Saturday, November 22, 2025

இந்திய வம்சாவளி மக்களின் இலங்கை குடியுரிமை - வரலாற்று பொய்கள் கட்டமைக்கப்படுகிறது.

Prime Minster Jawaharlal Nehur   - Prime Minister D.S.Senanayaka
 ராதா மனோகர்
: இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் இலங்கை குடியுரிமை  பற்றி இந்த நிமிடம் வரை ஏராளமான வரலாற்று பொய்கள் கட்டமைக்கப்படுகிறது.
அதில் கவனிக்க வேண்டிய சில விடயங்களை பற்றி இப்போது பாப்போம்.
இலங்கை இந்தியா பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் பிரித்தானியாவிடம் இருந்து ஏறக்குறைய சமகாலத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகளாகும்.
இந்த மூன்று நாடுகளின் பல பிரச்சனைகள் பெரிதும் பொதுவானவை.
அந்த பிரச்சனைகள் எப்படி எதிர்கொள்ள பட்டன என்பது ஆய்வுக்கு உரியது.
இந்தியாவும் பாகிஸ்தானும் ( பங்களாதேஷ் உள்ளிட்ட) ஒரு போர்முனையில் பிரியவேண்டிய சூழ்நிலை உருவானது.
இரு பகுதி எல்லைகளும் பிரிக்கப்பட்ட போது இரத்த ஆறு ஓடியது.
மேற்கு பாகிஸ்தான்  எல்லையிலும் கிழக்கு பாகிஸ்தான்  எல்லையிலும் ஒரு வரை ஒருவர் வெட்டி கொன்றார்கள்.
இதில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது 
அண்ணளவாக  இரண்டு கோடி மக்கள் இடம்பெயர்ந்ததாக கூறப்படுகிறது..
கோடிக்கணக்கான குடும்பங்கள் ஈவு இரக்கம் இல்லமால் நிரந்தரமாக பிரிக்கப்பட்டன.
பாகிஸ்தான் பக்கம் தற்செயலாக சென்றவர்கள் அங்கேயே தங்கவேண்டி ஏற்பட்டது 
இந்தியா பக்கம் வந்தார்கள் இங்கேயே தங்கவேண்டி ஏற்பட்டது.
பெரிய மனித பேரவலம் நிகழ்ந்தது.
இந்த சூழ்நிலையில் இலங்கை சுதந்திரம் அடைந்தது.
அப்போது இலட்சக்கணக்கான மக்கள் இலங்கையில் தங்கி இருந்தார்கள்  
வெறும் தேயிலை இறப்பர் தோட்டங்களில் மட்டும்தான் இந்திய வம்சாவளி மக்கள் இருந்தார்கள் என்பதல்ல.
குறிப்பாக கொழும்பு துறைமுகம் கொழும்பு கண்டி போன்ற பெருநகரங்களில் இலட்சக்கணக்கான இந்திய வம்சாவளி மக்கள்  தங்கி இருந்தார்கள் 
பலர் சில ஆண்டுகள் இலங்கையில் வந்து பலவிதமான தொழில்களும் வியாபாரங்களாகும் செய்தார்கள்.
இவர்களில் பலரும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அவ்வப்போது வருகை தந்து சில காலம் இருந்து விட்டு மீண்டும் சென்று விடுவார்கள்.
குறிப்பாக 1940 ஆம் ஆண்டுக்கு பின்பு இலங்கைக்கு வரும் இந்திய வம்சாவளி மக்களின் தொகை அதிகமாக இருந்தது.
1946 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 60000 அறுபதினாயிரம் இந்தியர்கள் இலங்கையில் குடியேறி உள்ளார்கள்
ஒரு வருடத்தில் இலங்கையில் உள்ள இந்திய மக்கள் தொகை சுமார் 60000 ஆக  அதிகரித்துள்ளது!
 the indian population of Ceylon has increased by nearly 60000 in one year!
according to preliminary report on the vital statistic issued by  Mr.Davidson,
acting registrar general and published in the government gazette of juin 27th (page 1029)
Total estimation of that population on December 31- 1946  (excluding military and Shipping population) was 6784000 as against a population 6606000 on December 31 st 1945,
இந்த நிலையில் இவர்களின் குடியுரிமை பிரச்னையை இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் இலங்கை பிரதமர் டி எஸ் சேனநாயகவும் மிகவும் புரிந்துணர்வு அடிப்படையில் தீர்ப்பதில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்தனர்.
என்ன காரணம் கொண்டும் இலங்கை இந்திய குடியுரிமை பிரச்சனை இன்னொரு இந்திய பாகிஸ்தானிய குடியுரிமை பிரச்சனை போல் ஆகிவிட கூடாது என்பதே  இரு அரசுகளின் தீர்மானமாக இருந்தது.
இருபகுதிகளிலும் பல விட்டு கொடுப்புக்கள் இருந்தன.
உதாரணமாக ஒரு சிறு விடயத்தை இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்கும் எண்ணுகிறேன்.
இலங்கை சிங்கள மக்களுக்கு தமிழ்நாட்டின்  மக்கள் தொகை எப்ப்போதும் ஒரு அச்சுறுத்தலை தந்து கொண்டிருப்பது  எல்லோரும் அறிந்ததே.
அந்த பயமானது  சைவர்களின் பௌத்த சமண கழுவேற்றம் காரணமானது என்றும் கூறிக்கொள்ளலாம்.
இந்தியாவின் தூதராக ஒரு போதும் தமிழ் மொழி தெரிந்தவரை நியமிக்க கூடாது என்று இலங்கை இந்தியாவை  வேண்டிக்கொண்டது. 
இதை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு இப்பொழுது வரை இலங்கைக்கு தமிழ் தெரியாத தூதவர்களையே அனுப்புகிறது.
இலங்கை சுதந்திரம் அடைந்த போது இலங்கையில் உள்ள இந்திய  மற்றும் பாகிஸ்தானிய தொழிலாளர்கள் மற்றும்  பயணிகள் தற்காலிகமாக தங்கி இருப்பவர்களை பற்றி கணக்கெடுக்கும் திட்டத்தை அமுல்படுத்த விழைந்தனர்.
சுதந்திர இலங்கையின் முதல் தேர்தல் அந்த நேரத்தில் இருந்த அத்தனை பேரும் வாக்களிக்கலாம் என்று அறிவித்தது.
புதிதாக சுதந்திரம் அடைந்த இலங்கையில்  புதிய அரசு உருவான பின்புதான் இது பற்றி தீர்க்கமாக முடிவுகளை எடுக்க முடியும்.
அதன் பின்புதான் இலங்கையில் யார் யார்  இலங்கையின் குடிமக்கள் என்று தீர்மானிப்பதற்கு உரிய குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்தது இலங்கை அரசு.
இந்தியா பாகிஸ்தானில் இருந்து மட்டுமல்ல வேறு எந்த நாட்டில் இருந்து வந்தவர்களும் தேர்தலில் வாக்கு போட்டிருந்தாலும் அவர்கள் இலங்கை குடிமக்கள் இல்லை என்பதுதான் அந்த சட்டம்.
உதாரணமாக சுதந்திர நாளன்றே இலங்கைக்கு ஒருவர் வந்திருந்தாலும் அவரையும் இலங்கை குடி என்று கூற முடியாது அல்லவா?
The Ceylon Citizenship Act No. 18 of 1948 
அதிலும் குறிப்பாக 1940 ஆண்டுக்கு பின்பு இலங்கைக்கு வியாபார நோக்கமா வருவோர் தொகை மிக மிக அதிகம்.
அவர்கள் இலங்கையில் வியாபாரம் செய்து வரும் இலாபத்தை இந்தியாவில்தான் முதலீடு செய்கிறார்கள் என்று சிங்கள தலைவர்களால் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாகினர்.
இவர்கள் தங்கள் நாடு எது என்று  முடிவு எடுக்கவேண்டும் என்று சிங்கள தலைவர்கள்  கடுமையாக பிரசாரம் செய்தார்கள்.
இந்த பின்னணியில்தான் குடியுரிமை சட்டத்தை நோக்கவேண்டும்.
எல்லா வெளி நாட்டவர்களின்  குடியுரிமையையும் நீக்கிய இலங்கை அரசு,
 யார் யாருக்கு குடியுரிமை கொடுக்கலாம் என்று  இன்னொரு சட்டத்தை கொண்டுவந்தது.
அதுதான் இந்திய பாகிஸ்தானிய குடியுரிமை சட்டம்  
அது ஒரு பொன்னான வாய்ப்பை அளித்தது. 
Indian and Pakistani Residents (Citizenship) Act No.3 of 1949 
இந்த புதிய சட்டத்தின் படி ஒருவர் ஏழாண்டுகள் இலங்கையில் இருந்தால் அவர் குடியுரிமை பெறமுடியும்.
அதில் இந்த ஏழாண்டுகளில் ஒருவருடம் இலங்கையை விட்டு சென்றுவிட்டு மீண்டும் வந்தாலும் அந்த கால அளவு கழிக்கப்பட மாட்டாது 
மேலும் அவர்கள் தாங்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானை தாய்நாடாக கொண்டவர்கள் என்பதையும் உறுதி படுத்த வேண்டும்.
இதற்கான காலக்கெடுவாக இரண்டு ஆண்டுகள் அறிவிக்கப்பட்டது.
இந்த இரண்டு சட்டங்களும் ஜவஹர்லால் நேரு டி எஸ் சேனநாயக்க ஆகிய இருவரின் ஒருமித்த கருத்தின் படி தான்  அமுல்படுத்த பட்டது.
இந்த சட்டத்தின்படி இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளியில் சுமார் 75 வீதமானவர்கள் இலங்கை குடியுரிமையை பெறுவார்கள் என்று இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு அறிவித்தார்.
இந்த இடத்திலதான் இந்த மக்களின் விதி விளையாடியது என்று கூறவேண்டும்.
இலங்கை சிங்கள இடதுசாரிகளும் அவர்களின் பின்னால் சென்ற மலையக தலைவர்களும் மட்டுமல்ல SJV செல்வநாயகம் போன்ற  தமிழ் தலைவர்களும் இந்த சட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார்கள்.
அதாவது குடியுரிமைக்கு விண்ணப்பிக்க போவதில்லை என்று அறிவித்தனர்.
இந்திய பிரதமர் நேருவையும் இவர்கள் மதிக்கவில்லை . இலங்கை பிரதமர் டி எஸ் சேனநாயக்கவையும் மதிக்கவில்லை . 
இடதுசாரிகளை மட்டுமே மதித்தார்கள் அவர்கள் சொல்லே கேட்டார்கள் 
மறுபுறத்தில் எஸ்ஜேவி செல்வநாயகமோ பொன்னம்பலத்தின் மீது இந்த பிரச்சனையை போட்டு தன் அரசியலை மீள கட்டி எழுப்ப கூடிய வாய்ப்பை இதில் கண்டு கொண்டார் 
சிங்கள இடதுசாரிகளின் மிகப்பெரிய வாக்கு வங்கியாக இந்திய வம்சாவளி மக்களே இருந்தனர்.
இலங்கையின் முதல் தேர்தலில் மொத்தம் 95 நாடாளுமன்ற உறுப்பினர்களில்  ஏழு தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
அது மட்டுமல்லாமல் சிங்கள இடதுசாரி தலைவர்களில் பெரும்பாலோர் இந்திய வம்சாவளி வாக்குகளினால்தான் வெற்றி பெற்றிருந்தனர்,
சுமார் 20 தொகுதிகளில் இவர்களின் வாக்கு பலம் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடியதாக இருந்தது.
இந்த நிலையில் இடதுசாரிகள் நிச்சயம் ஆட்சியை அமைத்துவிடுவோம் என்று நம்பினார்கள்.
இப்படிப்பட்ட ஒரு நிலையில்,
இவர்களின் சொல் கேட்டு மக்களும் விண்ணப்பிக்காமல் சுமார் ஒன்றரை வருடங்கள் காலத்தை வீணடித்தனர்.
இறுதியாக ஆறு மாதங்களே இருக்கும் போதுதான் இவர்களுக்கு நிலைமை புரிந்தது.
அதற்கிடையில் கொழும்பு வாழ் இந்திய பா

கிஸ்தானிய முதலாளிகளும் கொஞ்சமாவது சிந்திக்கும் திறன் உள்ளவர்களும் உடனே குடியுரிமைக்கு விண்ணப்பித்து பெற்று கொண்டார்கள்.
பொருளாதார வசதி அற்ற அப்பாவி மக்கள்தான் இந்த முட்டாள் தலைவர்களின் பின்னால் சென்று சிக்கலுக்கு ஆளானார்கள்.
இதன் பின்பு ஏராளமான சம்பவங்கள் நடந்தேறின!
இன்று இலங்கையில் உள்ள சகல மக்களுக்கும் குடியுரிமை உண்டு.
குறிப்பாக 1989 இற்கு பின்பு இலங்கையில் எல்லோருக்கும் குடியுரிமை உண்டு.
ஜேயார் ஜெயவர்த்தன அரசு இந்த பிரச்சனையை முடித்து வைத்தது.
ஆனால் இன்றும் கூட சுமார் ஒரு இலட்சம் இலங்கையர்கள் இந்தியாவில் குடியுரிமை அற்றவர்களாக உளளர்கள்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்வேறு காலக்கட்டங்களில் மக்கள் அங்கும் இங்கும் குடி பெயர்வது  நிகழ்ந்தது/
இது பற்றி பிறிதொரு பதிவில் விபரமாக எழுதி உள்ளேன்!


 


 

No comments:

Post a Comment