Friday, July 24, 2026

யாழ்ப்பாணம் என்பது வெறும் ஒரு ஊரின் பெயர் என்று மட்டுமா? Loaded with pride and prejudice?


 ராதா மனோகர்
: யாழ்ப்பாணம் என்பது வெறும் ஒரு ஊரின் பெயர் என்று மட்டும் நீங்கள் கருதினால் அதனுள்ளே மறைந்திருக்கும் பல விடயங்கள் உங்களுக்கு தெரியாமலேயே போய்விடும் 
சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக செல்வா செழிப்போடு விளங்கியது யாழ்ப்பாணம் 
தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு வியாபார சந்தையாக யாழ்ப்பாணம் இருந்ததுதான் அந்த பொருளாதார செழிப்புக்கு உரிய முக்கிய காரணம் 
அடுத்ததாக போர்துக்கீச ஒல்லாந்து பிரித்தானியர்களின் கிழக்கிந்திய கம்பனிகளின் ஒரு முக்கிய வர்த்தக கேந்திரமாகவும் யாழ்ப்பாணம் இருந்தது 
மாலைதீவில் இருந்து ஏற்றுமதியாக வேண்டிய சிப்பி குறிப்பாக (கடல்) சோகி போன்ற பொருட்களை  யாழ்ப்பாணம் கொண்டுவந்து சந்தை படுத்துவார்கள் . அங்கிருந்து ஐரோப்பியர்கள் அவற்றை வாங்கி உலகம் முழுவதும் குறிப்பாக கடல் சோகிக்கு ஜப்பானில் பெரும் சந்தை இருந்தது 
தென்னிந்தியாவில் இருந்து தென்னிலங்கைக்கு செல்லவேண்டிய வியாபார பொருட்களும் கூட யாழ்ப்பாணத்தில் இருந்துதான் விநியோகம் செய்யப்பட்டன.
இலங்கையில் இருந்து ஐரோப்பியாவுக்கு செல்லவேண்டிய யானை கறுவா மிளகு புகையிலை பாக்கு பனை மரங்கள் எல்லாமே யாழ்ப்பாண துறைமுகங்களில் இருந்துதான் சென்றன. 
சுமார் இருநூறு ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தை கட்டியாண்ட  ஐரோப்பியர்கள் பெரும்பாலும் ஆண்கள்தான் 
அவர்கள் உள்ளூர் பெண்களை திருமணம் செய்தார்கள் அல்லது கூடி வாழ்ந்தார்கள் 
அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் நீட்சி இன்றுவரை அங்கு  செழிப்பாக உள்ளது 
இனப்போர் தொடங்கியதும் உலகின் மூலை முடுக்கெல்லாம் யாழ்ப்பாண மக்கள் குடிபெயர்ந்தது ஒரு தற்செயலான  நிகழ்வு போல தோன்றினாலும் இதற்கு ஒரு வரலாற்று பின்னணி இருக்கிறது 
சிங்கள தமிழ் மரபணுக்களில் கணிசமான ஐரோப்பிய கலப்பு இருக்கிறது. 
எதிர்காலத்தில் யாழ்ப்பாண மக்களிடையே காலனித்துவ ஆட்சி காலங்களில் ஏற்பட்ட இனக்கலப்பு பற்றிய  ஆய்வுகள் பெரிய அளவில் நடை பெறக்கூடும் 
ஐரோப்பிய வரவு என்பது பெரும்பாலும் ஐரோப்பிய ஆண்களின் வரவுதான் 
குறிப்பாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழும் யாழ்ப்பாண மக்களின் அடுத்தடுத்த தலைமுறையினர் தங்களின்  வேர்களை பற்றிய ஆய்வில் கவனம் செலுத்துவார்கள் 
இப்போதே பலர் இது பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள தொடங்கி விட்டனர்.
 
Taking into consideration mythological, historical, and linguistic records of Sri Lanka, I attempt to study the degree of gene diversity and genetic admixture among the population groups of Sri Lanka along with the populations of southern, northeastern, and northwestern India, the Middle East, and Europe..- pubmed.ncbi.nlm.nih.gov Genetic affinities of Sri Lankan populations - 

யாழ்ப்பாண வரலாற்றின் வியாபார மேலாண்மை என்பது அந்த மக்களின் உளவியலில் ஆழமாக பதிந்துள்ளது.
பொருளாதார மேலாண்மை என்பது ஒரு  உணர்வு ரீதியான ஒரு நாம் பெருமைக்கு உரியவர்கள் என்ற மனோநிலையை. கொடுத்துவிடும்.
அந்த பெருமைகு உரிய வரலாற்று அடையாளங்களை யாழ்ப்பாணம் என்ற பெயர் தாங்கி நிற்கிறது 
சுருக்கமாக சொன்னால் இன்று எல்லா ஜாதியினரும் தங்களை ஆண்ட பரம்பரை என்று கூறுகிறார்கள் அல்லவா?
இதை போலவே யாழ்ப்பாணத்தவர்கள் எல்லோருமே தங்களை ஒரு  மேலான பெருமைக்கு உரியவர்களாக  சுமார் முன்னூறு ஆண்டுகளாகவே  கருதி கொண்டிருக்கிறார்கள் 
யாழ்ப்பாண வரலாற்று பொருளாதார மேலாண்மை இந்த உளவியலை அவர்களுக்குள் விதைத்து விட்டிருக்கிறது 
இதன் மறுபக்கம்தான் சிங்கள பெரும்பான்மை மக்களை விட தங்களை மிகவும் உயர்ந்தவர்களாக கருதுகிறார்கள்  போலும்?
யாழ்ப்பாணம் என்ற ஒற்றை சொல் ஒரு இனவெறி சொல்லாக அல்லது ஒரு மேட்டுக்குடி சொல்லாக அல்லது ஒரு திமிர் பிடித்த சொல்லாக   ஏனைய மக்கள் கருத்துவதன் பின்னணி இதுவாக இருக்க கூடும் 
எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும்  நான் யாழ்ப்பாணம் என்று ஒருவர் சாதாரணமாக கூறும் போதும் அதில் ஒரு உச்சஸ்தாயி தொங்கி இருப்பதாக பலரும் கருதுகிறார்கள். 
அது ஒரு மெல்லிய போதை .
ஒரு பழைய புராண பெருமை அதில் தொங்கி நிற்கும்.
அது தவறல்ல  . ஆனால் அதில் தப்பி தவறியும் சகமனிதரை சக மனிதராக கருதும் போக்கு இருக்காது! 
 
 

No comments:

Post a Comment