ராதா மனோகர் : அமரர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவான இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகள் பிரேமதாச கூட்டணியிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போன வரலாறு பற்றி இன்னும் போதிய புரிதல் பொதுவெளிக்கு இல்லை.
அதன் முதலமைச்சர் திரு வரதராஜர் பெருமாள் தரப்பினரும் இதில் குற்றவாளிகள்தான்
அன்று ஜேயார் அரசு வரதராஜ பெருமாளோடு தேர்தல் கூட்டணி வைக்க பெரும்பாடு பட்டார்கள்
அதை உதறி தள்ளியதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாண சபையை கருவிலேயே கொன்றவர் திரு வரதராஜ பெருமாள்தான்
மறுபுறத்தில் இதன் காரணமாகவே வரதர்ஜா பெருமாள் கோஷ்டிக்கு கலைஞர் மீது ஒரு ஏமாற்றம் இருப்பதாக கதை அளந்தார்கள்.
அதாவது இதற்கும் கலைஞர்தான் காரணமாம்.
கலைஞர் அந்த மாகாண அரசை காப்பாற்ற தவறி விட்டார் என்று இன்றும் கூட பலரும் புறங்கூறி திரிகிறார்கள்.
எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்யவேண்டிய கடமை இருக்கிறது.
அதை ஆய்வு செய்ய பலரும் தயங்குவதற்கு சில காரணங்களும் உண்டு
குறிப்பாக வை கோபாலசாமி அவர்கள் அன்றைய காலக்கட்டங்களில் முழுக்க முழுக்க ஒரு புலித்தலைவராகவே செயல்பட்டிருந்தார்
இந்த வைகோவின் புலி அவதாரத்தை பற்றி இன்று பலரும் பேசுவதை தவிர்க்கிறார்கள்
ஏனெனில் அவர் தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறார் .
எனவே இவரின் பழைய புலி அவதார உண்மைகளை பேசினால் அவர் மனம் புண்படக்கூடும் . அவரோ தற்போது தனது கடந்த கால தவறுகளை ஓரளவு உணர்ந்துவிட்டார் என்றும் கருத படுகிறது
ஏனெனில் புலிகளின் தொடர்புகளை முள்ளிவாய்க்கால் சம்பவங்களின்போது அறவே கைவிட்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது
திரு வைகோ. திரு நெடுமாறன் . ஆசிரியர் வீரமணி . அண்ணன் குளத்தூர் மணி போன்றவர்களின் மனம் புண்படும் என்பதற்காக வரலாறு முழுவதும் திமுக வீண் பழி சுமக்கவேண்டுமா?
கலைஞர் மீது சேறு வாரி வீசுவதையே தங்கள் வரலாறாக கொண்டவர்களுக்கு இனியும் வாய்ப்பு அழிப்பது வரலாற்றுக்கு செய்யும் துரோகம் ஆகாதா?
இந்த கேள்விகளுக்கு பதில் கூறும் முகமாக கடந்த கால சம்பவங்களின் சரியான வரலாற்றை இனியாவது மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டியது ஒவ்வொரு திமுக தொண்டர்களினதும் கலைஞர் பற்றி அறிந்தவர்களினதும் மிக பெரிய பொறுப்பாகும்!
திமுகவுக்குள் ஊடுருவிய புலிகள்! (பிரபல பத்திரிகையாளர் பேராசிரியர் காதர் இஸ்மாயிலுக்கு 1987 இல் யாழ்ப்பாண பல்கலை கழக வளாகத்திற்குள் புலிகளின் மாத்தையா மகேந்திர ராஜா கலைஞர் பற்றி கூறியது.. சாட்சியம் பேராசிரியர் மனோரஞ்சன் செல்லையா அவர்களின் வாக்குமூலம் காணொளி )
திமுகவின் மாநிலங்கள் அவை எம்பியான வைகோ வை கோபாலசாமி 1989-ம் ஆண்டு, பிப்ரவரி 6-ம் தேதி கலைஞர் உடன்பட வேறு எவருக்கும் தகவல் தெரிவிக்காமல் ரகசிய படகில் இலங்கை சென்றார்
அங்கு புலிகளின் பிரபாகரனைச் சந்தித்துவிட்டு, அங்கிருந்தபடியே கலைஞருக்கு மன்னிப்பு கடிதத்தையும் எழுதினார். சுமார் 23 நாள்கள் கழித்து தமிழகம் வந்தார்
கலைஞர் முதல்வராக இருக்கும்போது சட்டவிரோதமாக திமுக எம்பியான வைகோ இலங்கை சென்றது திமுகவை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது
அப்போது மத்தியில் பிரதமராக திரு வி பி சிங் அவர்கள் இருந்தார் ( 2 December 1989 to 10 November 1990)
இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தின் முதலமைச்சராக திரு வரதராஜர் பெருமாள் 10 டிசம்பர் 1988 ஆண்டு பதவி ஏற்றார்
புலிகளும் பிரேமதாசாவும் கூட்டாக சேர்ந்த பின்பு இந்திய ராணுவம் அங்கிருப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு இந்த நடுவண் அரசு வந்திருந்தது
இலங்கையில் முதலும் கடைசியுமாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் காலம் 1 மார்ச் 1990 இல் முடிவுக்கு வந்தது ஆம் இந்திய அமைதிப்படை இத்தேதியில் முற்று முழுதாக இந்தியா திரும்பியது.
.
இக்கால கட்டங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புலிகளின் கொலைவெறி அளவு கணக்கில்லாமல் அரங்கேறியது . இதை கவனித்து கொண்டிருந்த கலைஞர் தமிழ்நாட்டில் அப்போது தங்கியிருந்த மாற்று இயக்கங்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டார்
புலிகளின் இந்த கொலை அரசியல் பற்றி சரியாக கணித்திருந்த கலைஞர் கொழும்பில் இருந்த ஈரோஸ் பாலகுமாரை சென்னைக்கு வருமாறு அழைத்திருந்தார்
1990 ஜூன் மாதம் 16 ஆம் நாள் ஈரோஸ் பாலகுமாரும் பஷீர் சேவு தாவூத்தும் இரவு ஒன்பது மணிக்கு முதல்வர் கலைஞரை அவரது கோபாலபுரத்து இல்லத்தில் சந்தித்தார்கள்
அவர்களிடம் முதல்வர் கலைஞர் : .
"பத்மநாபாவைக் கொல்லப் பார்க்கிறார்கள். நீங்கள் போய் அவரைச் சந்தித்து சென்னையில் இருக்கும் ஈ.பீ.ஆர். எல் எப் காரியாலயத்தை தற்காலிகமாக மூடிவிட்டு, அவரையும் அவரது உறுப்பினர்களையும் வேறு ஒரு மாநிலத்துக்குச் சென்று சிறிது காலம் தங்கியிருந்துவிட்டு பின்னர் தமிழ் நாட்டுக்கு வருமாறு நான் அறிவுறுத்துவதாக நாபாவிடம் கூறுங்கள்" என்று கூறினார்
இந்த சந்திப்பின்போது வழக்கமாக கலைஞரோடு கூடவே குறிப்பு எடுப்பதற்காக இருப்பவர் கூட இருக்கவில்லை .. மிக மிக ரகசியமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றது
யாரை நம்புவது என்ற என்ற சிக்கலான நிலைமையில் கலைஞர் அப்போது இருந்தார்
இச்சந்திப்பை அடுத்து ஈரோஸ் பாலகுமார் பத்மநாபாவிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அவசரமாக உங்களைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னார்.உடனே வாங்கோ அண்ணே என்று அழைத்தார் பத்மநாபவும் சில தோழர்களும் சென்னையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
17 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் பாலகுமாரும் பஷீர் சேவு தாவூத்தும் பத்மநாபாவையும் அவரது தோழர்களையும் சந்தித்து கலைஞரின் எச்சரிக்கையை தெரிவித்தனர்
இதன் பின்பு 18 ஆம் திகதி பாலகுமாரும் பஷீர் தாவூத்தும் கொழும்பு திரும்பினார்கள்
அடுத்த நாள் . 19 ஆம் திகதி பத்மநாபாவும் அவரோடு யோகாசங்கரி எம்பியும் ஏனைய 13 தோழர்களும் சென்னையில் பட்டப்பகலில் புலிகளால் சுட்டு கொல்லப்பட்டனர்
அதன் பின்பு ஜனவரி 1991-ல் திமுக ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது .. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆதரவில் சந்திரசேகர் பிரதமராக இருந்தார்
பின்பு மே 21 1991 இல் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி புலிகளால் கோரமாக படுகொலை செய்யப்பட்டார்
இந்த தொடர் சம்பவங்களின் பின்னணியில் புலிகளின் ஒரு அவுட் சோர்ஸ் கம்பனி ஏஜெண்டு போல வைகோ செயல்பட்டு வந்தார் என்பது ரகசியம் அல்ல
வைகோ மட்டுமல்ல நெடுமாறன் மற்றும் திராவிட இயக்கங்கள் பாமக திருமா போன்றவர்கள் புலிகளின் பக்கமாகவே நின்று நாளொரு பொய்யும் பொழுதொரு புலி புகழ் பாடலுமாக அரசியல் செய்து கொண்டிருந்தனர்
திமுகவின் கணிசமான இரண்டாம் மூன்றாம் மட்ட தலைவர்களும் ஏராளமான உறுப்பினர்களும் வைகோவின் தலைமையில் திமுகவை ஒரு புலி ஏஜெண்டு கட்சியாக மாற்றும் முயற்சியில் ஓரளவு வெளிப்படையாகவே நடந்து கொண்டனர்
புலிகளை பற்றிய பிரசாரம் அளவு கணக்கில்லாமல் இவர்களின் கூட்டங்களில் மாஸ் காட்டியது
திமுகவை கைப்பற்றும் நோக்கத்தை நோக்கி வெகு வேகமாக புலி ஆதரவு சக்திகள் முன்னேறின.
இந்த சூழலில் 1991ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி வைகோவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அந்த முடிவு கைவிடப்பட்டது
திமுகவில் எவ்வளவு தூரம் வைகோவின் புலி ஆதரவு அரசியல் வேலை செய்திருக்கிறது என்பது இங்கே கவனிக்க வேண்டிய விடயமாகும்.
முழுக்க முழுக்க புலிகளுக்காகவே தமிழ்நாட்டு அரசியலை மடைமாற்றவேண்டும் என்ற முனைப்போடு பலர் கடுமையாக வேலை செய்தார்கள்.
புலிகளின் காட் பாதர் எம்ஜியார் உயிரோடு இல்லை
எம்ஜியார் இல்லாத அதிமுகாவால் புலிகளுக்கு எந்த பிரயோசனமும் இல்லை
எனவே அவர்களின் அஜெண்டா முழுக்க முழுக்க திமுகவை சுற்றியே இருந்தது.
புலிகளின் சகோதர படுகொலைகளும் வரைமுறையற்ற தொடர் கொலைகளும் புலிகள் யார் என்பதை கலைஞருக்கு தெளிவாகவே தெளிவு படுத்தி இருந்தது
ஆனால் துரதிஷ்டவசமாக ஏராளமான திமுக தொண்டர்களும் தலைவர்களும் புலி பாசிசத்தில் மயங்கி இருந்தார்கள்
இந்த காலக்கட்டத்தில் 1993-ம் ஆண்டு, அக்டோபர் 3-ம் தேதி தமிழநாடு அரசின் தலைமைச் செயலாளர், தி.மு.க தலைவர் கலைஞருக்கு அனுப்பிய கடிதத்தில் ``வை.கோபால்சாமியின் அரசியல் ஆதாயத்துக்காக புலிகள் உங்களைக் கொலை செய்ய திட்டம் வைத்துள்ளனர்” என்ற உளவு துறையின் செய்தியை அனுப்பி இருந்தார்.
ஏற்கனவே அவர்களின் திட்டம் இதுதான் என்ற சந்தேகம் பல மட்டங்களிலும் இருந்தது. அவற்றை நிரூபிப்பது போல் அமைந்தது உளவு துறையின் குறிப்பு. .
(( 1987 இல் கலைஞரை ( மாத்தையா பயன்படுத்திய கெட்ட வார்த்தை கருணாநிதி --- யை) போட்டு தள்ளுவோம் என்று புலிகளின் அன்றைய பிரதி தலைவர் மாத்தையா பிரபல ஆங்கில எழுத்தாளரும் மினிசோட்டா பல்கலை கழக பேராசிரியருமான அண்மையில் மறைந்த திரு காதர் இஸ்மாயில் Qadri Ismail அவர்களுக்கு கூறியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
யாழ் பல்கலை கழக வளாகத்திற்குள் வைத்து இவர்களின் சந்திப்பு நடந்தது.
மாத்தையாவின் வார்த்தையை கேட்ட பேராசிரியர் காதர் இஸ்மாயில் முகம் பேயறைந்தது போல வெளியே வந்து இந்த செய்தியை பிரபல எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான திரு மனோரஞ்சன் அவர்களுக்கு கூறியுள்ளார்.
இந்த செய்தி வைகோ நெடுமாறன் திருமாவளவன் போன்றோர்க்கு நிச்சயமாக தெரிந்திருக்கும்
Qadri Ismail காதர் இஸ்மாயில்
திமுகவை கைப்பற்றி வைகோவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தங்களின் தளத்தை விஸ்தரிக்கும் நோக்கம் இதன் பின்னணியில் இருந்திருக்கும் ... )))
தி.மு.க-விலிருந்து வைகோ நீக்கப்பட்டார்,
தமிழ்நாடு முழுவதும் வைகோ - புலி ஆதரவு தி.மு.க தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக தொண்டர்களாக இடிமழை உதயன், நொச்சிப்பட்டி தண்டபாணி, கோவை மேலப்பளையம் ஜஹாங்கீர், காமராசபுரம் பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர் தீக்குளித்து இறந்தனர்.
வைகோவுக்கு ஆதரவாக 9 மாவட்டச் செயலாளர்களும், 400-கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் வெளியேறினார்கள் .
வைகோவோடு ஏராளமான மாவட்ட செயலர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் இருந்ததை காரணமாக காட்டி உதயசூரியன் சின்னம் தனது கட்சிக்கே வழங்கப்படவேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் கோரினார்
நீண்ட சர்ச்சைகளுக்கு பின்பு தேர்தல் ஆணையமானது கலைஞர் தலைமையிலான தி.மு.க தான் உண்மையான தி.மு.க என 3.5.1994 இல் தீர்ப்பு வழங்கியது
கழகத்திற்குள் கலைஞர் மேற்கொண்ட கடுமையான முயற்சியின் பயனாக அன்று உதயசூரியன் காப்பாற்றப்பட்டது
திமுகவை கைப்பற்றும் முயற்சியில் தோல்வி கண்ட வைகோ, 1994-ம் ஆண்டு, மே 6-ம் நாள் மதிமுக என்ற கட்சியை தொடங்கினார்!
No comments:
Post a Comment