Saturday, January 4, 2025

சுபாஸ் சந்திர போஸ் ஒரு நாசி போர் குற்றவாளி! .....நேரு உண்மையில் நேதாஜியை காப்பாற்றினார்....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibHOJWUpF_f6jZ_eWqcd5FRjDEaJk8asFTd-Oomx243TLfuavYzXxVvn7gsrobxTTyBCEIJJTUfHIATn5hegV9LIvqvEX1ma01cqdinOPuxyHOm5laQCbqoFJZ0ERwTcKe2q2ikkAiik0/s1600/indexmm.jpg
Subhas chandra bhos  Adolf Hiter

ராதா மனோகர் : சுபாஸ் சந்திர போஸ் ஒரு நாசி போர் குற்றவாளி!
உண்மையில் ஜவஹர்லால் நெருதான்  சுபாஷ் சந்திரபோஸை யை காப்பாற்றினார்....
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணமாக வில்லை.
அந்த விபத்து சம்பவம் நடந்ததா இல்லையா என்ற வாதப்பிரதி வாதங்கள் ஒரு புறம் இருக்க இப்படித்தான் நடந்திருக்கும் என்று பலராலும் யூகிக்கப்படும் தியரி ஒன்று உலவுகிறது, அது நேதாஜிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.
என்னதான் சுதந்திரம் அவசியம் என்றாலும் அவர் ஹிட்லரோடு மிகவும் அன்னியோன்னியமாக உறவாடி உதவி கேட்டமை
நாகரிக உலகில் யாராலும் மன்னிக்க முடியாத ஒரு போர் குற்றம் ஆகும்.


இன்றும் கூட பழைய நாசிகளை உலக நாடுகள் வேட்டை ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஹிட்லரின் நாசிப்படையினரின் கொடிய போர்குற்றம் இழைத்ததாக நூரம்பெர்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான பழைய நாசிப்படையினர் இன்றும் கூட வேறு வேறு
பெயர்களில் வேறு வேறு நாடுகளில் பயந்து பயந்துதான் வாழ்கிறார்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0fll37PVSGZj2xpklDajxsSh9ya4toMyXmLZovr5yq0WHHcwdPRbgUIfo9h1hGQUz8md8dCnLYfYJsGu65YxpiUUF9Xa9-z8y3Be5RFPF4TlM26mFlwAo2HIbuhSv2JcruiD7XQE5Vho/s1600/Greater_East_Asia_Conference.JPG
நேதாஜி அவர்கள் நாசிப்படையில் இணையவில்லை என்றாலும் அவர்களிடம் ராணுவ உதவி கேட்டமையானது சாதாரண குற்றம் அல்ல. ஹிட்லரின் மனித குலவிரோத நடவடிக்கைகள் எல்லாம் நேதாஜிக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அவர் அதை பொருட்படுத்தவில்லை.
நல்ல காலம் ஹிட்லர் நேதாஜிக்கு கடைசியில் கைவிரித்து விட்டார். இந்தியர்களை இன்னும் பல ஆண்டுகள் பிரிட்டிஷாரே ஆளவேண்டும் என்ற கொள்கையை நேதாஜியிடம் கூறி அவரை பக்குவமாக சகல வசதிகளும் செய்து கொடுத்து ஒரு நீர்மூழ்கி கப்பல் மூலம் ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார். ஹிட்லர் நினைத்தால் நேதாஜியை என்னவும் செய்திருக்க முடியும் ஆனால் செய்யவில்லை.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அடுத்ததாக செய்த விடயம்  ஹிட்லர் கொடுத்த நீர்முழ்கி கப்பலில் ஜப்பான் சென்றார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.  https://www.quora.com/What-is-the-story-behind-the-swastika-Hindu-symbol-Is-its-resemblance-to-the-Nazi-symbol-just-a-coincidence
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5NWK9lKGNTmivYKtE8kvCotCnT4WIfpewt3LKPPT_iHnBWyCyPGBfBRY6HHjXSNzMjB6YsdAFYJVOkCglpVabgAhOeIPno8IWHmg2Q4ibHwWvhnyq9gX880PQ2Qi_sfh7E0qaYbw-dYg/s1600/BL12_OP_IIT_5_1205648f.jpg
ஜப்பானியர்கள் நேதாஜியை ஒரு ஹீரோவை போன்றே வரவேற்றனர், அவர்கள் ஏற்கனவே கண்ட யுத்த வெற்றிகள் தொடரும் என்றுதான் நம்பினார்கள். ஆனால் விதி என்னவோ ஜப்பானியர்களுக்கு ஆதரவாக

இருக்கவில்லை .அவர்கள் பெரும் அழிவை சந்திக்க வேண்டியதாயிற்று. அவர்களுக்கு நேர்ந்த தோல்விகள் நேதாஜிக்கு அவர்கள் கொடுத்த நம்பிக்கையை தகர்த்தது.
தொடர் தோல்விகளையே சந்தித்து வந்த நேதாஜி அடுத்த முயற்சியாக ரஷ்யாவை உதவி கேட்டு பயணம் புறப்பட்டார்.
இதன் பின் நடந்தவை மர்மமாக இன்றுவரை தெளிவு பிறக்கவில்லை.
இதன் பின் பல வதந்திகள் உலா வருகிறது. அவற்றில் சில வதந்திகள் உண்மைதான்.
உண்மையில் அன்றைய உலக சூழ்நிலையில் நேதாஜி வெளிப்பட்டிருந்தால் நேதாஜி அமெரிக்க பிரிட்டீஷ் ரஷ்ய படைகளால் கைது செய்யப்பட்டு நூரம்பெர்க் போர்குற்ற விசாரணைக்கு ஒரு சாட்சியாக அல்லது குற்றவாழியாக கூட நிறுத்த பட்டிருக்க கூடிய வாய்ப்பும் இருந்திருக்கும்.
 

அன்று நேதாஜி சீனில் இருந்து மறைந்ததால் அதில் இருந்து தப்பி விட்டார் என்று தான் கருத இடம் இருக்கிறது,
அப்படியானால் அவரை தப்ப வைத்தது யார்?
அவர் வெளி உலகுக்கு வர விரும்பியிருப்பாரா?
வந்தால் என்ன நடந்திருக்கும் ?
அவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு தப்பி ஓட கண்டுக்காம விடப்பட்டார் என்று ஒரு வதந்தி ....
நேருவும் உதவி செய்தார்....அவர் சுதந்திரமாக வெளியே வந்தால் அவரை கைது செய்து விசாரணைக்கு ஒப்படைத்து இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் நேருவுக்கு வந்திருக்கும் .
அது அவ்வளவு இலகுவான காரியமாக இருந்திர்க்காது.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஒரு தேசிய தலைவராக அதுவும் ஹீரோவாக மக்களால் கருதப்பட்டவர் .
அவருக்காக உயிரை கொடுக்க கூடியவர்கள் ஆயிரம் ஆயிரமாக அவரது தேசிய ராணுவத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் அவரை ஹிட்லரோடு சமரசம் செய்த...?
லட்சக்கணக்கான யூதர்களையும் இதர நலிவடைந்த மக்கள் கூட்டத்தையும் கொன்று குவித்த ஹிட்லரோடு எப்படி.....?
நிச்சயம் இந்த வரலாறு உலகுக்கு தெரிய வரும்போது இந்தியாவுக்கு இது நல்ல பெயரை பெற்று தராது.
இந்தியா என்றால் காந்தி தேசம் என்றுதான் இன்றளவும் மேற்குலகில் அறியப்பட்டு இருக்கிறது .
ஒரு இந்திய தேசிய தலைவர் எப்படி ஹிட்லரோடு அல்லது அன்றைய ஜப்பானோடு?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEFF6yJ4KFE7GHdbH3OKCWZTyga9E7Aw_6Xt5NoQC92OuOYYXR3kvq5fjYvDuQ2s8oYIHRHvLgikhtZjy4gS5tEl147EQxOia7RsdxgIqx2DHvvEPZ0wAzfvO7WkchwJ9iOhGiUZBTVVw/s1600/BeovkYnCIAAAF74.jpg
 மாலைமலர் : நேதாஜியை போர் குற்றவாளி என்று குறிப்பிடும் நேருவின் கடிதம் போலியானது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. சுதந்திரப் போராட்ட தலைவர் நேதாஜி தொடர்பான 100 ரகசிய ஆவணங்களை பிரதமர் மோடி சமீபத்தில் டெல்லியில் வெளியிட்டார். இந்த ஆவணம் ஒன்றில் 1945-ம் ஆண்டு இங்கிலாந்து பிரதமர் பதவி வகித்த கிளமெண்ட் அட்லிக்கு காங்கிரஸ் சார்பில் மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேரு எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றும் இடம்பெற்று இருந்தது
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdF5Uj7FUkatZiQwklxDfGrPuUXKeEyhncKYFgNnALzBE8-vaWbOekqdZPB_GT9DpTouN6D9JR3GjZJj9J0_239su4HDWwbtOPIfEqnOE1Y_CH9tckbF0zApKlJfkKZxa8A_FJDj5rXRU/s1600/netaji-subhas-chandra-bose-with-heinrich-himmler-1943-a.jpg
அதில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு போர்க் குற்றவாளி போன்றவர் என்று நேரு குறிப்பிட்டு இருந்தது. இந்த கடிதம் போலியானது என்று கூறியுள்ள ஆம் ஆத்மியின் தலைவர்களான அஷூதோஷ் மற்றும் சஞ்சய் சிங் “ஒரு சில தலைவர்களை உயர்வானவர்களாகவும், மற்றவர்களை தாழ்ந்தவர்களாகவும் காட்ட சதி மேற்கொள்ளப்படுகிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjB9oXvqbOMu0yLZWOsYxzml7Kdrxxd_QI7Die5-K-a0e5S3QkUt4hTgkwhoPYp9H3UdODPW6i9NV7smRox0_VytcI2sMhkngcWlbOhDgxoptIthJ-ZUbHnOSvV1vWCYxjf0weCksWBaYA/s1600/Netaji%252C+Subhas+Chandra+Bose%252C+INA%252C+January+23%252C+Tutor+Mantra+College%252C+TMC%252C+Tutor+Mantra+%2540+Tutor+Mantra%2521.jpg
முதலில் சர்தார் வல்லபாய் படேலை நாட்டின் மிகப் பெரிய தலைவராக காட்ட முயற்சி மேற்கொண்டார்கள். சுதந்திர போராட்டங்களில் ஈடுபடாதவர்கள், நாட்டுக்காக தியாகம் செய்யாதவர்கள், தற்போது காந்திஜி, நேரு போன்ற தலைவர்களின் புகழை அழிக்க முயற்சிக்கிறார்கள்.” என்று கூறியுள்ளனர்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWDBmtMwVjK2ehx4rzb1W_u-DOH14gd6zKsBGUiYXQNNTI-_S2I6wct9em9jQt8JaMQLV9fqawJvvI5Vn6ck5Uyju-xTEfI-vI2GHli52CA3Tuf-OLLrB2M-czdp3-aze6BdVTTe0SbAw/s1600/Wang_Jingwei-Hideki_Tojo-Subhas_Chandra_Bose.jpg

No comments:

Post a Comment