Sunday, September 25, 2022

திரு . எஸ்.சி.சி அந்தோனிப்பிள்ளை ( யாழ்ப்பாணம்) சென்னை சூளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - வட சென்னை மக்களவை உறுப்பினர்

ஈழநாடு - யாழ்ப்பாணம் . 22 02 -1962

 ராதா  மனோகர் எஸ்.சி.சி அந்தோனிப்பிள்ளை ( யாழ்ப்பாணம்) சென்னை  சூளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - 1952–1957.
வட சென்னை  மக்களவை உறுப்பினர் 1957–1962
இவரின் முழுப்பெயர் செபஸ்தியான் சிரில் கான்ஸ்டன்டைன் அந்தோனிப்பிள்ளை (Sebastian Cyril Constantine Anthony Pillai, ஏப்ரல் 27, 1914 – ஆகஸ்ட் 16, 2000)
இலங்கை இடது சாரித்தலைவராகவும் பின்பு இந்திய இடதுசாரி தலைவராகவும் இருந்த ஒரு சுவாரசியமான அரசியல் வரலாறை கொண்டிருப்பவர்
யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் யாழ் சென்ட் பற்றிக்ஸ் கல்லூரியில் கற்றார்.பின்பு  இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து வரலாற்றில் பட்டம் பெற்றார். பின்னர் இலண்டன் கிங்ஸ்  கல்லூரியில்  படித்தார். 

இவரை பற்றி ஒரு முக்கிய கோணத்தில் ஆய்வு செய்யவேண்டிய தேவை இருக்கிறது .
மறைந்த இலங்கை ஜனாதிபதி திரு ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் இவரை பற்றியும் அந்த காலத்து இலங்கை இடது சாரிகள் பற்றியும் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்
இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பிற்கு இந்த இடது சாரி அரசியல்வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது..
அந்த விடயத்தை நோக்குவதற்கு ஒரு முன்னோடியாக திரு எஸ் சி சி அந்தோனிப்பிள்ளையின் வரலாறு ஒரு உசா  துணையாக இருக்கும் என்று கருதுகிறேன்  

இந்திய, இலங்கை, பர்மிய போல்செவிக்-மார்க்சியக் கட்சி 1948 இல்  இந்திய சோசலிசக் கட்சியுடன் இணைந்ததை அடுத்து அந்தோனிப்பிள்ளையும் அக்கட்சியில் சேர்ந்து .[
1948 முதல் 59 வரை சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தார்.

1952 முதல் 1957 வரைசென்னை சூளை மேடு சட்டமன்ற உறுப்பினராக MLA  இருந்தார்.
1956 இல் லோகியா சோசலிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார்.
இக்கட்சியின் சார்பாக சுயேச்சை வேட்பாளராக 1957 இல்  வட சென்னை மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்

 1961 இல் ஈ வே கி சம்பத்தின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சியில் சேர்ந்தார்.
 1964 இல் ஈ வே கி சம்பத்தின் தமிழ்த் தேசியக் கட்சி இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்ததை அடுத்து அந்தோனிப்பிள்ளையும் காங்கிரசில் சேர்ந்தார்.
அந்தோனிப்பிள்ளை 1967 தேர்தலில் வடசென்னைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் காமராஜ் மொரார்ஜி போன்றவர்களோடு உருவான  சிண்டிகேட்  காங்கிரஸ்  கட்சியில் இணைந்தார்.

இவர் லண்டனில் கல்வி கற்று கொண்டிருந்த காலக்கட்டங்களில்  இந்தியா லீக் என்ற அமைப்பிலும், இலங்கை மாணவர்களின் மார்க்சிய படிப்புக் கழகத்திலும் முக்கிய உறுப்பினராக இருந்தார்.
இலங்கை இடது சாரி தலைவர்களில் ஒருவரான லெஸ்லி குணவர்தனவின் சகோதரி கரோலின் குணவர்தனவை (சிங்கள பெண்)  திருமணம் செய்தார்
இவருக்கு மகேந்திரன், ரஞ்சித், நளின் ரஞ்சன், சுரேஷ்குமார் நான்கு பிள்ளைகள் உள்ளனர்
எஸ் சி  சி அந்தோனிப்பிள்ளை லண்டனில்  இருந்து இலங்கை திரும்பி   என் எம் பெரேரா  பிலிப் குணவர்தன லெஸ்லி குணவர்தன போன்ற தலைவர்களோடு சேர்ந்து லங்கா சம சமாஜ கட்சியில் இயங்கினார்

மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்களிடையே பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு  சமசமாசக் கட்சி தலைமையகம் அந்தோனிப்பிள்ளையையும், கரொலைனையும் மலையகத்திற்கு அனுப்பியது
1939 இல் இரண்டாம் உலகப் போர் சூழ்ந்த போது இலங்கை இடதுசாரிகள் அதை மேற்கு நாடுகளுக்கு எதிரான ஒரு வாய்ப்பாக கருதினர்
இதன் காரணமாக 1940 இல் சம சமாஜ கட்சி தடை செய்யப்பட்டது. கட்சித் தலைவர்கள் கொல்வின் ஆர். டி சில்வா, பிலிப் குணவர்தனா, என். எம். பெரேரா, எட்மண்ட் சமரக்கொடி ஆகியோர் 1940 சூன் மாதத்தில் கைது செய்யப்பட்டனர்.
1942 ஏப்ரலில், சிறை ஊழியர்கள் உதவியால்  கொல்வின் ஆர். டி சில்வா, என். எம். பெரேரா ஆகியோர்  தப்பிச் யாழ்ப்பாணம் சென்றனர்.அங்கிருந்து  இரகசியமாக படகில் இந்தியாவுக்கு சென்றனர் \
1942 சூலையில் அந்தோனிப்பிள்ளை உட்பட சில தலைவர்கள் மீன்பிடிப் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர்.
எஸ் சி சி அந்தோனிப்பிள்ளையு வேறு சிலரும்  மதுரையில் தங்கி இந்திய, இலங்கை, பர்மிய போல்செவிக்-மார்க்சியக் கட்சியில் இணைந்தனர்
.அந்தோனிப்பிள்ளை அரசியல் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு இடம் மாறியது
bolshvik  leninist  party மத்தியக் குழு உறுப்பினராக 1944 முதல் 1948 வரை இருந்து பணியாற்றினார்.

1943 இல் அந்தோனிப்பிள்ளை சென்னைக்குக் குடிபெயர்ந்தார்\
 1944 இல் மதராஸ் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவரானார்.
 அதே ஆண்டு  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு "அரசுக்கு எதிரான பிரசுரங்கள்" வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டாண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

1946 இல் சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் அந்தோனிப்பிள்ளை இலங்கை திரும்பினார்.[2][4][5] சில நாட்களில் அவர் தனது குடும்பத்துடன் மீண்டும் தமிழ்நாடு திரும்பி மதராசு தொழிலாளர் ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
1947 மார்ச் மாதத்தில் வேலை நிறுத்தங்களை ஒழுங்கு செய்தமைக்காக அவரும் ஏனைய தொழிற்சங்கத் தலைவர்களும் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களது விடுதலையை வேண்டி ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் அந்தோனிப்பிள்ளை ஆந்திரப் பிரதேச சிறைச்சாலை ஒன்றுக்கு மாற்றப்பட்டார். மதராசு தொழிலாளர் ஒன்றியத்தை 1947 சூன் மாதத்தில் அரசு தடை செய்தது. வேலை நிறுத்தங்களும் கைவிடப்பட்டன.

அந்தோனிப்பிள்ளை தொழிற்சங்கத் தலைவராக 1946 முதல் 1975 வரையும் பின்னர் 1983 ஆம் ஆண்டிலும் இருந்து பணியாற்றினார்.
 1948 இல் இந்திய ஓவர்சீசு வங்கியின் தொழிலாளர் ஒன்றியத்தை ஆரம்பித்து அதன் தலைவராகவும் இருந்து பணியாற்றினார்.

சூளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - 1952–1957.
வட சென்னை  மக்களவை உறுப்பினர் 1957–1962

 2000 ஆம் ஆண்டு வரை இவர் அகில இந்திய துறைமுகத் தொழிலாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் இருந்தார்.
 அகில இந்திய போக்குவரத்துப் பணியாளர்களின் ஒன்றியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.[2][4] சென்னைத் துறைமுகத்தின் அறங்காவலர்களில் ஒருவராக 1954 முதல் 2000 ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார்.


1948 இல் இந்திய, இலங்கை, பர்மிய போல்செவிக்-மார்க்சியக் கட்சி இந்திய சோசலிசக் கட்சியுடன் இணைந்ததை அடுத்து அந்தோனிப்பிள்ளையும் அக்கட்சியில் சேர்ந்தார்.

 1948 முதல் 59 வரை சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தார்.

சென்னை, சூளை சட்டமன்ற உறுப்பினராக 1952 முதல் 1957 வரை இருந்தார்.[1][2] 1956 இல் லோகியா சோசலிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார்.

 1957 முதல் 1962 வரை வட சென்னை மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961 இல் தமிழ்த் தேசியக் கட்சியில் சேர்ந்தார்.

1964 இல் தமிழ்த் தேசியக் கட்சி இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்ததை அடுத்து அந்தோனிப்பிள்ளையும் காங்கிரசில் சேர்ந்தார்.

அந்தோனிப்பிள்ளை 1967 தேர்தலில் வடசென்னைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2] இந்திய தேசிய காங்கிரசு பிளவடைந்த போது அந்தோனிப்பிள்ளை காமராசரின் நிறுவன காங்கிரசு கட்சியில் இணைந்தார்.

அந்தோனிப்பிள்ளை 2000 ஆம் ஆண்டு ஆகத்து 16 இல் சென்னையில் தனது 86வது அகவையில் காலமானார்.




No comments:

Post a Comment