![]() |
![]() |
ராதா மனோகர் : திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் 10 November 1990 – 21 June 1991 காலப்பகுதியில் இந்திய சட்ட அமைச்சராக பணியாற்றினார்!
இந்தியாவில் தங்கி இருந்த இலங்கை தமிழர்களை பொறுத்தவரை இது ஒரு முக்கியமான காலக்கட்டம்,
(மேலே குறிப்பிட்ட காலப்பகுதியைவிட மேலும் சில மாதங்கள் திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் காபந்து அரசிலும் care taker government அதே பதவியில் இருந்தார்)
அப்போதுதான் திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் அன்றைய காலக்கட்டங்களில் இந்தியாவில் தங்கி இருந்த சுமார் ஒரு இலட்சத்திற்கு அதிகமான இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க முன்வந்தார்.
அவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மகன் திரு எஸ் சி சந்திரகாசனிடம் தெரிவித்தார்.
அதற்கு திரு எஸ் சி சந்திரஹாசன் அவர்களுக்கு குடியுரிமை தேவை இல்லை என்றும் அவர்களுக்கு ஊரில் சொந்த வீடு நிலம் சொத்துக்கள் எல்லாம் உண்டென்றும் அவர்கள் பிரச்சனை தீர்ந்ததும் ஊருக்கு திரும்பி செல்லவே வ்ளரும்புகிறார்கள் என்றும் கூறினார்.
தமிழகத்தில் தங்கி இருந்த இலங்கை தமிழர்கள் சார்பில் பேச இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
1983 இல் இருந்து தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் நலனை கவனிப்பதற்கு என பல சர்வதேச என்ஜியோக்களாலும் இந்திய அரசாலும் நியமிக்கப்பட்டவர் சந்திரஹாசன்.
செல்வநாயகத்தின் குடும்ப செல்வாக்கு அப்படி பட்டது.
இந்த நிமிடம் வரை இவருக்கு இந்த வருமானங்களும் இந்திய அரசின் பாதுகாப்பும் தொடர்கிறது.
ஏன் இவருக்கு இந்திய அரசின் பாதுகாப்பும் பணமும் வழங்க படுகிறது என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.
அன்று திரு சுப்பிரமணியம் சாமியின் விருப்பத்திற்கு தடை சொல்லாமல் விட்டிருந்தால் அவர்களின் இந்த முப்பது வருடங்களாக செத்து செத்து பிழைத்திருக்க தேவை இல்லையே!
இலங்கை பிரச்சனையில் இந்த தமிழர்களும் ரா அதிகாரிகளுக்கு ஒரு ட்ரம்ப் கார்ட்தான்
இந்த ட்ரம்ப் கார்ட்டை சிந்தாமல் சிதறாமல் பாதுகாக்க வேண்டிய தொழில்தான் சந்திரஹாசன் இந்த நிமிடம் வரை பார்த்து கொண்டிருக்கிறார்.
இப்போது இந்த மக்களுக்கு குடியுரிமை கிடைக்க கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இதையும் எப்படியாவது குழப்பி விட சந்திரஹாசன் போன்றோர் முயற்சிப்பார்கள் என்றெண்ணுகிறேன்.
இவர்களின் செல்வாக்கு அத்தகையது.
அசல் பார்பனராகிய சுப்பிரமணியம் சாமி கூட மனம் இரங்கினாலும் தப்பி தவறியும் சந்திரஹாசன் போன்ற ஒன்றரை பார்ப்பனர்கள் மனம் இரங்க மாட்டார்கள்.அவ்வளவு ஆதிக்க வெறி!.
மீள்பதிவு : ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் ஸ்ரீமா இந்திரா காந்தி ஒப்பந்தங்களின் மூலம் இந்தியா 6 இலட்சம் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கி இருக்க வேண்டும்
ஆனால் இந்தியா இதுவரை 4.6 இலட்சம் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கி உள்ளது ’
இலங்கை ஏழு லட்சத்திற்கு அதிகமான இந்திய வம்சாவளி மக்களுக்கு குடியுரிமை வழங்கி உள்ளது!
இந்திய ஒன்றிய அரசு இதுவரை இலங்கையை இந்த விடயத்தில் ஏமாற்றி கொண்டே வருகிறது
தமிழக முகாம்களில் சுமார் முப்பது நாற்பது ஆண்டுகளாக வாழும் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்திய ஒன்றிய அரசை நிர்பந்திக்க வேண்டும்!
இலங்கை தமிழ் தலைவர்கள் தங்களின் குறுகிய அரசியல் இலாபதிற்காக ஒன்றிய அரசின் அடியாளாக செயல் படுகிறார்கள்
இந்த மக்களுக்கு இந்திய குடியுரிமை கிடைத்து விட கூடாது என்பதில் இலங்கை தமிழ் தலைவர்கள் கவனமாக இருக்கிறார்கள்!
ஏனெனில் இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் சில தேர்தல் தொகுதிகள் குறைகிறதாம்!
குறிப்பாக காலஞ்சென்ற எஸ்ஜேவி செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசன் செய்த துரோகம்தான் ஒரிஜினல் துரோகம்!


No comments:
Post a Comment