Wednesday, July 26, 2023

இலங்கை இந்திய காங்கிரசின் தலைவராக இருந்த பம்பாய் சிந்தி தலைவர் திரு அப்துல் அஸீஸ்


 இலங்கை இந்திய வம்சாவளி / மலையக மக்களின் வாக்குரிமை பறிபோன விடயத்தில் ஏராளமான வரலாற்று பக்கங்களாய் காணவில்லை .. அதில் இது ஒரு முக்கிய பக்கம்
இந்த பக்கத்தின் பெயர் இலங்கை   இந்திய காங்கிரசின் தலைவராக இருந்த பம்பாய் சிந்தி தலைவர் திரு அப்துல் அஸீஸ் என்பதாகும்
இலங்கைக்கு சுதந்திரம் வழங்க முதல் இலங்கையின் பல்லின மக்களின் கருத்துக்களை அறிந்து உரிய பணிகளை மேற்கொள்ள பிரித்தானிய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட திரு சோல்பரி பிரபுவோடு திரு அப்துல் அஸீஸ் அவர்கள் மேற்கொண்ட கருத்து பரிமாற்றம் ஒரு முக்கிய செய்தியாகும்

கௌரவ சோல்பரி பிரபு அவர்கள் இலங்கையின் பல தரப்புடனும் பேச்சுவார்த்தை தொடர்ந்தார்
மலையக இந்திய வம்சாவளி மக்கள் சார்பாக இலங்கை இந்திய காங்கிரஸ் தூதுக்குழு சோல்பரி பிரபுவை சந்தித்தது
அக்குழுவுக்கு  திரு அப்துல் அஸீஸ் அவர்கள் தலைமை தாங்கி சாட்சியமளித்தார்.
இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கும் இடையே நிலவும் முறுகல் நிலவி வரும் சூழ்நிலையில் பிரித்தானிய இலங்கையை விட்டு வெளியேறுவது பற்றி ,
 இலங்கை இந்திய காங்கிரசின் நிலைப்பாடு என்னெவென்று திரு அஸீஸை பார்த்து திரு சோல்பரி பிரபு அவர்கள் கேட்டார்.
அதற்கு பதிலளித்த திரு அஸீஸ் ஓ;இலங்கையின் சிறுபான்மை இனங்களான  இந்திய வம்சாவளி / மலையக மக்களை பாதுகாப்பது என்று கூறிக்கொண்டு பிரித்தானியா இங்கு தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒரேயடியாக கூறினார்.

திரு அஸீஸின் இந்த பதிலை அறிந்து பல மலையக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .
பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகள் ஏற்கனவே இந்தியர்களை வெளியேற்றவேண்டும் என்ற பிரசாரத்தை முன்னெடுத்து கொண்டிருக்கும் இந்த நிலையில்,
இலங்கையின் முழு ஆட்சி அதிகாரமும் சிங்கள பெரும்பான்மையின் கைகளுக்கு போனால் அவர்களின் தயவில் வாழவேண்டிய நிலை உருவாகும் என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது

தங்களின் வாக்குரிமை பறிக்கப்படவும் நாடு கடத்தப்படவும் வாய்ப்புள்ளதாக பல இந்திய வம்சாவளி / மலையக தலைவர்கள் கருதினார்கள்

ஆனால் திரு அஸீஸ் அவர்களோ திரு ஜவஹர்லால் நேருவினால் தொடங்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸ் எப்படி சுதந்திரத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும் ?
அது தார்மீக அடிப்படையில் தவறல்லவா என்று வாதித்தார்.

மேலும் அவர் கூறுகையில் இனவாத சிங்களவர்கள் தொகை சிறிய அளவுதான்.
இந்திய தமிழர்கள் நாட்டின் முற்போக்காக சக்திகளோடு கூட்டு சேர்ந்து ஒரு இடதுசாரி நாட்டை உருவாக்க வேண்டும்!

மேலும் அவர் கூறுகையில் சிங்கள மக்களின் கோபம் எல்லாம் இலங்கையில் உள்ள இந்திய முதலாளிகளுக்கு எதிரானதே தவிர மலையக தொழிலாளர்களுக்கு எதிரானது அல்ல என்ற ரீதியில் வாதித்தார்.

திரு சோல்பரி பிரபுவுடன் இருந்து இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுக்கு உரிய எவ்வித உறுதியும் பெற இலங்கை இந்திய காங்கிரஸ் தலைவரான திரு அஸீஸ் தவறினார்

பிரித்தானிய அரசின் பிரதிநிதியாக வந்த திரு சோல்பரி பிரபுவோடு பேசும் பொழுது,
 தனது தெற்காசிய கம்யூனிச கனவில் மிதந்த திரு அஸீஸ் தான் எந்த மக்களின் பிரதிநிதியாக இருந்தாரோ அந்த மக்களுக்கு தீராத துன்பத்தை வாங்கி தந்தார்

Abdul Aziz Gulamhusein Remtulla
குஜராத் போர்பந்தரில் 1914 இல் ஒரு பணக்கார வியாபாரிக்கு மகனாக பிறந்தார்.
கராச்சியில் உள்ள உயர்ந்த பள்ளிக்கூடத்தில் ஆரம்ப கல்வியை பெற்றார்
பின்பு பம்பாய் பல்கலை கழகத்தில் மேற்படிப்பை தொடர்ந்தார்
படிக்கும் காலத்தில் காந்தியின் சுதந்திர இயக்கத்தினால் கவரப்பட்டு பம்பாய் மாணவர் இயக்கத்தில் சேர்ந்து விரைவிலையே அதன் பொதுக்குழு அங்கத்தவராக தெரிவு செயப்பட்டார்.
இந்த அமைப்பின் செயல்பாடு காரணமாக ஆங்கிலேய ஆட்சியின் போலீஸ்  இவரை தேடத்தொடங்கியது.
இதன் காரணமாக இலங்கைக்கு ஓடினார்.
அங்கு தந்தையின் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது கொழும்பில் மேட்டுக்குடி புத்திஜீவிகள் கூடாரமாக திகழ்ந்த கொழும்பு வை எம் சி ஏயில் ஒரு முக்கிய பிரமுகரானார் .
இதிலிருந்து இவரின் முற்போக்கு இடதுசாரி பயணம் ஆரம்பமானது
கொழும்பிலும் மலையகத்திலும் நாட்டின் இதர பகுதிகளிலும் உள்ள இந்திய வம்சாவளி தொழிலாளர்களின் தொழிற்சங்கம் மற்றும் அரசியல் இயக்கங்களையும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.
திரு அப்துல் அஸீஸ் அவர்களை பற்றிய சுருக்கமான வரலாறுதான் இது
இந்திய வம்சாவளி  தமிழர்களின் தலைவராக இலங்கையில் அறியப்பட்ட இவருக்கு தமிழ் தெரியாது
அடிப்படையில் இவர் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகராகும்.
மலையக மக்களின் பிரதிநிதியாக பல பதவிகளை வகித்திருந்தார்
இறுதியாக 1970 இல் பதவிக்கு வந்த ஸ்ரீமாவோ அரசாங்கம் இவருக்கு நியமன நாடளுமன்ற உறுப்பினர் பதவியை அளித்தது .1977 வரை எம்பியாக இருந்தார்
இவர் 1990 ஆம் ஆண்டு காலமானார்!
 
  

No comments:

Post a Comment