Sunday, March 12, 2023

யாழ்ப்பாணம் - ராஜேந்திர பிரசாத் வீதி் சுதந்திரன் 1959 :

ராதா மனோகர்  : இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் இலங்கை விஜயம்
இந்திய வம்சாவளி தமிழன் கழுத்தில் கத்தி
அதே வேளையில் ராஜேந்திர பிரசாத்துக்கு அமோக வரவேற்பு
இருநாட்டின் நல்லுறவு பற்றி இனிப்பான பேச்சு வேற . வேடிக்கை இல்லை?
இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஆறுநாள் விஜயத்தை முடித்து கொண்டு கடந்த 22 ஆம் திகதி தாய்நாடு திரும்பிவிட்டார்
நாமும் இந்த சந்தர்ப்பத்தில் நடந்தவற்றை எல்லாம் திரும்பி பார்ப்பது  நலம் அல்லவா?
ஜனாதிபதிக்கு இலங்கையில் அளிக்கப்பட்ட மகோன்னதமான  வரவேற்பு பிரமாதம் . இலங்கை அரசும் மக்களும் அவருக்கு அளித்த வரவேற்பில் பார்க்க யாழ்ப்பாணத்தில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு அளித்த வரவேற்பு சொல்லும் தரமன்று
இது பற்றி அன்றய சுதந்திரன் பத்திரிகையில் இருந்த கட்டுரையின் சில பகுதிகள் பின்வருமாறு
யாழ்ப்பாணத்தில் ஏக தடல்புடல்!
யாழ்ப்பாணத்து மக்கள் ராஜேந்திர பிரசாத்தை திக்குமுக்காட செய்துவிட்டார்கள்   .  தாய்நாடு செல்லும் வழியில் ஒரு சில மணிநேரம் மட்டும் யாழ்ப்பாணத்தில் தாங்கும் தமக்கு அத்தனை தடல்புடல்கள் செய்யப்பட்டிருக்கும் என்று அவர் கனவிலும் எண்ணியிருக்க மாட்டார்.
வீதியெங்கும் அணிவகுப்பு என்றுதான் சொல்லவேண்டும்.  கும்பிட்ட கைகளை குலைத்து கொள்ளவோ அல்லது வரவழைத்த புன்முறுவலையா பிழைத்து போ என்று விட்டுவிடவோ சந்தர்ப்பம் இல்லை. சங்கடமான நிலை.
ஆஹா இவர்கள் அல்லவா தமிழர்கள்.
நகர மண்டபத்தில் தம்மை பற்றி மேயர் துரையப்பா பேசியதை எல்லாம் டாக்டர் பிரசாத் கேட்டபோது  தாம் உண்மையில் மேயர் வருணிக்கும் மனிதர்தானா என்ற ஐயம் அவருக்கு எழுந்ததோ என்னவோ. ஒரு மாதிரியாக இருந்தார்.  
தமிழ்நாடு தமிழர்களுக்குதான் என்னை பிடிக்கவில்லை இந்த யாழ்ப்பாண தமிழர்கள் எவ்வளவு பக்தி விசுவாசத்தோடு இருக்கிறார்கள்.  ஆஹா இவர்கள் அல்லவோ தமிழர்கள்.என்று அவர் எண்ணியிருக்கலாம்.
நகரசபை வரவேற்புக்கு அவர் பதிலளிக்கையில்,
யாழ்ப்பாணத்துக்கு நான் வராமல் போயிருந்தால் எனது இலங்கை விஜயம் பூர்த்தியாகி இருக்காது  என்று கூறினார் . இந்த ஒரே வாக்கியத்தில் யாழ்ப்பாண மக்களின் வரவேற்பு உபசாரம் எப்படி பிரசாத்தை கவர்ந்தது என்பதற்கான விடை அடங்கி இருக்கிறது  
ஜனாதிபதி கலந்து கொண்ட வைபவங்களில் எல்லாம் எந்த நிலைமையிலும் சகிப்பு தன்மை வேண்டும் என்று வற்புறுத்தியதை விட, இந்தியா இலங்கை ஆகிய இருநாடுகளிலும் உள்ள பிரச்சனைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை என்றும்
இருநாடுகளும் நேச மனப்பான்மையோடு முன்னேற்றம் நாடி கடினமாக உழைக்கவேண்டும் என்றும் கூறினார்.
ஜனாதிபதிக்கு உபசார வார்த்தைகள் கூறியவர்கள் ஒரு விஷயத்தை நன்கு வலியுறுத்தினார்கள்.
அதாவது இந்திய சுதந்திர போரில் மகாத்மா காந்தி ஈடுபட்டிருந்தசமயம் அவருக்கு பக்கத் துணையாக இருந்து பணியாற்றிய தியாகிகளின் பிரசாத்தும் ஒருவர் என்பதை ஞாபகப்படுத்தினார்கள்.
 இந்தியா சுதந்திரம் தொடர்ந்துதான் இலங்கையும் சுதந்திரம் அடைந்தது என்றும் சொன்னார்கள் .
இந்த விடயத்தில் சொல்லவேண்டிய இரண்டோரு விஷயங்கள் விடுபட்டு போனது ஒரு குறை.
சுதந்திர இந்தியாவில் அதுவும் தென்னாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரையில்.
மேன்மை தங்கிய தங்களின் நேரு அரசாங்கம் அனுஷ்டிக்கும் பாரபட்ச கொள்கையைத்தான் நமது பண்டா இலங்கை அரசாங்கமும் இங்கு பின்பற்றுகிறது.
 இந்தியை எல்லோரினதும் தொண்டைக்குள் கரைத்து ஊற்ற தங்கள் அங்கு தீவிரமாக முனைந்து வருகிறீர்கள்
நாமும் இங்கு அப்படித்தான் சிங்களத்தை எதுவிதத்திலும் தமிழனிடம் திணித்து விட நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள பழந்தமிழ் ஊர்களுக்கெல்லாம் வட நாட்டானின் பெயர்களை சூட்டி வருகிறீர்கள்.  டால்மியாபுரம் சாகுபுரம் இவற்றை எல்லாம் பிரசவித்து இருக்கிறீர்கள்.....
இந்த செய்தி கட்டுரை அன்றைய இலங்கையின் பலவிதமான அரசியல் செய்திகளையும் சமூக உழவியலையும் பற்றி ஒரு தெளிவான பார்வையை கொண்டிருக்கிறது  
மூல கட்டுரையில் இருந்த சில பகுதிகளை மட்டுமே இங்கு நான் குறிப்பிட்டு இருக்கிறேன்
நான் கல்வி பயின்ற யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் முன் வீதியின் பெயர் திரு ராஜேந்திர பிரசாத் ட்ரைவ் என்பதாகும்  இந்த பெயர் எப்படி இவ்வீதிக்கு வந்தது என்பது எனக்கு நெடுநாட்களாக தெரியவில்லை
இலங்கை மண்ணுக்கோ யாழ்மண்ணுக்கோ அல்லது தமிழுக்கோ எந்த விதத்திலும் தொடர்பே இல்லாத ஒருவர்  . அதுமட்டுமல்ல அந்தக்காலத்தில் தமிழ்நாட்டில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த இந்தி திணிப்பின் மூலகர்த்தாக்களாகவே செயல்பட்ட ஒருவரின் பெயரை யாழ் நகரின் மிக மிக முக்கியமான ஒரு வீதிக்கு வைத்திருக்கிறார்கள் நமது யாழ் மேட்டுக்குடி முன்னோர்கள் . பின்பு ஒரு சில வருடங்களுக்கு முன்பு அப்பெயரை மாற்றிவிட்டார்கள்
பகுத்தறிவும் சமூகநீதி பார்வையும் கொண்ட அசல் திராவிட கருத்தியலாளரான
அமரர் திரு எஸ் டி சிவநாயகம் அவர்கள் அன்றைய காலக்கட்டங்களில் சுதந்திரன் பத்திரிகையில் எழுதிய பல கட்டுரைகள்  செய்தி குறிப்புக்கள் பெறுமதி வாய்ந்த ஆவணங்கள் ஆகும்

No comments:

Post a Comment