரீமாவோ அம்மையாரிடமும் அமைச்சர் லக்ஷ்மான் ஜெயக்கொடியிடமும் தூது போனார்.
கோபாலபிள்ளை மகாதேவாவுடன் ஸ்ரீ மாவோ அம்மையாருக்கு இருந்த நம்பிக்கை காரணமாக பல உறுதி மொழிகளை பெற்று கொண்டு யாழ்ப்பாண தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு அனுமதி கொடுத்தார் 
May be an image of map and text
ஆனாலும்  இரா.ஜனார்த்தனன் போன்றவர்களை மேடை ஏற்றுவதோ வேறு தமிழரசு கட்சி பிரமுகர்களை கொண்டு அரசியல் பிரசாரம்  செய்வது தெரிந்தால் கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கையும் செய்தார்.
ஆனால் இலங்கைக்கு இரகசியமாக வந்திருந்த ஜனார்தனனை மாநாட்டில் மாலை போட்டு வரவேற்றார் திரு அமிர்தலிங்கம்
 Janarthanan was hoisted onto the improvised platform by admirers to a loud applause. de Kretzer says that Amirthalingam garlanded Janarthanan, while Sansoni says they exchanged garlands.
இதை கண்டு வெகுண்டு எழுந்த திரு கோபாலபிள்ளை மகாதேவா அவர்கள் ஜனார்தனனை உடனே மேடையை விட்டு  கீழே இறங்குமாறு கூறினார் 
திரு ஜனார்த்தனன் திரு மகாதேவா அவர்களை  மிரட்டும் தொனியில் பேசி இறங்க மறுத்தார்.
திரு மகாதேவா அவர்கள் மாநாடு முக்கியஸ்தரான திரு வி எஸ் துரைராஜாவிடமும் இலங்கை தமிழாராய்ச்சி மன்ற இலங்கை கிளை தலைவரான திரு சு வித்தியானனிடமும் ஜனார்தனனை கீழே இருக்குமாறு வேண்டி கொண்டார் .
ஆனால் ஜனார்தனனோ இவர்களின் பேச்சை செவி மடுக்க கூடிய மனோநிலையில் இல்லை. 
when Dr. Mahadeva asked Janarthanan to get down, the latter threatened him with trouble. He then says that in turn Dr. Vithyananthan and Mr. Thurairajah made the same  request to Janarthanan. 
பின்பு இதே கோரிக்கையை திரு அமிர்தலிங்கத்திடமும் திரு மகாதேவா முன்வைத்தார் 
அமிர்தலிங்கம் அதை கேட்டும் கேளாதவர் போல நழுவினார் 
When Amirthalingam was asked to intervene, he is said to have replied evasively.
இதன் பின் திரு கோபால பிள்ளை மகாதேவா அவர்கள் மேடையை விட்டு வெளியே சென்று தொலைபேசியில்  யாழ்ப்பாண ஏ .எஸ் பி சந்திரசேகராவிடம் இந்த நிலைமையை தெரிவித்தார் 

May be an image of text
கூடுமானவரை பெரிய கலவரம் இன்றி இவ்விடயத்தை கையாளுமாறும் வேண்டிக்கொண்டார்.
பின்பு  திரு கோபாலபிள்ளை மகாதேவா அவர்கள் மேடையை நோக்கி வந்தார் 
அங்கு திரு ஜனார்த்தனன் மேடைக்கு பின்புறமாக சில தற்காலிக ஏற்பாடுகளை  செய்து அவற்றில் ஏறி நின்று கொண்டு ஆட்டோகிராப் சைன் வைப்பதும் இளைஞர்களோடு   உணர்ச்சி வசப்பட்டு உரையாடுவதுமாக ஷோ காட்டி கொண்டிருந்தார்.
இந்த விபரங்களை திரு கோபாலபிள்ளை மகாதேவா அவர்கள் இது பற்றிய சன்சோனி விசாரணை கமிஷனில் பதிவு செய்துள்ளார்,.

இதன் பின்பு ஏ எஸ் பி சந்திரசேகரா தலைமையில் சில போலீசார் ஜீப் வண்டியில் மாநாட்டு மேடையை நோக்கி ரீகல் தியேட்டர் வழியாக வந்தனர்.
இந்த ஜீப் மீது கற்கள் ன்ற கையில் அகப்பட்ட பொருட்களை அங்கு குழுமி இருந்த மக்கள் வீச தொடங்கினர் 
அதில் இரண்டு போலீசார் காயமடைந்தனர் ஜீப்புக்கும் சேதம் உண்டானது 
இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு நடந்தது 

No photo description available.
  According to Sansoni the police party led by the ASP which approached the platform (from the Regal Theatre or the Clock Tower side, that is from the east) was greeted with bottles and stones thrown at them, resulting in injury to two policemen and damage to Chandrasekera’s jeep. Sansoni quotes the Magistrate as saying that the hostile attitude of the gathering towards the ASP’s party resulting in damage to the vehicle and injuries to policemen rendered the use of teargas to disperse the hostile elements a necessary step.
இந்த நிலையில் இந்த கட்டுப்பாடில்லாத கும்பலின் சட்டவிரோத செயல்பாடுகளை  நிறுத்துவதற்கு போலீசார் மேலே தெரிந்த மின்சார கம்பிகளை சுட்டு விழுத்தினார்கள்  
இந்த கூட்டத்தை பார்த்து அந்த போலீசார் பயந்திருக்க வாய்ப்புள்ளது 
அந்த பதற்றத்தில் கூட மின்சார கம்பி மீது சுட்டிருக்கலாம் 
ஏனெனில் இந்த மின்சார கம்பிகள் ஜீப்பின் மீது விழுந்திருந்தால் அதில் போலீசார் கூட இறந்திருக்க வாய்ப்புள்ளது.
அப்படி இருந்தும் இந்த முடிவுக்கு போலீசார் வந்தமைக்கு ஒரு நியாயமான காரணம் இருப்பதை ஊகிக்க முடியும்.
இறுதியில் மின்சாரம் தாக்கி 9 பேர் உயிரிழந்தார்கள் 
அவர்களின் இழப்பை வைத்து  1977 தேர்தலை தமிழர் விடுதலை கூட்டணி சந்தித்து வழக்கம் போல பெருவெற்றி பெற்றது 
இப்படிப்பட்ட  நயவஞ்சக வெற்றிகளின் மொத்த விளைச்சல்தான் முள்ளிவாய்க்காலில் விளைந்தது என்றால் மிகையல்ல 
இந்த சம்பவத்திற்கும் திரு அல்பிரட் துரையப்பாவுக்கும் அணுவளவு தொடர்பும் கிடையாது 
ஆனால் மேடைக்கு மேடை தமிழர் விடுதலை கூட்டணியினர்  அல்பிரட் துரையப்பாதான் அந்த 9 தமிழர்களையும் கொன்றார் என்று இன்றுவரை  பொய் கூறித்திரிகின்றனர் 
வாக்குறுதியை மீறி ஜனார்தனனை மேடையேற்றியது அமிர்தலிங்கம் கும்பல்  

May be an image of one or more people
dr.gopalapillai mahadeva


அரசுக்கு பொறுப்பு கூறவேண்டிய நிலையில் இருந்த கோபாலபிள்ளை மகாதேவா போலீசாருக்கு தகவல் கூறி அழைத்தார்.
அவரின் அழைப்பை ஏற்றுவந்த போலீஸ் மீது அமிர்தலிங்கம் செல்வநாயகம் கும்பாலின் ரவுடிகள்  கற்களையும் செருப்புக்களையும் வீசி மிரட்டினார்கள்  
இதில் எங்கே திரு அல்பிரட் துரையப்பா வந்தார்?
இனியும் மீண்டும் பொய்களையே கூறிதிரிந்தால் 
மேலும் மேலும் அகழாய்வுகளை தொடர்வோம்!

No comments:

Post a Comment