![]() |
ராதா மனோகர் : குழந்தைகளுக்கு படிப்பிப்பதோடு (குல) தொழிலையும் சொல்லியும் தரவேண்டுமாம்!
குல தொழிலில் என்ன வசை இருக்கிறது ?
1960 ஆம் ஆண்டு எஸ்ஜேவி செல்வநாயகத்தின் இலங்கை தமிழரசு கட்சி,
தமிழர் உரிமைக்காக மாபெரும் சத்தியா கிரக போராட்டம் நடத்தியதாக கூறப்படும்,
அந்த காலகட்டத்தில் தமிழரசு கட்சியின் சுதந்திரன் பத்திரிகையில் வந்த செய்தி இது!
அப்போது சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் பெயர் மகேஸ்வர சர்மா.
குலுக்க பட்டர்களின் அசல் வாரிசுகள் இவர்கள்
அழிந்து கொண்டிருக்கும் ஜாதியை அழியவிடாமால் பாதுகாப்பதற்கு குழந்தைகளுக்கு குலத்தொழிலை கற்பிப்பதுதான் ஒரே வழி என்று ராஜாஜி முன்னெடுத்து செருப்படிவாங்கியது வரலாறு!
அன்று ராஜாஜி முன்னெடுத்த குலத்தொழில் சதி முயற்சியை முறியடித்தது திராவிட இயக்கம்!
அதே அறுபதுகளில் கடல்கடந்து ராஜாஜியின் குலத்தொழில் சதியை இலங்கையில் அரகேற்ற துடித்தது இலங்கை தமிழரசு கட்சி!
தந்தை செல்வாவின் சொந்த பத்திரிகையான சுதந்திரனில் குலத்தொழிலை மகிமையை பற்றி தொடர்
கட்டுரைகள் எழுதி உள்ளார்கள்!
இவர்கள் யார்?
அன்று முதல் இன்றுவரை இந்த தமிழ் தேசியர்கள் பார்ப்பனிய வர்ணாசிரம கோட்பாடுகளின் ஏவல் பேய்களாகவே இயங்குகிறார்கள்!
இவர்களுக்கு திராவிடம் என்றாலே உடலெல்லாம் வேர்ப்பதன் காரணம் இதுதான்.
குலக்கல்வி மட்டுமல்ல,
இன்னும் எத்தனை ஆரிய பார்ப்பன அடக்குமுறைகள் இருக்கிறதோ அத்தனைக்கும் ஆசைப்படும் அரசியல்வாதிகள் இவர்கள்!
இவர்கள் போதிக்கும் வாழ்வியலில் குவிந்து கிடப்பது எல்லாம் வெறும் ஜாதிப்புழுக்கள்தான்
அதை மூடி மறைக்க தமிழ் தேசியம் போராட்டம் புரட்சி இடையிடையே முற்போக்கு வேற!
இவர்கள் எல்லோரும் திராவிடம் என்ற ஒற்றை புள்ளியில் ஒன்றாவார்கள்!
ஏன் தெர்யுமா? சுயமரியாதை கோட்பாடுதான் இவர்களின் ஒற்றை எதிரி!
No comments:
Post a Comment