Thursday, July 10, 2025

திரு .அல்பிரட் துரையப்பாவின் தலைமீது எஸ்ஜேவி ல்செவநாயகம் வைத்த முள்கிரீடம்

ராதா மனோகர்   யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவாவதை எஸ்ஜேவி செல்வநாயகமும் அவரின் தமிழரசு கட்சியும் ஏன் மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள்?
தமிழர்களின் கல்வி சார்ந்த இவ்விடயத்தை  வரலாற்று ஆய்வுக்கு உட்படுத்த வேணடும்,.
தமிழரசு கட்சியின் மேட்டுக்குடி பாசிசம் அம்பலமாகுவதை தெளிவாக காணலாம்! 
ஆரம்பம் முதலே யாழ்ப்பாண பல்கலை கழகம் அமைவதை இவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள் என்பதை இப்போது நம்புவது மிகவும் சிரமமாக இருக்கும்.
அந்த அளவு இவர்கள் மோசமானவர்களா என கருத தோன்றும் ,
இது ஒரு அதிர்ச்சி அளிக்கும் விடயமாகும்!
இலங்கை தமிழ் தேசியர்கள் அடிப்படையில் சித்தாந்த ரீதியில் வெறுமையானவர்கள் என்பதை முதலில் ஞாபகத்தில் இருத்தி கொள்ளவேண்டும்.


இவர்களின் வெறுப்பு அரசியல் சித்தாந்தத்திற்கு மக்கள் கல்வி அறிவு பெறுவது என்பது உகந்தது அல்ல என்பதுவும் ஒரு முக்கிய காரணமாகும்..


தமிழரசு கட்சியின் அசல் வாரிசுகளான புலிகள் இயக்கம் கல்வியாளர்களை வகை தொகை இல்லாமல் கொலை செய்த்தை அவ்வளவு சுலபத்தில் கடந்து போக முடியாது அல்லவா?  
May be an image of temple and text that says 'புனித நகர் பிரச்சினனயில் தேசிய அரசிலிருந்து வெளியேற தமிழரசு பொதுச்சபை முடிவு παγυιιώ ទបកក இந்துக்களின் பழம்பெரும் தலமான கோஸ்வர ፍቴ லயம அமைந்துள்ள திரு'
செல்வநாயகமும் பிரபாகரனும் பல விடயங்களில் ஒத்த குணாம்சம் கொண்டவர்களாகும்.
எந்த விடயத்தையும் தனிப்பட்ட ரீதியிலான  பொறாமை சுயநலம்  அதிகார வெறி புகழ் மீதுள்ள அதீத மோகம் போன்ற போன்ற கோணத்தில்தான்  இவர்கள் இருவரும் அணுகினார்கள்!.
இருவரையும் சுற்றி நின்றவர்கள் இந்த இருவரையும் வகை தொகை இல்லாமல் சதா புகழ்ந்து கொண்டே இருந்தார்கள்.
அப்படி புகழ்பவர்களைதான் இந்த இருவரும் தங்கள் அருகே வைத்திருந்தனர்.
அப்படி இருவரையும் புகழாதவர்கள் எப்போதும்  சந்தேக கண் கொண்டே பார்க்கப்பட்டார்கள்.
இருவரிடமும்  அதிகாரம் குவிந்ததும்,
 இவர்களை சுற்றி ஏராளமான  புகழேந்திகள் இவர்களை புகழ்வது தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே என்று தங்கள் வாழ்நாளை ஓட்டினார்கள்!
May be an image of text that says 'தஸலயிடுபவர்கள் யாராக இரந்தாலும் அதற் கான கடவுள் தண் ண்டனயைஅனுபவித்தே நீரவேண் டும். இது சரித்திரம் காட்டும் மறுக்கமுடியாத உண் மையாகும் 0-226 ஆண்டு இந்தக் கோவில் மீது துக்குதல் நடத் திய பின்னர்-இக்கோவில தரைமட்டமாக்கிய சில நாட்களில் கொன்ஸ்ரான்ரின் டீசா என்ற போர்த் துக்கியன் மறு உலகத்துக்கு அழைக்கப்பட்டுவிட்டத் அழைக்கப்ப பட்டுவிட்டது சரித்திரபூர்வமாக நாம் அறிந்துகொண்ட உண்மை." ல்வா மூதவையில் முதவையில்உர்ச்சியிக்கு உணர்ச்சிமிக்க நிலலயில் ம்மாகம் 16-10 திகதி ாையடஸ்'
திரு எஸ்ஜேவி செல்வநாயகம் யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவாவதை தடுப்பதற்கு திருகோணமலையில் தமிழ் பல்கலை கழகம்தான் வேண்டும்.என்ற வெற்று முழக்கத்தை முன்வைத்தார்.
அதாவது சேர் பொன்னம்பலம் ராமநாதனின்  மருமகன் நடேசபிள்ளை உருவாக்க கருதிய உத்தேச யாழ்பல்கலை கழகம் ஒரு இந்து பல்கலை கழகமாம்!  
சரி அப்படித்தான் என்று வைத்துக்கொண்டாலும் அங்கு இந்து மதம் மட்டுமா போதிக்கப்படும்?
செல்வா கம்பனிக்கு இது தெரியாதா?
பல்கலை கழகங்களின் பெயர்களை விட அங்கு என்ன கற்பிக்கப்பட வேண்டும் என்பதல்லவா கவனத்தில் கொள்ளவேண்டும்!
இவற்றை எல்லாம் சிந்திக்க கூட செல்வா கம்பனி தயாராக இருக்கவில்லை. 
அசல் பிரபாகரன்  பாணியில்  எஸ்ஜேவி செல்வநாயகமும் அவரின் பரிவாரமும்.யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவாவதை எதிர்த்தார்கள்.
செல்வநாயகத்தின் யாழ்பல்கலை கழக எதிர்ப்பிற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. 
அதுதான் அசல் செல்வநாயகம் பாணி அரசியல்.
May be an image of text that says '19034L கோணோசநாதருக்கு குடடுழுக்கு நடைபெற்ற யோது, பய்பக்திபுடன் பழயபெருமை வாயந்கு ទា 0 ணப்க் காப்பிட்டு மகிழுයி 자 இிரு இிருமலலச செல்வர் म இராசவரேத யம். இப்புனித -ஆூல்யம் அயைந்துள்ள ดร பருத အေယ ததன் புனிதை நகராக்க ! மறுத்துவிட்டது உததி முலம் காப் இகன் LOTL0 நரப்பட்டது. បគ្វ பதுதுலாம்பரராக் துலாம்பர கறதல்லவா? ததரி சப்பிரன் பப்பிரச்சினையி இனபில் ஆரம் ததில் பிரதமரைக் कনमा ஷ்டி 9 លោ கைவிடவேண்டமா? வே สว LOm? ធាធមាា சிங்களக் கட்சிகன் என்'
1948 இல் ஜி ஜி பொன்னம்பலத்தின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக காங்கேசன்துறை தொகுதியில் வெற்றி பெற்றார் எஸ்ஜேவி செல்வநாயகம்.
ஆனால் 1952 இல் தமிழரசு கட்சி என்ற தனி கடையை திறந்து அத்தேர்தலில் போட்டி இட்டபோது தோல்வியடைந்தார்.
முகம் தெரியாத வேட்பாளர்க வெற்றி பெற்ற செல்வநாயகத்தால்  மக்களுக்கு நன்றாக அறிமுகமான பின்பு தோல்வி அடைந்தது ஒரு தீராத வலியை தந்தது தந்தது.
அதுவும் அன்றைய ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரான திரு நடேசபிள்ளையிடம் தோற்று போனார் 
இந்த தோல்வி சாதாரணமானது அல்ல! 
இவர்களின் தமிழரசு கட்சியின் திரு வன்னியசிங்கத்தை தவிர அத்தனை வேட்பாளர்களும் தோற்று போனார்கள் . திரு வன்னியசிங்கம் கூட சுமார் 200 வாக்குகளால் மட்டுமே தப்பி பிழைத்தார் 
கிழக்கிலும் திரு   ராஜவரோதய மட்டுமே வெற்றி பெற்றார், அதுவும் சொந்த செல்வாக்கில் சொற்ப வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.. .

திரு நடேசபிள்ளை மீது செல்வநாயகம் கொண்டிருந்த காழ்ப்புணச்சியை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
திரு  நடேசபிள்ளை அவர்களின் உத்தேச யாழ் பல்கலை கழகத்தின்  மீதான  செல்வாவின் வெறுப்புக்கு காரணம் இதுதான்!
ஆனால் ஊரை ஏமாற்ற,
 நடேசபிள்ளையின் பல்கலை கழகம் இந்து பல்கலை கழகம் என்றும் அது மதவெறியை தூண்டும் என்றும் செல்வா கம்பனி கதையளந்தது.
திரு நடேசபிள்ளை அவர்கள் ஒய்வு பெற்றுவிட இந்த கோரிக்கையை  திரு ஜி ஜி பொன்னம்பலம் ஓரளவு முன்னெடுத்தார்.
இதையும் திரு ஜி ஜி பொன்னம்பத்திற்கு எதிரான ஒரு ஆயுதமாக செல்வநாயகம் பயன்படுத்தினார்.
ஜி ஜி பொன்னம்பலம் இந்து பல்கலை கழகம் என்று இந்து மதவெறியை கிளப்புகிறார் என்று மேடைக்கு மேடை ஜி ஜி பொன்னம்பலத்தின் மேல் மதவெறி என்ற ஆயுதத்தை பலமாக பிரயோகித்தார்! 

மதவெறியை கிளப்பும் இந்து பல்கலை கழகத்திற்கு மாற்றாக  திருகோணமலையில் தமிழ் பல்கலை கழகம் அமையவேண்டும் என்ற கோஷத்தை உரத்த குரலில் மேடைதோறும் கூச்சலிட்டார்கள்.
 இதற்காக தமிழ் பல்கலை கழக இயக்கம் என்ற பெயரில் ஒரு உண்டியல் இயக்கத்தை ஆரம்பித்தார்கள்!
பள்ளிக்கூடங்கள் தோறும் உண்டியல் குலுக்கினார்கள் 

தமிழகத்தில் இருந்தும் கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தினார்கள் . பலர் ஏராளமான நிதி உதவிகளை வாரி வாரி வழங்கினார்கள். '
சேர்ந்த பணத்தில் இரண்டு  நிலங்கள் திருகோணமலையை அண்டிய பகுதிகளில் வாங்கியதாகவும் கூறினார்கள் 
ஆனால் இன்றுவரை அந்த பணத்திற்கும் அந்த நிலத்திற்கு என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியாது

யாழ்ப்பாண பல்கலை கழகம் இந்து மதவெறியை கிளப்புகிறது என்று கூறி தமிழ் பல்கலை கழக காவடி எடுத்த  இவர்கள் 
அசல் இந்து மதவெறி கூட்டமே வெட்கி தலை குனியும் அளவுக்கு இந்து மதவெறியை தூண்டிய வரலாறு தெரியுமா?
May be an image of temple and text
அதுவும் அதே திருகோணமலையில்!
கோணேஸ்வர ஆலய விவகாரத்தில் தலையிடுபவர்களுக்கு தெய்வ தண்டனை கிடைத்தே தீரும்!
இது சரித்திரம் காட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்!
1622 இல் கோணேஸ்வர ஆலயத்தில் கைவைத்த சில நாட்களில் கொன்ஸ்டர்ன் டீசா ஈன்ற தளபதி மறு உலகிற்கு அழைக்கப்பட்டார் .சொன்னது தமிழரசு மந்திரி திருச்செல்வம்!
ஸ்ரீமாவோ அரசியல் நிரந்தர காரியதரிசியாக் கடமையாற்றிய திரு என் கியூ டயஸ்  திருகோணமலையில் நிறுத்திய ஒரு வாரத்தில் அரசு கவிழ்ந்தது!
இந்துக்களின் ரோமாபுரி கோணேஸ்வரம்!
கோணேஸர் கொலுவிருக்கும் கோணமலையை எதிர்நோக்கும் ஆபத்து!
இது போன்ற ஏராளமான இந்துமத பிரசார வசனங்கள் தமிழரசு கட்சியினரின் மேடைகளில் தாராளமாக ஒலித்தது! 
இவை சில உதாரணங்கள் மட்டுமே.
இதில் முத்தாய்ப்பாக ஒரு முக்கிய உண்மையை அவர்களாகவே உளறினார்கள்>
அதாவது :   100 இராமநாதன் பல்கலை கழகத்தைவிட கோணேஸ்வரர் ஆலயப்பிரச்சனை முக்கியத்துவம் வாய்ந்தது!
பூனை குட்டி வெளியே வந்துவிட்டது அல்லவா?

இந்த பின்னணியில் 1960 தேர்தலில் திரு ஜி ஜி பொன்னம்பலத்தை யாழ்ப்பாண தொகுதியில் தோற்கடித்து,
 ஒரு சுயேச்சை  நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார் திரு அல்பிரட் தங்கராஜா துரையப்பா!

இது வரையில் இருந்த அத்தனை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விட இவரின் அரசியல் பலவிதங்களிலும் ஒரு வித்தியாசமானதாக இருந்தது.
அரசியலை வெறும் அரசியலாக மட்டுமே கவனித்து கொண்டிருந்த அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஒரு சாதாரண மனிதர்களின் எம்பியாக திரு அல்பிரட் துரையப்பா உருவானார்.

பல்லின மக்களை கொண்ட யாழ்ப்பாண தொகுதியில் எல்லோரும் இலகுவில் அணுக கூடியவராக இருந்தார்!
யாழ்ப்பாண முஸ்லிம்கள் அவரை ஒரு முஸ்லிமாக பார்த்தார்கள்.
ஒடுக்க பட்ட மக்கள் அவரை தங்களின் குடும்ப உறுப்பினராகவே கருதினார்கள் 
அவரின் எதிரிகளுக்கு கூட அவர் நன்மை செய்யும் நண்பனாகவே இருந்தார்.
நான் கூறும் இந்த விடயங்கள் அத்தனையும் உண்மை என்பதை எவருமே மறுக்க மாட்டார்கள்.

தமிழ் பகுதியில் பெரும்பலத்தோடு இருந்த இரு பெரும் கட்சிகள்,
 மற்றும் இடதுசாரி கட்சிகள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு எந்த கட்சி சார்பும் அற்ற ஒரு இளைஞனை மக்கள் இலகுவில் மக்கள் எம்பியாக்கி இருக்க மாட்டார்கள்.
அவர் யாழ் மாநகர சபையில் உறுப்பினராகவும் மேயராகவும் இருந்து மக்களுக்கு ஆற்றி கொண்டிருந்த சேவை அவ்வளவு தூரம் மக்களை ஈர்த்திருக்கிறது.
அதுவரை அரசியல்வாதிகள் என்றால் தேர்தல் நேரங்களிலி தோன்றி சிங்களம் -  தமிழ் - உரிமை  -தமிழர் பெருமை போன்ற வெற்று கூச்சல்களையே பெரிதும் கேட்டு கொண்டிருந்த மக்களுக்கு  முதல் தடவையாக தங்களின் குரலுக்கு செவி சாய்க்கும் ஒருவரை மக்கள் கண்டுகொண்டார்கள். 
யாழ்ப்பாண எம்பியாக தெரிவானதும் அவரின் புயல்வேக அரசியலில் யாழ்ப்பாண பல்கலை கழகம் முக்கிய இடத்தை பிடித்தது.
சுயேச்சை உறுப்பினராக இருந்தாலும் அன்றய பிரதமர் திருமதி ஸ்ரீமாவோ அமமயரோடு நல்ல நட்பினை ஏற்படுத்தி கொண்டார்.
தமிழர்களின் நீண்ட கால கனவாகவே இருந்த  யாழ்ப்பாண பல்கலை கழகம் இந்த நட்பின் பலனாகவே வேகம் பெற்றது.
  19 08 1961 இல் பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையார் கல்வி அமைச்சர் அல்ஹாஜ் பதியுதீன் மகமூத் .மூதூர் எம்பி அப்தல் மஜீத், மற்றும் கலகத்தர எம்பி  அப்தல் ஜப்பார் ஆகியவர்களோடு யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அல்பிரட் துரையப்பா அவர்களையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி  வைத்தார்.
அங்கு அவர்கள்  பரமேஸ்வர கல்லூரிக்கும் ராமநாதன் கல்லூரிக்கும் சென்று பார்வையிட்டு  அந்த கட்டிடங்கள் பல்கலை கழகம் அமைப்பதற்கு எல்லா விதத்திலும் பொருத்தமானதே என்று கையெழுத்திட்டார்கள்.
இது பற்றிய அன்றைய ஈழநாடு செய்தி இது : 19 08 1961 ஈழநாடு யாழ்ப்பாணம் 
 ஒரு கலாச்சார பல்கலை கழகத்திற்கு தரமுயர்த்துவதற்கான தகுதி ராமநாதன் கல்லூரிக்கு உண்டென்பதை அங்கு நேரில் சென்று பார்வையிட்ட கல்வி மந்திரி திரு. பதியுதீன் ஏற்று கொண்டதுடன் உடனடியாக அதனை பல்கலை கழகமாக மாற்றவேண்டும் என்று வலியுறுத்தி அங்குள்ள பதிவு புத்தகத்தில் எழுத்து மூலம் தனது கருத்தை வெளியிட்டார்!
இத்தனை காலம் யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவாவதை  தடுத்து வந்த செல்வநாயகம் கம்பனிக்கு,
 திரு அல்பிரட் துரையப்பா மீது கடும் கோபம் ஏற்பட்டதற்கு இதுதான் முக்கிய காரணம் என்று தோன்றுகிறது.

அன்று திரு நடேசபிள்ளை செல்வாவுக்கு கொடுத்த தோல்விக்கு நிகராக இதை செல்வநாயகம் கருதினார் என்று எண்ணுகிறேன்.
ஏனெனில் அந்த காலக்கட்டங்களில் அந்த அளவு வசை மாரியை  துரைப்பா மீது  பொழிந்தார்கள்!

திரு அல்பிறெட்  துரையப்பா யாழ்ப்பாண மேயராக வந்தார் பொறுத்து கொண்டோம்!

யாழ்ப்பாண எம்பியாகவும் வந்தார் பொறுத்து கொண்டோம் 

இப்போது நாங்கள் மூர்க்கத்தனமாக  எதிர்த்து கொண்டிருந்த யாழ்ப்பாண பல்கலை கழகத்தையும் கொண்டு வரப்போகிறார்.
இதுவும் நடந்துவிட்டால் நம்மை இனி யார் மதிப்பார்கள்?

1965 தேர்தலில் மீண்டும் திரு ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் திரு அல்பிரட் துரையப்பாவை யாழ்ப்பாண தொகுதியில் தோற்கடித்தார்.
1965 இல் டட்லி சேனநாயக்க அரசில் தமிழரசு கட்சி கூட்டணி சேர்ந்தது
.ஜி ஜி பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரசும் அந்த கூட்டனில் இணைந்தது.
தமிழரசு கட்சி மூன்று அமைச்சு பதவிகளை ஏற்பதாக முடிவானது.
இதை தமிழரசு கட்சியின் ஊர்காவல் துறை எம்பி திரு வி நவரத்தினம் ( தாமிழரசு கட்சின் மூளை என்று வர்ணிக்கப்பட்டவர்) கடுமையாக எதிர்த்தார்/

தமிழரின் உரிமை கிடைக்கும் வரை அமைச்சு பதவி ஏற்பதில்ல்லை என்ற அடிப்படை கொள்கையை ஒரே அடியாக கைவிட்டார்கள் என  மக்கள் எதிர்ப்பார்கள் என்ற பயத்தில்,
 மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படாமல் செனட்டராக இருக்கும் திருச்செல்வத்தை அமைச்சராக்கினால் ஒருவாறு மக்களை சமாளிக்கலாம் என்று கருதினார்கள்.

சுமார் மூன்றரை ஆண்டுகள் தமிழரசு கட்சியினர் ஆட்சியில் இருந்தனர். 
அந்த காலக்கட்டங்களில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை இலகுவாக நிறுவியிருக்கலாம்.
ஆனால் செய்யவில்லை. 
மடை மாற்றுவதற்காக திருகோணமலை தமிழ் பல்கலை கழகம் என்று பஜனை பாடி காலத்தை வீணாக்கினார்கள்.
ஏற்கனவே வசதியாக இருந்த பரமேஸ்வர +  ராமநாதன் கல்லூரிகளை விட்டு விட்டு புதிதாக நிலம் வாங்கி கட்டிடம் காட்டுவோம் என்று கூறிக்கொண்டே ஒன்றுமே செய்யாமல்,
 வழக்கம் போல வெறுப்பு அரசியலில் காலத்தை ஓட்டினார்கள்.

மக்களின் எதிர்ப்பு வலுவாவதை கண்டு ஆட்சியில் இருந்து எப்படி வெளியேறுவது என்று சிந்தித்து,  திருகோணமலையை புனித நகரமாக  அரசு அறிவிக்க வேண்டும் என்று ஒரு  அடையாள   கூச்சல் அரசியலை மீண்டும் தொடங்கினார்கள்.
இவர்களின் இந்த கூச்சல் மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை.
விளைவு 1970 தேர்தலில் அமிர்தலிங்கம் நாகநாதன் ராஜமாணிக்கம் ஆலாலசுந்தரம் உடுப்பிட்டி சிவசிதம்பரம் வவுனியா சிவசிதம்பரம் போன்ற முக்கிய தமிழ் தலைவர்கள் தோல்வி அடைந்தனர்.
வெற்றி தோல்வி வித்தியாசம் எல்லா தொகுதிகளிலும் மிக சொற்பமாகவே இருந்தது 
திரு அல்பிரட் துரையப்பாகூட  வெறும் 56 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டார்.
.  
1970 தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் ஸ்ரீ மாவோ அம்மையார் பதவிக்கு வந்தார்.
ஏற்கனவே திரு அல்பிரட் துரையப்பாவுக்கு கொடுத்த வாக்கினை நிறைவேற்றுமுகமாக  யாழ்ப்பாண பல்கலை கழகத்தை அமைத்தார்! 
அப்போது இலங்கை பல்கலை கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாகவே அது அமைந்தது .
பின்பு சில ஆண்டுகளின் பின் அது முழு பல்கலை கழகமாக பரிணாம வளர்ச்சி பெற்றது. 
அதன் திறப்பு விழாவில் யாழ்ப்பாண மேயராக திரு அல்பிரட் துரையப்பா கலந்து கொண்டார்!
பொறுக்குமா எஸ்ஜேவி செல்வாவின் மனம்?
யாழ்ப்பாண பல்க்லை கழக திறப்பு விழாவை புறக்கணிக்குமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
ஒரு புறம் யாழ்ப்பாண பல்கலை கழகம் கோலாகலமாக திறப்பட்டது.
மறுபுறம் தெருவெங்கும் தமிழரசும் அவர்களின் ரவுடி கும்பல்களும் டயர்களை கொழுத்தி கருப்பு கொடிகளை கட்டி கூடுமானவரை அந்த நிகழ்வை எள்ளி நகையாடினர்!
யாரிந்த எஸ்ஜேவி செயல்வநாயகம் என்பது  இப்போது புரிகிறதா?
அன்று திரு ஜி ஜி பொன்னம்பலத்தின் தலைமீது துரோகி என்றொரு முள்கிரீடத்தை வைத்து தனது அரசியல் கணக்கை  ஆரம்பித்திருந்தார் திரு எஸ்ஜேவி செல்வநாயகம்.
அந்த முள்கிரீடம் செல்வநாயகத்திற்கும் அவரின் தமிழரசு கட்சிக்கும் அரசியல் அரங்கில்  தொடர் வெற்றிகளை அள்ளிக்குவித்தது.
செல்வநாயகம் உருவாக்கிய துரோகி என்ற முள்கிரீடம் ஒன்றே தங்களை எப்போதும் கரைசேர்க்கும் என்பதில் தமிழரசு தலைவர்களுக்கு பெரும் நம்பிக்கை!
துரோகி என்ற முள்கிரீடம் தந்த  நம்பிக்கையில் இப்போது இன்னும் கடுமையான முட்களால்  பின்னப்பட்ட முள்கிரீடத்தை திரு அல்பிரட் துரையப்பாவின் தலைமீது வைத்தார்கள்.
தமிழரசு கட்சியின் எல்லா மேடைகளிலும் எல்லா பேச்சாளர்களும் ஒற்றை குரலில் துரோகி துரோகி என்று பெரும் கூச்சலிட்டனர்.
1975 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி திரு எஸ்ஜேவி செல்வநாயகம் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது!
எஸ்ஜேவி செல்வாநாயகத்தையும்  அவரின் வெறுப்பு  அரசியலையும்  மீறி மக்கள் நலன் சார்ந்து இயங்கிய ஒரே குற்றத்திற்காக 
தமிழரசு கட்சியின்  துரோக முள்கிரீடம் திரு அல்பிரட் துரையப்பாவின் தலைமீது சூட்டப்பட்டது! 

செல்வா தயாரித்த அந்த  துரோக முள்கிரீடத்தை அவரிடம் இருந்து முதுசமாக புலிகள் பெற்று கொண்டனர்! 
அதற்கு ஏகபோகமாக உரிமை கொண்டாடினர்.
கண்ணில் பட்ட எல்லா ஜீவன்களின் தலைகள் மீதும் வகை தொகை இல்லாமல் அந்த முள்கிரீடட்த்தை சூட்டி அழகு பார்த்தது அது! 
வெறும் துரோகி துரோகி என்ற ஒற்றை சொல்லால் மட்டுமே கட்டமைக்கப்பட்ட அந்த  தமிழ் தேசிய முள்கிரீட அரசியலானது பின்பு முள்ளிவாய்க்காலில் விளைந்தது மொத்தமாக! 
( பிற்குறிப்பு திரு அல்பிரட் துரையப்பாவின் கொலைக்கு பின்பு  திரு யோகேஸ்வரனின் யாழ்ப்பாண எம்பி கனவு நனவாகியது என்பது எல்லோரும் அறிந்ததே)    




No comments:

Post a Comment