Tuesday, April 14, 2026

தோழர் வரதராஜ பெருமாளரிடம் இலங்கை குடியுரிமை இருக்கவில்லை


 ராதா மனோகர்
: இலங்கையின் இணைந்த வடகிழக்கு மாகாண அரசு பற்றிய சில விடயங்களை  கொஞ்சம் பின்னோக்கி பார்க்கலாம் என்றெண்ணுகிறேன்.
இந்த மாகாண அரசு உருவாவதற்கு முன்பே ஒரு முக்கிய இந்திய தலையீடு ஈ பி ஆர் எல் எப் இயக்கத்திற்குள்  இருந்திருக்கிறது என்று நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது..
ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா தோழர் பத்மநாபா தோழர் கேதீஸ்வரன் போன்ற பலர் இருந்தாலும் இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்பவே ஒருவரை இந்தியா திணித்தது என்பது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
எந்த அரசியல் கட்சியும் சார்பற்று உருவாகிய தமிழ் மாணவர் பேரவைக்கு எதிராக தமிழர் விடுதலை கூட்டணியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவையினர் இயக்கங்களுக்குள் ஊடுருவியது  எல்லோரும் அறிந்ததே.
தமிழர் விடுதலை கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த தோழர் வரதராஜ பெருமாள் ஈ பி ஆர் எல் எப்க்குள் வந்தார் 
தோழர் டக்ளஸ் தேவானந்தாவே இவரை அழைத்து வந்தார் 
அந்த காலக்கட்டங்களில் போராட்டத்தில் இந்திய தலையீடு இருக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்த தோழர் டக்ளஸ் தேவநந்தாவும் திலீபன் கிட்டு போன்றொடு ஒரு பேச்சு வார்த்தையை நடத்தி  இருந்தார் என்று தெரிகிறது.
இதில் டெலோ புளட் போன்ற இயக்கங்கள் கலந்து கொள்ளவில்லை 
டெலோ ஒரு இந்திய ஆதரவோடு இருந்தமையால்  இவர்களின் சந்தேக பார்வை டெலோ மீது இருந்ததாக தெரிகிறது.
புளட் இயக்கம் வெறும் ஆட்சேர்ப்பு பணம் சேர்ப்பு போன்ற விடயங்களில் மட்டுமே முக்கிய கடமையாக செயல் பட்டுக்கொண்டிருந்தது  எனவே அவர்களையும் இந்த பேச்சு வார்த்தையில் சேர்க்கவில்லை என்று தெரிகிறது.
இலங்கையில் இந்திய ராணுவம் டெலோவின் போர்வையில் வரக்கூடும் என்ற வதந்தி போராளிகள் மத்தியில் உலா வந்த காலம் அது .
இதில் இருந்து இந்திய தலையீடு என்ற விடயத்தில் இரு வேறு கருத்துக்கள் இயக்கங்க மத்தியில் இருந்தது தெளிவாகிறது 
பின்பு ராஜீவ் ஜேயார் ஒப்பந்தம் உருவாக்கி மாகாண அரசுக்கான ஆரம்ப ஏற்பட்டு நடந்து கொண்டிருந்த போது  
தோழர் டக்ளஸ் தேவநந்தாவுக்கும் தோழர் பத்மநாபாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
இவர்களின் பிரிவுக்கு பெரியதாக எந்த காரணத்தையும்  என்னால் காணமுடியவில்லை.
தோழர் டக்ளஸ் தேவானந்தாவால் ஈ பி ஆர் எல் எப் க்குள் அழைத்து வரப்பட்ட தோழர் வரதராஜ பெருமாள் இப்போது தோழர் பத்மநாபாவுக்கு நெருக்கமானவராக மாறி இருந்தார் 
இதன் பின்னணி கொஞ்சம் மர்மமாகவே உள்ளது.
பொதுவாகவே இயக்க தலைவர்களிடையே கருத்து மோதல்கள் அல்லது தனிப்பட்ட ஈகோ மோதல்கள் ஏற்படும் போதெல்லாம் ஒருவரை  ஒருவர் போட்டு தள்ளிவிட்டு இயக்கத்தை கைப்பற்றும் நிகழ்ச்சிதான் ஏற்பட்டு கொண்டிருந்தது 
ஆனால் ஈ பி ஆர்  எல் எப்புக்குள் அது நடக்கவில்லை 
ஈ பி ஆர் எல் எப் இன் ராணுவ தளபதியாக தோழர் டக்ளஸ் தேவானந்தாவே இருந்தார.
படைபலம் ஆயுத பலம் எல்லாம் தோழர் டக்ளஸ் தேவாந்தவிடமே இருந்தது 
ஏனைய இயக்கங்களின் பாணியில் சுலபமாக ஒரு சிலரை போட்டு தள்ளிவிட்டு ஈ பி ஆர் எல் எப்படி தனது கட்டுப்பாட்டுக்குள் தோழர் டக்ளஸ் தேவானந்தாவால் கொண்டுவந்திருக்க முடியும்.
ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

புலிகள் இடைக்கால மாகாண அரசை ஏற்றுக்கொள்ள மறுத்தது 
மாகாண சபை தேர்தலிலும் பங்கு பற்ற மறுத்துவிட்டது, இதன் காரணமாக தமிழர் விடுதலை கூட்டணியும் போட்டி இடவில்லை  
எனவே ஈ பி ஆர் எல் எப் உம் ஈ என் டி எல் எப் உம் முஸ்லீம் காங்கிரசும் தேர்தலில் போட்டி இட்டன.
ஈ பி ஆர் எல் , ஈ என் டி என் கூட்டணி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது 
முதலமைச்சராக தோழர் வரதராஜ பெருமாளை ஈ  பி ஆர் எல் எப் தெரிவு செய்தது.
இது உண்மையில் யார் தெரிவு என்ற கேள்வி எழுகிறது 
தோழர் டக்ளஸ் தேவானந்தா அல்லது தோழர் பத்மநாபா அல்லது தோழர் கேதீஸ்வரன் போன்றவர்கள்தான் ஈ பி ஆர்  எல் இபின் புரோட்டோகால் வரிசையில் இந்த பதவிக்கு உரித்தானவர்கள் 
இதில் எந்த விதத்திலும் தொடர்பே இல்லாத தோழர் வரதராஜ பெருமாள் எப்படி முதலமைச்சர் பதவிக்கு வந்தார்? 
வெறும் தோழர் வரதராஜ பெருமாள் என்ற மனிதரை பற்றியதல்ல இந்த கேள்வி.
இந்த நகர்வின் சூத்திரதாரிகள் யார் என்பதை நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே  இந்த கேள்வியை எழுப்புகிறேன் 
ஏற்கனவே தோழர் டக்ளஸ் தேவானந்தா இந்திய சார்பு நிலை எடுக்காமையும்  அது பற்றி புலிகளின் திலீபன் கிட்டு போன்றோர்களோடு இயக்க மோதல்களுக்கு  முன்பே  பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார் என்பதுவும் கவனிக்க தக்கது.
அப்போதெல்லாம் எல்லா இயக்க தோழர்களும் ஒருவரோடு ஒருவர் பேசுவது என்பது ஒரு சாதாரண நிகழ்வுதான் 
(அந்த பண்பை புலிகள் பின்பு குழி தோண்டி புதைத்தனர் என்பது வரலாறு).
இதன் காரணமாக இந்திய அரசு தோழர் டக்ளஸ் முதலமைச்சராக கூடாது என்று கருதியிருக்கலாம் 
அடுத்ததாக தோழர் பத்மநாபாவை ஏன் இந்திய அரசு தவிர்த்தது?
அடுத்து தோழர் கேதீஸ்வரன் கூட இந்த வரிசையில் இருந்தாரே? அவரையும் இந்திய அரசு ஏன் தவிர்த்தது? 
இந்த மூவரையும் தவிர்த்து விட்டு தோழர் வரதராஜ பெருமாளை இந்திய அரசு முதலமைச்சராக நியமிக்குமாறு ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தை  வேண்டி கொண்டது ஏன்?
(இந்தியா அப்படி வேண்டி கொள்ளவில்லை என்று இப்போது மறுக்க கூடும்)

மறுபுறத்தில் தோழர் வரதராஜ பெருமாள் இந்திய பிரஜையாக இருந்தார் 
அவரிடம் இலங்கை குடியுரிமை இருக்கவில்லை 
ஜேயார் ஜெயவர்தனவிடம் இந்திய அரசு இவருக்கு குடியுரிமை வழங்குமாறு கேட்டுக்கொண்டது 
ஜனாதிபதி ஜேயார் ஜெயவர்தனவும் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று குடியுரிமை  தானே நேரிடையாக வழங்கினார்.
அதுவரை தெலுங்கை தாய் மொழியாக கொண்ட தோழர் வரதராஜ பெருமாள் இந்திய ( தெலுங்கு பூர்வீகம்) குடிமகன்தான் 
இதன் காரணமாகாவோ என்னவோ புலிகளின் கொலை பட்டியலில் பத்மநாப இருந்ததை நன்றாக தெரிந்தும் அவரை காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் இந்தியா செய்யவில்லை 
அவரை புலிகள் கொல்லப்போகிறார்கள் என்று கலைஞருக்கு வெறும் செய்தியை அனுப்பியதோடு கையை கழுவி விட்டார்கள்  . கலைஞரிடம் ராணுவமா இருந்தது?
கலைஞரே புலிகளின் கொலை பட்டியலில் அல்லவா இருந்தார்?
மறுபுறத்தில் தோழர் வரதராஜ பெருமாளை எங்கெங்கோ எல்லா அனுப்பி கோட்டைக்குள் வைத்து கவனமாக பாதுகாத்தார்கள் 
இலங்கை தொடர்புடைய எந்த தலைவரையும் விட தோழர் வரதராஜ பெருமாளைதான் மட்டும்தான் இந்தியா 
எக்ஸ்டரா சிரத்தை எடுத்து பாதுகாத்தது.
 
இந்த கட்டுரை ஈழப்போராட்டத்தில் இந்தியாவின் ஈடு பாடு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை பற்றிய ஒரு ஆய்வு மட்டுமே.
எவர் மீதும் பாரபட்சமான நோக்கம் இதில் இல்லை.
 
   
 

No comments:

Post a Comment