Thursday, October 30, 2025

ஐந்து இலட்சம் காணி உறுதி மூலபத்திரங்களை அள்ளிச்சென்ற புலிகள் - 1988


 01 ஆக்டொபர்  1988 -   யாழ் காணிப்பதிவு திணைக்களத்தில் இருந்து 
5 இலட்சம் காணி உறுதிகளின் மூலப்பிரதிகள் காணாமல் போய்விட்டன!
காணி மூலப்பதிவேடுகளின் 250  தொகுப்புக்கள் volumes யாழ் காணி பதிவு திணைக்களத்தில் இருந்து சமீபத்திய அசம்பாவிதங்கள் போது காணாமல் போய்விட்டன என்று தெரியவருகிறது.
இந்த பதிவேடுகளில் தொகுப்பு ஒவ்வொன்றிலும் சுமார் இருநூறு காணி மூல பிரதிகள் வரை தொகுத்து வைக்கப்பட்டிருந்தன   என்று கூறப்படுகிறது. 
இதன்படி யாழ் மாவட்டத்தில் சுமார் ஐந்து இலட்சம் காணி உறுதிகளுக்கான மூலப்பிரதிகள் காணாமல் போயிருப்பதாக மதிப்பிட பட்டிருக்கிறது.
கிளிநொச்சி மாவட்டம் உட்பட யாழ் மாவட்டத்தில் உள்ள காணிகளின் மூலப்பிரதிகள் அடங்கிய இரண்டாயிரத்திற்கும் அதிகமான பதிவேட்டு தொகுப்புக்கள் யாழ்ப்பாணம் காணி பதிவு திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்தன.


அசம்பாவிதங்கள் பின் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் திணைக்களத்தை பார்வையிட சென்றபோது சுமார் இருநூற்று ஐம்பது சுமார் இருநூற்று ஐம்பது தொகுப்புகள் வரை  காணாமல் போயிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அங்கு எஞ்சி இருந்த தொகுப்புக்கள் யாவும் பாதுகாப்பான வருடத்திற்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதே வேளையில் காணாமல் போயிருக்கும் மூல பிரதிகளை மீண்டும் தயாரிப்பதற்கான சட்ட ஆலோசனைகளை பெறுவதற்கு தற்போது ஆராயா பட்டுவருகிறது.
கிளிநொச்சி மாவட்ட காணிகளின் மூலப்பிரதி தொகுப்புக்களை கிளிநொச்சிக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளும்  எடுக்கப்பட்டுள்ளன!
 

புலி இயக்கம்  வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணித்தது 
அது மட்டுமல்ல மாகாண அரசை இயங்க விட மாட்டோம் என்றும்  அறிவித்தது.
அதில் பங்கு பற்றுவோர்களை துரோகியாக அறிவித்து கொலைகளை தொடங்கியிருந்தார்கள்
இந்த நிலையில் தான் இந்த காணி உறுதி மூலபத்திரங்களின் களவும் இடம் பெற்றது. 
1988 ஆக்டொபர் முதலாம் தேதி இந்த களவு பற்றிய செய்தி பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது.
 
இந்நிலையில் 19 November 1988 அன்று இலங்கை வடக்கு கிழக்கு தேர்தல் நடைபெற்றது. 
இது தான் இலங்கையில் நடந்த ஒரே ஒரு வடக்கு கிழக்கு மாகாண  தேர்தலாகும்!
இனி எந்த காலத்திலும் வடக்கும் கிழக்கும் இணைய வாய்ப்பில்லை,
இரு மாகாண மக்களுக்கும் இடையே உள்ள வெறுப்பானது (முஸ்லீம் இனச்சுத்திகரிப்பு உட்பட) தமிழர்களுக்கு புலிகள் அளித்த மிகப்பெரிய பாசிச கொடையாகும்   
 

No comments:

Post a Comment