ராதா மனோகர் திரு அருணாசலம் மகாதேவா 5 October
Arunasalam Mahadeva |
1885 இல் மாத்தறையில் பிறந்தார் 8 June 1969 இல் 83 வயதில் காலமானார்! இவர் சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் மகனாவார்
1924–1930 காலப்பகுதிகளில் மேல் மாகாணத்தின் பிரதிநிதியாக Legislative Council of Ceylon Western Province Tamil
பணியாற்றினார்.
அதன் பின்பு யாழ்ப்பாணத்தின் பிரதிநிதியாக Member of the State Council of Ceylon 1934–1947 காலப்பகுதிகளில் பணியாற்றினார்.
பிரிடிஷ் அரசு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கும் காலக்கட்டமான 1942–1946 இல் இலங்கையின் உள்துறை அமைச்சராக பணியாற்றினார்.
இவர் ஐக்கிய தேசிய கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகும்
1947 இல் நடந்த முதல் சுதந்திர இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தொகுதியில் போட்டியிட்டார்
அதே தொகுதியில் போட்டியிட்ட திரு ஜி ஜி பொன்னம்பலம் வெற்றி பெற்றார்
அத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை பெறவில்லை . ஆனாலும் பல சுயேச்சை அங்கத்தவர்களின் துணையோடு ஆட்சியை அமைத்தது.
சுதந்திர இலங்கையின் முதல் இந்திய தூதரக திரு அருணாசலம் மகாதேவா அவர்களை பிரதமர் டி எஸ் சேனநாயாக நியமித்தார்.
அந்த பொறுப்பில் இரு வருடங்கள் பணியாயாற்றினார்.
அதன்பின்பு இரு வருடங்களுக்கு இலங்கை பொதுநிர்வாக சேவை ஆணையராக சில வருடங்கள் பணியாற்றிறினார்.
தனது இறுதிக்காலத்தில் இவர்களின் குடும்ப கோயிலான கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் தர்மகர்த்தாகவும் சைவ பரிபாலன போசகராகவும் விவேகானந்தா சபை போசகராகவும் பணியாற்றி 1969 கொழும்பில் காலமானார்.
இவரது மகன் பாலகுமார் மகாதேவா கொழும்பு பல்கலை கழகத்தில் விரிவுரையாளராகவும் இலங்கை நிர்வாக சேவையிலும் பணியாற்றினார்.
பல அமைச்சுக்களின் செயலாளராகவும் தொடர்ந்து பணியாற்றினார்
திரு பாலகுமார் மகாதேவா அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு
இவரின் மகன் (அதாவது சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் கொள்ளு பேரன்) விஜயராஜகுமார் பாலகுமார் மகாதேவா இலங்கையிலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மிக பெரிய தொழில் அதிபராகும்
Wijeyaraj Kumar Mahadeva sri Lankan American businessman. He is the founder, and original chairman and chief executive officer (CEO), of Cognizant Technology Solutions.
He was the CEO of Cognizant from 1994 to 2003
Wijeyaraj Kumar Mahadeva held senior positions at the BBC, McKinsey, AT&T, and Dun & Bradstreet.
பொன்னம்பலம் ராமநாதன் அருணாசலம் குமாரசாமி குடும்பத்தின் இன்றைய வாரிசான இவர் பல வங்கிகளுக்கும் கம்பனிகளுக்கும் நிர்வாக குழுவில் பொறுப்பில் உள்ளார்
திரு அருணாசலம் மகாதேவா அவர்களின் குடும்பமானது தஞ்சாவுர் பாரம்பரிய தொடர்பு உள்ள மிகப் பெரிய குடும்பமாகும்
இவர்கள் ஒரு போதும் இலங்கையை சிங்களவர்கள் தமிழர்கள் என்று பிரித்து பார்த்ததே இல்லை.
குறிப்பாக தென்னிலங்கையில் இவர்களின் வீடுகள் பண்ணைகள் முதலீடுகள் வியாபாரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாகவே செழித்தோங்கின.
வடபகுதியிலும் பள்ளிக்கூடங்கள் கோயில்கள் போன்றவற்றை கட்டி சைவ பாரம்பரிய கல்வியை வழங்கினார்கள்
இலங்கை சுதந்திரம் அடைந்த காலக்கட்டங்களில் மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்ற கோஷங்கள் தென்னிலங்கையில் மெதுவாக எழுந்தபோதெல்லாம் இவர்களின் கருத்துக்கள் எப்படி இருந்தன என்ற விடயம் பொதுவெளியில் இன்றுவரை மௌனமாகவே இருக்கிறது.
மலையக மக்களின் வாக்குரிமை பறிக்க பட்ட போது இலங்கையின் இந்திய தூதராக திரு அருணாசலம் மகாதேவாவே டெல்லியில் கடமையாற்றினார்.
மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பு பற்றி இந்திய அரசோ அந்த காலங்களில் வாயே திறக்கவில்லை
இது பற்றி எந்த காலத்திலும் திரு அருணாசலம் மகாதேவா ஏதாவது கூறினாரா என்று தேடிப்பார்க்கவேண்டும்
இவற்றை எல்லாம் விட பெரிய வேடிக்கையான விடயம் திரு எஸ் ஜெ வி செல்வநாயகம் - நாகநாதன் போன்ற தமிழரசு கட்சியினர் இவரை பற்றியோ இவரின் அரசியல் செல்வாக்கு பதவிகள் பற்றியோ ஒரு போதும் பேசியதே இல்லை.
மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பில் மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் பலர் ..
அதிலும் முழு இலங்கையின் பொருளாதாரத்தையே கட்டி ஆண்ட நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மற்றும் நாடார்கள் மார்வாடி முதலாளிகள் போன்றவர்கள் இந்த விடயத்தில் எந்த பக்கம் நின்றார்கள் என்ற கேள்வியை இதுவரையில் யாரும் கேட்கவே இல்லை.
மலையக வாக்குரிமை பற்றி பேசிய இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் ஒரே குரலில் எஸ் ஜெ வி செல்வநாயகத்தின் ஜி ஜி பொன்னம்பலம் துரோகி என்ற கோஷ்டி கானத்தையே உரத்த குரலில் பாடினார்கள்
தப்பி தவறியும் வேறு கோணத்தில் எந்த காலத்திலும் இதை அணுகவே இல்லை.
அன்று மலையக மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற சிங்கள இடதுசாரிகளின்,
வரலாற்று துரோகத்தை மறைப்பதில் அவர்களுக்கு துணைபோன எஸ் ஜெ வி செல்வநாயகம். திரு ஜி ஜி பொன்னம்பலத்தை அரசியல் அரங்கில் இருந்து அகற்றி இலங்கை தமிழர்களின் ஏக போக அரசியல் கட்சியாக தனது தமிழரசு கட்சியை வளர்க்க வேண்டும் என்பதுதான்.
1956 இல் இருந்து தமிழ் காங்கிரஸ் தேய்பிறையாகி தமிழரசு கட்சி எஸ் ஜெ வி செல்வநாயகத்தின் திட்டத்திற்கு ஏற்ப வளர்ந்தது
அதன் பின்பு மலையக வாக்குரிமை பற்றி தமிழரசு கட்சி அவ்வப்போது பொழுது போக்காக பேசியதை தவிர வேறெதையும் செய்யவே இல்லை.
இன்னும் பல செய்திகள் இருக்கின்றன,
இது ஒரு சாதாரண குறிப்பு மட்டுமே!
Mr.Wijaraja Kumar Mahadeva |
Mr Balakumar Mahadeva |
No comments:
Post a Comment