Tuesday, March 4, 2025

சிங்களத்தில் சிலப்பதிகாரம் சிங்களத்தில் குண்டலகேசி! - திராவிட பௌத்தத்தில் (theravada) தமிழ் காப்பியங்கள் வாழ்கிறது!

 ராதா மனோகர் : சிங்கள சிறுவர்களின் குண்டலகேசி நாடகம்
குண்டலகேசியை தமிழர்கள் கூட மறந்து விட்டார்கள் என்று கருத வேண்டி இருக்கிறது.
கலைஞரின் மந்திரிகுமாரி திரைப்படம் குண்டலகேசி கதையை தழுவியதாக கருதப்படுகிறது.
ுண்டலகேசி தமிழ் காப்பியம் உ வே சாமிநாதையர் அவர்களிடம் இருந்ததாகவும் அது எங்கோ காணாமல் போய்விட்டதாகவும் கூறப்பட்டது


இது பற்றி ஆறுமுக நாவலரும் குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
குண்டலகேசியின் கதை சிங்கள மொழியில் இன்றும் உயிர்துடிப்போடு இருப்பது
வியக்க வைக்கிறது.
சிங்கள மொழியில் பல திராவிட இலக்கிய கருவூலங்கள் இன்றும் பாதுகாக்க படுகிறது.
பார்ப்பனர்களின் இடைச்செருகல்கள் மற்றும் மடை மாற்றல்களுக்கு இடம் கொடுக்காமல் பல ஏடுகள் சிங்கள மொழியின் தனித்துவத்தினால் இன்றும் உயிர்துடிப்போடு இருக்கிறது
குறிப்பாக பல பௌத்த செய்திகள் இன்றும் காப்பாற்றப்பட்ட்டிருப்பது சிங்கள மொழியின் வரலாற்று வகிபாகத்தை உணர்த்துகிறது!
சிலப்பதிகாரம் பற்றி தெரியாத எந்த சிங்களவர்களையும் காணமுடியாது!
குண்டலகேசி கூட பள்ளிக்கூட சிறுவர்களின் கலாச்சார நிகழ்வுகளில் இடம் பெறுகிறது!
அந்த  மக்கள் இன்னும் தங்களின் திராவிட  வரலாற்று விழுமியங்களை மறக்கவில்லை என்று கூறலாம்!</p>

 சிலப்பதிகாரம்

 

No comments:

Post a Comment