ராதா மனோகர் : இவர்தான் செல்லையா தனபாலசிங்கம் இவரது இயக்க பெயர் மாதவன்
இவரது செல்லப்பெயர் செட்டி
இலங்கை போராட்ட வரலாற்றை எழுதும் எவரும் தப்பி தவறியும் மறந்து விட கூடாத பெயர்தான் செட்டி தனபாலசிங்கம்!
அத்தனை ஈழவிடுதலை இயக்கங்களுக்கும் சரி இலங்கை அரசுக்கு எதிரான கொரில்லா போர் முறைக்கும் சரி வழிகாட்டி இவர்தான் முன்னோடியும் இவர்தான்.
இலங்கை தமிழர்களின் அரசியல் ஆயுத போராட்டமாக உருமாறிய போது அதன் முதல் அடியை எடுத்து வைத்தவர் திரு செட்டி தனபாலசிங்கம் அவர்கள்தான்
மிக இளமையில் தவறான வழியில் சென்று சிறு சிறு குற்றங்களுக்காக பிடிபட்டு சிறுவர் நன்னடத்தை பள்ளிக்கூடங்களில் இளமை காலத்தை கழித்தார்
அதன் காரணமாகவோ என்னவோ ஊரில் ஒரு வித்தியாசமான இளைஞனாக வலம் வந்தார்.
சுயமரியாதை அற்ற மனிதர்கள் மொழியின் பெயராலும் ஜாதி மதங்களின் பெயராலும் வர்க்கத்தின் பெயராலும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள் Self Respect - Social Justice - Free Thinking
Thursday, July 30, 2026
செட்டி தனபாலசிங்கம் புலிகள் இயக்கத்தின் நிறுவனர் பிரபாகரனின் குருநாதர்
Friday, July 24, 2026
யாழ்ப்பாணம் என்பது வெறும் ஒரு ஊரின் பெயர் என்று மட்டுமா? Loaded with pride and prejudice?
ராதா மனோகர் : யாழ்ப்பாணம் என்பது வெறும் ஒரு ஊரின் பெயர் என்று மட்டும் நீங்கள் கருதினால் அதனுள்ளே மறைந்திருக்கும் பல விடயங்கள் உங்களுக்கு தெரியாமலேயே போய்விடும்
சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக செல்வா செழிப்போடு விளங்கியது யாழ்ப்பாணம்
தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு வியாபார சந்தையாக யாழ்ப்பாணம் இருந்ததுதான் அந்த பொருளாதார செழிப்புக்கு உரிய முக்கிய காரணம்
அடுத்ததாக போர்துக்கீச ஒல்லாந்து பிரித்தானியர்களின் கிழக்கிந்திய கம்பனிகளின் ஒரு முக்கிய வர்த்தக கேந்திரமாகவும் யாழ்ப்பாணம் இருந்தது
மாலைதீவில் இருந்து ஏற்றுமதியாக வேண்டிய சிப்பி குறிப்பாக (கடல்) சோகி போன்ற பொருட்களை யாழ்ப்பாணம் கொண்டுவந்து சந்தை படுத்துவார்கள் . அங்கிருந்து ஐரோப்பியர்கள் அவற்றை வாங்கி உலகம் முழுவதும் குறிப்பாக கடல் சோகிக்கு ஜப்பானில் பெரும் சந்தை இருந்தது
Thursday, July 23, 2026
வெண்ணை திரண்டு வரும்போது பானையை உடைக்கும் டக்ளஸ் தேவானந்தா
ராதா மனோகர் : வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கான ரெசிடெண்ட் கார்ட்!
இலங்கைக்கு வந்து போகவும் நிரந்தரமாக தங்கவும் தொழில்களை அல்லது வியாபாரங்களை செய்யவதற்கும் உரிய வதிவிட அட்டை!
இது வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக பலரும் கோரிக்கைகள் விடுத்து கொண்டே வந்துள்ளார்கள்
எனக்கு தெரிந்த சிலர் இதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள்
இவர்களின் இந்த முயற்சிக்கு அரசு தரப்பிலும் இதர அரசியல் கட்சிகளிடையேயும் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது.
விரைவில் இது அமுலுக்கு வரும் என்றும் தெரிகிறது!
நிலைமை இப்படி இருக்க வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று திரு டக்ளஸ் தேவானந்தா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்!
இது வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைக்கும் செயலாகும்.
இவரின் இந்த வாக்குரிமை கோரிக்கையானது வெளிநாட்டு இலங்கையர்களுக்கான ரெசிடெண்ட் கார்ட் வழங்கலை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. .
Tuesday, July 21, 2026
நாதஸ்வர இசையின் மென்மையை மழுங்கடித்து ஒப்பாரியாக மாற்றிய சைவ வைணவ மதவாதிகள்
ராதா மனோகர் : பல கர்நாடக சங்கீத விற்பன்னர்கள் உள்ளூர ஹிந்துஸ்தானி இசையை அதிகமாக விரும்புவார்கள்
ஒரு ரகசிய ரசனை போல ஹிந்துஸ்தானி ராகங்களையும் கஸல் போன்ற ஹிந்துஸ்தானி இசை வடிவங்களையும் உள்ளூர ரசிப்பார்கள்
ஆனாலும் பாடல் உருப்படிகள் கர்நாடாக இசையில்தான் அதிகமாக உள்ள காரணத்தால் கர்நாடக இசைக்கலைஞர்களாக தொடர்கிறார்கள்
தமிழ் நாதஸ்வர வித்வான்களிடம் அழகியலோடு வளர்ந்த இசையை சைவ வைணவ வழிபாட்டு கோஷ்டி கைப்பற்றி அந்த இசையையே ஒரு கர்நாடக வழிபாட்டு மந்திரமாக மடைமாற்றி விட்டார்கள்.
இதன் காரணமாக நாதஸ்வர இசையில் இருந்த காதல் காமம் அன்பு போன்ற மென்மையான ரசனை பெரிதும் குறைந்து விட்டது
நாதஸ்வர இசையை கர்நாடக இசை என்று மடைமாற்றும் போதே அதன் இனிமை மறைந்து அது ஒரு வழிபாட்டு பக்தி அல்லது ஒப்பாரிக்கு நிகரான இசையாக மாறிவிட்டது
Thursday, July 16, 2026
OCI card holders இந்திய குடியுரிமையோடு இலங்கை குடிமக்களாக இருந்து இந்திய சேவையை செய்வார்கள்
ராதா மனோகர் : இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு இந்திய அரசு தேடி தேடி வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை வழங்குகிறது!
பூரண இலங்கை குடியுரிமை உள்ள இந்திய வம்சாவளி மக்களை மீண்டும் ஒரு அரை இந்தியர்களாக மாற்ற முயல்கிறது.
ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்களை இந்த திட்டத்தில் உள்வாங்க முடியும்
ஒரு வேளை அகண்ட பாரத கனவு திட்டமோ?
ஏற்கனவே இலங்கை அமைச்சரவையியே இந்திய குடியுரிமையாளர்கள் உள்ளனர்
இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள்?
அடிக்கடி அஜித் தோவாலை ( முன்னாள் ரா அதிகாரி+ இந்நாள் பாதுகாப்பு ஆலோசகர்) பகிரங்கமாகவே சந்திக்கிறார்கள்
ஆனால் தமிழகத்தில் உள்ள முகாம் வாழ் மக்களை ( 90 வீதம் இந்திய வம்சாவளி) இன்னும் அகதிகளாகவே இந்திய அரசு வைத்திருக்கிறது
இதே போன்றொதொரு திட்டத்தை வெளிநாட்டு வாழ் இலங்கை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் போது இந்த இந்திய குடியுரிமையாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்
அதாவது இலங்கை நாடாளுமன்றத்திலும் இலங்கை அமைச்சரவையிலும் கூட இந்த இந்திய குடியுரிமையாளர்கள் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்து கொண்டு இந்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்கள் போலும்!
Saturday, July 11, 2026
இலங்கையில் ஒரு மார்சிஸ்ட் ஆட்சியை உருவாக்க முடியும் என்று இடதுசாரிகள் நம்பியது ஏன்?
![]() |
ராதா மனோகர் சுதந்திர இலங்கையில் ஒரு மார்சிஸ்ட் ஆட்சியை உருவாக்க முடியும் என்று இடதுசாரிகள் நம்பியது ஏன்?
சிங்கள பெரும்பான்மை மக்கள் எப்போதும் பௌத்த சாசன அடிப்படையிலான ஒரு ஜனநாயகத்தைதான் தங்கள் அரசியல் கோட்பாடாக கொண்டுள்ளார்கள்
பௌத்த மதம் சாதாரண மக்களின் சிந்தனையை கட்டுப்படுத்துவதில் எப்போதும் வெற்றி கண்டே வந்திருக்கிறது.
இலங்கையின் அரசியல் நிலை இப்படி இருக்கையில் சுதந்திர இலங்கையின் முதல் தேர்தலில் ஆட்சியை எட்டி பிடித்திருக்க கூடிய அளவு இடதுசாரிகளால் எப்படி முன்னேற முடிந்தது என்ற கேள்வி இருக்கிறதல்லவா?
அது ஒன்றும் பெரிய மந்திரம் மாயம் கிடையாது
இந்திய வம்சாவளி மக்களை இந்திய தொழிற்சங்கங்களும் இந்திய இடதுசாரி இயக்கங்களும் ஆழமாக இடதுசாரி வாக்காளராக மாற்றி இருந்தார்கள்
தமிழகத்தில் இருந்து வந்த நடேசய்யர் முதலாக தொடர்ந்து வந்த அத்தனை பேர்வழிகளும் இடதுசாரி பிரசாரகர்களாகவே வந்தார்கள் ...பிரசாரம் செய்தார்கள் ... வென்றார்கள்.
Saturday, June 27, 2026
ஈ பி ஆர் எல் எப் இயக்கமும் அமெரிக்க தம்பதி கடத்தலும் EPRLF and Mr and Mrs Allen kidnaped
![]() |
ராதா மனோகர் : ஈ பி ஆர் எல் எப் இயக்கம் 1984 மேமாதம் ஸ்டான்லி மெரி ஆலன் தம்பதிகளை கடத்தியது ஒரு பாரதூரமான விடயம்!
இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை பற்றிய எந்த புரிதலும் அற்று வெறும் விளம்பர ஸ்டன்டாகதான் இந்த அமெரிக்க தம்பதிகளை கடத்தி இருந்தார்கள் என்றெண்ணுகிறேன்
விளம்பரம் என்னவோ கிடைத்தது ஆனால் அது ஒரு விடுதலைக்கானதாக இருக்கவில்லை ,
மாறாக ஒரு ஆட்டோ சங்கர் அல்லது சந்தனக்கடத்தல் வீரப்பன் போன்றவர்களுக்கு கிடைத்த விளம்பரத்திற்கு ஒப்பானதாகத்தான் இருந்தது
அவரை கடத்தும்போது அவர்களின் வீட்டில் இருந்த ஐம்பதினாயிரம் ரூபாய்களையும் பல டாகுயுமெண்டுகளையும் லெட்டர் பேட் பேப்பர்களையும் எடுத்து சென்றதாக பத்திரிக்கை செய்திகள் கூறின.
தம்பதிகளை விடுவிப்பதற்கு ஐம்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க கட்டிகளும் தமிழக சிறைகளில் உள்ள 20 தோழர்களின் விடுதலையும் கோரி இருந்தனர்
இதற்காக 72 மணித்தியாலங்கள் கெடுவும் விதித்தனர்
இலங்கையில் குடிநீர் திட்ட பணிகளுக்கு Akron-based Ruhlin company. He was project manager of a $4m fresh-water distribution system பொறுப்பேற்று வந்திருந்தார்கள்
அப்போது முதலமைச்சர் எம்ஜியார்
Tuesday, June 23, 2026
தமிழ் பல்கலை கழக இயக்கம் வளர்ந்த வரலாறு!
![]() |
![]() |
ராதா மனோகர் தமிழ் பல்கலை கழக இயக்கம் வளர்ந்த வரலாறு!
1956 ஆம் ஆண்டில் தனிச்சிங்கள சட்டம் நிறைவேற்றப்படட சூழ்நிலையில் இலங்கையில் தமிழ் பேசும் மக்களுடைய கலை கலாச்சாரத்தை பாரம்பரியத்தை சிதைத்து அவர்களுடைய தனித்தன்மையை அழித்து அவர்களை வேரோடு ஒழித்துகட்ட இந்த நாட்டிலே அன்று ஆட்ச்சிக்கு வந்தவர்கள் முனைந்து நின்ற வேளையிலே இந்த நாட்டிலே உள்ள தமிழ் பேசும் மக்கள் தமக்கு ஒரு அரசியல் இயக்கம் மாத்திரம் போதாது தமிழு பண்பாட்டை கலையை கலாச்சாரத்தை பேணிக்காக்க பூரணத்துவம் பெற்ற ஒரு பல்கலை கழகமும் அவசியம் வேண்டுமென்று எண்ணினார்கள்
இயக்கம் தொடங்கியது
இப்படி எண்ணியவர் ஒரு பல்கலை கழக இயக்கத்தையும் ஆரம்பித்தார்கள்
வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் திரு அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் மேலும் பேசும்பொழுது ,
இது எங்கள் கட்சியால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கம் அல்ல.
பல்கலை கழக பேராசிரியர்களாக இருந்த பேராசியர் சின்னத்தம்பி பேராசியர் எலியேசர் பேராசிரியர் மயில்வாகனம் அவர்கள் .
இன்று மலேசிய பல்கலை கழகத்தில் பேராசியாராகஇருக்கின்ற வணக்கத்திற்குரிய தனிநாயகம் அடிகளார் போன்றவர்கள்.
Monday, June 22, 2026
கச்ச தீவு - அணு ஆயுதம் - வெட்ஜ் பாங் - ஸ்ரீமா இந்திரா ஒப்பந்தம் ·
ராதா மனோகர் : தெற்காசியாவை அணு ஆயுத மற்றும் அணு சோதனைகள் அற்ற பகுதியாக அறிவிக்க இலங்கை மேற்கொண்ட முயற்சியும்,
கச்ச தீவு ஒப்பந்தமும்!
20 நாள் இடைவெளியில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகள் கூறுவதென்ன?
கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றிய புரிந்துணர்வுக்கு சில விடயங்களை ஆழமாக ஆய்ந்து பார்ப்பது அவசியம்.
குறிப்பாக தெற்கு ஆசியாவில் இலங்கையின் வகிபாகம் பற்றிய வரலாறு பற்றிய ஆய்வும் முக்கியமான தொன்றாகும்!
இலங்கை ஒரு சிறிய நாடக இருந்தாலும் அது பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது.
அதன் பழைய வரலாறும் சரி அண்மைக்கால வரலாறும் சரி நுட்பமாக கவனிக்க தக்கது
குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்தின் முக்கியமான ஒரு தளமாக காலனித்துவ காலங்களிலும் சரி இன்றும் சரி இலங்கை விளங்குகிறது.
இந்த கோணத்தில் சில விடயங்களை பாப்போம்!
இந்துமாக்கடல் பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை சுதந்திரம் அடைந்த காலங்களில் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளது.
May 1954 இல் தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடந்தது
Thursday, June 4, 2026
சுன்னாகம் திராவிடர் சங்க அங்கத்தவர்கள் பட்டியல் இது 11 ஆம் தேதி பெப்ருவரி மாதம் 1927 ஆம் ஆண்டு
ராதா மனோகர் ; : திராவிடன் பத்திரிகை
11 ஆம் தேதி பெப்ருவரி மாதம் வெள்ளிக்கிழமை
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர் சங்கத்தினால் இந்த திராவிடன் பத்திரிகை வெளியிடப்பட்டது
இந்த அமைப்பின் சார்பாகத்தான் திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம் ஆரம்பிக்கப்பட்டது
அச்சங்கந்தின் சார்பாக திராவிட வித்தியா சாலை என்ற பள்ளிக்கூடமும் நடத்தப்பட்டது
அச்சங்கத்தின் அங்கத்தவர்கள் பற்றிய விபரமான பட்டியல் இது
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம்
சங்கத்தின் தலைவர் அப்புக்காத்து ஸ்ரீமான் mr சு.ராசரத்தினம் அவர்கள்
சங்கத்தின் உபதலைவர்
ஸ்ரீ டி எஸ் நாகலிங்கம் அவர்கள் ஸ்ரீ கே முருகப்பா , ஸ்ரீ எம் .மண்டலம் அவர்கள்
சங்கத்தின் காரியதரிசிகள்
ஸ்ரீ பி கிருஷ்ணசாமி முதலியார் அவர்கள், ஸ்ரீ வி எஸ் பூதப்பிள்ளை அவர்கள்
சங்கத்தின் பொக்கிஷதாரர்கள் ஸ்ரீ வி எம் கந்தையா அவர்கள்
ஸ்ரீ கே மூத்தார் அவர்கள்
Tuesday, June 2, 2026
தமிழ் மொழி விதிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிங்கள இடதுசாரிகளின் கறைபடிந்த வரலாறு
![]() |
ராதா மனோகர் : இலங்கையில் எப்போதும் இடது சாரிகள் எனப்படுவோர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடுமையான சிங்கள இனவாதிகளாகவே செயல்பட்டுள்ளனர்
இவர்களுக்கு அவ்வப்போது முட்டு கொடுக்கும் வேலையை தமிழ் இடது சாரிகளும் செய்துள்ளனர்
இவர்கள் என்னதான் குத்தி முறித்து திரிபு வாதங்களில் ஈடுபட்டாலும் வரலாறு இவர்களை அம்பலமாகி கொண்டே வருகிறது
பச்சை இனவாதிகளான பண்டராநாயகக்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் அவர்களோடு சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கும் எதிராக விஷம் கக்கியதுதான் இலங்கை இடதுசாரிகளின் வரலாறு
அதிலும் இவர்களில் பலர் லண்டனில் படித்த அசல் மேட்டுக்குடி கனவான்கள்
இலங்கையின் முதல் இடதுசாரி அரசியல் கட்சியின் நிறுவனரான டாக்டர் என் எம் பெரேராவின் தமிழ் இன வெறுப்பு அரசியல் வரலாறு பற்றிய பதிவு இது
Monday, June 1, 2026
திமுகவை கைப்பற்ற வைகோவுக்கு உதவிய புலிகள்! பழி தீர்த்துக்கொண்ட வைகோ
ராதா மனோகர் : வைகோ ஒரு அயோக்கியர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை
ஆனால் அவரின் புத்திசாலித்தனத்தை என்னால் மெச்சாமல் இருக்கவும் முடியவில்லை
இவர் ஒரு அசல் ஆர் எஸ் எஸ் காரர்
திராவிட இயக்கத்திற்குள் ஊடுருவிய சனாதனவாதி
தனது சுயரூபத்தை மறைத்து புலிகளோடு உறவு கொண்டாடி அவர்களை மிக சரியாக இனம் கண்டு பயன்படுத்தினார்
அது ஓரளவு பயனளித்தது ஆனாலும் அதன் முழு பயனை இவர் அடையவில்லை
அந்த சோகம் வாழ்நாள் முழுவதும் இவருக்கு உண்டு ..பாவம்
புலிகளை பயன்படுத்தி திமுகவை கைப்பற்றும் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது என்றுதான் கூறவேண்டும்
அந்த முயற்சிக்கு புலிகளின் பூரண ஒத்துழைப்பை இவர் பெற்றுக்கொண்டமை இவரின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று எண்ணுகிறேன்
புலிகள் இவரின் திறமையை இவரின் செல்வாக்கை இவரின் விசுவாசத்தை எல்லாம் பூரணமாக நம்பினார்கள்
உலகில் எவருக்குமே உண்மையாகவோ விசுவாசமாகவோ இருந்து பழக்கப்படாத புலிகள் இவரிடம் உண்மையிலேயே விசுவாசமாகவே நடந்து கொண்டார்கள்
தங்கள் கஜானாவையும் விளம்பர வெளிச்சத்தையும் தாராளமாக வழங்கினார்கள்
Monday, May 18, 2026
யாழ் பொதுசன நூலக தீவைப்பு - வட்டுக்கோட்டை எம்பி தியாகராசா கொலை - யாழ் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல்!
![]() |
யாழ் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல்!
1981 மேமாதம் 30 ஆம் தேதி யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில்
தமிழர் விடுதலை கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது
யாழ் மேயர் ராஜா விசுவநாதன் பேசிக்கொண்டிருக்கிறார்.
அந்த கூட்டத்தில் பாதுகாப்பு கடமையில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்
அங்கிருந்த ஒரு தேநீர் கடை (bench) வாங்கில் நான்கு போலீசார் உட்கார்ந்து தேநீர் அருந்தி கொண்டிருக்கிறார்கள்
எங்கிருந்தோ வந்த சில தமிழ் பயங்கரவாதிகள் அந்த போலீஸ் மீது சரமாரியாக சுட்டு விட்டு தப்பி ஓடுவிடுகிறார்கள்.
அதில் புஞ்சி பண்டா என்ற சிங்கள சார்ஜன்டும் கனகசுந்தரம் என்ற தமிழ் சார்ஜன்டும் இறந்து விடுகிறார்கள்
கான்ஸ்டபில்கள் உஸ்மான் குலசிங்க ஆகியோர் மீதும் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. நல்வாய்ப்பாக அவர்கள் தப்பி விட்டார்கள்.
Sergeant Punchi Banda and constable Kanhagasuntharam died and constables Usman and Kulasinghe were wounded.
தமிழர் விடுதலை கூட்டணியால் ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட இந்த விஷ செடிகள்தான்,
தமிழர் விடுதலை கூட்டணி தேர்தல் ஆயுதங்கள்.
அதிலும் இவர்களில் தலைவராக இருந்தவர் முன்பு தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு கிளை செயலாளராக வேறு இருந்தவர்.
இதே நபர்கள் இந்த சம்பவத்திற்கு ஐந்து நாட்கள் முன்பாக (25 மேமாதம் 1981) வட்டுக்கோட்டை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆறுமுகம் தியாகராசாவை சுட்டு கொன்றிருந்தார்கள்.
திரு ஆறுமுகம் தியாகராசா அவர்கள் வட்டுக்கோட்டை இந்து கல்லூரி அதிபராக இருந்தவர். பின்பு தமிழ் காங்கிரஸ் சார்பில் (1970 இல்) வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை தோற்கடித்திருந்தார்.
Tuesday, April 21, 2026
வெறுப்பு அரசியலும் யாழ்ப்பாண அரசியலும்!
![]() |
ராதா மனோகர் : Prof. E.C.W. Ludowyke எழுதிய ஹி கம்ஸ் பிறோம் ஜாப்னா என்ற ஆங்கில நாடகம் இலங்கை நாடக வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு கலைப்படைப்பு
இந்த நாடகம் யாழ்ப்பாண சமூகத்தின் வாழ்வியலை கொஞ்சம் நகைச்சுவையாக வெளிக்கொண்டு வருவதில் பெரும் வெற்றி பெற்றது!.
அன்றாட வாழ்வியலில் காணப்படும் அடிப்படை பண்புகளை மிக நுணுக்கமாக அதே சமயம் மிக ஆழமாக காட்சி படுத்தியது
கடுமையான விமர்சனங்களையும் கூட நல்ல நகைச்சுவையால் இலகுவாக கடந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுகளாக இன்னும் அடிக்கடி மேடையேறும் பெருமை பெற்ற நாடகமாகும்!
கொஞ்சம் அசந்தாலும் இலகுவாக சமூக எதிர்ப்பை கிளறி விடக்கூடிய விடயங்கள் இதன் உள்ளடக்கமாக இருந்தது!
இந்த நாடகத்தில் மனிதர்கள் வந்து போயினர்! நல்லவர் கெட்டவர் என்று யாரும் வந்து போகவில்லை
அதன் காரணமாகவோ என்னவோ இந்நாடகம் மிக ஆரோக்கியமான சிந்தனை மட்டுமே தூண்டி விட்டது எனலாம்!
Sunday, April 19, 2026
திரு ஆலாலசுந்தரம் திரு தர்மலிங்கம் கொலையும் அந்நிய சக்தியின் சதியும்
ராதா மனோகர் : Saturday Review : If a man J.R. Jeyavardana threw out of parliament can be shot like this, where does that leave us?
dont we know who did this? Can you hide a pumkin in a bowl of rice?
1985 செப்டம்பர் 5 ஆம் தேதி இனம் தெரியாத போராளிகளால் மானிப்பாய் எம்பி தர்மலிங்கமும் கோப்பாய் எம்பி (Advocate) ஆலாலசுந்தரமும் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்
தமிழர் விடுதலை கூட்டணி எம்பிக்கள் உயிர் பயத்தில் தமிழகத்திலும் வேறு பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்
ஆனால் இந்த இருவர் மட்டும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து தமிழர் விடுதலை கூட்டணிக்கு உயிர் கொடுத்து கொண்டிருந்தார்கள்
![]() |
குறிப்பாக யாழ் வரும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உலக ஊடக நிருபர்கள் போன்றவர்களோடு கலந்து பேசி போரில் பாதிக்கப்படும் மக்களின் விடயங்களை வெளியுலகிற்கு கொண்டுவரும் அரும்பணியை செய்து கொண்டிருந்தார்கள்
ஈழத்தமிழர்களின் எஞ்சிய ஜனநாயக அமைப்பின் தூண்களாக இந்த இருவர் மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்தாரக்ள்
இவர்களின் இந்த வகிபாகத்தை முடக்க வேண்டிய தேவை யாருக்கு இருந்தது?
இயக்கங்களை சந்தேக படலாம்.
அல்லது இயக்கங்களை முன்னே தள்ளி தங்கள் காரியத்தை முடித்து கொள்ள விளைந்த அந்நிய சக்திகளை சந்தேக படலாம்.
நீண்ட காலமாக பலரும் குழம்பி போயிருந்த விடயம் இது.
இந்த கொலைகள் பற்றி அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் குறிப்பிடும் போது இது ஒரு ஆழ்ந்த சதி என்று கூறி உள்ளார்
மேலும் அவர் , ஆலால் தர்மர் கொலையுண்ட நேரம் சூழ்நிலை ஆகியன ஒரு ஆழ்ந்த சதி முயற்சியை குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் இலங்கை பிரச்னைக்கு தீர்வுக்கான நகல் யோசனைகளை பரிசீலிக்க இலங்கை அமைச்சரவை கூடியபோது இவை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tuesday, April 14, 2026
தோழர் வரதராஜ பெருமாளரிடம் இலங்கை குடியுரிமை இருக்கவில்லை
ராதா மனோகர் : இலங்கையின் இணைந்த வடகிழக்கு மாகாண அரசு பற்றிய சில விடயங்களை கொஞ்சம் பின்னோக்கி பார்க்கலாம் என்றெண்ணுகிறேன்.
இந்த மாகாண அரசு உருவாவதற்கு முன்பே ஒரு முக்கிய இந்திய தலையீடு ஈ பி ஆர் எல் எப் இயக்கத்திற்குள் இருந்திருக்கிறது என்று நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது..
ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா தோழர் பத்மநாபா தோழர் கேதீஸ்வரன் போன்ற பலர் இருந்தாலும் இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்பவே ஒருவரை இந்தியா திணித்தது என்பது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
எந்த அரசியல் கட்சியும் சார்பற்று உருவாகிய தமிழ் மாணவர் பேரவைக்கு எதிராக தமிழர் விடுதலை கூட்டணியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவையினர் இயக்கங்களுக்குள் ஊடுருவியது எல்லோரும் அறிந்ததே.
Monday, April 13, 2026
ஆபரேஷன் பூமாலையை கண்டு மிரண்ட பிரபாகரன்
![]() |
ராதா மனோகர் : 1987 ஆண்டு மே மாதத்தில் இலங்கை ராணுவம் யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் வெற்றியின் விளிம்பில் நின்றது.
அச்சுவேலி வரை வந்துவிட்டது ராணுவம்.
ஈழப்போராட்டம் தனது முடிவுரையை எழுதி கொண்டிருந்த காலம் அது.
இலங்கை ராணுவம் போராளிகளை போர் முனையில் தோற்கடித்து விட்டால் பின்பு இலங்கையை கேள்வி கேட்க இந்தியாவால் முடியாது என்ற நிலையே அன்று இருந்தது.
இந்த நிலையில் இந்திய அரசு இலங்கையில் காலூன்ற முடிவெடுத்தது.

1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி இந்திய ராணுவ விமானங்கள் யாழ்ப்பாணத்தின் மீது அத்துமீறி பறந்தன
அரிசி பருப்பு போன்ற உணவு பொருட்கள் அடங்கிய மூட்டைகளை யாழ்ப்பாணத்தில் போட்டன.
Wednesday, March 11, 2026
அருந்ததி ராய்களும் ஆ ராசாவும் ! ஆரிய அருந்ததியும் திராவிட ராசாவும்!
![]() |
![]() |
![]() |
ராதா மனோகர் : உலக புகழ் பெற்ற மனித உரிமை பிரபலமும் எழுத்துலக பிரபலமுமான அருந்ததி ராய் பற்றி முன்பு எழுதியிருக்கிறேன்.
மீண்டும் மீண்டும் அவரை விமர்சிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.
ஆனாலும் அவ்வளவு இலகுவாக இந்த குற்றவாளியை தப்ப விட முடியாது என்ற எண்ணமே எனக்குள் மேலோங்குகிறது.
இந்திய இடதுசாரிகள் முற்போக்குகள் பெரிதும் பார்பனிய கோட்பாட்டு பாதுகாவலர்கள்தான்!
இந்த கும்பலுக்கு ஒரு சரியான உதாரணமாக அருந்ததி ராய்தான் எனக்கு தெரிகிறார்.
நுனி நாக்கு ஆங்கிலம், அசல் ஆரிய வெள்ளை நிறம் , இலகுவாக மனதில் நிற்க கூடிய முகம் . சினிமாவுக்கு உரிய முகவெட்டு, மிக சிறந்த கதை சொல்லும் திறமை . போதிய அளவு எழுத்தாற்றல் நல்ல வாசிப்பு, புகழ் பெறக்கூடிய பிரச்சனைகளை கண்டறியும் ஆற்றல் போன்றவை இவர் மீடியாக்களுக்கு எப்போதும் அசல் தீனி போடும் ஆளுமையாக தெரிகிறார்.
இதை விட மிக முக்கியமான விடயம் ஊடகங்களுடனான இவரின் குடும்ப தொடர்புகள் மிக மிக அதிகம்!
இவ்வளவு திறமையும் ஆற்றலும் உள்ள இவர் மீது ஏனிந்த விமர்சனம் என்று பலரும் கருத கூடும்.
Sunday, February 15, 2026
சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல! . ஆண்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரு இரகசிய குறியீடு! அது ஒரு coding language
சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல . ஆண்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரு இரகசிய குறியீடு அது ஒரு coding மட்டுமே!
சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல! அது சாதாரணக் 'கோடு வேர்ட்'தான் என பரபரப்பு ஆய்வுத் தகவல் ஒன்று .மொழி ஆர்வலர்கள் மத்தியில். உலா வருகிறது.!
ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுக்கும் அந்த முழு நீளத் தகவல் இதுதான்:
இந்தோ யூரோப்பியன் மொழியியலாளர்கள் பலர் கூட்டாகச் சேர்ந்து., ‘சம்ஸ்கிருதம்’ என்ற மொழி எக்காலத்திலும் இருந்ததில்லை என.ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.!
அதில கூறியிருப்பதாவது :எந்த ஒரு மொழியும் தோன்ற,ஒரு இனம் தேவை..
இனமே இல்லாமல் எந்த மொழியும் தோன்ற முடியாது.
எடுத்துக்காட்டாக ,ஜப்பானியர்கள், ஜ,ப்பானிய மொழியைத் தோற்றுவித்தார்கள்.
அதுபோல் ,தமிழர் தமிழையும் , ஜெர்மானியர் ஜெர்மன் மொழியையும் தோற்றுவித்தார்கள்.
அப்படி சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது?.
இரண்டாவதாக , எந்த ஒரு மொழியும் பேசப்பட்டால்தான் மொழியாகும்! .
அப்படி பேசப்படவில்லையென்றால்... “First, solve the problem. Then, write the code.. அது ‘குறியீடு' எனப்படும் . எந்த இயல்பான மொழியும் பேச்சில் முதலில் தொடங்கி பின்னர் பெரு வளர்ச்சி அடைந்த பின்தான் எழுத்து வடிவம் பெறமுடியும் .
Monday, February 9, 2026
Nallur Kandaswamy Kovil - Declared a Public Temple -
Nallur Kandaswamy Kovil - Declared a Public Temple -
JUDGMENT IN FAVOUR OF Plaintiff
Judgment was delivered on Monday last by Mt. J. C. W. Rock, District Judge, Jaffna, In the well-known Nallur Kandaswamy Temple case instituted by Mr. C.K. Swaminathas of Nallur and six others to have the Temple declared a charitable trust under the Trusts Ordinance. The defendants are the present Manager, Mr. Ragunatha Mappana Mudaliyar and his mother, Ponnuppillai widow of the late Mr. Sangarapillai.
The following are excerpts from the interesting judgment which runs into several closely type written pages:-
This is dispute regarding the Kandaswamy Temple at Nallur. The issues are concerned not only wish the management of the temple, but have reference to the origin and purpose of the foundation of the fabric itself. Several issues have been framed in this ease; and there are three partied to it.
The ------- as members of the public, have availed themselves of the provisions of section 102 of the Trusts Ordinance NO.9 of 1917
















