ராதா மனோகர் : மதராஸ் மாகாண முதலமைச்சர் ராஜகோபாலச்சாரி திரு .ஜி ஜி பொன்னம்பலத்தின் கோரிக்கையை ஏன் புறந்தள்ளினார்?
மலையக வாக்குகளின் பலத்தை வைத்து பிரிட்டன் இந்தியா அமெரிக்காவுக்கு சவால் விட்ட இடதுசாரிகளின் வரலாறு ஏன் இதுவரை மறைக்கப்படுகிறது?
இலங்கையில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி நிலவிய காலத்தில்,
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் சுதந்திர இயக்கம் மிகவும் தீவிரமாக வளர்ந்தது
இந்த சுதந்திர உணர்வானது 1888 இல் முதல் சுதந்திரத்திற்கான இயக்கமாக இலங்கை தேசிய சங்கம் உருவானது
இதை தொடர்ந்து 1917 இல் சிலோன் சீர்திருத்த கழகம் உருவானது
மேற்கண்ட அமைப்புக்களின் பின்னால் 1919 டிசம்பர் 11 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் Ceylon National Congress ஒரு அரசியல் கட்சியாக உருவானது
இதுதான் இலங்கையில் உருவான முதல் அரசியல் கட்சியாகும்.
இதன் நிறுவன தலைவராக சேர் பொன்னம்பலம் அருணாசலம் பணியாற்றினார்
அக்டோபர் 1920 இல் நடந்த முதலாவது கூட்டத்தில் சர் ஜேம்ஸ் பீரிஸ் இதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்,
இவருக்கு பின்பு தொடர்ந்து எப்.ஆர். சேனநாயக்க,
டி.எஸ் சேனநாயக்க, டி.பி.ஜயதிலக, ஈ.டபிள்யூ பெரேரா, சி.டபிள்யூ.டபிள்யூ.கண்ணங்கர, பட்ரிக்
டி சில்வா குலரத்ன, எச்.டபிள்யூ.அமரசூரிய, டபிள்யூ.ஏ.டி.சில்வா, ஜோர்ஜ் ஈ.டி.சில்வா மற்றும் எட்வின் விஜேயரத்ன ஆகியோர் தொடர்ந்து தலைவர்களாக பணியாற்றினார்கள்..
1943 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் மெதுவான போக்கை விமர்சித்து பூரண சுதந்திரத்திற்கான தேவை இருப்பதாக திரு டி எஸ் சேனநாயக்க கருதி இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து பிரிந்த ஏனைய பல தலைவர்களோடு டி எஸ்
சேனநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கினார்கள்.
1934 இல் திரு எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்கா ஏ இ குணசிங்க (நடேசஅய்யரின் அரசியல் குரு) ஆகியோரால் நிறுவப்பட்ட தீவிர சிங்கள இனவாத போக்குடைய சிங்கள மகாஜன சபையும் 1946 இல் டி எஸ் சேனநாயக்க தலைமையில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டது.
இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி உருவானபின்பு தமிழர்கள்களுக்கான கட்சியாக 1944 இல் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை நிறுவினார்