யாழ் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய வரலாற்று சாட்சியங்களை பதிவு செய்யாமல் நாம் அப்படியே கடந்து போக கூடாது.
இன்றுவரை எத்தனை பொய்கள் பொதுவெளியில் உலா வருகின்றது?
ஒரு அல்பிரட் துரையப்பாவை அரசியலில் இருந்து அகற்றுவதற்காக எவ்வளவு மோசமான அக்கிரமத்தை அரங்கேற்றி உள்ளார்கள் இவர்கள்?
தமிழரசு கட்சியின் தேர்தல் பிரசாரதிற்காக பலி கொடுக்கப்பட்ட அந்த 9 அப்பாவிகளின் சாபம் நீலன் திருச்செல்வம் போன்ற அப்பாவிகளின் தலையில் வந்து விழுந்தது
Navaratnam Giritharan : போலீசாரை நோக்கி கற்கள் வீசப்பட, அது கலவரமாகியது உண்மை.
அப்பொழுது நான் கோட்டை அகழிச் சுவருக்கண்மையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
இது பற்றி முகநூற் பதிவுகளும் எழுதியிருக்கின்றேன்.
பேராசிரியர் திருச்சி நயினார் முகம்மது உரையாடிக்கொண்டிருந்தபோது பொலிசார் வந்தார்கள்.
மக்கள் வீதியையும் மறித்து நிறைந்திருந்தார்கள்.
பொலிசார் வந்து வீதியை மறித்து நின்றவர்களைக் கலைக்கத்தொடங்கினார்கள்.
அவர்களை நோக்கிச் செருப்புகளை மக்கள் வீசியெறிந்தார்கள்.
அங்கிருந்து அகன்ற பொலிசார் மீண்டும் வந்து, கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசிக் கலைத்தார்கள். பொலிசார் அங்கு வந்தது கூட்டத்தைக் குழப்பவா, அல்லது ஜனார்த்தனனைக் கைது செய்யவா இவை பற்றி நான் அறிந்திருக்கவில்லை

No comments:
Post a Comment