Sunday, March 12, 2023

1928 ஜனவரி 28 சுன்னாகம் யாழ்ப்பாணம்- ஸ்ரீ பூ .சின்னத்தம்பி - "பார்பனரின் படுமோசமும் பாரத மக்களின் பரிதாபமும்"

No photo description available.
இது ஒரு வரலாற்று ஆவணம் என்ற கருத்தில் மட்டுமே பதிவிட்டுள்ளேன்  
பார்ப்பனர் மீதான ஒரு வெறுப்பாக இதை கருதவேண்டாம் என்று அன்போடு வேண்டிக்கொள்கிறேன்
திராவிடன்  1928 ஜனவரி 28 சுன்னாகம் யாழ்ப்பாணம்
மதிப்புரை :    ஸ்ரீ பூ .சின்னத்தம்பி அவர்களால் இயற்றப்பெற்ற  பார்பனரின் படுமோசமும் பாரத மக்களின் பரிதாபமும் என்னும் சிறிய நூல் வரப்பெற்றோம்

இது மக்கள் யாவருக்கும் இன்றியமையாது வேண்டப்படும் ஒரு முறையை அனுசரித்தே எழுதப்பட்டிருக்கிறது .
பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை எடுத்து காட்டியிருக்கிறது.
தேவையானோர் ஆக்கியோனுக்கு எழுதி பெற்று கொள்ளலாம்.
விலாசம் : பூ சின்னத்தம்பி, வீமன்காமம் யாழ்ப்பாணம்
மொடேர்ன் சப்பிளை கம்பனி . செந்துல்  எப் எம் எஸ்

Radha Manohar
பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் தமிழ்நாட்டில் தோன்றிய அந்த காலக்கட்டங்களில் இப்படி ஒரு புத்தகம் இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் வெளியாகி இருந்தது என்ற செய்தி மிகவும் முக்கியமானதாகும்.
இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் திராவிடம் என்றே சொல்லே கிடையாது என்பவர்களின் கருத்த்தை வரலாறு தூள் தூளாக நொறுக்கி கொண்டிருப்பதை அறிவீர்கள்
அதன் இன்னொரு உசாத்துணையாகதான் இந்நூல் பற்றிய செய்தியும் வெளியாகி இருக்கிறது.
இந்நூல் இப்போது எங்கே இருக்கிறது எந்த காலத்திலாவது இது வெளியுலகிற்கு வருமா என்பதுவும் தெரியாது
ஆனால் இந்த திராவிட கருத்துக்கள் தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் ஓங்கிய காலத்திலேயே யாழ்ப்பாணத்திலும் எதிரொலித்தது
அது மட்டுமல்ல திராவிட கருத்தை முன்னேத்த பெரியோர்கள் பலரும் இருந்தனர் அமைப்புக்களும் இருந்தன.
திராவிடன் என்ற மாத பத்திரிகையையும் சுமார் நான்கு ஆண்டுகளாக வெளிவந்தது
இப்படியாக உத்வேகத்தோடு எழுந்த அந்த திராவிட இயக்கம் பின்பு எப்படி காணாமல் ஆக்கப்பட்டது என்பதுதான் இங்கே நாம் கவனிக்க படவேண்டியதாகும்
மதவாதிகளுக்கும் ஜாதிவாதிகளுக்கும் திராவிடம் என்ற சொல் அப்படி ஒரு வெறுப்பை ஏன் கொடுத்தது?
பலரும் கூட்டணி அமைத்தே திராவிடத்தை அங்கு துரத்தி இருக்கிறார்கள்
அந்த கருத்துக்கள் அங்கு இருந்ததற்கான அத்தனை சாட்சியங்களையும் கவனமாக தேடி தேடி அழித்திருந்தனர்.
ஆனாலும் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் உதயசூரியனை மறைக்க முடியாதல்லவா?
அந்த சூரியனின் கதிர்கள் இன்னும் வரும்

No comments:

Post a Comment