Wednesday, November 19, 2025

திருகோணமலை புத்த சிலை - வழிபாட்டு தலமல்ல ..அது ஒரு உணவகம்

 ராதா மனோகர் :  இலங்கை ஏறக்குறைய 70 ஆண்டுகளாக இனவாத மதவாத ஜாதிவாத  சேற்றுக்குள் இருந்து மெதுவாக மேலெழுந்து வருகிறது!
இப்போது என்ன காரணம் கொண்டும் வெறுப்பு அரசியலை தூண்டி விடுவது சரியல்ல.
எல்லாவற்றிலும் மேலாக பௌத்தம் தமிழர்களின் மதமும்தான் சிங்கள மொழியும் தமிழர்களின் மொழிதான்.
அது பௌத்தத்தை பார்ப்பனர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ரகசிய மொழி,
பார்ப்பனர்கள் கடலை கடக்க கூடாது என்ற அந்த காலத்து வழக்கப்படி அவர்கள் இலங்கைக்கு வரவில்லை.
எனவே இலங்கையில் அவர்களால் ஆபத்து இல்லை. 
இந்த காரணத்தால்தான் அது ஓரளவு மக்கள் பேசும் மொழியாக பரிணாம வளர்ச்சி அடைந்தது .
மேலும் தமிழ் மொழியை சைவர்கள் கைப்பற்றி தமிழும் சைவமும் ஒன்று என்ற ரீதியில் மன்னர்களின் ஆதரவோடு அதை நடைமுறைப்படுத்தினர்.


அதனால்தான் தமிழர்களின் திருக்குறளையே எந்த காலத்திலும் சைவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.
கூறுமானவரை இருட்டடிப்பு செய்தார்கள்.
சிலப்பதிகாரம் போன்ற ஐம்பெரும் காப்பியங்கள் மக்களின் வாழ்வியலை பற்றி பேசியதால் அவற்றையும் இருட்டடிப்பு செய்தார்கள்.
அவை களப்பிரர்கள் காலத்தில்தான் வெளியே வந்தது என்பது மறக்க கூடாத ஒரு உண்மையாகும்.
இன்று தமிழர்களே அதிகம் கண்டு கொள்ளாமல் இருக்கும் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையும் சிங்கள மக்கள்  இன்றும் பள்ளிக்கூட  நாடங்களிலும்  இடம்பெறும்  அளவுக்கு அவை பிரபலமாக இருப்பது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல!
தமிழர்களின் ஐம்பெரும்  காப்பியங்கள் பௌத்தத்தையும் சமணத்தையும்  சார்ந்தவைதான் 
சைவத்தை சார்ந்து எந்த பெரும் இலக்கியம் இல்லை.
பௌத்தம் நமது மதம்தான் 
சிங்களமும் நமது மொழிதான் 
அவர்களும் திராவிடர்கள்தான்

No comments:

Post a Comment