![]() |
ராதா மனோகர் : சோவியத் ஸ்டோர் ரூம்!
பிரான்ஸ் பிரிட்டன் ஹாலந்து கூட்டு தயாரிப்பான டெத் ஆப் ஸ்டாலின் திரைப்படம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் வெளியானது.
லா மோர்த் து ஸ்டாலின் la mort de staline என்ற பிரெஞ்சு வரலாற்று நாவல் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
சோவியத் அதிபர் ஸ்டாலினின் Joseph Stalin மறைவும் அதற்கு பின்பு எப்படி குருஷேவ் Nikita Khrushchev பதவிக்கு வந்தார்.
அதுவும் சர்வ வல்லமை பொருந்திய இரகசிய படை தலைவன் பெரியா NKVD head Lavrentiy Beria ஒரு புறம்
ஸ்டாலினுக்கு எல்லா விதத்திலும் இரண்டாவது இடத்தில் இருந்த மலங்கோவ் Deputy Chairman Georgy Malenkov போன்றவர்களையும் மெதுவாக ஒதுக்கி தள்ளிவிட்டு மேலே வருவது என்பது திகைப்பையும் திகிலையும் ஊட்டும் சம்பவமாகும்.
![]() |
ரேசர் பிளேட்டின் மீது நடப்பது போன்ற சாகசம் அது.
கொஞ்சம் தவறினாலும் தலை போய்விடும்
அப்படித்தான் குருஷேவ் அதிபர் பதவியை நோக்கி மேலே நடந்து வரும்போதே பெரியா இதர கூட்டாளிகளால் போட்டு தள்ளப்பட்டார்
அவரோடு அதுவரை கூட இருந்து (ஒரு சமாந்திர அதிகார பீடத்தின்) சோவியத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருந்தவர்களும் போட்டு தள்ளப்பட்டார்கள்.
எந்த வித தயவு தாட்சண்யமும் இல்லாமல் தெரு நாய்களை தேடிப்பிடித்து சுட்டு தள்ளுவதை போல சுட்டு தள்ளப்பட்டார்கள்.
எல்லோராலும் ஸ்டாலினின் இரண்டாம் இடம் என்று கருதப்பட்ட மெலன்கோவி Deputy Chairman Georgy Malenkov அங்குட்டும் இல்லாமல் இங்குட்டும் இல்லாமல் ஒரு வித அப்பாவி நடுநிலைமை வேஷம் கட்டி கொண்டிருந்ததால் தப்பி பிழைத்தார்.
சோவியத்தின் மைய அதிகார பீடத்தில் தனது ஸ்தானத்தை தக்க வைத்துக்கொண்ட மாலங்கோவால் Deputy Chairman Georgy Malenkov குருஷேவின் பரவலான அடிப்படையிலான செல்வாக்கின் பலத்தை புரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
ஒரு வகையில் அசாத்திய நம்பிக்கையோடு இருந்த நெடுஞ்செழியன் வகையிலான அரசியல்தான் மெலன்கோவினது அரசியல்.
ஏனைய அமைச்சர்கள் உச்ச பட்ச அதிகாரத்திற்கு ஆசைப்படவில்லை,
அல்லது எதற்கும் பயந்து பயந்து ஸ்டாலினுக்கு தலையாட்டுவதே தங்களின் அரசியல் கோட்பாடாக வரித்து விட்டிருந்தார்கள் எனலாம்.
அதிகார மட்டத்தில் ஸ்டாலினின் மகளான ஸ்வெட்லானாவுக்கும் Svetlana மகன் வாசிலி Vasily கூட கொஞ்சம் செல்வாக்கு இருந்தது.
மகன் வாசிலி குடிகாரன் ஒழுங்கான புத்தி இல்லாதவன் எனவே அவனை யாரும் பெரிதாக கணக்கெடுக்கவில்லை.
மக்கள் ஸ்வெட்லானாவுக்கு பெரியா Lavrentiy Beria மீது கொஞ்சம் நல்ல அபிப்பிராயம் இருந்தது,
ஆனால் குருஷேவின் திறமையால் அவரும் குருஷேவின் ஆதரவு நிலையை எடுத்தார்!
1 March 1953 ஆம் தேதி இரவு ரேடியோ மாஸ்கோவில் மொசார்ட் இசை Mozart's Piano Concerto No. 23 ஒலிபரப்பாகைக்கொண்டு இருக்கிறது.
அப்போது ஸ்டாலினின் டெலிபோன் அந்த நிலையத்திற்கு வருகிறது.
அவர் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும் மொசார்ட் இசையின் இசைத்தட்டை கொண்டுவருமாறு கேட்கிறார்.
அந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்படவில்லை .
இந்த உண்மையை கூற பயந்த போய் மீண்டும் அந்த நிகழ்சியை அவசரம் அவசரமாக பதிவு செய்கிறார்கள்.
முதலில் நிகச்சியை நடத்திய கண்டக்டர் போய்விட்டார். பியானோ வாசித்த யூதினாவோ Pianist Maria Yudina சர்வாதிகாரி ஸ்டாலினுக்காக நான் வாசிக்க மாட்டேன் என்று தகராறு செய்கிறார்.
யூதினாவுக்கு லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிக்கிறார் ரேடியோகாரர்.
ஸ்டாலினின் Kuntsevo Dacha. வீட்டில் வழக்கமாக கூடும் நான்கைந்து அமைச்சர்கள் குடித்து விட்டு திரைப்படங்கள் பார்த்து ரசிப்பது வழக்கம்.
அந்த நாளும் வழக்கம் போல குடித்து விட்டு வெளிநாடு அமைச்சர் மோலோட்டவ் Foreign Minister Vyacheslav Molotov வெளியேறினார்.
மொலோடேவ் வெளியே சென்றபின் அவரை பற்றி பெரியா குருஷேவிடம் அவர்தான் அண்மையில் நடந்த சதி முயற்சிகளின் பின்னால் நிற்கிறார் என்று மெதுவாக கூறினார்.
இப்படியாக இவர்களின் பதவி போட்டிகளும் கழுத்தறுப்புக்களும் நடந்து கொண்டிருந்தன.
மறுபுறத்தில் குடி கும்மாளம் எல்லாம் முடிந்து அவரவர்கள் ஸ்டாலினின் டாச்சா மாளிகையை Kuntsevo Dacha விட்டு வெளியேறினார்கள்.
இவர்கள் சென்ற சில நேரங்களில் ஒரு ராணுவ வீரன் ஸ்டாலின் கேட்ட மொசார்ட் இசைத்தட்டை கொண்டு வந்து ஸ்டாலினிடம் கொடுக்கிறார்
அதை வாங்கிய ஸ்டாலின் மெதுவாக கிராமபோனில் வைத்து அதன் இசையை கேட்டு கொண்டே கீழே விழுந்திருந்த ஒரு காகிதத்தை எடுத்து படிக்கிறார்
அது பியானிஸ்ட் யுதீனா Pianist Maria Yudina ஸ்டாலினுக்கு எழுதிய சிறு குறிப்பு
அதில் ஸ்டாலின் மீது கொஞ்சம் கடுமையான சொற்களை எறிந்து விட்டு அவரின் மரணத்தை வரவேற்பது போல எழுதப்பட்டிருந்தது .
இதை வாசித்ததும் கொஞ்சம் வாய்விட்டு சிரிக்கிறார் ஸ்டாலின்
அந்த சிரிப்போடு நெஞ்சில் ஏதோ அடைத்து கொள்வது போல் துடிக்கிறார் அப்படியே மயங்கி விழுந்து விடுகிறார்.
யூதீனாவின் குறிப்பில் இருந்த கடுமையான சொற்கள் மிக பலவீனமான நிலையில் இருந்த ஸ்டாலினுக்கு ஒரு இடி போன்ற அடியை கொடுத்திருக்க கூடும். ஒரு butterfly effect according to chaos theory என்று கூட கூறலாம் அல்லவா?
தலையில் நரம்பு வெடித்து இரத்த cerebral haemorrhage கசிவு !
ஸ்டாலின் விழும் சத்தம் கேட்டும் வாயிலில் காவலுக்கு நின்ற வீரர்கள் உள்ளே செல்ல வில்லை அந்த அளவு பயம்.
பயத்தினால் கட்டி எழுப்பப்பட்ட ராச்சியம் அல்லவா? உதவி செய்ய ஓடிப்போனாலும் கூட சில வேளைகளில் மரண தண்டனையையே பரிசாக கிடைக்கும் என்ற நிலையில்தான் ஸ்டாலின் + பெரியாக்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
இதன் பின்புதான் கதையே ஆரம்பிக்கிறது.
ஸ்டாலின் மரண படுக்கையில் நினைவற்று கிடக்கிறார்.
ஸ்டாலினின் இடத்திற்கு இயல்பாகவே தான் வருவேன் என்ற அசாத்திய நம்பிக்கையில் உலா வருகிறார் மலங்கோவ்
எல்லையற்ற பேராசையும் நரி தந்திரமும் நிரம்ப பெற்ற NKVD ரகசிய படை தலைவர் பெரியா மறுபுறம் ஏனைய அமைச்சர்களை கொஞ்சம் மிரட்டியும் நாசூக்காக ஆசை வார்த்தைகள் கூறியும் ஸ்டாலினின் இடத்திற்கு தன்னை உயர்த்தி கொள்ள முயற்சிக்கிறார்.
பெரியா மூன்று தசாப்தங்களாக எல்லா அதிகார மையங்களையும் வேவு பார்த்து எல்லோரினதும் கடும் கோபத்தை வாங்கி இருந்தார்
இன்னொரு புறத்தில் அமைதியாக தனக்கு சாதகமாக கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய உறுப்பினர்களை தன் பக்கம் திரும்புவதில் வெற்றியை நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தார் நிகிடா குருஷேவ்.
மாஸ்க்கோவை சுற்றி உள்ள ராணுவ காவல் நிலைகளை பெரியாவின் ரகசிய பாதுகாப்பு படை பொறுப்பில் எடுப்பதற்கு ஆணை பிறப்பித்தார் பெரியா
குருஷேவ் பெரியாவின் இந்த ஆணையை மீறி அவர்களை தடுத்தார் .
இதில் 1500 பேர்வரை கொல்லப்பட்டதாக ஒரு செய்தி கூறுகிறது.
பெரியா ராணுவ காவல் நிலையங்களை தனது கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சித்ததால் கடும் கோபத்தில் இருந்த சோவியத் பிரதம ராணுவ தளபதி Marshal Georgy Zhukov agrees to support Khrushchev மார்ஷல் கிரெகோரி ஸுக்கோவ் குருஷேவுக்கு தனது ஆதரவை வழங்கினார்;
இந்த காட்சி மிகவும் ரசிக்க கூடிய விதமாக படமாக்க பட்டிருக்கிறது.
இந்த ராணுவ தளபதி தனது குளிர் கோட்டை கழற்றி தோள்களை கொஞ்சம் குலுக்கு நெஞ்சை நிமிர்த்தி நிற்பார். அவர் நிற்கும் தோரணையே இனி என்ன நடக்கும் என்பதற்கு கட்டியம் கூறுவது போல் இருக்கும்.
இதன் பின் பெரியாவை கைது செய்து ராணுவ தளபதிகள் முன்பாக குருசேவ் குற்றப்பத்திரிகை வாசிப்பார்,
எல்லா ராணுவ தளபதிகளும் பெரியாவின் கடந்த கால கொடுமைகள் உரத்த குரலில் கூறி மரண தண்டனை விதிப்பார்கள்
இந்த ராணுவ தளபதிகள் உரத்து கோபத்தில் கூறுவதை விளங்கி கொள்வது மிகவும் சிரமும் அந்த அளவுக்கு பலரும் ஒரே நேரத்தில் பல விடயங்களை கூறினார்கள்
அதுதான் Lavrentiy Beria பெரியாவின் உண்மையான வரலாறு போல இருக்கும்!
தி டெத் ஆப் ஸ்டாலின் என்ற படத்தின் முழு கதையையும் ஒரு கட்டுரையில் கூறுவது முடியாத விடயம்.
இந்த படத்தின் பல விடயங்கள் எனக்கு சரியாக புரியவில்லை.
உலகின் பெரும் பான்மை மக்களால் ஒரு புனித தேசமாக கருதப்பட்ட சோவியத் சோசலிச குடியரசின் ஆட்சி முறை இவ்வளவு குளறுபடிகள் நிறைந்ததாக இருந்திருக்கிறது என்பது பலருக்கும் அதிர்ச்சி அளிக்க கூடும்
அதிலும் அதிபர் ஜோசெப் ஸ்டாலின் ஒரு புனித மீட்பராகவே பலராலும் கருதப்பட்டவர்
அவர் எந்த நாளும் மாலை வேளைகளில் நண்பர்களோடு குடித்து சினிமா படங்களை பார்த்து கொண்டு ஜாலியாக வாழ்ந்திருக்கிறார் என்று கனவில் கூட கருத முடியாத மக்கள் ஏராளம் உள்ளனர்.
அவரின் பிற்காலம் என்பது Lavrentiy Beria பெரியாவின் ஆட்சி காலமாகவே இருந்திருக்கிறது என்பது பலராலும் இப்போது கூட நம்புவதற்கு சிரமாக இருக்கும் என்றெண்ணுகிறேன்!
(நம்ம ஊர் பொட்டம்மானை விட பயங்கரமாக)


No comments:
Post a Comment