Tuesday, November 8, 2022

மூதூர் தமிழரசு வேட்பாளருக்கு இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் ஆதரவு - சுதந்திரன் - 10 - 6 - 1962


மூதூர் அபேட்சகருக்கு இ தி மு க ஆதரவு . சுதந்திரன் - 10 - 6 - 1962
ஒன்று சேர்ந்து பாடுபட தொண்டைமானுக்கு வற்புறுத்து
வடகிழக்கு மாகாண தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து திரு .தொண்டமான் ஒத்துழைத்து , தமிழ் பேசும் இனத்தின் விடுதலைக்காக பாடுபடவேண்டும். இல்லையேல் பாராளுமன்ற பதவியில் இருந்து விலகி விடவேண்டும் இ தி மு க பொதுக்குழு வற்புறுத்தி உள்ளது.
நாவலப்பிட்டியில் நடந்து பொதுக்கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூதூர் உபதேர்தலில் தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜனாப் முகம்மதலியை ஆதரிப்பதெனவும் இக்குழு தீர்மானித்துள்ளது.
தி மு க தொழிற்சங்கம் !
பொதுச்செயலாளர் திரு . இளஞ்செழியன் பேசுகையில் , மலையகத்தில் வாழும் 10 லட்சம் தமிழ் பேசும் தொழிலாளர்களின் நல உரிமைகளை பாதுக்காக்க இ தி மு க அமைக்கும் தொழிற்சங்கமே வழிவகுக்கும் என்று கூறினார்.
பத்திரிகை மசோதாவை கண்டித்தும்  நாடற்றவர் பிரச்சனை தீரும்வரை இலங்கையரை தோட்டங்களில் வேலைக்கமர்த்தும் மசோதாவை அரசாங்கம் கைவிடவேண்டும் என்றும், நாடற்றவர் மாநாடு கூடுவதென்றும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தோட்டத்தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு சிறந்த முறையில் ஒரு பெரும் தொழிற்சங்கத்தை நிறுவுவதெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
மறைந்த தலைவர் கே ஜி எஸ் நாயருக்கும் , பிரதமரின் தாயார் மறைவுக்கும் அனுதாபம் தெரிவிக்கும் தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது  



No comments:

Post a Comment