Saturday, March 25, 2023

தமிழரசு கட்சியும் திராவிட இயக்கத்தின் கடவுள் மறுப்பு கொள்கையும்

No photo description available.

ராதா மனோகர் :   1952 இல் தந்தை செல்வாவும் அவரின் சம்பந்தி நாகநாதனும் முறையே காங்கேசன்துறை யாழ்ப்பாணம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் இந்த இருவரும் வெறுப்பு அரசியலை விதைத்து இருக்க மாட்டார்கள்
அந்த தோல்வி இருவரையும் ஒரு தவறான அரசியலை முன்னெடுக்க வைத்து விட்டது  அந்த தோல்வியில் இருந்து மீள்வதற்கு தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு போராட்ட பரப்புரைகளை இரவல் வாங்கினார்கள்
அதை அப்படியே சிங்கள எதிர்ப்பாக கூர் தீட்டினார்கள்
திராவிட கோட்பாட்டாளரான திரு எஸ் டி சிவநாயகத்தையும் அவரது நண்பர் செல்லையா ராசதுரையையும் கொழும்பில் திராவிட கழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்ட குழு செயலாளராக இருந்த அமிர்தலிங்கத்தையும் முன்னிறுத்தி தமிழ் தேசிய அரசியல் கடையை விரித்தார்கள்
தமிழினத்தின் மொத்த அரசியலையும் நாசமாக்கிய துரோகி என்ற சொல்லை செல்வநாயகம் நாகநாதன் முதல் முதலில் பயன்படுத்தியது திரு ஜி ஜி பொன்னம்பலத்திற்கு எதிராகத்தான்
இதில் இருந்துதான் தமிழினத்தின் சாபக்கேடான துரோக அரசியல் ஆரம்பித்தது!

ஆரம்பித்து வைத்தவர்கள் செல்வா நாகா குழுவினர்!
இவை எல்லாம் பல இடங்களில் ஏற்கனவே எழுதப்பட்டதுதான்
தமிழரசு கட்சி தங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தையே
முழுக்க முழுக்க நம்பியிருந்தார்கள் என்பதை சுதந்திரன் பத்திரிகையின் பல செய்திகளை முன்பு தந்திருக்கிறேன்
சுதந்திரன் பத்திரிகையில்  கடவுள் மறுப்பு பிரசாரத்தை கூட தமிழரசு கட்சியினர் ஒரு மட்டுப்படுத்த பட்ட அளவில் பயன்படுத்தி இருந்தார்கள்.

Sunday, March 12, 2023

யாழ்ப்பாணம் - ராஜேந்திர பிரசாத் வீதி் சுதந்திரன் 1959 :

ராதா மனோகர்  : இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் இலங்கை விஜயம்
இந்திய வம்சாவளி தமிழன் கழுத்தில் கத்தி
அதே வேளையில் ராஜேந்திர பிரசாத்துக்கு அமோக வரவேற்பு
இருநாட்டின் நல்லுறவு பற்றி இனிப்பான பேச்சு வேற . வேடிக்கை இல்லை?
இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஆறுநாள் விஜயத்தை முடித்து கொண்டு கடந்த 22 ஆம் திகதி தாய்நாடு திரும்பிவிட்டார்
நாமும் இந்த சந்தர்ப்பத்தில் நடந்தவற்றை எல்லாம் திரும்பி பார்ப்பது  நலம் அல்லவா?
ஜனாதிபதிக்கு இலங்கையில் அளிக்கப்பட்ட மகோன்னதமான  வரவேற்பு பிரமாதம் . இலங்கை அரசும் மக்களும் அவருக்கு அளித்த வரவேற்பில் பார்க்க யாழ்ப்பாணத்தில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு அளித்த வரவேற்பு சொல்லும் தரமன்று
இது பற்றி அன்றய சுதந்திரன் பத்திரிகையில் இருந்த கட்டுரையின் சில பகுதிகள் பின்வருமாறு

திராவிட நேசன் ஜூலை 6 - 1928 சுன்னாகம் யாழ்ப்பாணம்

No photo description available.

 ராதா மனோகர் :  திராவிட நேசன்  ஜூலை 6 - 1928 சுன்னாகம் யாழ்ப்பாணம்
மலாய் நாட்டிலுள்ள யாழ்ப்பாணத்தவர்களால் தமிழரின் நலத்தை நாடி திராவிட நேசன் என்ற பெயருடன் ஒரு தமிழ்  வாரப் பத்திரிகையை சமீபத்தில் நடத்த போகிறார்கள்
பங்கு ஒன்றுக்கு ஒரு வெள்ளி ஒன்று வீதம் அறுபதினாயிரம் பங்குகள் கொண்ட 60000 வெள்ளி மூலதனம் உள்ள ஒரு லிமிடெட் கம்பனி மூலமாகவே இப்பத்திரிகை நடைபெறும்.
பத்து பங்குகளுக்கு குறையாமல் பங்குகள் எடுத்து கொள்ளவேண்டும்.
பிராமணரையொழிந்த மற்றையோருக்கே பங்குகள் கிடைக்கும்.
பல கனவான்கள் இதை ஆதரிக்க முன்வந்துள்ளார்கள்.
இதை பற்றி அறிய விரும்போவோர் கோலாலம்பூர் அம்பாள் வீதி 80
திரு ஆர் வி சுப்பையாபிள்ளை அவர்களுக்கு எழுதி பெற்று கொள்ளாலாம்.

1928 ஜனவரி 28 சுன்னாகம் யாழ்ப்பாணம்- ஸ்ரீ பூ .சின்னத்தம்பி - "பார்பனரின் படுமோசமும் பாரத மக்களின் பரிதாபமும்"

No photo description available.
இது ஒரு வரலாற்று ஆவணம் என்ற கருத்தில் மட்டுமே பதிவிட்டுள்ளேன்  
பார்ப்பனர் மீதான ஒரு வெறுப்பாக இதை கருதவேண்டாம் என்று அன்போடு வேண்டிக்கொள்கிறேன்
திராவிடன்  1928 ஜனவரி 28 சுன்னாகம் யாழ்ப்பாணம்
மதிப்புரை :    ஸ்ரீ பூ .சின்னத்தம்பி அவர்களால் இயற்றப்பெற்ற  பார்பனரின் படுமோசமும் பாரத மக்களின் பரிதாபமும் என்னும் சிறிய நூல் வரப்பெற்றோம்

இது மக்கள் யாவருக்கும் இன்றியமையாது வேண்டப்படும் ஒரு முறையை அனுசரித்தே எழுதப்பட்டிருக்கிறது .
பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை எடுத்து காட்டியிருக்கிறது.
தேவையானோர் ஆக்கியோனுக்கு எழுதி பெற்று கொள்ளலாம்.
விலாசம் : பூ சின்னத்தம்பி, வீமன்காமம் யாழ்ப்பாணம்
மொடேர்ன் சப்பிளை கம்பனி . செந்துல்  எப் எம் எஸ்

Wednesday, March 8, 2023

ஆரிய திராவிட பாஷாவிருத்தி சங்கம் - 1921 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்

 ராதா மனோகர் : ஆரிய திராவிட பாஷாவிருத்தி சங்கம்


1921 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் கூடிய கல்விமான்கள் உட்பட பெருமளவு மக்கள் கூடிய மன்றத்தில் தமிழையும் சமஸ்கிருதத்தையும் வளர்க்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரிய திராவிட பாஷா அபிவிரித்தி சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது
ஆங்கில அரசின் கல்வி பொறுப்பதிகாரியான திரு எவனாஸ் பிரபு தலைமை வகித்தார்
இந்த சங்கம் அதுவரையில் தமிழ் மொழிக்கு சேவையாற்றி கொண்டிருந்த பலரின் ஆவணங்களையும் ஒழுங்கு படுத்தி பணியாற்றியது
இச்சங்கத்தின் சேவையையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்த இலங்கை பல்கலை கழகம் அதன் செனெட் சபைக்கு இச்சங்கத்தின் இரு அங்கத்தவர்களை நியமித்தது

சுமார் அரை நூற்றாண்டுகள் இச்சங்கம் தமிழுக்கு அளப்பரிய பணியை ஆற்றியது.
தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அடிப்படை பண்டிதர் . பால பண்டிதர்  மற்றும் பண்டிதர் பரீட்சைகளை நடத்தியது.
பல நூல்களையும் பத்திரிகைகளையும் வெளியிட்டது
மற்றும் சங்கத்தினால் நடத்தப்பட்ட வகுப்புக்களை பரீட்சைகள் மூலம் அரும்பணியாற்றியது
தமிழில் பல மட்டங்களில் நடத்தப்பட்ட தமிழ் பண்டிதர்கள் பரீட்சைகளினால் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்
சமஸ்கிருதத்தில் சுமார் முப்பது மாணாக்கர்கள் பயன்பெற்றனர்
ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி சங்கத்தின் மூலம் சமஸ்கிருதம் பெரிதாக வளரவில்லை
மாறாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும்பணியாற்றியது
இலங்கையில் தமிழ் ஆசிரியர்கள் பெருமளவு புகழ் பெற்று தமிழ் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ளனர்

Tuesday, February 21, 2023

திரு அருணாசலம் மகாதேவா! இலங்கையின் உள்நாட்டமைச்சர் - இந்திய தூதர் - மலையக மக்களின் வாக்குரிமை இழப்பு

ராதா மனோகர் திரு அருணாசலம் மகாதேவா 5 October

Arunasalam Mahadeva


1885 இல் மாத்தறையில் பிறந்தார் 8 June 1969 இல் 83 வயதில் காலமானார்! இவர் சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் மகனாவார்
1924–1930 காலப்பகுதிகளில் மேல் மாகாணத்தின்  பிரதிநிதியாக Legislative Council of Ceylon  Western Province Tamil
பணியாற்றினார்.
அதன் பின்பு யாழ்ப்பாணத்தின் பிரதிநிதியாக Member of the State Council of Ceylon 1934–1947 காலப்பகுதிகளில் பணியாற்றினார்.
பிரிடிஷ்  அரசு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கும் காலக்கட்டமான 1942–1946 இல் இலங்கையின் உள்துறை அமைச்சராக பணியாற்றினார்.
 இவர் ஐக்கிய தேசிய கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகும்
1947 இல் நடந்த முதல் சுதந்திர இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தொகுதியில் போட்டியிட்டார்  

அதே தொகுதியில் போட்டியிட்ட திரு ஜி ஜி பொன்னம்பலம் வெற்றி பெற்றார்
அத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி  பெரும்பான்மையை பெறவில்லை . ஆனாலும் பல சுயேச்சை அங்கத்தவர்களின் துணையோடு ஆட்சியை அமைத்தது.

Thursday, February 9, 2023

Alfred Leo Saverimuthu Thambiayah அல்பிரட் லியோ சவரிமுத்து தம்பையா

ராதா மனோகர் :  Alfred Leo Saverimuthu Thambiayah  அல்பிரட் லியோ சவரிமுத்து தம்பையா  (1903 நவம்பர் 8)  இலங்கையின் வடக்கே வேலனைதீவு தீவில் உள்ள கரம்பொன் என்ற இடத்தில் பிறந்தார்
.இவரது தந்தை ஊர்காவற்துறையில் கப்பல் உரிமையாளராக இருந்தார். ஊர்காவற்துறை, புனித அந்தோனியார் கல்லூரி, யாழ்ப்பாணம் புனித பேட்ரிக் கல்லூரி, கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரி மற்றும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.
இவர்  21 வயதில் ஒலிம்பியா சினிமாவை குத்தகைக்கு எடுத்து தனது வணிக வாழ்க்கையை தொடங்கினார்.பின்பு பிரபல வர்த்தகரான சேர்  சித்தம்பலம் கார்டினருடன் சேர்ந்து  சிலோன் தியேட்டர்ஸ் லிமிடெட்  என்ற திரைப்பட விநியோக நிறுவனத்தை நிறுவினார்கள்   பின்னர்  கார்கில்ஸ் & மில்லர்ஸ் நிறுவனத்தை வாங்கி வர்த்தகத்தை  விரிவாக்கினார்கள்  பின்னர் 1936 ஆம் ஆண்டு ஹாரி மற்றும் ஜான் காஸ்மாஸிடமிருந்து சரக்கு படகு டிஸ்பாட்ச் கம்பெனி என்ற கப்பல் நிறுவனத்தை வாங்கினார்கள். .  

 கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே வணிகத்தின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரிய நிறுவனமாக இவர்களின் தொழில் சாம்ராஜ்யம் வளர்ந்தது <1947 br="" nbsp=""> அரசுக்கு சொந்தமான கொழும்பு துறைமுக அதிகாரசபையுடன் அவரது சரக்கு கப்பல் அனுப்பும் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதால், தம்பையா தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்று கூறி சட்டப்பூர்வ மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

Friday, December 9, 2022

தமிழ்நாட்டு பார்ப்பனீயமும் .. யாழ்ப்பாணத்து ஜாதீயமும் !

Dhinakaran Chelliah  :  சாதி வாங்கலையோ சாதி!
தமிழ்நாட்டில் பிராம்மணர்களின் ஆதிக்கம் எப்படியோ,அப்படித்தான் யாழ்ப்பாணத்தில்.
வெள்ளாளர்களின் ஆதிக்கமும்.
தமிழ்நாட்டில் உள்ள பெருவாரியான இடைநிலைச் சாதிகள் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்கள் என்றே அறியப்படுகிறார்கள்.
இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு விடையாக அமைந்ததுதான் “யழ்ப்பாணக் குடியேற்றம்” எனும் ஆய்வு நூல்.
கேரளம், ஆந்திரம், கன்னடம், துளுவம், கலிங்கம்,
ஒரியா, என பல பிரதேசங்களிலிருந்து மக்கள் குடியேறிய பகுதியே யாழ்ப்பாணம் என்பதை மிகத் தெளிவாக “யாழ்ப்பாணக் குடியேற்றம்”ஆய்வு நூல் ஆசிரியர் திரு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார்
(முதற் பதிப்பு 1982).கேரளத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு பற்றி இந்நூல் தரவுகளுடன் குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வு நூலை எழுதுவதற்கு 36 தமிழ் நூல்களையும்,5 வடமொழி நூல்களையும்,36 ஆங்கில நூல்களையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
இவர் சென்னை லொயாலாக் கல்லூரி தலைமைத் தமிழ் விரிவுரையாளர் மற்றும் இளைப்பாரிய அராவி இந்துக் கல்லூரி அதிபருமாவார்.

Wednesday, December 7, 2022

New menace to lanka Ceylonese party with indian interests by J R. Jayavardana 2 may 1947 UNP party paper

 

The news that Dr.Colvin R de Silva and Mr.S.C.C.Anthonipillai  were arrested in India for participating in strike of  labourers of one of the largest textile mills in south India is an event of passing more than interest.
i do not think  we need to go in to the merits of the strike. For though it is notorious that indian workers are very poorly paid  in comparison with the wages paid in Ceylon. We have not the information nor the power to interfere in a matter coming with in the province of Madras Government
What concern us is the strike, ostensibly under the leadership of the Madras labour party, Is control by the Bolshvic Leninist Party of India.
Four of Whose leaders in India are Ceylonese. Namely Dr.Colvin R.De Silva , Mr.Leslly Gunavardana, Mr. S.C.C.Anthonipillai and Mrs. Carolin Anthonipillai
This then is an Indian political party   
It work lies mainly with Indian workers. To establish itself it must work for and put in the forefront the interest of Indian workers.
Their objects are no doubt  laudable. They follow in  the tradition of Mahatma Gandhi and Pandit Nehru .Who have devoted their life to raising Indian masses ,including worker from poverty and misery.
Similar movements exists in other countries too.
In Ceylon we have the labour party and various socialists parties which have worked  for several years to improve lot of the workers.

Friday, December 2, 2022

சித்ரா சுப்பிரமணியம் (ஆர் எஸ் எஸ்) இந்த பெண்மணியை பற்றி பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.


ராதா மனோகர்
: Mrs .chitra subramaniam duella  சித்ரா சுப்பிரமணியம் ஒரு இந்திய பத்திரிகையாளர்.
ஆர் எஸ் எஸ் இன் எடுபிடியாக செயல்பட்ட இந்த பெண்மணியை பற்றி பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.   
இவர்  சுவிஸ்லாந்தை சேர்ந்த  டாக்டர் கியான்கார்லோ டூல்லா  என்பவரை வாழ்க்கை துணையாக்கி கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள் . இவர்கள் சுவிஸ்லாந்தில்தான் வசிக்கிறார்கள்
இவர் முன்பு இந்தியா டு டேயில் ( india today) வெளிநாட்டு   செய்தியாளராக பணியாற்றினார்.
2017 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி தொடங்கிய ரிபப்ளிக் செய்தி சேனலில் அவரோடு சேர்ந்து கடும் பணியாற்றி வருகிறார்.
இன்றும் இதே பாணியில்  ஆர் எஸ் எஸ் நோக்கங்களை நிறைவேற்றி கொண்டே இருக்கிறார்.

Thursday, December 1, 2022

இலங்கை தமிழரசு கட்சியின் திராவிட இருட்டடிப்பும் அதன் விளைவுகளும்

Radha Manohar :  இலங்கை சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் இலங்கை தமிழர்களிடையே ஒரு பொது அரசியல் மேடையே உருவாகி இருக்கவில்லை .
அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர்களின் தனிப்பட்ட குணங்கள் செல்வாக்கு போன்றவற்றின் அடிப்படையிலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
குறிப்பாக தமிழ் சிங்களம் என்ற பிரிவு பேதம் வெறுப்பு எதிர்ப்பு போன்றவை இருக்கவே இல்லை.
சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழர்களின் நலன்களை முன்னிட்டு உருவான கட்சி .
அதன் தலைவராக திரு ஜி ஜி பொன்னம்பலம் இருந்தார் அவரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட பலரில் எஸ் ஜெ வி செல்வநாயகம் ஜான் ஜெபரத்னம்  நாகநாதன் போன்றவர்களும் அடங்குவர்.
தமிழ் காங்கிரஸ்  கட்சியின் ஆதரவு தளம் என்பது பெரும்பாலும் நீண்ட பாரம்பரியம் கொண்ட சைவ கனவான்களின் ஆதிக்கத்திலே இருந்தது.
இந்த சைவ அரசியல் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு செல்வநாயகம் நாகநாதன் போன்றவர்கள் எடுத்த முயற்சிதான் இலங்கை தமிழரசு கட்சியின் தோற்றம் என்று கருதுகிறேன்

புதிய தமிழ் அரசியல் கட்சியை இவர்கள் உருவாக்கியதற்கு   மலையக வாக்குரிமை பறிப்பே காரணம் என்று இவர்கள்  கூறினாலும்,

Saturday, November 12, 2022

வெளிநாட்டு திராவிடர் நலனுக்கான குழு!

 ராதா மனோகர்

  : வெளிநாட்டு திராவிடர் நலனுக்கான குழு! பேரறிஞர் அண்ணாவிடம் இலங்கை தி மு க.. (வரலாறு)
 1951 ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழக மாநாட்டுக்கு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மூவரை அனுப்புவது என்று கழக தோழர்கள் முடிவு செய்தனர்
அம்மாநாட்டு  நிதியை சேர்க்கும் பணியை தோழர் இளஞ்செழியன் ஏற்று கொண்டார்.
இந்த நிதியை சேர்க்கும் முகமாக  கண்ணீர் என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்கள்
மலையக தோட்டங்களில் வாழ்வை தொலைத்து கொண்டிருக்கும் மலையக மக்களின் கண்ணீர் கதையையே ஒரு நாடகமாக தயாரித்திருந்தார்கள்
இந்நாடகத்தை தோழர் வி செம்பனூர்  தோழர் கே கே இராமசாமி ஆகியோர் எழுதி இயக்கி இருந்தனர்
இந்நாடகம் கொழும்பு பொரளை பௌத்த இளைஞர் மண்டபத்தில் மேடையேற்றப்பட்டது
இதன் பிரதான பாத்திரமான தமிழ்மாறன் என்ற பாத்திரத்தை தோழர் இளஞ்செழியன் ஏற்று திறம்பட நடித்திருந்தார்
இந்த நாடகத்தின் மூலம் வசூலான தொகையை தமிழக திராவிட முன்னேற்ற கழக மாநாட்டிற்கு செல்லும் தோழர்களான  அ.நாச்சியப்பன் , திருப்பூர் கந்தசாமி,  எஸ் கே மாயகிருஷ்ணன் ஆகியோரிடம் கொடுக்கப்பட்டது
இவர்களோடு தோழர் எஸ் மணவைத்தம்பி . இரா அதிமணி ஆகியோர் கொழும்பு மாவட்ட இ தி மு க சார்பில் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர்     இம்மாநாட்டில் இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்   பேரறிஞர் அண்ணாவிடம் ஒரு முக்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டது

Tuesday, November 8, 2022

மூதூர் தமிழரசு வேட்பாளருக்கு இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் ஆதரவு - சுதந்திரன் - 10 - 6 - 1962


மூதூர் அபேட்சகருக்கு இ தி மு க ஆதரவு . சுதந்திரன் - 10 - 6 - 1962
ஒன்று சேர்ந்து பாடுபட தொண்டைமானுக்கு வற்புறுத்து
வடகிழக்கு மாகாண தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து திரு .தொண்டமான் ஒத்துழைத்து , தமிழ் பேசும் இனத்தின் விடுதலைக்காக பாடுபடவேண்டும். இல்லையேல் பாராளுமன்ற பதவியில் இருந்து விலகி விடவேண்டும் இ தி மு க பொதுக்குழு வற்புறுத்தி உள்ளது.
நாவலப்பிட்டியில் நடந்து பொதுக்கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூதூர் உபதேர்தலில் தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜனாப் முகம்மதலியை ஆதரிப்பதெனவும் இக்குழு தீர்மானித்துள்ளது.
தி மு க தொழிற்சங்கம் !
பொதுச்செயலாளர் திரு . இளஞ்செழியன் பேசுகையில் , மலையகத்தில் வாழும் 10 லட்சம் தமிழ் பேசும் தொழிலாளர்களின் நல உரிமைகளை பாதுக்காக்க இ தி மு க அமைக்கும் தொழிற்சங்கமே வழிவகுக்கும் என்று கூறினார்.

Tuesday, October 25, 2022

இலங்கை வீரகேசரியும் ஹரிஜன் என்ற காந்தியின் பார்ப்பனீய லேபிளும்

ராதா மனோகர் : ஆளுநர் ஆர் என் ரவி , பட்டியல் இனமக்களை குறிக்கையில் ஹரிஜன் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளார். இக்குற்றத்திற்கு   வன்கொடுமை தடை சட்டத்தில் தண்டிக்க வழி உண்டா என்று தெரியவில்லை  
மேலும் மோகன் கரம்சந்த்  காந்தியின் ஹரிஜன் என்ற லேபிள் மாற்றம் தொடர்பான ஒரு இலங்கை வரலாற்று செய்தி முன்பு பதிவிட்டிருந்தேன்   அந்த செய்தியும் முக்கியமானதுதான் :
இதோ அதன் மீள்பதிவு :    இலங்கையில் ஹரிஜன் என்ற சொல் எந்த காலத்திலும் பேச்சு வழக்கில் இருந்ததில்லை.
இந்த சொல்லே பெரும்பாலும் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை .
இந்நிலையில்  தமிழக பார்ப்பனர்கள் எப்படி ஒவ்வொரு பார்ப்பனீய கருத்துக்களாக அங்கு விதைத்தார்கள் என்பதை இந்த 1956 ஆம் ஆண்டு இலங்கை வீரகேசரி பத்திரிகை காட்டுகிறது.
இலங்கை அரசியல் அமைப்பிலோ சட்டத்திலோ ஜாதி இல்லை . நடைமுறையில் ஜாதி பாகுபாடு மட்டுமல்ல குற்றங்களும் இருந்தன தற்போதும் ஓரளவு இருக்கின்றன..

Thursday, October 20, 2022

சமஸ்கிருதம் மக்களால் பேசப்பட்ட மொழியல்ல! . ரகசியங்களை பரிமாற பார்ப்பனர்கள் உருவாக்கிய செயற்கை மொழி - கோடிங் லாங்குவேஜ்

ராதா மனோகர்  : சமஸ்கிருதம் ஒருபோதும் சாதாரண சமூகங்களால் பேசப்பட்ட மொழியல்ல!
அன்றாட வாழ்க்கையில் சாதாரண மக்களுக்கு புரிந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இயற்றப்பட்ட ஒரு சங்கேத மொழியாகும்.  
ஏராளமான செக்ஸ் ரகசிய குறிப்புக்களும் கதைகளும் அவற்றில் தாராளமாக உண்டு.
அவை பெண்களுக்கு தெரிந்துவிட கூடாது என்பதற்காகவே பெண்களுக்கு சமஸ்கிருதம் மறைக்கப்பட்டது.
சாதாரண மக்களுக்கு தங்களின் சுரண்டல் ரகசியங்கள் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே அம்மொழியை ஏனைய ஜாதியினருக்கு ஒரு மறை பொருளாக வைத்திருந்தனர்
ஒருவேளை தப்பி தவறி ஏனைய மக்கள்  சமஸ்கிருதத்தை அறிந்துவிட்டால் அவர்களின் காதில் ஈயத்தை ஊற்ற விதி எழுதிவைத்தார்கள்.
ஒரு ஆதிக்க சமூகம், அல்லது ஒரு அரசியல் சக்தி,
இன்னும் சரியாக சொல்லப்போனால் சாதாரண மக்களை ஆண்டுகொண்டிருந்த ஒரு கும்பல்,
தங்களின் ரகசிய தொடர்பாடலுக்காக உருவாக்கி கொண்ட கோடிங் மொழிதான் சமஸ்கிருதம்

இக்கருத்து  பலராலும் பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டதுதான்.
ஆனால் மிக திட்டமிட்டு பொதுவெளிக்கு மறைக்கப்பட்ட கருத்தாகும்
பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு பெண்களுக்கே இதை ஒரு மறை பொருளாக வைத்திருந்தார்கள் என்றால் இதன் இரகசியத்தின் முக்கியத்துவம் விளங்கும்

Thursday, October 13, 2022

காஞ்சி சங்கர மடம் 20 ஆம் நூற்றாண்டில்தான் உருவானது .. நிறுவனர் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதிதான். கட்டுக்கதைகள் அம்பலம்

ராதா மனோகர் :   காஞ்சி மடம் 20 ஆம் நூற்றாண்டில்தான் உருவானது!


காஞ்சி சந்திரசேகரேந்திரர்தான் நிறுவனர்!    இவரின் உண்மை பெயர் சுவாமிநாதன் சர்மா என்பதாகும் (20 May 1894 – 8 January 1994)!
இதுதான் காஞ்சி மடத்தின் உண்மையான வரலாறு !.
மகா பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் காலத்தில்தான் உருவானது
கும்பகோணத்தில் இருந்த மடம்  கிபி 1839 இல் தான்  காஞ்சிபுரத்திற்கு மாறியது..
( sadananda@anvil.nrl.navy.mil (கே. சதானந்தா) என்பவரின் கட்டுரையில்  , editor. cs m.uc.e du (டைஜெஸ்ட் எடிட்டர்) ;

காஞ்சிபுரம், ஜூலை 24 (பிடிஐ) 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ( ? ) காஞ்சி மடத்தின் தலைவரான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியின் 60வது நூற்றாண்டு விழாவை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஆர்.வெங்கடராமன் இன்று தொடங்கி வைத்தார்.என்று அறிவித்தார்கள்!
மேலும் சங்கரமடமானது கிமு 482 முதல் 477 வரை முதல் 'பீடபதி' (மடத்தின் தலைவர்) ஆதி சங்கரரால் இங்கு நிறுவப்பட்ட மடத்தின் 69 வது பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆவார்.என்றும் கூறப்பட்டது.

ஐயா, எல்லா மடங்களின் கணக்குகளின்படியும் ஆதி சங்கரர் காலம் கி.பி 8 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரைதான் என்பது எல்லோரும் அறிந்ததே! .     இந்த கட்டுரை ஒரு ஆங்கில ஆய்வு கட்டுரையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது . அந்த ஆதார கட்டுரை வாசிப்பதற்கு இந்த தொடர்பை அழுத்தவும் ஆங்கில ஆய்வு கட்டுரை
மேலும் அவர்  நிறுவிய நான்கு மடங்களில் காஞ்சி மடம் இடம் பெறவில்லை .

Sunday, October 9, 2022

திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம் .. 1927 சுன்னாகம் யாழ்ப்பாணம்

 ராதா மனோகர்  : இலங்கை தமிழர்களின் முதல் அரசியல் தளம்  திராவிட அரசியலே! - 1927
இலங்கை வடமாகாணத்தில் இடது சாரி அரசியலுக்கு முன்பாகவே திராவிட அரசியல் கருத்துருவாக்கம் பெற்றிருக்கிறது
வெறும் சைவ கிறிஸ்தவ அரசியல் என்றிருந்த காலத்தில் முதல் தடவையாக சமூக நலன் சார்ந்த அரசியல் இயக்கமாக திராவிட இயக்கமே இருந்திருக்கிறது
 சைவ வித்தியாபிவிருத்தி சங்கமென்றும் பின்பு இந்து போர்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இயங்கிய அமைப்பு சைவத்தை ஒரு அரசியல் இயக்கமாகவே முன்னெடுத்தது  
அதன் தலைவராக இருந்த இந்தப்போர்ட் ராஜரத்தினம்   c4 July 1884 – 12 March 1970)
Subramaniam  Rajaratnam was elected to the Legislative Council of Ceylon as the member for the Northern Province Central at the 1924 election.  As its chairman, Rajaratnam played a key role in the foundation and growth of the Hindu Board which, at one time, managed more than 150 schools .
முழுக்க முழுக்க சைவ வாழ்வியலே ஒரு அரசியல் தத்துவமாக கொண்டிருந்தார் .
அன்றைய ஆங்கில ஆட்சியாளர்களின் உதவியோடு .சுமார் 150 பள்ளிக்கூடங்களை நிறுவினார்

சுயமரியாதை - திராவிடன் பத்திரிகையின் தலையங்கம் 1927 இல் யாழ்ப்பாணம் சுன்னாகம்

 ராதா மனோகர்  : 1927 இல் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து திராவிடன் என்ற பத்திரிகை நான்கு ஆண்டுகளாக வெளிவந்திருக்கிறது.. வெளியிட்டவர் சுன்னாகம் திராவிட வித்தியா சாலையின் நிறுவனரும் யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்க தலைவருமான வழக்கறிஞர் திரு சு ராசரத்தினம்  அவர்கள்.
திராவிடன் பத்திரிகையில் சுயமரியாதை என்ற தலைப்பில் வெளியான தொடர் கட்டுரையின் ஒரு பகுதிதான் இப்பதிவு.
இதில் உள்ள விடயங்களை  எல்லாம் அந்த கால சூழ்நிலை அந்த காலத்து தமிழ் நடை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் பின்னணியில்தான் நோக்க வேண்டும்.
சுயமரியாதை என்ற தலைப்பில் வெளியான இக்கட்டுரை எனக்கு மிகவும் ஆச்சரியமான ஒரு விடயம்   இப்பத்திரிகையின் ஆசிரிய தலையங்கமாகவே இது வெளிவந்திருக்கிறது   
இலங்கை தமிழரிடையே சுயமரியாதை என்ற சொல்லே ஒலிப்பதில்லை
ஆனால் 1927 ஆம் ஆண்டிலேயே சுயமரியாதை என்ற தலைப்பில் சில ஆண்டுகள் ஆசிரியர் தலையங்கம் திராவிடன் பத்திரிகையில் வந்திருக்கிறது .. அந்த காலங்களில் சுயமரியாதை என்ற கருத்து ஒலித்திருக்கிறது.

Sunday, October 2, 2022

இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் U N P என்ற பத்திரிகையில் வந்த கட்டுரை tamil translation 02 May 1947 by J.R.Jayavardana


ராதா மனோகர்
:
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா 1947 ஆம் ஆண்டு மே மாதம் அவர்களின் ஐக்கிய தேசிய கட்சி பத்திரிகையில் எழுதிய இக்கட்டுரை பல வரலாற்று நிகழ்வுகளை படம் பிடித்து காட்டுகிறது.

விருப்பு வெறுப்புக்களை கடந்து உண்மையான வரலாற்று செய்திகளை இக்கட்டுரை ஓரளவு எடுத்து காட்டுகிறது .
முக்கியமாக இலங்கையில்  இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பு பற்றிய பல பின்னணி நிகழ்வுகள் இதுவரையில் பொதுவெளிக்கு உரியமுறையில் வந்து சேரவில்லை.
அன்றைய காலக்கட்டங்களில் இலங்கையில் கம்யூனிச ஆபத்து உருவாகிய பின்னணியும் அதில் இந்திய இடது சாரிகளின் பங்கு என்ன  என்பதும் அறியவேண்டிய விடயமாகும்

இடதுசாரிகளின் வாக்கு வங்கியாக இந்திய வம்சாவளி மக்களை மாற்றிய  தொழிற்சங்கங்களும் கட்சிகளும் ஆற்றிய பணிகள் பற்றி அறிவதற்கு இக்கட்டுரை கொஞ்சம் உதவும் என்று எண்ணுகிறேன்
இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் UNP  என்ற பத்திரிகையில் வந்த கட்டுரை  -
1947 UNP Party  Journal -President J.R.Jayavardana : :
இலங்கை சம சமாஜ கட்சியின் தலைவர்களான  டாக்டர் கொல்வின் ஆர் டி சில்வா மற்றும் திரு.எஸ்.சி.சி.அந்தோனிப்பிள்ளை ஆகியோர் தென்னிந்தியாவின் (கோயம்புத்தூர் பெரிய துணி  ஆலைகளில் ஒன்றின் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக அங்கு  கைது செய்யப்பட்டனர்.
இந்த  செய்தி ஒரு முக்கியமான செய்தியாகும்.
இவர்களின் வேலைநிறுத்தம் பற்றிய விபரத்திற்குள் நாம்  செல்வதை விட வேறு கோணத்தில் இதை நோக்கவேண்டும்

Sunday, September 25, 2022

திரு . எஸ்.சி.சி அந்தோனிப்பிள்ளை ( யாழ்ப்பாணம்) சென்னை சூளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - வட சென்னை மக்களவை உறுப்பினர்

ஈழநாடு - யாழ்ப்பாணம் . 22 02 -1962

 ராதா  மனோகர் எஸ்.சி.சி அந்தோனிப்பிள்ளை ( யாழ்ப்பாணம்) சென்னை  சூளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - 1952–1957.
வட சென்னை  மக்களவை உறுப்பினர் 1957–1962
இவரின் முழுப்பெயர் செபஸ்தியான் சிரில் கான்ஸ்டன்டைன் அந்தோனிப்பிள்ளை (Sebastian Cyril Constantine Anthony Pillai, ஏப்ரல் 27, 1914 – ஆகஸ்ட் 16, 2000)
இலங்கை இடது சாரித்தலைவராகவும் பின்பு இந்திய இடதுசாரி தலைவராகவும் இருந்த ஒரு சுவாரசியமான அரசியல் வரலாறை கொண்டிருப்பவர்
யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் யாழ் சென்ட் பற்றிக்ஸ் கல்லூரியில் கற்றார்.பின்பு  இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து வரலாற்றில் பட்டம் பெற்றார். பின்னர் இலண்டன் கிங்ஸ்  கல்லூரியில்  படித்தார். 

இவரை பற்றி ஒரு முக்கிய கோணத்தில் ஆய்வு செய்யவேண்டிய தேவை இருக்கிறது .
மறைந்த இலங்கை ஜனாதிபதி திரு ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் இவரை பற்றியும் அந்த காலத்து இலங்கை இடது சாரிகள் பற்றியும் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்
இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பிற்கு இந்த இடது சாரி அரசியல்வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது..
அந்த விடயத்தை நோக்குவதற்கு ஒரு முன்னோடியாக திரு எஸ் சி சி அந்தோனிப்பிள்ளையின் வரலாறு ஒரு உசா  துணையாக இருக்கும் என்று கருதுகிறேன்  

இந்திய, இலங்கை, பர்மிய போல்செவிக்-மார்க்சியக் கட்சி 1948 இல்  இந்திய சோசலிசக் கட்சியுடன் இணைந்ததை அடுத்து அந்தோனிப்பிள்ளையும் அக்கட்சியில் சேர்ந்து .[
1948 முதல் 59 வரை சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தார்.

1952 முதல் 1957 வரைசென்னை சூளை மேடு சட்டமன்ற உறுப்பினராக MLA  இருந்தார்.
1956 இல் லோகியா சோசலிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார்.
இக்கட்சியின் சார்பாக சுயேச்சை வேட்பாளராக 1957 இல்  வட சென்னை மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்