![]() |
![]() |
ராதா மனோகர் : தமிழ் தேசியத்தை தோண்ட தோண்ட கிடைப்பது எல்லாம் சுயநல அடையாள வரலாற்று வடுக்கள் மட்டுமே!
இன்றுவரை
புகழ் பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது தமிழ் தேசியத்தின் அடுத்த
கட்ட பாய்ச்சல் என்றுதான் பலரும் நம்பி கொண்டிருக்கிறார்கள்.
அது உண்மையில் தேர்தல்களில் தோற்றுப்போன ஏழு தலைவர்களின் நாடாளுமன்ற மீள் வரவுக்கானது மட்டுமே!
அன்று வரை பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒரு போதும் ஒன்றாக சேராது என்று சொல்லி வந்த எஸ்ஜேவி.செல்வநாயகம்,
திரு ஜி ஜி பொன்னம்பலத்தின் வீடு தேடி சென்று ஒற்றுமையை வலியுறுத்தியதாக கதை அளப்பார்கள்!
வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது தமிழரின் உரிமை போராட்டத்தின் மைல் கல் என்று நம்பினார்கள் பலர்!
காலா காலமாக ஜி ஜி பொன்னம்பலம் ஒற்றுமையாக ஒரு வட்ட மேசை மாநாடு கூடி பேசுவோம் என்று அழைத்த போதெல்லாம் பச்சை மண் சுட்ட மண் பஜனை பாடிய அதே செல்வநாயகம் 1970 தேர்தலில் அடிவாங்கிய பின்பு ஜி ஜியின் காலில் போய் விழுந்த கதைதான் அந்த கொட்டைப்பாக்கு கதை.
இது ஒன்றும் புதிய கதை கூட இல்லை.

1964 ஆம் ஆண்டே இந்த பச்சை மண் சுட்ட மண் காங்கிரஸ் காலில் போய் விழுந்த கதை பற்றி கொஞ்சம் பாப்போம்.
அதுவும் எதற்காக?
யாழ்ப்பாண எம்பி திரு அல்பிரட் தங்கராஜா துரையப்பாவை மீண்டும் மேயராக வர கூடாது என்ற ஒற்றை நோக்கத்திக்காக ஜி ஜியின் காங்கிரசோடு கைகோர்த்து யாழ்மாநகர சபையை கைப்பற்றினார்கள்
அதற்காக தமிழரசு காங்கிரஸ் கூட்டணியை அமைத்தார்கள்!
இவர்களின் கொள்கை கோட்பாடு எல்லாம் திரு அல்பிரட் துரையப்பா என்ற மனிதருக்கு முன்னால் வெறும் தூசியாக பறந்து போய்விட்டது!
அதுவும் தனி சிங்கள மொழியில் வந்த வர்த்தமானி அறிவிப்பையே ஏற்று சத்திய பிரமாணம் செய்தார்கள்
அந்த அறிவிப்பு தமிழில் அல்லது குறைந்த பட்சம் ஆங்கிலத்திலாவது இருக்க வேண்டும்.
தனி சிங்கள மொழி அறிவிப்பை தமிழரசு கட்சி ஏற்றுக்கொண்டது ஏன் என்று காரசாரமாக திரு அல்பிரட் துரையப்பா அவர்கள் நீண்ட உரையை அன்று மாநகர சபையில் நிகழ்த்தி இருந்தார்.
வரலாறு கொஞ்சம் காலம் அமைதியாக இருந்தாலும் ஒரு நாள் அது வெளியாகியே தீரும்!
திரு அல்பிரட் துரையப்பாவின் நேர்மையான அரசியலகுக்கும் பொது தொண்டிற்கும் முன்பாக ,
எஸ்ஜேவி செல்வநாயகத்தின் பச்சை மண் சுட்ட மண் எல்லாம் சுட்டு
பொசுங்கிய மண்ணாகி போனது! .
No comments:
Post a Comment