![]() |
ராதா மனோகர் : ஜாதி வியாதிக்கு ஒரே ஒரு மருந்து சுயமரியாதை பிரசாரம்தான்.
இந்தியர்களும் இலங்கையர்களும் எங்கெல்லாம் புலம் பெயர்கிறார்களோ அங்கெல்லாம் ஜாதி வியாதியையும் ஓரளவு பரப்புகிறார்கள்.
ஜாதி என்றால் என்னவென்றே தெரியாத மேற்கு நாடுகளிலும் கூட இந்த ஜாதியை கொண்டு போய் சேர்க்கிறார்கள்.
குறிப்பாக அந்தந்த நாடுகளில் உருவாகும் அடுத்தடுத்த தலைமுறையினரிடமும் கூட இந்த வியாதியை கடத்துவதில் சிலர் இன்பம் காண்கிறார்கள்.
இன்னும் ஒரு படி மேலே சென்று அந்தந்த நாட்டு மண்ணின் மைந்தர்களுக்கே கூட இந்த ஜாதியை கடத்தும் முயற்சியும் நடக்கிறது
இந்த ஜாதி அபிமானிகளுக்கு சுயமரியாதை கோட்பாட்டில் நம்பிக்கை இல்லை